என் சின்ன பையன் சாம்பார்
பிரியர், அவருக்காக விதவிதமாக சாம்பார் வைப்பது. ஜெமினிகனேசனை ஏன் சாம்பார் என்று
சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் என் பையன் அந்த சாம்பாருக்கே சாம்பாராக
இருப்பானோ.. நான் வைக்கும் சாம்பார் பிடிக்கும்.சாம்பார் மட்டும் வைத்தால் போதும் பூரி, ரொட்டி, சாதம் இட்லி , தோசை
சப்பாத்தி எல்லாத்துக்கும் வைத்து சாப்பிட அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
1. காய்கறி சாம்பார்
2. கத்திரிக்காய் சாம்பார்
3. சின்ன வெங்காய சாம்பார் வடை
4. கேரட் சாம்பார்
5. ஏழுகறி சாம்பார்
தேவையானவை
துவரம் பருப்பு – 100 கிராம்
பருப்பு வேகவைக்க
வெங்காயம் – 1 பெரியது
பூண்டு – 2 பல்
எண்ணை – ½ ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
வேகவைக்க
வெங்காயம் – 1
தக்காளி - 1
புரோஜன் முருங்க்க்காய் – 2” துண்டு 4 துண்டு
புரோஜன் வெஜிடெபுள்ஸ் – எல்லாம் தலா 1 மேசைகரண்டி
(கேரட், பீன்ஸ், பட்டாணி )
தண்ணீர் – 2 டம்ளர்
பச்சமிளகாய் – 2
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
புளி – 3 மேசைகரண்டி ( அ)
புளி ஐஸ் கியுப் 3
அரைத்து கொள்ள
தக்காளி – 1
பொட்டுகடலை – 1 ஸ்பூன்
சாம்பார் பொடி – 1 மேசை
கரண்டி
கருவேப்பிலை – சிறிது
தாளிக்க
எண்ணை – நெய் – 1 ½ மேசைகரண்டி
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெந்தயம் - ¼ ஸ்பூன்
பெருங்காயம் – 2 சிட்டிக்கை
செய்முறை
பருப்பில் வேக வைக்க
கொடுத்துள்ளவைகளை சேர்த்து வேகவைத்து மசித்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை
அரைத்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில்
வேகவைக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வேகவைக்கவும்.
பாதி வெந்து வரும் போது
அரைத்த மசாலா + புளி தண்ணீரை சேர்த்து நன்குகொதிக்க விடவும்.
நன்கு கொதித்த்தும் மசித்த பருப்பை சேர்த்து
தேவைக்கு தண்ணீர் ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து கொதிக்க விடவும். பருப்பு
கொதிக்கும் போது அதிக தனலில் இருந்தால் உடனே பொங்கி விடும்.(அவ்ளாதான் பொங்கலோ
பொங்கல் தான்)
கடைசியாக தாளிக்க
கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து சிறிது நெய்+ கொத்துமல்லி தூவி இரக்கவும்.
வாசமும் மணமும் ஸ்ஸ்ஸ்
செய்து சாப்பிட்டு பாருங்கள்.
டிப்ஸ் -1: காய்கறி நிறைய இருந்தால் அதை ஒரு ஜிப் லாக் கவரில் போட்டு வைத்து கொண்டால் எப்ப நினைத்தாலும் சாம்பார் வைக்கலாம்.
டிப்ஸ்- 2: குழந்தைகள் அவ்வளவாக காய் கறிகள் சாப்பிட மாட்டார்கள். காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சாம்பார் வைத்து அதில் கூடுமான்வரை 5 காய்கள் கலந்து வேகவைத்து செய்தால், காய்கறிகளில் உள்ள வெந்த சூப் தண்ணீர் சாம்பாரில் சேர்ந்திருக்கும். சாதத்தில் சாம்பாரை மட்டும் ஊற்றி சிறிது நெய் விட்டு பிசைந்து கொடுக்கலாம்.
டிப்ஸ்- 3: முருங்கக்காயும் நிறைய இருந்தால் இரண்டு இன்ச் அகலத்துக்கு கட் செய்து ஃபிரீஜரில் போட்டு வைத்தால் தேவைக்கு எடுத்து பருப்பு முருங்கக்காய், கறி முருங்க்காய், கருவாட்டு குழம்பு போன்றவைகளுக்கும் பயன் ப்டுத்தலாம்.
இங்கு துபாயில் ஒரு பெரிய
பரோட்டா சுட்டு சுட சுட சாம்பாரால் குளிக்க வைத்து சாப்பிடுகிறார்கள் .ஒன்று
சாப்பிட்டாலே ரொம்ப நேரத்துக்கு பசி எடுக்காது என்கிறார்கள்.
இது இங்குள்ள ஹோட்டல்களில்
பேச்சிலர்ஸ் இப்படி சாப்பிடுகிறார்கள்,
ரொம்ப பில்லிங்காகவும்
திம்முன்னு இருப்பதாகவும் சொல்கிறார்கள்,
எனக்கு சில காம்பினேஷன் தான் பிடிக்கும். பூரி ,பரோட்டா என்றால் சென்னா, பாஜி, மட்டன் வெஜ் சால்னா, வெஜ் சால்னா, மீன் சால்னா,
இரால் கூட்டு இப்படி தான் பிடிக்கும்,
ஆனால் எங்க வீட்டில் பசங்க
பூரி சப்பாத்திக்கு சட்னி, சாம்பார் என்று வைத்து
சாப்பிடுகிறார்கள், ஆகையால் அடிக்கடி சாம்பார் செய்வது. அதுவும் நல்ல தான்
இருக்கு.
இது பேஸ்புக்கில் ஃப்ரண்ட் லிஸ்டில் இருக்கும் அப்ரஸ்ர் கேட்டதால் போட்டுள்ளேன்.
Linking to Gayathri's Walk through memory lane hosted by hema & vimitha's hutson & Cupo nation 27
Gayathri's Walk through memory Lane @ Hema's Adugemane.
9 கருத்துகள்:
கமகமவென அனைத்து சாம்பார்களும் அருமையாக உள்ளன.
நாக்கில் நீர் ஊற வைத்து விட்டீர்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
வைகோ ஐயா சொன்னது போல் தான் உள்ளது...
நன்றி சகோதரி...
//என் சின்ன பையன் சாம்பார் பிரியர், அவருக்காக விதவிதமாக சாம்பார் வைப்பது. ஜெமினிகனேசனை ஏன் சாம்பார் என்று சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது,//
ஆமாம். ஜெமினியை அப்படித்தான் அந்தக்காலத்தில் சொல்வார்கள். ஏன் என்று எனக்கும் தெரியாது.
//ஆனால் என் பையன் அந்த சாம்பாருக்கே சாம்பாராக இருப்பானோ.. நான் வைக்கும் சாம்பார் பிடிக்கும்.சாம்பார் மட்டும் வைத்தால் போதும் பூரி, ரொட்டி, சாதம் இட்லி , தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் வைத்து சாப்பிட அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.//
டேஸ்ட் ஆக சாம்பார் வைத்தால் மிகவும் நன்றாகத்தான் இருக்கும்.
நான் மிகவும் டேஸ்ட் ஆக இருந்தால் அப்படியே சாம்பாரைத் தனியாக எடுத்துக் குடித்தும் விடுவேன்.
சாம்பார் அருமையாக இருக்கிறது.
பரோட்டவுடன் சாம்பார் சாப்பிடுவது நல்ல பசி தாங்கும் என்று சொல்வதை கேட்பது புது விஷ்யம்.
நானும் ஒரு சாம்பார் பிரியைதான்.சாம்பாரை சிலசமயம் ரசம் மாதிரி ஊற்றி சாப்பிடுவேன் ஹி..ஹி....நாவூறுது!!
ஜலி நீங்கள் சாம்பாரைப்பற்றி விவரித்து இருப்பதைப்படிக்கும் பொழுது உங்கள் சாம்பாரை சாப்பிட ஆசை வந்து விட்டது.ஒரு கப் சாம்பார் ப்ளீஸ்/
எல்லா சாம்பார்வகையையும் ஒன்றாக தந்தது மிகவும் யூஸ்புல் . அரைத்துவிட்டசாம்பார்தனிடேஸ்ட்.
பகிர்வுக்கு நன்றி.
Wow super o Super . Too many Variety in sambar . Will try ur version soon
http://www.followfoodiee.com
Wow super o Super . Too many Variety in sambar . Will try ur version soon
http://www.followfoodiee.com
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா