| Tweet | ||||||
Showing posts with label பாஸ்தா. Show all posts
Showing posts with label பாஸ்தா. Show all posts
Saturday, November 3, 2018
பாலக் மட்டன் பாஸ்தா - Palak Mutton Pasta
காலை உணவோ அல்லது ,லன்ச் பாக்ஸ் கோ, அல்லது இரவு உணவோ ஈசியா செய்துடலாம் பாஸ்தா, குழந்தைகளுக்கும் இந்த வடிவம் அவர்களை சாப்பிட தூண்டும். இதை மட்டன் மற்றும் சிக்கன் அல்லது இறால் போன்றவையுடன் செய்து கொடுக்கலாம். இல்லை விருப்பமான காய்கறிகள் சேர்த்தும் பனீர் சேர்த்தும் செய்யலாம்.
Ingredients
வெந்த மட்டன் துண்டுகள் - 6
போ வடிவ பாஸ்தா - 2 கப்
பாலக் கீரை - 1 கப்
வால் நட் - 3
பச்சமிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1
பட்டர் + எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
#Pasta#Lunchboxrecipes , #பாஸ்தா #மக்ரூனி, டிபன், #இரவுஉணவு.
செய்முறை
பாஸ்தாவை தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து சிறிது எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.
பாலக்கீரையை வேகவைத்து தண்ணீரைவடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிகட்டவும்.
பாலக் கீரையுடன் வால்நட், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சமிளகாய், சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் எண்ணை+ பட்டர் சேர்த்து அரைத்த விழுது மற்றும்உப்பு சேர்த்து நன்கு கிளறி ,மட்டன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேகவைக்கவும்.
கீரை + மட்டன் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் வெந்ததும். வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.காலை டிபனுக்கு ஏற்ற சுவையான சத்தான மட்டன் பாலக் பாஸ்தா ரெடி.
கவனிக்க:மட்டனில் மிளகாய் தூள்கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிட்டிக்கை, உப்புகால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டுகால் தேக்கரண்டி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..இதை மீதியான பொரிச்ச கறியிலும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துசெல்ல சத்தான பாலக் மட்டன் பாஸ்தா.
Labels:
அயல் நாட்டு உணவு,
டிபன் அயிட்டம்,
டிபன் வகைகள்,
பாஸ்தா,
மட்டன்,
லன்ச் பாக்ஸ்
Monday, June 2, 2014
கேரட் பாஸ்தா - Carrot Pasta
குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் கொடுத்தனுப்ப எத வைத்தாலும் அப்படியே திரும்பி ( போன மச்சான் திரும்பிவந்தான்னு ) வருதேன்னு அம்மா மார்கள் கவலை படுவதுண்டு. மதிய உணவுக்கு மெனக்கிடுவதை விட காலையில் குழந்தைகள் லன்ச் பாக்ஸ்க்கு விதவிதமாக கொஞ்சம் சிரமம் பார்க்காமல் செய்து வைத்தால் குழந்தைகள் குஷியுடன் சாப்பிட்டுவருவார்கள்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருக்கிறது, அதில் காலையில் ஏதாவது பாலை குடித்து விட்டு போனால் இந்த பஸ்ஸில் அல்லது ஆட்டோவில் சுற்றி சுற்றி போய் சேருவதறகுள் அடிக்கிற இந்த வெயிலுக்கு வாந்தி தான் வரும்.
அதுவும் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பாஸ்தா என்றால் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். இது போல் செய்து வைத்தால் ரொம்ப ஈசியாக நோகாமல் சாப்பிடுவார்கள்.
பாஸ்தா முதல் நாளே வேக வைத்து, வைத்து கொண்டால் 10 நிமிடத்துக்குள் செய்து லன்ச் பாக்ஸ் க்கு அனுப்பி விடலாம். தேவைப்பட்டால் இதில் எலும்பில்லாத சிக்கனை கூடசேர்த்து கொள்ளலாம்.
(முக நூலில் சமையல் அட்டகாசம் பேஜில் ஒரு தோழி(nafeesa Banu) ஈசியான லன்ச் பாக்ஸ் ரெசிபி கேட்டதால் இந்த பாஸ்தா)
தேவையான பொருட்கள்
வேகவைத்த பாஸ்தா - அரை கப்
வெங்காயம் - பொடியாக நறுக்கியது இரண்டு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
தக்காளி பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் பொடியாக நறுக்கியது - இரண்டு மேசைகரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பட்டர் + எண்ணை - ஒரு தேக்கரண்டி
செய்முறை
நான்ஸ்டிக் பேனில் எண்ணை + பட்டரை ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கேரட் , மிளகாய் தூள், உப்பு சேர்த்துவதக்கி 3 நிமிடம் வேகவைக்கவும்.
பிறகு தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு பிரட்டி 2 நிமிடம் ஒரு சேர கிளறி இரக்கவும்.
Linking to Gayathri's walkthrough memory lane hosted by The big tooth
| Tweet | ||||||
Labels:
குழந்தை உணவு,
சைவம்,
டிபன் வகைகள்,
பாஸ்தா,
லன்ச் பாக்ஸ்
Saturday, April 16, 2011
ஹோம் மேட் பாஸ்தா - கோடா - homemade pasta - koda
கோடா என்பது சேமியா, மக்ரூனி, பாஸ்தா போல் வீட்டில் தயார் செய்வது கோடா என்பது வீட்டில் தயார் செய்வது. தயாரிக்கும் முறை. ஒரு கிலோ மைதா (அ) கோதுமை மாவை எடுத்து சிறிது உப்பு சேர்த்து பரோட்டாவிற்கு பிசைவது போல் சிறிது தளர்த்தியாக பிசைந்து உருண்டைகளாக போட்டு நல்ல மாவு தேய்த்து மெல்லியதாக திரட்டி ஒரு பேப்பரில் வெயிலில் காயவைக்கவும். இரண்டு பக்கமும் காய்ந்ததும் அதை குறுக்கும் நெடுக்குமாய் டைமண்ட் ஷேப்பில் கஜுருக்கு
| Tweet | ||||||
Monday, November 8, 2010
புரோக்கோலி பாஸ்தா

தேவையானவை
மட்டன் கீமா – 50 கிராம்
டொமேட்டோ பேஸ்ட் – 50 கிராம்
விரும்பிய வடிவில் பாஸ்தா 200 கிராம்
புரோக்கோலி – 100 கிராம்
உப்பு – தேவைக்கு
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாஸ்தாவை சேர்த்து அதில் சிறிது உப்பு, எண்ணை விட்டு வேகவைக்கவும்.
எண்ணையை காயவைத்து அதில் பூண்டு வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி பேஸ்ட் சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள் சோயாசாஸ் சேர்த்து நன்கு கிளறவும்,
சுத்தமாக கழுவிய மட்டன் கீமாவை சேர்த்து நன்கு வேகவிட்டு, வெந்த பாஸ்தாவை வடித்து சேர்த்து பிரட்டி இரக்க்வும்.
சுவையான புரோக்கோலி மட்டன் கீமா பாஸ்தா ரெடி
Note:
Deit seypavarkaL
மட்டன் கீமாவிற்கு சிக்கனில் (அ) வெஜ் டேபுள்ஸ் சேர்த்து செய்து கொள்ளலாம்.
பட்டர் நெய் சேர்க்காமல் ஒரு தேக்கரண்டி எண்ணையில் தாளித்தால் கூட போதும்.
கீமாவில் செய்வதால் குழந்தைகளுக்கு ஈசியா ஜீரணம் ஆகும்.
கீமாவும், புரொக்கோலியும் ரிச் அயர்ன், கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்றது.
கீமாவில் செய்வதால் குழந்தைகளுக்கு ஈசியா ஜீரணம் ஆகும்.
கீமாவும், புரொக்கோலியும் ரிச் அயர்ன், கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்றது.
| Tweet | ||||||
Thursday, April 8, 2010
இறால் பாஸ்தா/prawn pasta
தேவையானவை
இறால் = 10 மீடியமானது
பாஸ்தா = இரண்டு டம்ளர்
எண்ணை = முன்று தேக்கரண்டி
வெங்காயம் = இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
தக்காளி = முன்று
பச்சமிளகாய் = ஒன்று
கொத்து மல்லி , புதினா தழை = சிறிது
தேங்காய் பவுடர் = முன்று தேக்கரண்டி
முந்திரி = முன்று
உப்பு = தேவைக்கு
மிளகாய் தூள் = முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = சிறிது
செய்முறை
விரும்பிய வடிவ பாஸ்தாவை தனியாக குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணை சிறிது உப்பு போட்டு வேகவைத்து வடித்து வைக்கவும்/
தனியாக வாயகன்ற வானலியில் இறாலை தாளிக்கவும்.
எண்ணை விட்டு பட்டை சேர்த்து வெங்காயம் வதக்கி , இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு பச்சவாடை போக வதக்கி, கொத்துமல்லி, புதினா, தக்காளி, பச்சமிளகாய் சிறிது உப்பு போட்டு தக்காளியை மசிய விடவும்.
எண்ணை விட்டு பட்டை சேர்த்து வெங்காயம் வதக்கி , இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு பச்சவாடை போக வதக்கி, கொத்துமல்லி, புதினா, தக்காளி, பச்சமிளகாய் சிறிது உப்பு போட்டு தக்காளியை மசிய விடவும்.
அடுத்து இறால்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தேவைக்கு மீண்டும் சிறிது உப்பு தூள் சேர்த்து தீயின் தனலை குறைத்து வைத்து கிரேவி கிரிப்பாக விடனும்.
பிறகு வடித்து வைத்த பாஸ்தாவை சேர்த்து தேங்காய் பவுடருடன் முந்திரி சேர்த்து அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு சிறிது தண்ணீர் போல இருக்கும் போதே இரக்கி விட வேண்டும்.ஆறியதும் கெட்டியாகிடும்.
குறிப்பு
இது இறாலில் செய்வதால் தனித்தனியாக வேகவைக்கனும் இறால் வேகும் நேரம் குறைவே, ரொம்ப வெந்தால் ரப்பர் போல் ஆகிடும்குக்கரில் நிமிஷத்தில் செய்து விடலாம், ஆனால் சிக்கன், இறாலை தனித்தனியாக தான் செய்யனும்.
மட்டன் இது எல்லாத்தையும் குக்கரிலேயே ஏற்றிடலாம் செய்முறை சிறிது மாறும்/
குழந்தைகளுக்கு செய்வதாக இருந்தால் நூடுல்ஸ் டைப்பில் செய்ய்யலாம்.
தக்காளிக்கு பதில் தக்காளி பேஸ்ட், கெட்சப் போட்டு செய்து கொடுக்கலாம்,
டிஸ்கி:இது மங்குனி அமைச்சர் இறாலையே பார்த்ததில்லை என்றால் அவருக்காக அமைச்சரே (உங்களுக்கு மட்டும் கூட இரண்டு கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கொள்ளும், முடிந்தால் பத்து பச்ச மிளகாய்.)
அமைச்சரே இறால் பிரியாணி போட நாளாகும் அது வரை
அமைச்சரே இறால் பிரியாணி போட நாளாகும் அது வரை
தங்கை பையன் எப்போது கையில் ஒரு கரண்டியோடு தான் இருப்பான், பெரிமா உங்களை விட நான் நல்ல சமைப்பேனாக்கும்.
| Tweet | ||||||
Wednesday, April 7, 2010
பாஸ்தா என்றால் என்ன?

சின்ன குட்டி வாண்டுக்கு கூட பிடிச்சிருக்கு
இது ஸ்வீட் பாஸ்தாவில் பித்தன் சார் பாஸ்தாவை பற்றி கேட்டு இருந்தார் அவருக்காக இந்த பதிவு. பார்த்துட்டு இதானான்ன கூடாது,எனக்கு தெரிந்த ஒரு சின்ன பதிவு.

பாஸ்தா மக்ரூனி ஸ்பேகதி எல்லாம் ஒன்று தான். மைதா மற்றும் கோதுமையில் விதவிதமான வடிவஙகளில் செய்யப்படு விற்க்கபடுகிறது.
இதை நாங்கள் வீட்டிலும் செய்வோம், கொஞ்ச நாளா செய்து வெளியில் கடைகளிலும் விற்றோம்,அது டைமண்ட் ஷேப்பில் வரும்,
அதிகமாக இத விரும்பி உண்பவர்கள், இத்தாலி மக்கள், பிலிப்பைனிகள், சிங்கப்பூர், சைனாவிலும் இந்த வகை உணவுகள் அதிகம்.நம் இந்தியாவில் மக்ரோணி அவரவர் ருசிக்கு ஏற்ப இதை செய்து கொள்வார்கள்.
பிலிப்பைனிகளின் மதிய உணவு எப்போதும் பாஸ்தா தான், நம்ம பிலிப்பைனி ஆன்டிகள் கிட்ட என்ன சாப்பிட்ட என்று கேட்டால் பாஸ்தா வித் சிக்கன் என்று சொல்வார்கள்.
வித விதமான பாஸ்தாக்கள்
வாவ் யம்மி யம்மி ஸ்பிரிங் டைப் பாஸ்தா

இதில் சிக்கனில், மட்டனில், பீஃபில், வெஜ் டேபுள்ஸ் , முட்டை சேர்த்தும் வித விதமாக செய்யலாம்.
K.F.C., Pizza போன்ற இடங்களில் பாஸ்தா சாலட் வைப்பார்கள்.
இதில் சூப்பும் செய்யலாம்.
பாஸ்தா என்றால் = மக்ரோனி
மலிக்காவின் பாஸ்தாவை பார்க்கவும்.\
டிஸ்கி: அமைச்சருக்கு நாளை காராசராமான பாஸ்தா கிடடைக்கும்
பாஸ்தா என்றால் = மக்ரோனி
மலிக்காவின் பாஸ்தாவை பார்க்கவும்.\
டிஸ்கி: அமைச்சருக்கு நாளை காராசராமான பாஸ்தா கிடடைக்கும்
| Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)








