Showing posts with label முட்டை சமையல். Show all posts
Showing posts with label முட்டை சமையல். Show all posts

Wednesday, October 10, 2018

முருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll


முருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll

ஆயத்த நேரம் - 5 நிமிடம்
தயாரிக்கும் நேரம் - 3 நிமிடம்
பரிமாறும் அளவு - ஒரு நபருக்கு
ஆக்கம் : ஜலீலாகமால்
லன்ச் பாக்ஸ் அல்லது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு இந்த முட்டை ரோல் செய்யலாம். முட்டை ஆம்லேட் ரோல்
இதன் தனித்தன்மையே முட்டையில் முருங்கக்கீரை சேர்ப்பது தான். தினமும் கீரை உணவிற்கு இது ஒரு ஐடியா. பேலியோ டயட் செய்பவர்கள் இதில் சப்பாத்தியை தவிர்த்து முட்டையை மட்டும் சாப்பிட்டு கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

முட்டை – 2
மிளகு தூள் அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் ப்ளேக்ஸ் – ¼ தேக்கரண்டி
முருங்ககீரை பொடி – ½ தேக்கரண்டி
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் – 3
 கொத்துமல்லிதழை - சிறிது




முட்டை ரோல் செய்ய ஒரு பெரிய சப்பாத்தி.
செய்முறை
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் முட்டையில் கலக்கவும்.
தோசை தவ்வாவை சூடு படுத்தி ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் + பட்டர் சேர்த்து கலக்கிய முட்டையை ஊற்றி இரண்டும் பக்கமும் கருகாமல் வேக வைத்து இரக்கவும்.


ரெடியாகிய முருங்ககீரை முட்டையை சப்பாத்தியின் மேலே வைத்து ரோல் செய்து சாப்பிட தகுந்த துண்டுகளாக போடவும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, January 13, 2017

மஞ்சள் பூசனி முட்டை தோசை (பேன்கேக்) Pumpkin Egg Pancake


Pumpkin Egg Dosa
#பேலியோடயட்
#டிபன் வகைகள்

மஞ்சள் பூசனி முட்டை தோசை (பேன்கேக்)

துருவிய மஞ்சள் பூசணி - அரை கப் ( 100 கிராம்)
உப்பு தேவைக்கு
தக்காளி - அரை பழம்
பச்சமிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று பொடியாக அரிந்தது
முட்டை 4
தேங்காய் பால் - கால் கப்

தேங்காய் எண்ணை - சுட தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது

செய்முறை

சட்டியை காயவைத்து தேங்காய் எண்னை சேர்த்து வெங்காயம் இஞ்சி பூண்டு கொத்துமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கி துருவிய பூசணி உப்பு தேவைக்கு மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்து ஆறவைக்கவும்.

முட்டையில் தேங்காய் பால் உப்பு சேர்த்து மிக்சியில் அடிக்கவும்

ஆறிய கலவையை முட்டையுடன் சேர்த்து செட் தோசை போல தேங்காய் எண்ணை சேர்த்து வார்க்கவும்.

மூன்று தோசைகள் வரும்.

கவனிக்க: இந்த கலவை கலந்து தோசை ஊற்றும் போது அவசரபட்டு உடனே திருப்ப கூடாது இல்லை என்றால் விண்டு விடும் ,. சிறு தீயில் மூடி போட்டு வேக விடவும். ஒரு பக்க வெந்ததும் மெதுவாக மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிட்டு இரக்கவும்.

காய் சேருவதால் ஏதானும் ஒரு சாலட் உடன் மதிய உணவிற்கு சாப்பிடலாம்.

ஆக்கம்

Jaleela Kamal



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, October 7, 2016

பாயில்ட் எக் சாண்ட்விச் - Boiled Egg Sandwich



பாயில்ட் எக் சாண்ட்விச்

எல்லாசத்துக்களும் ஒன்றாக அடங்கிய பவர் பேக் சாண்ட்விச்

தேவையானவை
லாங் பண் அல்லது ப்ரவுன் ப்ரெட் அ நார்மல் ப்ரட்
அவித்த முட்டை ஸ்லைஸாக கட் பண்ணியது
மயாணஸ்
மிக்ஸ்ட் சாலட்
புதினா சட்னி
டொமேட்டோ கெட்சப்

காலை உணவுக்கு  லன்ச் பாக்ஸ் க்கு , அல்லது  இரவு உணவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்க ஈசியான ஹெல்தியான சாண்ட் விச்

ப்ரட் அல்லது பண்ணை டோஸ்ட் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ளவைகளை அரேஞ் செய்து உங்கள் செல்ல குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


வெஜிடேபுள்ஸ்
கிரீன் சட்னி
முட்டை
முன்றும் சேருகிறது.




லன்ச் பாக்ஸ் ரெசிபி, ஈசியான காலை மற்றும் இரவு உணவு




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, February 10, 2016

ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)



 ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)

தினம் காலையில் முட்டை சாப்பிட்டு போரடித்து போனவர்களுக்கு . இது போல் கேக்காக செய்து சாப்பிடலாம்,
இதையே மைக்ரோ வேவில் வைக்கலாம்.அதையும் அடுத்த பதிவில் போடுகிறேன்.
கீழே உள்ளது என் ஐடியாவில் சேர்த்த பொருட்கள், டேஸ்ட் ரொம்ப நல்ல இருந்தது.
...
ப்ளாக்சீட் என்பது ஆளிவிதை ( சைவ பேலியோவிற்கு ஏற்றது)
ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)



தேவையான பொருட்கள்
டார்க் சாக்லேட் 1 இன்ச் சைஸ் 5 பார்
முட்டை - ஒன்று
பட்டர் – இரண்டு மேசைகரண்டி
காபி பவுடர் – அரை தேக்கரண்டி
பைனாப்பிள் எசன்ஸ் – ஒரு துளி ( தேவைப்பட்டால்)
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
கோக்கொ பவுடர் – ஒரு மேசை கரண்டி
தேங்காய் பவுடர் - ஒரு மேசைகரண்டி
ப்ளக்சீட் பவுடர் – இரண்டு மேசைகரண்டி
வால் நட் – பொடியாக அரிந்தது – ஒரு மேசை கரண்டி




செய்முறை
டார்க் சாக்லேட்டை உருக்கி அத்துடன் பட்டர் சேர்த்த்து நன்கு கலக்கவும்.
முட்டையை சேர்த்து நுரை பொங்க அடித்து பட்டர் சாக்லேட் கலவையுடன் சேர்க்கவும்

ப்ளாக்சீட் பவுடர், கோகோ பவுடர், காபி பவுடர்,பேக்கிங் பவுடர் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் செய்யவும்.
மிக்ஸ் செய்து முட்டை கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
பொடியாக அரிந்த வால்நட்டை சேர்த்து கலக்வும்.

கலவையை கப் கேட் மோல்டில் ஊற்றி 250 டிகிரி செல்சியத்தில் 20 நிமிடம் முற்சூடு படுத்திய ஓவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

கவனிக்க: ஓவன், மைக்ரோ வேவ் அவன் இல்லாதவர்கள்.
இதை குக்கரில் கிழே உப்பை தூவி உள்ளே பேக் செய்யும் பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு விசில் போடாமல் 20 முற்சூடு செய்து விட்டு மேலும் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்


 Paleo Diet - Flax seed choco Mini Cap Cake



என் குறிப்பை இங்கும் கானலாம்
முன்னோர் உணவு




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, November 18, 2015

பேலியோ காய்கறி கஞ்சி & முட்டை சாலட் - பேலியோ டயட் - 2




காலிப்ளவர்  ஜுக்கினி சௌ சௌ கஞ்சி
Cauliflower Zukkini Chow Chow Soup
காலிப்ளவர்  , ஜுக்கினி, சௌ சௌ - 1 கப்
சின்ன வெங்காயம் - 8 பொடியாக நருக்கியது
பூண்டு - 6 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு  - 5 எண்ணிக்கை
உப்பு - தேவைக்கு


தாளிக்க \

நெய் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காய்ம் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -  கால் தேக்கரண்டி
கொத்து மல்லி கருவேப்பிலை - சிறிது



செய்முறை

காளீப்ளவர் ,ஜுக்கினி, சௌ சௌ முன்றையும் துருவி வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தும் முன்று கப் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் காலிப்ளவர், ஜுக்கினி, சௌ சௌ சேர்த்து அதில் வெங்காய்ம் பூண்டு பொடியாக அரிந்து சேர்க்கவும்.
மிளகு சீரகம் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் பிளன்டரில் மசிக்கவும்.

பிறகு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து  வெந்த பேலியோ காய் கஞ்சியில் சேர்க்கவும்.

Paleo Diet Soup பேலியோ டயட்  காய் கறி கஞ்சி ரெடி /


செய்முறை:


பேலியோ டயட்டில் முட்டைக்கு தான் முதலிடம் அதை முதல் முதல் எல்லாருமே அவித்து அல்லது புல்ஸ் ஐ போட்டு சாப்பிடுவது எல்லாருக்குமே தெரியும்.

அதுவும் முறையாக பதமாக செய்தால் இன்னும் சுவை கூடும், சப்பிடும் போது மஞ்சள் கரு உடைந்து வேஸ்ட் ஆகாது.முதலில் புல்ஸ் ஐ யை பார்ப்போம்.

தேங்காய் எண்ணை அல்லது நெய் விட்டு தவ்வா சூடு வந்ததும்
முட்டையை தேவைக்கு கலங்காமல் முழுசாக ஒன்றாகவோ, இரண்டாகவோ, மூன்றாகவோ அல்லது நான்காகவோ ஊற்றி விட்டு தீயின் தனலை சற்று குறைவாக வைத்து 2 நிமிடம் வேகவிடுங்கள்.
அடுத்து லேசாக தட்டிய மிளகில் உப்பு கலந்து தூவி விட்டு ஒரு முடி போட்டு 1 நிமிடம் வைத்து அடுப்பை ஆஃப் செய்யவும்.
இப்ப எடுத்தால் மஞ்சள் கரு உடையாமல் வெந்தும் வேகமாலும் அரை பதமாக வெந்து சாப்பிட இலகுவாக இருக்கும்.


குறிப்பு: இதில் இருக்கும் கஞ்சி வெள்ளை வாயு கஞ்சி அரிசியில் செய்வதை பேலியோ காய்களில் செய்துள்ளேன்.


லெட்டியுஸ் இலை - பொடியாக அரிந்தது - அரை கப்
கேரட் - துருவயது - கால் கப்
குகும்பர் துருவது - சிறிது
புதினா கொத்துமல்லி - சிறிது

ட்ரெஸிங் செய்ய
ஆலிவ் ஆயில்
உப்பு
மிளகு தூள்

ஒரு வாயகன்ற பவுளில் சாலட் காய்களை சேர்த்து ட்ரெஸிங் செய்ய வேண்டிய பொருட்களை சேர்த்து கலக்கி , அவித்த முட்டையுடன் பரிமாறவும்.


மேலும் பேலியோ டயட் பற்றி அறிய தினமணி யில் ஞாயிறு தோறும் வெளியாகி கொண்டு வருகிறது.







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, August 1, 2015

காக்காவுக்கும் முட்டை வட்லாப்பத்துக்கும் என்ன சம்பந்தம்?






முட்டை வட்லாப்பம்



இஸ்லாமிய இல்லங்களில், திருமண விசேஷங்களில் மிகவும் பிரத்தி பெற்ற இனிப்பு வகைகளில் முதன்மையான இனிப்பு வகை இது, 
இது எங்க அம்மாவின் ஸ்பெஷல் ஸ்வீட் , அவர்களிடம் இருந்து கற்றுகொண்ட முதல் இனிப்பு வகை இதுவே.

முன்பெல்லாம் பள்ளிகாலங்களில்  அம்மா வருடா வருடம்  புது வருட பிறப்புக்கு இதை தான் செய்வார்கள். கொண்டாட மாட்டோம் ஆனால் இனிப்பு கண்டிப்பாக உண்டு.

காக்காவுக்கும் இந்த முட்டை வட்லாப்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா? கிழே படியுங்கள்.




2011 - பாலவாக்கம்
நாத்தனார் பொண்ணு கல்யாணத்தில் முட்டைவட்லாப்பமும் காகமும்...

இடியாப்பம் , முட்டை வட்லாப்பம் , கால்பாயா ( இடியாப்பம் , கோதுமை ரொட்டி) சூப்பர் காம்பினேஷன்..



தேவையான பொருட்கள்

முட்டை - பத்து (அ) 12
சர்க்கரைஇரண்டு டம்ளர் 
(அதிக இனிப்பு சாப்பிடாதவர்கள் தேவைக்கு அரை டம்ளர் குறைத்து கொள்ளலாம்)
தேங்காய்ஒரு முழு பெரிய தேங்காய் 
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரைதேக்கரண்டி
அலங்கரிக்க
பாதாம் , முந்திரி
மாதுளை முத்துக்கள்




செய்முறை
தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கட்டியாக பால் எடுக்கவும்.
(மீதி இருப்பதை மறுபடி பிழிந்து தேங்காய் பால் சாதம், சால்னா வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.)
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து வைக்கவும்.
 சர்க்கரை, தேங்காய் பால், முட்டை முன்றையும் நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெய்யில் வறுத்து  சேர்க்கவும்.
ஏலக்காயை பிரித்து உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்து பொடித்து சேர்த்து நன்கு கலக்கி குக்கரில் அடியில்வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் , ஒரு டிபன் பாக்ஸில் கலவையை ஊற்றி முடிபோட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து அவிக்கவும்.
சுவையான சூப்பரான முட்டை வட்லாப்பம்ரெடி.
இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்குபொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.சர்க்கரை அதிகம் விரும்பாதவர்கள் சர்க்கரையின் அளவை அரை டம்ளர் குறைத்து  கொள்ளலாம்
கவனிக்க: இடுப்பு எலும்புக்கு பலம் பெறும். .பூப்பெய்திய பெண்களுக்கு இதை செய்து கொடுப்போம்.







மேலே உள்ளது 100 பேருக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து நாத்தானார் (எங்க மைனி )மகள் திருமணத்தின் போது 2011 லில் இந்த முட்டை வட்லாப்பத்தை ஆளுக்கு ஒரு வேளையாக செய்து கொண்டு இருக்கும் போது ....  

நான் முட்டையை உடைத்து பிளண்டரில் அடிக்க, பெரிய நாத்தனார் மகள்  கல்வத் தேங்காயை உடைத்து துண்டுகள் போட, பெரிமா பொண்ணு  மீரா தேஙகாய் அரைத்து ஊற்ற, சின்ன நாத்தனார் பொண்ணு குட்டி அஃப்ரின் முந்திரி பாதாம் வெட்டி கொடுக்க எல்லாரும் சேர்ந்து செய்தோம், அப்ப வீட்டின் வெளியில் ஷாமியானா போட்டு இருந்தார்கள். 

அப்ப தான் தீடீரென்று ஒரு காக்கா வெளியில் இருந்து ஹால் வழியாக கிழே கிரவுன்ட் ஃப்ளோரில் வந்து படிக்கட்டில் உட்கார்ந்து விட்டது. வெளியே எங்கும் போக இடம் இல்லை, சுற்றி இருந்தவர்கள், மேலே ஹாலில் இருந்தவர்கள் எல்லாம் ஒரே கூச்சல் போட

கிழே கிச்சனில் நாங்க எல்லோரும் முட்டை , தேஙகாய் பால் , எல்லாவற்றையும் காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

.

உடனே சிங்கம் போல என் மகன் ஓடி வந்தான் அப்படியே அந்த காகத்தை கையில் மெதுவாக பிடித்து வெளியில் கொண்டு போய் விட்டான், இதை எங்க யாராலும் மறக்க முடியாது.

அங்கு ஒருத்தங்க  ஒரு இறந்து போன எங்க மாமாவுக்கு முட்டை வட்லாப்பம் ரொம்ப பிடிக்கும் அதான் வந்து இருக்காங்களா என்று சொன்னார்கள்... 
நீங்க யாராவது காக்கா வை பிடிச்சி இருக்கீங்களா.




இந்த குறிப்பு ஓவ்வொரு முறையும் போடனும் என்று தளளி போய் கொண்டே இருந்தது.அறுசுவை டாட்காமில் நான் கொடுத்த முதல் இனிப்பு வகையும் இதுவே..

எங்க வீட்டுகல்யாணங்களில் திருமணம் முடிந்து மறுநாள் மாப்பிள்ளை தஸ்தர் என்று வைப்பார்கள் அதில் கண்டிபபாக இந்த ஸ்வீட் இடம் பெறும் , இப்ப எலலாரும் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள்,

 
குக்கரில் அரைமணி நேரம் செய்து முடித்தது நல்ல ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து துண்டுகள் போட்டால் தான் நல்ல வரும்.

இது கொஞ்சம் பெரிய வேலை தான் ஆனால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

ருசித்து மகிழுங்கள்.
இது 10 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள்
சில டைம் , 12 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள். தேங்காய் நல்ல முத்தலாக பெரியதாக இருந்தால் நல்லது.

முட்டை அதிகமானாலோ, தேங்காய் பால் கட்டியாக இல்லாமல் இருந்தாலோ கலர் கிரே கலர் வராது.

மேலே உள்ளது போல் இருக்கும்.

கிரே கலரில் இருக்கனும் அது தான் பதம்.
தேங்காய் பால் நல்ல கட்டியாக இருக்கனும். முட்டையை நன்கு அடிக்ககனும். இதில் பாதாம் முந்திரியும் அரைத்து ஊற்றலாம்.




ஜூன் மாதம் 2015 குங்குமம் தோழியில் 30 நான் வெஜ் ரமலான் ரெசிபியில் இதுவும் ஒன்று.










https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, December 8, 2014

பாயில்ட் எக் சாலட்/Boiled Egg Salad


 இது என் மகன் Abdul Hakeem SK செய்த பாயில்ட் எக் சாலட்
 அவித்த முட்டை சாலட்/ஹெல்தி டயட் காலை உணவு/Healthy Diet Breakfast

தேவையான பொருட்கள்


  1. பாயில்ட் எக் சாலட்
  2. முட்டை – 2 எண்ணிக்கை
  3. வெங்காயம் – அரை
  4. (பொடியாக நறுக்கியது)
  5. ஒன்றும் பாதியுமாக பொடித்த மிளகு – அரை தேக்கரண்டி
  6. ப்ரஷ் புதினா இலைகள் – சிறிது
  7. லெமன் ஜூஸ் – அரை தேக்கரண்டி


செய்முறை


  1. முட்டையை ஒரு பாத்திரத்தில்
  2. மெதுவாக வைத்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
  3. முட்டை வெந்த வெண்ணீரை வடித்து விட்டு முட்டையை குளிர்ந்த நீரில் போடவும்.
  4. முட்டை ஓடை பிரித்து நான்காக அரியவும். ஒரு தட்டில் அரிந்த முட்டைகளை வைத்து அரிந்து வைத்துள்ள புதினா, மிளகு உப்பு தூவவும். லெமன் ஜூஸை தெளித்துகலக்கி சாப்பிடவும்.
  5. ஹெல்தியான எண்ணை இல்லாத டயட் உணவு.


காலை உணவுக்கு இதை ஒரு நபருக்கு ராகி பானம் அல்லது வெஜ் அன்ட் ஃப்ரூட் ஜூஸுடன் சாப்பிடலாம். மாலை நேர நொருக்கு தீனிக்கு பதில் இதை செய்து சாப்பிடலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, February 4, 2014

முட்டை பால் (ஒல்லியாக இருப்பவர்களுக்கு)


பூபெய்திய பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு, வாய் புண் இருப்பவர்களுக்கு, ஆண் குழந்தைகளுக்கும் கூட இதை கொடுக்கலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை குடிக்கலாம்.

ஒல்லியாக உள்ளவர்கள் தடியாகனுமா???உங்கள் குழந்தைகள் புஷ்டியாகனுமா? இந்த முட்டை பாலை தினம் கொடுத்து பாருங்கள்.

((இப்போதைக்கு எங்க வீட்டில் ஒல்லியாக உள்ளவர்கள் யாரும் இல்லை ஆகையால் தேவையான பொருட்களை மட்டும் வைத்து போட்டு இருக்கிறேன்)

தேவையானவை

முட்டை - 1
பால் - கால் டம்ளர்
தேன் - ஒரு மேசை கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி

செய்முறை

பாலை நன்கு சூடு படுத்தவும்
முட்டையை நுரை பொங்க அடித்து அதில் தேனை கலக்கவும்.
பிறகு பாலையும் சேர்த்து கலக்கி நெய்யை சூடு படுத்தி ஊற்றி குடிக்கவும்.
முட்டைய நல்ல நுரை பொங்க அடிக்கலன்னா குடிக்க முடியாது.

ஒரு மாதமோ அல்லது 40 நாட்களோ குடித்தால் நல்ல பலன் தெரியும்.

டிப்ஸ்: இது குழந்தைகளுக்கும், பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும், பூப்பெய்திய பிள்ளைகளுக்கும் , பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப ஒல்லியாக எலும்பு தோலுமா இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம்.
நோஞ்சானாக கண் சோர்வடைந்து இருப்பவர்களுக்கு முட்டை பால் அடித்து கொடுக்கலாம்

அதே போல் சூட்டினால் வாய் முழுவது வெந்து புண்ணாகி இருந்தால் இது போல் செய்து முன்று நாட்களுக்கு மருந்து போல் குடிக்கலாம்.

இதை நான் முன்பு  செய்து இருக்கிறேன். பெரிய மகன் சிசேரியன் தான் ஆகையால்
சரியாக மருந்து எடுத்துக்காததால் வாய் புண் அடிக்கடி வரும், அப்போது வாய் புண் போக பல பாட்டி மார்களை அனுகி கேட்ட குறிப்புகள் இதுவும் ஒன்று. அதில் இது என் கிரான்மா சொன்ன குறிப்பு..



ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள் இதை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல புஷ்டியாக ஆகிவிடலாம்.
பிள்ளை பெற்றவர்களுக்கு உடம்பு ரொம்ப வீக்காக இருந்தாலும் இதை செய்து கொடுக்கலாம்.

பூப்பெய்திய பெண்களுக்கு கொடுத்தால் பிற்காலத்தில் பிள்ளை பெறும் போது பேறுகால வலியை தாங்கிக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.


இதே டிப்ஸ் மனோ அக்கா சிறப்பு விருந்தினர் பதிவில் சொல்லி இருக்காங்க  பூப்பெய்தி பெண்கள் முட்டை குடிப்பது பிற்காலத்தில் இடுப்பு எலும்பு பலப்படும் , பிரசவ வலிகளை தாங்கிக்கூடிய சக்தி கிடைக்கும்,

Thursday, February 7, 2013

அன்னாச்சி எசன்ஸ் மற்றும் பட்டை தூள் பாம்பே டோஸ்ட் - Pineapple flavor Bombay Toast




அன்னாச்சி எசன்ஸ் மற்றும் பட்டை தூள் பாம்பே டோஸ்ட்

 இலகுவான காலை நேர டிபன். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய டிபன்.செய்வதும் சுலபம்.வாரம் ஒரு நாள் கண்டிப்பாக இந்த டோஸ்ட் செய்வது. என் கணவருக்கு ரொம்ப பிடிச்ச டிபன் அயிட்டம். இது எங்க வீடுகளில் செய்யும்  மாப்பிள்ளை நாஷ்டா. இங்கு கொடுத்துள்ள அளவு ரொம்ப ஹெவியாக கொடுக்கவில்லை. 
இது அப்படியே ஒரு முட்டையில் ஒரு கரண்டி பால் ஊற்றி கொஞ்சம் சர்க்கரை ஏலம் தட்டி போட்டு இரண்டு டோஸ்ட் செய்து கல்யாண மாப்பிள்ளைக்கு வைப்பார்கள்,
பூப்பெய்திய பெண்களுக்கும் கொடுப்பார்கள்.தீடீருன்னு விருந்தாளிகள் வந்தாலும் இதை உடனே சுலபமாக செய்து விடலாம்.நல்ல பசி தாங்கும். டிரெயின் பயணம் மற்றும் டூர் போகும் போது கூட இதை தான் செய்து எடுத்து செல்வோம்,











தேவையானவை
பிரட் – 9
காய்ச்சி ஆறிய பால் – 100மில்லி
முட்டை – 2
அன்னாசி பழ எசன்ஸ் – 2 துளி
பட்டை தூள்  ½ தேக்கரண்டி
சர்க்கரை – 50 கிராம்
பட்டர் + எண்ணை - பொரிக்க தேவையான அளவு




 செய்முறை
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து பாலில் சர்க்கரையை கரைத்து அதில் அன்னாசி எசன்ஸ், பட்டைதூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணை + பட்டரை தோசை தவ்வாவில் சூடாக்கி பிரட்டை முட்டைகலவையில் தோய்த்து கருகாம்ல் இருபுறமும் பொரித்து எடுக்கவும்.




ஆயத்த நேரம் : 7 நிமிடம்
சமைக்க ஆகும் நேரம் :10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபருக்கு