எனது மண் எனது கலாச்சாரம்.
வளர்ந்ததில் இருந்து வீட்டை விட்டு வெளியில் அவ்வளவா எங்கும் போனதில்லை வெளியூர் டூர் எதுவும்.
வருடா வருடம் பள்ளி விடுமுறைக்கு திண்டிவனத்திலிருந்து சென்னை மட்டும் போய் வருவோம்.அதற்கு பிறகு சென்னை வந்து செட்டில் ஆனதும் சென்னைய தவிர எங்கும் போனதில்லை.
.கல்யாணத்தி|ற்கு பிறகு தேனிலவுக்கு எல்லோரும் போவது போல் பெங்ளூர் மைசூர், ஊட்டி, கொடைக்கானல் போயிருக்கேன்.
வெளிநாடு, சிங்கப்பூர்,சவுதி, நார்த் சைட் டூர் இதெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை.
கல்யாணம் ஆனதும் ரங்ஸ் உடனே சவுதி சென்றுவிட்டு அங்கிருந்து அப்படியே துபாய் என்று முன்று வருடம் ஆகிவிட்டது ஊருக்கு வர முடியாம போய் விட்டது, பிறகு ஆகையால் என்னை துபாய்க்கு
அழைத்தார்.
இங்கு வந்தால் வீட்டில் இருக்கும் வரை ஒகே, வெளியில் அப்ப எல்லாம் அவ்வளவா தமிழ் ஆட்கள், ஹிந்தி, மலையாளிகள் பார்க்க முடியாது.
எதற்கெடுத்தாலும் டேக்சி, பஸும் குறைவு தான்.
பாக்கிஸ்தானி டேக்சி தான் கிடைக்கும் சீட் எல்லாம் ரொம்ப ஜோராக ஜிகு ஜிகுன்னு டெகெரேஷனில் இருக்கும் ஆனால் உள்ளே உட்கார்ந்தா கப்பு தாங்க முடியாது, இதுக்கு மேலே வலவல தொல தொலன்னு பேசிக்கொண்டே வருவார்கள், இன்னும் மண்ட வலி ஜாஸ்தி ஆகும் அப்ப பிரெக்னெட் வேர , டேக்சியில ஏறினாலே ஒரு கவர எடுத்து போய் வாந்தி எடுத்துட்டே தான் வருவேன். எம்மாடி எப்படா அப்பா ஊர் போய் சேருவோமுன்னு இருந்தது. வண்டியில் ஏறினாலே அடிக்கிற வெயில்லுக்கு தலைசுற்றல் கொமட்டல் தான். ஊருக்கே போய் விடலமுன்னு தோன்றியது. இப்ப எல்லாம் சொகுசு டேக்சிகள், சுகுசு பஸுகள், பயணம் போகும் களைப்பே தெரியாத டிரெயின்.எல்லாம் மாறி விட்டது.
அடுத்து சிங்கப்பூர் அங்கும் ரொம்ப ஜோராக தான் இருந்தது, இருந்தாலும் எபப் வீடு வந்து சேருவோமுன்னு இருந்தது.
அங்கும் தெரியாத்தனாமா பஸில் மேல் மாடியில் போய் உட்கார்ந்து விட்டோம். அந்த ஊர் கலாச்சாரம் ரொம்ப மோசமா இருந்தது.
அடுத்து சவுதி மக்கா மதினா உம்ரா பயணம் சென்ற போது, அங்கு மட்டும் இருந்து வர மணமில்லை.
அமெரிக்காவில் கேட்கவே வேண்டாம் அங்கு என்ன நடக்குதுன்னு கலச்சாரத்த பற்றி எல்லோருக்கும் தெரிந்தது தான்...
இப்ப பையனை காலேஜில் சேர்த்துட்டு இரண்டு வருடமா ரொம்ப வருடம் கழித்து ரயில் பயணம் , வேற ஊர் மக்கள்.மொழியும் வேர, (மொழி தெரிந்ததால் தப்பிச்சோம் ( இல்லை என்றால் பே பே பே தான்.
சாப்பாடும் ( லாச்சா பரோட்டா, பனீர் புலாவ், ஆலு சமோசா, ஆலு பனீர், மட்டர் பனீர், தோக்ளா, பூரி சென்னா ) இது போல் தான்
நம் நாட்டு சாப்பாடு கிடையாது.பொங்கல் வடை , இட்லி வடை எல்லாம் நினைச்ச நேரத்தில் கிடைக்கல. )
டில்லி, ஆக்ரா, ஜெய்பூரில் கடைசியா ஜெய்பூரில் தங்கிய ஹோட்டல் அருகில் சூப்பரான தமிழ் நாட்டு டிபன் கிடைத்தது,அப்பாடா.
கடைசியா நம்ம ஊ ர் வந்து சேர்ந்த பிறகு தான் ஒரு புத்துணர்வே வந்தது.
இங்கும் துபாயிலும், எங்கு போனாலும் (அல் அயின், அபுதாபி,புஜேரா) வீடு வந்து சேர சில நேரம் 2 மணி நேரம் கிட்ட ஆகும் வீடு கிட்ட நெருங்கும் போது ஹைய்யா வீடு வந்துவிட்டது. என்று இருக்கும்.
கலாச்சாரம் என்று எடுத்து கொண்டால் , இங்கு நிறைய பிலிப்பைனிகள்
இன்னும் மற்ற நாட்டு மக்கள் எங்க அச்சம் மடம் நாணம் பயிர்பு எல்லா எங்க இருக்கு, ஃபிரி ஷோ தான்.
ரோட்டில் பார்த்தா இப்படி தான் நடக்க்னுமுன்னே கிடையாது இஷடதுக்கு இடத்த அடச்சிக்கிட்டு நடக்குங்க, அவஙக் நடக்குறது தான் நடை ,ரோட்ல் போற நம்ம மக்காஸ் எல்ல்லாம் ஐஸா உருகிடுராங்க..
ஹாஸ்பிட்டல் போனா அய்யோ அதுஙக் உட்கார்ந்து இருக்கும் போஸ் இருக்கே,எப்பா பார்க்க சகிக்காது.நல்ல குணங்களும் இருக்கு,ம் அதுக்கு தனி பதிவு முடிந்த போது போடுகிறேன்.
இது டிரெஸ் ஆண்கள் உள்ளே போடும் பனிய்னும், அந்த காலந்து ஆண்கள் அணியும் நிஜாரும். கலர்கரா, போட்டு வருங்க.
ஆனாம் நம் நாட்டு பெண்களுக்கு தான் உண்டு இந்த அச்சம் மடம் நாணம் பயிர்பு எல்லாம், நடையிலும் சரி உடையிலும் சரி.கலச்சாரத்தில் நம் நாட்டு மக்களை யாரும் மிஞ்ச முடியாது.
20 கருத்துகள்:
நல்ல பகிர்வு.... நன்றி..
எனது மண்., எனது கலாசாரம் அருமை.. மசாலா தோசையும் அருமை.. ரெண்டும் பார்சல்..:))
உங்க வெளிநாட்டு அனுபவம் படிச்சி ரசிச்சேன்:) என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் சாப்பாடு போல் வராதுங்க.
அவார்டுக்கு வாழ்த்துக்கள் . அமெரிக்காவில் பாக், டாக்ஸி டிரைவர்கள் ரொம்ப நல்லவங்கலா இருக்காங்க. Newyorkil நடுராத்திரியில் கூட அவர்களை நம்பி ஏறலாம், இது எங்கள் அனுபவம், ஒரு நாள் வழி தவறி, பர்சை திருடு கொடுத்து, அவஸ்தை பட்டு நின்றோம் , அப்போது கிடைத்த உதவி பெரிது: ). ஹிந்தி தெரியாததால் வடஇந்திய டாக்ஸி களில் என்னால் பேரம் பேச முடியாது:) மசால் தோசை என்னை மயக்குது:)
நல்ல பதிவு,நல்ல பகிர்வு ஜலீலாக்கா!
ஈவன்ட்டுக்கு அனுப்பும் ஐட்டங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு!
எல்லாமே நல்லா இருந்துச்சு வாழ்த்துக்கள் சகோ.
அனைத்தும் அருமை ஜலீலா,வாழ்த்துக்கள்.
வாத்துக்கள் மேடம்............. அப்புறம் ரொம்ப நன்றி மேடம் அவார்டுக்கு
ஜலீலாக்கா என்னதிது...
//சென்னை வந்து செட்டில் ஆனதும் சென்னைய தவிர எங்கும் போனதில்லை//
சென்னைல இருந்துகிட்டு சென்னைக்கு போனேன்னு சொல்ரீங்கோ...
//வெளிநாடு, சிங்கப்பூர்,சவுதி, நார்த் சைட் டூர் இதெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை//
ம்ம்..ஆரம்பத்துல இப்டி சொன்னவொடன நாங்கூட,பாவம் உலகமே தெரியாம வளந்துட்டீங்கன்ன்னு நெனச்சா...
வர வர..சவுதி,துபாய்,சிங்கப்பூர்,நார்த் இந்தியான்னு,தெக்கால பொறந்துட்டு,வடக்கு,மேற்கு கிழக்குன்னு மொரவச்சு ரவுண்ட் அடிச்சுருக்கீங்க...
//எதற்கெடுத்தாலும் டேக்சி, பஸும் குறைவு தான்.
பாக்கிஸ்தானி டேக்சி தான் கிடைக்கும் சீட் எல்லாம் ரொம்ப ஜோராக ஜிகு ஜிகுன்னு டெகெரேஷனில் இருக்கும் ஆனால் உள்ளே உட்கார்ந்தா கப்பு தாங்க முடியாது//
ஏதேது,,,துபாய்க்கு,துபாய்ன்னு பேர் வக்கிரதுக்கு முன்னாடியே துபாய்க்கு வந்துட்டீங்க போல..
இன்றைய துபாய்,பிலிபைனி,பற்றி தாங்கள் சொன்னது உண்மையிலும் உணமை...
நம்மூர் நம்மூர் தான்,,,,
அப்ரோ இந்த ப்ரேக்ஃபாஸ்ட் ஐட்டங்கள் அருமை....
அன்புடன்
ரஜின்
நல்ல பகிர்வு..
ஜலி,உங்களுக்கே உரித்தான் எளிய நடையில் அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லி மனதினை குதூகலப்படுத்தி விட்டீர்கள்.என்னதான் சொர்க்கம் ஆனாலும் ந்ம்முர் போலாகாது என்பது சத்யமான வரிகள்.
வாழ்த்துக்கள், விதவிதமான தோசைகளுக்கு நன்றி. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அக்கா
ஏங்க நீங்க வேற விதம் விதமா தோசை எல்லாம் போட்டு
பசியை வேற கிளப்பிவிட்றீங்க
மிக்க சந்தோசம்
அனைத்து அவர்ட்களுக்கும் வாழ்த்துக்கள்
சொல்ல வயதில்லை
இருந்தாலும் வாழ்த்துக்கள்
இன்னும் பல வகை தோசைகள் பார்சலில் அனுப்புமாறு கேட்டுகொள்கிறேன்
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
அக்கா
விருதுக்கு நன்றி தோழி . மகிழ்ச்சி
ஜலீலா...
எனது மண், எனது கலாச்சாரம் படு சூப்பர்...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... கூடவே உங்க ஸ்பெஷல் நகைச்சுவையும் கலந்து... நிறைய இடங்களில் சிரித்தேன்... ரசித்தேன்.. அதுவும் குறிப்பா அந்த ஃபிலிப்பைன்ஸ் பெண்களை விடவே மாட்டேங்கறீங்க..
(இங்கு நிறைய பிலிப்பைனிகள்
இன்னும் மற்ற நாட்டு மக்கள் எங்க அச்சம் மடம் ஞானம் பயிர்பு எல்லா எங்க இருக்கு, ஃபிரி ஷோ தான்)..
அப்புறம் பெண்களுக்கான கலாச்சார சம்பந்தப்பட்ட அந்த நான்கு விஷயங்கள், தப்பா எழுதி இருக்கீங்க... சரியானது இதோ :
1) அச்சம்
2) மடம்
3) நாணம்
4) பயிர்ப்பு
வழக்கம் போல் உங்களுக்கு கிடைத்த விருதை தோழமைகளுக்கு அளிக்கும் போது, மறக்காமல் எனக்கும் அளித்தது உங்கள் அன்பை காட்டுகிறது.. அதற்காக உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி....
உங்களுக்கும், குடும்பத்தார்க்கும், மற்றும் வலையுலக தோழமைகள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு (2011) நல்வாழ்த்துக்கள்..
அது தொடர்பான என் பதிவு இதோ :
HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html
Thanks Jaleela, enathu mann, enathu kalachaaram!!! Arputham, ennakum ithil pangu kuduthamaiku nanri!!!!
வாழ்த்துக்கள்:-) நல்ல பகிர்வு... விருதுக்கு நன்றி ஜலீலாக்கா:-)
அருமையான பகிர்வு
நன்றி
>>> வெற்றிதரும் ஆண்டாக 2011 அமைய வாழ்த்துகள்!!
விருதுக்கு நன்றி அதை பெற்றவர்களுக்கும் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்...!!
எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் நமது ஊரை மாதிரி வராது . அது போல தண்ணீரும் குளியல் உட்பட ..!! :-)
தோசை சட்னி + டேட்ஸ் சட்னியும் சூப்பர்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா