அன்னாச்சி எசன்ஸ் மற்றும் பட்டை தூள் பாம்பே டோஸ்ட்
இலகுவான காலை நேர டிபன். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய டிபன்.செய்வதும் சுலபம்.வாரம் ஒரு நாள் கண்டிப்பாக இந்த டோஸ்ட் செய்வது. என் கணவருக்கு ரொம்ப பிடிச்ச டிபன் அயிட்டம். இது எங்க வீடுகளில் செய்யும் மாப்பிள்ளை நாஷ்டா. இங்கு கொடுத்துள்ள அளவு ரொம்ப ஹெவியாக கொடுக்கவில்லை.
இது அப்படியே ஒரு முட்டையில் ஒரு கரண்டி பால் ஊற்றி கொஞ்சம் சர்க்கரை ஏலம் தட்டி போட்டு இரண்டு டோஸ்ட் செய்து கல்யாண மாப்பிள்ளைக்கு வைப்பார்கள்,
பூப்பெய்திய பெண்களுக்கும் கொடுப்பார்கள்.தீடீருன்னு விருந்தாளிகள் வந்தாலும் இதை உடனே சுலபமாக செய்து விடலாம்.நல்ல பசி தாங்கும். டிரெயின் பயணம் மற்றும் டூர் போகும் போது கூட இதை தான் செய்து எடுத்து செல்வோம்,
தேவையானவை
பிரட் – 9
காய்ச்சி ஆறிய பால் – 100மில்லி
முட்டை – 2
அன்னாசி பழ எசன்ஸ் – 2 துளி
பட்டை தூள் – ½ தேக்கரண்டி
சர்க்கரை – 50 கிராம்
பட்டர் + எண்ணை - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முட்டையை நன்கு
நுரை பொங்க அடித்து பாலில் சர்க்கரையை கரைத்து அதில் அன்னாசி எசன்ஸ், பட்டைதூள்
சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணை + பட்டரை
தோசை தவ்வாவில் சூடாக்கி பிரட்டை முட்டைகலவையில் தோய்த்து கருகாம்ல் இருபுறமும்
பொரித்து எடுக்கவும்.
ஆயத்த நேரம் : 7
நிமிடம்
சமைக்க ஆகும்
நேரம் :10 நிமிடம்
பரிமாறும் அளவு
: 3 நபருக்கு
7 கருத்துகள்:
aa ithu romba vidiyasama irukey try pannuren.
ongoing event: http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html?m=1
வித்தியாசமாக நல்லாயிருக்கு ஜலீலா.
Super... செய்து பார்ப்போம்... நன்றி...
மிக சுலபமாக செய்துவிடலாம் போலும்
tha.ma.3
புதுசா இருக்கு...மணம் இங்கு வரை வீசுதே :).
Dear jaleela
நான் நினைக்கிறேன் நீங்கள் தான் என் மனித நேயப் பகிர்வு ஆக்கத்திற்குக் கருத்திட்டீர்கள்.
சமையல் அட்டகாசத்தைக் கிளிக் பண்ண அது ஓரு ஆங்கில பைபிள் வலைப்பதிவு ஆங்கிலத்திற்குப் போகிறது.
இப்போ வை.கோபால கிருஷ்ணன் சார் வலைக்கு வந்து கருத்திடும் போது தங்கள் பெயர் கண்டு ஆராய்ச்சி செய்து அது நீங்கள் என்று கண்டு கொண்டேன் சரியா?.
சமையலைப் பிறகு பார்க்கிறேன். மீண்டும் வாருங்கள் சகோதரி. மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
மிக சுலபமாக உள்ளதே.
மிக்க நன்றி சகோதரி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா