துபாய் மால்
பிள்ளைகளுக்கு எல்லாம் பஸ் டிரெயினுன் போவதா இருந்தா ஒரு குஷி தான்
வீட்டிலிருந்து எல்லா பிள்ளைகளையும் கூப்பிட்டு கொண்டு பஸ் ஏறி மெட்ரோ டிரெயின் ஸ்டேஷன் வந்தாச்சு டிக்கட் எடுத்தாச்சு டிரெயிகுள்ளேயும் ஏறியாச்சு உள்ள
கூ ஊஊஉ சிக்கு புக்கு சிக்குப்புக்கு டிரெயின் கிளம்பிடுச்சு, ஆனால் ஊர் டிரெயில் போல சத்தம் எல்லாம் வராது, நாம தான் சத்தம் போட்டுக்கனும்.
அரபி பசங்க ஆட்டம் அதுகளம்,
பிலிப்பைனி கூட்டம் தான் அதிகம் யார பற்றியும் கவலை கிடையாது காதுல ஸ்கீர மாட்டிட்டு பாட்டு கேட்டு கொண்டே வருதுகள்.
துபாய் மால் உள்ளே
சிங்கப்பூரில் உள்ள சென்தோஷாவ விட பெரியது,
உள்ளே மீன் கள் நீந்துவதை பக்கத்தில் இருந்து பார்க்கலாம். உள்ளே போய் நீந்துபவர்கள் மீனுடன் நீந்தி கொள்ளலாம்.
கண்ணாடி உடைந்தால் அவ்வளவு தான் துபாய் மால் முழுவது மீனுடன் நாமும் நீந்த வேண்டியது தான்
ஒரே கூட்டமா இருக்கே என்னன்னு பார்க்கிறீங்களா?
துபாய் மால் அங்குதான் புர்ஜ் கலிபா பக்கத்தில் தண்ணீ (குதிக்கிற) டான்ஸ் ஆடுவது பார்க்க தான் இவ்வள்வு கூட்டம்
புர்ஜ் கலிபாவ பற்றி
ஹுஸைனாம்மா பதிவில் விரிவா படித்து கொள்ளுங்கள்.
போன வாரம் துபாய் மால் போன போது எடுத்தது,. பிள்ளைகள் ஆசை பட்டதால் அங்கு வைக்கப்பட்டுள்ள சாண்ட கிளாசுஅருகில் ஆண்டி என்னை போட்டோ எடுங்க என்று என் தங்கை மகன் சொன்னதால் எடுத்தது.
இங்கு தூபாயில் உள்ள எல்லா மால் களிலும் கோலகலமாக அலங்காரமாக கிருஸ்மஸ் மரஙகளும் , சீரியல் லைட்டுகளும் சாண்ட கிளாசும் வைக்க பட்டுள்ளது,
இங்கு வீடுகளில் எல்லாம் கலர் கலரா அலங்கார விளக்குகள் மின்னுகின்றன.
குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
துபாய் மால் பார்த்துட்டு டிரெயின விட்டு வர வழியில் ஒரு சின்ன பொண்ணு ஓடி வந்து பிள்ளைகள் எல்லோருக்கும் கிஃப்ட் அழகா பேக் செய்து இருந்த கிஃப்ட எல்லோருக்கும் ஆளுக்கொன்னா கொடுத்தது,பெரிய பணக்கார ஆண்டி ரிக்கா பிஸினெஸ் செண்டர் கீழே ஒரு பெரிய பாக்கெட்டோடு உட்கார்ந்து அந்த பக்கம் போற வர குழந்தைகளுக்கெல்லாம் கிஃப்ட்
கலர் பென்சில், ஜாமெண்ட்ரி பாக்ஸ் எல்லாம். நம்ம பசங்க உடனே என்னிடம் இருந்த சாக்லெட்ட வாங்கி கொண்டு போய் அந்த பொண்ணுக்கு கொடுத்து விட்டு வந்தார்கள்.
எல்லா மால்களிலும், சூப்பர் மாட்கெட்டுகளிலும் வித விதமான கேக்குகள்.
கிருஸ்மஸ் கொண்டாடும் அனைத்து தோழிகளுக்கும் ஹாப்பி கிருஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்.
தோழிகள்
இமா, செபா ஆண்டி,செல்வி அக்கா, சித்ரா, விக்கி, கவி இனிய கிருஸ்மஸ் நல் வாழ்த்துக்கள்
இன்னும் கிருஸ்மஸ் கொண்டாடும் தோழ தோழியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
19 கருத்துகள்:
அதே...அதே...
எங்கள் வாழ்த்துக்களும்...
கிருஸ்மஸ் கொண்டாடும் அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படங்கள் அழகாக உள்ளது ஜலீலா அக்கா.
அப்பா கேக்கு எனக்குத்தானா ?
எல்லோருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
தாத்தா பக்கத்தில் நிற்ப்பது யாரு ? மகனா ? ( பேரனானு கேக்க பயமா இருக்கு )
துபைமாலுக்கு போய் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.இங்கும் அதே கோலாகலம்தான்.கிருத்துவ இல்லங்களில் ஸ்டார்கள் பளபளக்கும்.பக்கத்திலேயே ஒரு சர்ச்.வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஆர்ப்பாட்டமாக இருக்கின்றது.கிருஸ்துமஸ் கொண்டாட இருக்கும் நட்புக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
ஸ்ரீ ராம், ஆமினா, ரம்யா கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
அந்நியன் 2 , (அய்யுப்)
அன்று படம் முழுவது போட முடியல அதான் இன்று போட்டுள்ளேன்.
//தாத்தா பக்கத்தில் நிற்ப்பது யாரு ? மகனா ? ( பேரனானு கேக்க பயமா இருக்கு )
December 24, 2010 10:34 PM//
நாட்டம பயப்படலமா?
பேரன் பேத்தி எடுக்குற வயசு இன்னும் வரல.தங்கை மகன்
ஸாதிகா அக்கா உலகமே கோலாகலம் தான்
ஜலீலா அவர்களே....
யப்பா.... என்னா அதகளம் பண்ணி இருக்கீங்க... இவ்ளொ பெரிய பதிவு.. எவ்ளோ ஃபோட்டோஸ்... கூடவே இந்த மாதிரி உங்க ஸ்டைல் கமெண்ட் (கண்ணாடி உடைந்தால் அவ்வளவு தான் துபாய் மால் முழுவது மீனுடன் நாமும் நீந்த வேண்டியது தான்)... ஹா..ஹா. ரொம்பவே ரசித்தேன்...
இந்த பதிவிற்காக நீங்கள் உழைத்தது பதிவை படிக்கையில் தெரிந்தது...
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜலீலா...
ஜலீலா அவர்களே...
இந்த அருமையான பதிவை நானே தமிழிஷ்/இண்ட்லியில் இணைத்து விட்டேன்...
THANKS JALEELA AND ALL FOR THE WISHES.ALL THE PICTURES ARE LOVELY AND NICE.
துபாய் ரொம்ப பணக்கார நாடுன்னு தெரியும், ஆனா இப்படி விமரிசையா பண்டிகைகள் இருக்கும்னு இப்போ தான் தெரிஞ்சது. துபாய் மற்றும் , குழந்தைகள் போடோஸ் சூப்பர். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா.
கோபி உங்கள் தொடர் வருகைக்கும் , அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
( அங்கு எல்லோரும் சுவர் உயரம் உள்ள் மீன் நீந்துவதை கண்டு ரசிக்கும் போது எனக்கு ஒரு கணம் , யாராவ்து நம்ம ஊரு மாதிரி கல்ல போட்டு உடைச்சிட்டா என்ன செய்வாஙக் தண்ணியும் மீனும் நாமும் எல்லாம் சேர்ந்து மிதக்கனுமே என்று)
அதான் சிம்பிலா எழுதினேன்,
தமிழ்மனம், தமிலிஷில் இனைத்தமைக்கு மிக்க நன்றி
ஏன்சலின் உங்களுக்கும் கிருஸ்மஸ் வாழ்த்துகக்ள்.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி காஞ்சனா.
விக்கி துபாய் மிக்க பெரிய பணக்கார நாடு தான் (ஷேக்குகளுக்கு) அந்த காலத்து ராஜக்களை விட இன்னும் ராஜ போகமாய் இருக்கிறார்கள்.வருகை தந்தமைக்கு
மிக்க நன்றீ விக்கி .
எங்கள் வாழ்த்துக்களும்.
நன்றி சிவா
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா