Wednesday, June 16, 2010

மசால் தோசை - masala dosai




தோசைக்கு

பச்சரிசி - 2 1/2 கப்
புழுங்கல் அரிசி - 1 1/2 கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
சோறு - ஒரு கை பிடி
உளுந்து - ஒரு கப்

செய்முறை

உளுந்தில் வெந்தயம் சேர்த்து ஊறவைக்கவும், இரண்டு வகை அரிசிகளையும் ஒன்றாக கலந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் அரிசியையும், அடுத்து உளுந்தில் சோறு சேர்த்து அரைத்து இரண்டையும் ஒன்றாக கலந்து புளிக்க விடவும்.

பில்லிங் மசாலாவிற்கு
உருளை கால் கிலோ ( வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்)
தாளிக்க
எண்ணை - ஒரு மேசைகரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரைதேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
முந்திரி - 4 ( பொடியாக அரிந்தது
கருவேப்பிலை - 15 இலைகள் இரண்டாக கிள்ளியது
பூண்டு - ஒரு பல் (பொடியாக அரிந்தது))
வெங்காயம் - முன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (5 கிராம்)
பச்ச மிளகாய் - ஒன்று
உப்பு -தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
நெய் + எண்ணை - தேவைக்கு
செய்முறை
தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து, வெங்காயம் , தக்காளி, பச்சமிளகாய், சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது ஒரு சேர கிளறி ஐந்து நிமிடம் மசிய விட்டு , வேகவைத்து உதிர்த்து வைத்துள்ள உருளையை சேர்த்து நன்கு கிளறி ஒரு கை பிடி அளவு தண்ணீர் தெளித்து, மீண்டும் சிம்மில் வைத்து , கடைசியாக கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.





தோசை தவ்வாவை காய வைத்து அதில் சிறிது எண்ணை விட்டு வெங்காயத்தை பாதியாக அரிந்து தவ்வா முழுவதும் தேய்க்கவும். (அப்ப தோசை நீங்க நினைப்பது போல் உங்கள் சொல் பேச்சு கேட்கும்.)

மெல்லிய தோசைகளாக பரவலாக ஊற்றி தீயின் தனலை சிம்மில் வைத்து சுற்றிலும் நெய் கலந்த எண்ணையை ஊற்றவும்.
இரண்டு நிமிடத்தில் சிவந்து வருவது தெரியும், அப்போது மசாலா கலவையை இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து தோசையின் அரைபாகம் மட்டும் பரவலாக தடவவும்.
இப்போது உங்களுக்கு வேண்டிய வடிவில் மடித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான மசால் தோசை ரெடி






இதே போல் காளி பிளவர், கீமா,கீரை சிக்கன் வெஜ் டேபுள் தோசை என்றும் பல விதமாக சுடலாம்.
ஹோட்டலில் வைப்பது போல் மசாலா வை அள்ளி வைத்தால் சாப்பிட தோசையே கிடைக்காது வெரும் உருளையைதான் அள்ளி சாப்பிடனும், அங்கு நிறைய வேஸ்டும் ஆகும்,
இதில் சொல்லிய படி சிறிது கம்மியாக வைத்தால் , தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.கூட சாம்பார் , சட்னி, உளுந்துவடை இருந்தால் ஒரு பிடிதான்.



66 கருத்துகள்:

சசிகுமார் said...

அண்ணனுக்கு ஒரு மசால் தோசை பார்சல்.

Jaleela Kamal said...

என்ன தம்பி தீடீருன்னு அண்ணனாயிட்டீங்க.

சரி ஒகே சசி அண்ணனுக்கு ஒரு செட் மசால் தோசை பார்சல்

நட்புடன் ஜமால் said...

என்னா வில்லத்தனம் ;)

காலையிலேயே இப்படி போட்டோ போட்டா

பேச்சிலார்கள் என்னாவுறது

------------

30 நிமிடங்கள் ஆயிற்று ( வெறும் தோசை தான் )
சாப்பிட்டு :)

Aruna Manikandan said...

parkave romba nalla irruku akka...
Thx. for sharing :-)

Chitra said...

அக்கா, சூப்பர்! தோசையை எப்படி முக்கோணமாக மடிக்கிறீங்க? அழகா இருக்குது.

sarusriraj said...

பார்கும் போதே வாய் ஊறுது , ரொம்ப நல்லா இருக்கு

இமா said...

ஆஹா! மசால் தோசை சுப்பரா இருக்கு ஜலீலா. ;)
ப்ளாக் செட்டிங் கூட அழகா இருக்கு.

அஹமது இர்ஷாத் said...

தோசை சூப்பருங்க..

ஸாதிகா said...

ஜலி,உங்கள் வீட்டு மசால் தோசை முக்கோண வடிவில் தான் இருக்குமா?நாங்கள் அரைவட்டவடிவில் மடிப்பொம்.பில்லிங் மசாலாவை கண்ணிலேயே காட்டவில்லையே?

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நானும் அரை வட்டம் + முக்கோண வ்டிவம்,

இது மசாலா உள்ளே உள்ளது தெரியனுமேன்னு கொஞ்சம் முன்றூபாகமா மடித்தேன்

Jaleela Kamal said...

சகோ . ஜமால் என்ன காலையில் வெரும் தோசையா நா வேர கூட கொஞ்ச்ம பசிய கிளப்பி விட்டுட்டேனா.

Jaleela Kamal said...

அருனா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

சித்ரா , என் முர்தபா ரெசிபிய பாருங்கள் அதில் மடிப்பது காண்பித்துள்ளேன்.

Jaleela Kamal said...

சாருஸ்ரீ நலமா?

வந்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

இமா வாங்க பிளாக் செட்டிங் நலல் இருக்கா? ரொம்ப தேங்க்ஸ் பா

வருகைக்கு மிக்க ந்ன்றி

Jaleela Kamal said...

நன்றி அகமது இர்ஷாத்

asiya omar said...

மசால் தோசை சூப்பர்.அந்த ப்லேட் அப்படியே எனக்கு,இன்னும் டிஃபன் சாப்பிடலை,இப்படி ஆசை காட்டலாமா?

SUFFIX said...

சூப்பர் தோசை, இதை சாப்பிட்டுட்டு ஒரு கப் காபியும் குடிக்கணும்.

Jaleela Kamal said...

//மசால் தோசை சூப்பர்.அந்த ப்லேட் அப்படியே எனக்கு,இன்னும் டிஃபன் சாப்பிடலை,இப்படி ஆசை காட்டலாமா//


ஆசியா இதுக்கு தான் தோசைமாவு எப்போதும் வைத்து கொள்ளனும் என்பது.

Jaleela Kamal said...

/சூப்பர் தோசை, இதை சாப்பிட்டுட்டு ஒரு கப் காபியும் குடிக்கணும்//

ஷபி ஆமா காஃபி ய சொல்ல மற்ந்துட்டேன், ரொம்ப சூப்பரா இருக்கும்.

ஹுஸைனம்மா said...

ஆமாக்கா, ஹோட்டல்ல மசாலா நிறைய வேஸ்ட் ஆகும்!!

இத அப்படியே ரோல் பண்ணி ஷவர்மா மாதிரியும் பிள்ளைங்க சாப்பிடுவாங்க.

GEETHA ACHAL said...

ஆஹா...தோசை டாப் டக்கர்...

Kanchana Radhakrishnan said...

ரொம்ப சூப்பரா இருக்கு.

அமைதிச்சாரல் said...

சூப்பரா இருக்கு.. மடித்து வைத்திருக்கும் விதம் அழகு.

Riyas said...

DHOSAI... SUPERB

Chitra said...

aahhh, appadiyae saapiduven ;)super..

இளம் தூயவன் said...

ம்.... பெரு மூச்சி தான் விட முடியும், சாப்பிட முடியாதே, சகோதரி DHL அரமெக்ஸ் மூலம் பார்சல் அனுப்ப வாய்ப்பு உண்டா ?

Jaleela Kamal said...

ஆமாம் ஹுஸைனாம்மா இது நிறைய வேஸ்ட் ஆவதையும் அதை அப்படியே கொண்டு போய் கொட்டுவதையும் பார்த்து இருக்கிறேன்.

நன்றி ஹுஸைனாம்மா

Jaleela Kamal said...

//ஆஹா...தோசை டாப் டக்கர்...//

நன்றி கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமைதி சாரல்

Jaleela Kamal said...

நன்றி ரியாஸ்

Jaleela Kamal said...

சித்ரா எப்படி அப்படியே சாப்பிடுவீங்க ஹார்லிக்ஸ் பேபி போலவா?

Jaleela Kamal said...

//ம்.... பெரு மூச்சி தான் விட முடியும், சாப்பிட முடியாதே, சகோதரி DHL அரமெக்ஸ் மூலம் பார்சல் அனுப்ப வாய்ப்பு உண்டா ?

இளம் தூயவன் விசாரித்து பார்க்கிறேன்.
முடிந்தால் அனுப்பி விட்டுடுறேன்

Jaleela Kamal said...

அதிரா பேபி அதிரா நீஙக் வருவீங்கன்னு தெரியும் இம்முறையும் உங்களுக்கு வடை போச்சு,
லேட்டா வந்துட்டு தை தை குதிக்கக்ப்படாது.

நான் என்ன் செய்வேன் நீங்கள் நித்திரை கொள்ளும் போது நான் வரேன்

நான் நித்திரை கொள்ள்ளும் போது நீங்க வரீங்க , ஒரு நாளாவது கெதியா விழுத்திருங்கள்,. இனி இதோடு சனிக்கிழமைத்தான் அடுத்த போஸ்ட்,
சாம்பாருக்காகதான் உடனே தோசைய போட்டேன்.

vanathy said...

Akka, super dosai.

அக்பர் said...

தோசை ஆறிப்போன பிறகு வந்துட்டனே.

நல்ல சமையல் குறிப்பு.

எனக்கும் வீட்டில் இந்த மாதிரி தோசை சுடச்சொல்லி சாப்பிட ஆசை. அவங்களுக்கு கல்தோசை (எல்லா தோசையும் கல்லுலதான்னு சொல்லக்கூடாது)
மட்டும்தான் வருகிறது. ஊரில் போய் செய்ய சொல்ல வேண்டியதுதான்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா தோசை அருமையா இருக்கு; உங்கவீட்டு சாப்பிட வந்திடவேண்டியது. என்ன கொஞ்சம் செலவானாலும் இதுபோல சாப்பிடமுடியுமா என்ன..

சுகந்தி said...

சூப்பர் தோசை!!! அழகா மடிச்சிருக்கீங்க!!!

ஜெய்லானி said...

நாந்தான் இன்னைக்கும் லேட்டா ?..!!

தோசைய பாத்ததும் கை பறபறன்னு ஊறுது... பரவாயில்லை அதிஸுக்கு இன்னைக்கும் வடை , சட்னி , ஆயா எல்லாம் போச்சு..ஹி..ஹி..

அப்பாவி தங்கமணி said...

கேக்கறதுக்கும் பாக்கறதுக்கும் நல்லாத்தான் இருக்குங்க...ஆன எக்க சக்க வேலையா இருக்கும் போல இருக்கே... சரி வீட்டுல இருக்கற அன்னிக்கி பண்ணுவோம்... நன்றிங்கோ...

Mahi said...

நல்லா இருக்கு!

Jaleela Kamal said...

நன்றி வானதி

Jaleela Kamal said...

(எல்லா தோசையும் கல்லுலதான்னு சொல்லக்கூடாது) ஹாஹா
அக்பர், இடையில் ஜோக் வேர
அதற்கென்ன நான் தான் செய்முறை ஈசியா தானே கொடுத்து இருக்கேன்.
நீஙக்ள் எல்லாம் ருமில் சமைக்கிறீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

//ஆஹா தோசை அருமையா இருக்கு; உங்கவீட்டு சாப்பிட வந்திடவேண்டியது. என்ன கொஞ்சம் செலவானாலும் இதுபோல சாப்பிடமுடியுமா என்ன//

ஸ்டார்ஜன் அதற்கென்ன வாங்க எத்தனை தோசை என்றாலும் சூடாக சுட்டுடலாம்

Jaleela Kamal said...

//நாந்தான் இன்னைக்கும் லேட்டா ?..!!

தோசைய பாத்ததும் கை பறபறன்னு ஊறுது... பரவாயில்லை அதிஸுக்கு இன்னைக்கும் வடை , சட்னி , ஆயா எல்லாம் போச்சு..ஹி..ஹி..//

லேட்டா வந்தால் என்ன தோசை அப்படியே தான் இருக்கும் சகோ ஜெய்லானி

அதிஸ் என்னன்னு தெரியல இன்னும் வரக்கானும்

Jaleela Kamal said...

//கேக்கறதுக்கும் பாக்கறதுக்கும் நல்லாத்தான் இருக்குங்க...ஆன எக்க சக்க வேலையா இருக்கும் போல இருக்கே... சரி வீட்டுல இருக்கற அன்னிக்கி பண்ணுவோம்... நன்றிங்கோ//

அப்பாவி தங்கமணி வேலைக்கு போறீஙக்லா கொஞ்சம் சிரமம் தான்

இது ஒன்றூம் பெரிய வேலை இல்லை. பூரி பாஜி போல், தோசை பாஜி அவ்வளவே.

முடிந்த போது முயற்சி செய்யுங்கள்.

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி மகி

ஜெய்லானி said...

//அதிஸ் என்னன்னு தெரியல இன்னும் வரக்கானும் //

பூஸாருக்கு இப்பும் வாசனை எட்டவில்லை போலிருக்கு.. நல்ல தூக்கமா இருக்கும்..!!

சுகந்தி said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

சுக‌ந்தி நான் பார்த்துட்டேன் பா ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கு. அருமையோ அருமை ஊருக்கு போவ‌தால் க‌மெண்ட் மாட்ரெட் எடுத்துட்டேன்.
குட்டி உங்க‌ள் பொண்ணா? சோ ஸ்வீட்

மனோ சாமிநாதன் said...

ஜலீலா! மசாலா தோசை எனக்குப் பிடித்த மாதிரி பொன் முறுவலாக பார்க்கவே அருமையாயிருக்கிறது!!

Ammupappa said...

hi,
very nice blog. thanks for using my template.ur blog is listed in my template users list.

Sowmya said...

ஹாய் ஜலீலா எனக்கு ரொம்ப பிடிச்ச டிபன்
பாக்கும் போதே சூப்பர் ஆ இருக்கு.

இளம் தூயவன் said...

சகோதரி என் வலைதளத்திற்கு வந்து கருத்துரை போட்டு இருந்தீர்கள் மகிழ்ச்சி. புதிய இடுக்கையில் ஒன்றும் கருத்து கூறவில்லையே?

சிநேகிதி said...

ஜலிலா அக்கா நலமா? உங்களின் பதிவுகளை பார்க்கமுடியவில்லையே என்று மிகவும் வருத்தமாக இருந்துச்சு. தினமும் ஒரு முறையாவது உங்கள் திறமையினை பற்றி வீட்டில் பேசிக்கொண்டே இருப்பேன்.. எனது தோழியின் மூலமாக நெட் எடுத்து பார்க்கிறேன்.. தொடர்ந்து என்னால் வரமுடியாது.. உங்கள் திறமை மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
ஜமால் அண்ணன் நலமா? மச்சி ஊரில் இல்லையா?

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றீ மனோ அக்கா

அதுகென்ன வாஙக் சுட சுட சுட்டுத்தாரேன்/

Jaleela Kamal said...

அம்மு பாப்பா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சவுமியா உங்கல் வருகைக்கு மிக்க நன்றி.

இது எல்லோருக்கும் ரொம்ப பிடிச்ச டிபனாச்சே.

Jaleela Kamal said...

இளம் தூயவன் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

வந்து படித்த போது கருத்துதெரிவிக்க முடியல.
பிறகு வருகிறேன்

Jaleela Kamal said...

பாயிஜா ரொம்ப நாள் ஆச்சு பேசி
இங்கு எல்லோரும் நலம்

பிள்ளைகல் நலமா?
எப்ப சென்னை வருகிறீர்கள்
நானும் ஊருக்கு வரேன்.

ப்ரியமுடன்...வசந்த் said...

சகோ இந்த டெம்ப்லேட் எடுத்த வெப்சைட் முகவரி தர இயலுமா?

Jaleela Kamal said...

வசந்த் தம்பி

/சகோ இந்த டெம்ப்லேட் எடுத்த வெப்சைட் முகவரி தர இயலுமா//

அதுக்கென்ன தாராளமாக.

பதிவிலேயே விளக்கமா போடலாம் என்று இருந்தேன் ஆனால் இபப் போட நேரமில்லை

இதே பதிவில் சவுமியாவிற்கு மேலே ஒருவர் கமெண்ட் இட்டு இருக்கிறார் பாருங்க்ள்

அம்முபாப்பா
அதை கிளிக் பண்ணுங்கல் நேரா அங்கு கொண்டு போய் விடும்..
விடலன்னா சொல்லுங்கள்.

Senthil Kumar said...

அன்பு ஜலீலா உங்கள் மசால் தோசை பதிவை பார்த்து செய்து பார்த்தோம் மிகவும் டேஸ்டாக இருந்தது.

Senthil Kumar said...

அன்பு ஜலீலா உங்கள் மசால் தோசை பதிவை பார்த்து செய்து பார்த்தோம் மிகவும் டேஸ்டாக இருந்தது.

Jaleela Kamal said...

செந்தில் குமார் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி, ரொம்ப சந்தோஷம்..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா