Sunday, February 17, 2013

பாதம் மசாலா மில்க் - Badam Masala Milk





இருமல் சளி தொண்டை வலி எல்லாம் வருமுன் காக்க ஒரு அருமையானபானம் இந்த மசாலா மில்க். அதாவது அடிக்கடி சளி பிடிப்பவர்களுக்கு வாரம் ஒரு முறை இதை காய்ச்சி குடித்து வந்தால் ஓரளவுக்கு குணம் பெறலாம்.





தேவையானவை
பால் – ½  லிட்டர் + ½ லிட்டர்
சர்க்கரை – 150 கிராம் ஏலக்காய் – 4
கிராம்பு – 4
பட்டை  1 அங்குல துண்டு 2
மிளகு – 15 எண்ணிக்கை
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
சாப்ரான் -  ½ தேக்கரண்டி
பாதாம் – 100 கிராம்
முந்திரி – 25 கிராம்



செய்முறை

முந்திரியை 5 நிமிடம் ஊறவைக்கவும்.
பாதாம் பருப்பை ஊறவைத்து தோலெடுக்க்கவும்




. பாதம் முந்திரி சாப்ரான் முன்றையும் நன்கு மையாக அரைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலுடன் அரைத்த பாதம் கலவையை சேர்த்து காய்ச்சவும்.



மற்றொரு பாத்திரத்தில் மிளகு, பட்டை ,கிராம்பு,லவங்கம்,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். மசாலாக்கள் நன்கு பாலில் இரங்கும் வரை  பாலை கால் லிட்டர் ஆகுவரை தீயின் தனலை குறைவாக வைத்து கொதிக்க விடவும். 





சிறிது வற்றியதும் மற்றொரு அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் பாதம் பாலுடன் வடிகட்டி சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.




டிப்ஸ்: சளி இருமலுக்கு இந்த மசாலா மில்க் அருமையான  மருந்து ஓவ்வொரு தடவை குளிர்காலம் ஆரம்பிக்கும் போதும் அனைவரையும் கடுஞ்சளி தாக்கும், இந்த முறை குளிர் சீசன் ஆரம்பித்த்தும் இதை தான் வாரம் ஒரு முறை செய்து குடித்தோம் , எங்க வீட்டில் இம்முறை யாருக்கும் அதிக இருமல் சளி பிடிக்கவில்லை.
இந்த பாதம் பால் காய்ச்ச கொஞ்சம் பொறுமை தேவை.





பாதாம் பால் அதிக தீயில் வைத்தால் பொங்கி விடும். அப்ப அப்ப கிளறி விடனும்.
மசாலாசேர்த்து கொதிக்க வைக்கும் போது குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடனும் அப்பதான் சாறு நல்ல இரங்கும்.


. மிளகை ஒன்றிரண்டாக நல்ல தட்டி போட்டால் இன்னும் எஃபக்டாக இருக்கும்.








16 கருத்துகள்:

Unknown said...

nallaiku kathayam seithu veethil ellarum kodikanum.. ellarukum udanbu sari illai...

Kanchana Radhakrishnan said...

Badam Masala Milk super.

Priya Suresh said...

Love to have a glass of this beautiful milk.

Chitra said...

super milk. must be flavourful ..

ஸாதிகா said...

அருமையான பானம்.சத்துமிகு பானம்.நல்லதொரு ரெஸிப்பி ஜலி.

ADHI VENKAT said...

அருமையான பானமாக இருக்கு. நானும் செய்து கொடுக்கிறேன்.

உங்க பதிவுகள் போடும்போது எனக்கு மின்னஞ்சல் செய்தால் நன்றாக இருக்கும். ஒருமுறை வைரஸ் பிரச்சனையால் அன் ஃபாலோ செய்தேன். அதன் பின் பலமுறை ஃபாலோயராகியும், டாஷ்போர்டில் வரமாட்டேங்குது...:)

இளமதி said...

அட...அருமையான குறிப்பு ஜலீலாக்கா.

அதுவும் இருமலைத் தடுப்பதற்கு முன்கூட்டியே நல்ல பாதுகாப்பாபிற்காக செய்து குறிப்பாக சிறுவர்க்ளுக்கு கொடுத்தால் அவர்கள் படும் கஷ்டத்திலிருந்து காப்பாத்தீடலாம்.
மிக்க நன்றி உங்க குறிப்பிற்கு.

Asiya Omar said...

மசாலா மில்க் சூப்பர்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

மிகவும் சுவையான மில்க்... எனக்கு இப்பவே வேணும்ம்ம்ம்ம்:).

Jaleela Kamal said...

அதிரா பார்சல் அனுப்பிடவா>>>

Jaleela Kamal said...

ஆதி ஏன் உங்கள் ட்டேஷ் போர்டில் வரலைன்னு தெரியல , இனி மெயில் அனுப்புகிறேன்

Jaleela Kamal said...

பாயிஜா அங்கு இருக்கும் குளிருக்கு இதை அடிக்கடி காய்ச்சி பிள்ளைகலுக்கு கொடுத்தால் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்

Jaleela Kamal said...

மிக்க நன்றீ
காஞ்சனா

நன்றீ பிரியா
நன்றி சித்ரா
மிக்க நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

ஆம் இளமதி முன்கூட்டியே இதுபோல் காய்ச்சி குடிப்பது ரொம்ப அதிக சளி தொல்லை இருமலில் இருந்து குழந்தைகளியும் நம்மையும் பாது காத்து கொள்ளாலாம்

Jaleela Kamal said...

நன்றி ஆசியா
நன்றி ஷாமா

Unknown said...

குழந்தை பெற்ற பெண்கள் இதை குடிக்கலாமா அக்கா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா