புளி - ரசம் , சாம்பார் , வத்த குழம்பு, புளி குழம்பு,மீன் குழம்பு, இதுபோல் பல வகை குழம்புகளுக்கு புளி தண்ணீர் கரைக்க வேண்டி வரும்.
ஊறவைத்தால் சில புளி வகைகள் ரொம்ப கட்டியாக இருக்கும் கரைக்க டைம் எடுக்கும். வெண்ணீரில் ஊற போட்டாலும் கை சூடு பொறுக்க கரைப்பது கடினம்.
அதற்கு இது போல் ஐஸ் கியுப் போட்டு வைத்து கொண்டால் ரொம்ப சுலபம் இல்லையா?
புளி ஐஸ் கியுப்
தேவையான அளவு புளி கால் கிலோ அல்லது அதற்கு மேல் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய லெமன் சைஸ் புளிக்கு அரை டம்ளர் தண்ணீர் தேவைபடும் கொஞ்சம் தண்ணீ மாதிரி கரைக்க நீங்க இதுக்கு ஒரு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ம்ணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.
பிறகு குக்கரில் கொதிக்க விட்டு ஒரு விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
ஆறியது நன்கு கைகளால் கரைத்து வடி கட்டி மேலே படத்தில் காட்டியுள்ள படி ஐஸ் கியுப் ட்ரேவில் ஊற்றி பிரீஜரில் வைத்து 4 , 5 மணி நேரம் கழித்து எடுத்து ஒரு கண்டெயினரில் போட்டு வைத்து கொள்ளுங்கள் தேவைக்கு ஒரு மாதத்திலிருந்து ஆறுமாதம் வரை வைத்து பயன் படுத்தாலாம்.
வெளிநாடுகளில் ரூமில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களுக்கு, வேலை போகும் பெண்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அப்ப்டி ஃப்ரஷாக தினம் கரைத்து ஊற்றதான் பிடிக்கும் என்றால் காலை சமைக்கும் புளி குழம்பு அல்லது ரம், மீன் குழம்புக்கு தேவையான புளியை இரவே சிறிது உப்பு சேர்த்து ஊறவைத்து விடுங்கள். காலையில் உடனே கரைத்து குழம்பு செய்ய சுலபமாக இருக்கும்.
கொட்டை இல்லாத புளி என்றால் கை போட்டுகூட கரைக்க தேவையில்லை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மிக்சியில் இரண்டு சுற்று கிர்ரூன்னு சுற்றி வடிகட்டினால் இன்னும் சுலபம்.
இது கால் கிலோ அளவு தான் , மாதம் ஒரு முறை கூட செய்து வைத்துக்கொள்ளலாம், ஆறு மாதம் என்று போட்டது ஃப்ரோஜன் வெஜ் வெளி நாடுகளில் காலவாதி தேதி இருக்கும், அதேல்லாம் கூட ஆறு மாதத்திற்கு வைத்து பயன் படுத்து கிறார்கள்,.அந்த வகையில் தான் ஆறு மாதம் என்றேன். நாம சமையலை சுலபமாக முடிக்க இது ஒரு அருமையான டிப்ஸ்
அரைத்து விட்ட புரோஜன் வெஜ் சாம்பார்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
12 கருத்துகள்:
கரைத்து வைத்த புளியை ஆறுமாதத்திற்கு வைத்து உபயோகிப்பது நல்லதா ஜலி பிரீசரில் வைத்து இருந்தாலும் கூட..?
ஏனெனில் நான் புளியக்கரைத்து பாட்டிலில் நிரப்பி திரவ வடிவில் நான்கு அல்லது ஒரு வாரகலத்திற்கு மட்டும் பிரிட்ஜ்ஜில் ஸ்டோர் பண்ணுவேன் அதற்கே எதிர்ப்பு வருகிறது..:(
வாவ்... சூப்பர்...!
நல்ல ஐடியாதான்!
ஸாதிகா அக்கா இப்ப எல்லாம் அமெரிக்கா சிங்க்ப்பூரில் எல்லாம் நிறைய் பேர் சட்னி இட்லி கூட ஃபீரிஜரில் வைத்து ஒரு மாதத்துக்கு வைத்து சாப்பிடுகிறார்களாம்.
அப்ப்டி ஊருக்கு கணவரை விட்டு விட்டு வருவதாக இருந்தால் கூட நிறைய கறி குழம்பு, சாம்பார், பருப்பு ,ரசம் பொரியன்னுன் செய்து ஒவ்வொரு நாட்களுக்கும் ஏற்ற மாதிரி பேக்கட் போட்டு ஃபிரீஜரில் வைத்து விட்டு போகிறார்களாம்.
புளி பேஸ்ட் என்று தனியாக வே விற்கிறது.
நாம் அதை பயன்படுத்துவதற்கு பதில் இப்படி நாமே மாதத்துக்கு ஏற்றார் போல் தயாரித்து வைத்து கொள்ளலாம்.
வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்
சென்னை பித்தன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
நல்ல ஐடியா,புளியை திக்காக கரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பார்த்து இருக்கிறேன்.இது புதுசு
புளி ஐஸ் கியுப் நன்றாக இருக்கிறது.செய்து வைத்துக் கொண்டால் அவசரத்திற்கு உதவும்.
வாழ்த்துக்கள் ஜலீலா.
அருமையான தகவல் ஜலீ.. 15 நாட்களுக்கு முறை இவ்வாறு செய்து வைத்தால் ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் திருப்திதான்.. செய்கிறேன். பகிர்விற்கு நன்றி.
நல்ல ஐடியா.பகிர்விற்கு நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா