Sunday, December 12, 2010

சின்ன வெங்காய சாம்பார் வடை - Pearl Onion sambar vadai





தேவையான பொருட்கள்.





வடை தயாரிக்க
உளுந்து பருப்பு – 150 கிராம்
இஞ்சி – ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் – 2
வெங்காயம் – 2 மிடியம் சைஸ்
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை
எண்ணை – வடை பொரிக்க தேவையான அளவு


சாம்பாருக்கு

பருப்பு வேகவைக்
பருப்பு 75 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று பெரியது
பூண்டு – இரண்டு பல்
தாளிக்
எண்ணை - ஒரு மேசைகரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்னவெங்காயம் – 25 கிராம்
கருவேப்பிலை – இரண்டு ஆர்க்
நெய் – ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி – ஒரு மேசை கரண்டி
வெள்ளை புளி - ஒரு கொட்டைப்பாக்களவு.
அலங்கரிக்
கொத்துமல்லி தழை
பொடியாக அரிந்த வெங்காயம் - இரண்டு மேசை கரண்டி

செய்முறை
1.முதலில் வடைக்கு அரைக்க உளுந்தை ஒரு மணிநேரம் ஐஸ் வாட்டரில் ஊறவைத்து வடிக்கட்டியில் தண்ணீரை வடிகட்டி உப்பு, இட்லி சோடா சேர்த்து மையாக அரைக்கவும்.
2. அதில் வெங்காயம், கருவேப்பிலை,இஞ்சி, பச்சமிளகா முன்றையும் பொடியாக அரிந்து கலக்கி வைக்கவும்.

சாம்பார் தயாரிக்
1. பருப்பை களைந்து குக்கரில் சின்ன வெங்காயம் முழுதாக தோலை எடுத்து போடவும். தக்காளியை இரண்டாக அரிந்து சேர்க்கவும்.மேலும் மஞ்சள் தூள் சீரகத்தையும் சேர்த்து ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊறவைத்து அடுப்பில் ஏற்றவும், வெயிட் போட்டு தீயின் தனலை குறைத்து வைக்கவும்.

2. இரண்டு முன்று விசில் வந்த்தும் இரக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும். மத்தால் (அ) கரண்டியால்,(அ) பிளண்டாரால் வெந்த பருப்பை நன்கு மசிக்க்வும்.

3. அரை டம்ளர் தண்ணீர் சாம்பார் பொடியை கரைத்து, கால் டம்ளர் சுடு வெண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து இரண்டையும் பருப்பில் சேர்த்து கொதிக்க விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியாக் நெய்யை விடவும்.

4. இப்போது அரைத்து வைத்துள்ள வடைமாவை வடைகளாக சுட்டெடுத்து எண்ணையை வடித்து ஒரு பெரிய வாயகண்ற பவுளில் வைக்கவும்.

5. தாளித்து வைத்து இருக்கும் சின்ன வெங்காய சாம்பாரை வடையின் மேல் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் கொத்துமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

6. பத்து நிமிடம் கழித்து நன்கு வடையில் சாம்பார் ஊறி இருக்கும்.
தனியாக தேவைக்கு எடுத்து பரிமாறவும்.
சுவையான கம கம சாம்பார் வடை ரெடி
குறிப்பு:
உளுந்து வடையில் இட்லிசோடா விருப்பம் இல்லை என்றால் போட வேண்டாம்./இது வடைக்கு என்பதால் இதில் எந்த வகையான காயும் சேர்க்கவில்லை. உளுந்தை ஐஸ்
வாட்டரில் ஊற வைப்பதால் நிறைய மாவு காணும்.





those recipe goes to priya's complete my thali GMT DAAL/KHADI/SAMBAR/RASAM EVENT



46 கருத்துகள்:

ஸாதிகா said...

சாம்பார்வடை அருமையாக இருக்கு ஜலி

ஆமினா said...

இன்னைக்கு நைட் சாம்பார் இட்லி பன்றதா இருந்தேன். இதை பாத்ததும் உளுந்து ஊற போட போறேன் :)

chelas said...

tasty ஜலீலா.

தூயவனின் அடிமை said...

சாம்பார் வடை அருமை.

Angel said...

i like sambar vada very much.this is my favourite dish.appadiye vizhunguven.

nis said...

taste :)

GEETHA ACHAL said...

ஆஹா...எனக்கு மிகவும் பிடித்த சாம்பார் வடை...கலக்கல்...நன்றி...

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

Sooda oru plate ingey thallunga!!!!!

Kanchana Radhakrishnan said...

கலக்கல்...Jaleela.

Chitra said...

நாவில் நீர் ஊறுது....

Asiya Omar said...

arumai.enaku oru plate.

ஸ்ரீராம். said...

சுவையான ஐட்டம்.

விகடன் தீபாவளி மலரில் புகைப் படத்துடன் ரெசிப்பி சொல்லியிருப்பது நீங்களா?

Gayathri Kumar said...

very yummy..

Aruna Manikandan said...

looks delicious and very tempting akka :)

Aruna Manikandan said...

looks delicious and very tempting akka :)

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ..... ரொம்ப லேட்டா வந்துட்டேன் ........ ஏதாவது மிச்சம் மீதி இருக்கா ??? (சே..... பாரின்ல கூட பிச்சைக் காரங்க தொல்லை தாங்கல )

Umm Mymoonah said...

That looks very delicious, just feel like having this plate of vadai. Thank you for linking it with Any One Can Cook.

Krishnaveni said...

my fav too, looks yumm

Torviewtoronto said...

thank you :)
delicious vada

R.Gopi said...

ஹலோ....

ஏங்க.... இந்த குளிர் காலத்துல இந்த மாதிரி சுடச்சுட சாம்பார் வடை, ரசவடைன்னு போடறீங்க...

இதை பார்த்தா, நெனச்ச உடனே எங்கேங்க போய் சாப்பிடறது?

Unknown said...

சற்று தாமதம்
ஆகா வடை
மெதுவடை
இந்த வாரம் செய்துவிடலாம்
எப்படிவது சமையல் தெரிந்து கொள்ள வேண்டும்
நல்ல எளிமையான பகிர்வு
நன்றி

Unknown said...

Inimayana tamizh pakkam.adikkadi varuven inimel.....ungalai thodargiren

Mahi said...

சாம்பார் வடை அருமையா இருக்குது ஜலீலாக்கா!

//வருகை தரும் யாவரையும் அன்புடன் அழைக்கிறேன். நீங்கள் மனசாட்சி உள்ளவரா அப்ப காப்பி அடிக்காதீர்கள்// :) :)

Nithu Bala said...

Enakku piditha combo..lovely clicks..

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஸாதிகா அக்கா இது எல்லோருக்கும் பிடித்தவடை

Jaleela Kamal said...

ஆமினா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, என்ன வடை செய்தாசா?

Jaleela Kamal said...

வருகை தந்தமைக்கு , கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சேலாஸ்

Jaleela Kamal said...

மிக்க நன்றி இளம் தூயவன்.,

Jaleela Kamal said...

வாங்க ஏஞ்சலின் யாருக்குமே பார்த்த்தும் சுவைக்க தூண்டும்.
தொடர் வருகைக்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

நன்றீ நிஸ்

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் ஆமாம் எல்லோருக்கும் பிடித்த சாம்பார் வடை., வருகை தந்தமைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

பிரியா வாசு சூடா ஒரு பிளேட் தானே பார்சல் அனுப்பிடுரேன்.

Jaleela Kamal said...

சித்ரா ஆமாம் இப்படிபிளேட காண்பித்தா எல்லாரும்க்கு சப்பு கொட்ட தான் செய்யும்.

Jaleela Kamal said...

ஆசியா உங்களுக்கில்லமலா. கண்டிப்பா தரேன்.

Jaleela Kamal said...

மிக்க நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

நன்றி ஸ்ரீராம்,

நன்றி காயத்ரி

நன்றி அருனா

Jaleela Kamal said...

அமைச்சரே லேட்டா வந்தாலும் சீக்கிரம் வந்தாலும் வடை அப்படியே தான் இருக்கும்

Jaleela Kamal said...

thank you umm
thank you torveiw
thank you krishnaveni

Jaleela Kamal said...

குளிர்க்கு சுட் சுட சாப்பிட்டால் நல்ல தான் இருக்கும், பேச்சிலர்களுக்கு கொஞ்ச்ம் கழ்டம் தான் நினைத்தவுடன் சாப்பிட முடியாது,

Jaleela Kamal said...

வாங்க சிவா வருகை தந்தமைக்கு மிக்கநன்றி. எபப்டி இருந்தது என்றுசெய்து பார்த்து சொல்லுங்கள்

Jaleela Kamal said...

சவிதா ரமேஷ் உஙக்ள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
தொடர்ந்து வந்து கருத்தை தெரிவிக்கவும்.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க ந்ன்றி மகி,
( என்ன செய்ய இப்படி போட்டாலாவது சில ஜென்மங்கள் திருந்துதான்னுபார்க்கலாம்)

Jaleela Kamal said...

நித்து வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Lifewithspices said...

I love sambar vadai ..asathalaa irukkum n unga vadai parkave jalam urarudhu...

நட்புடன் ஜமால் said...

interesting ...

அஸ்மா said...

சலாம் ஜலீலாக்கா! சாம்பார் வடை அருமை. அதுவும் மேலே பச்சை வெங்காயத்தோடு..ம்ம்ம்...!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா