Showing posts with label சிக்கன். Show all posts
Showing posts with label சிக்கன். Show all posts

Tuesday, May 5, 2020

சிக்கன் விங்ஸ் வித் ஜாத்தர் - chicken wings with zaththar



chicken wings with zaththar

சிக்கன் விங்ஸ் - 600 gram
உப்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைகரண்டி
கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
வினிகர் - ஒரு தேக்கரண்டி
அரபிக் ஜாத்தர் மசலா - ஒரு இரண்டுதேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒன்றை மேசைகர்ண்டி

# பேலியோ டயட் சமையல்#அசைவம்#சிக்கன்விங்ஸ்
#சமையல் அட்டகாசங்கள்#

செய்முறை
தோலுடன் உள்ள் சிக்கன் விங்ஸை எலுமிச்சை அரை பழம் சேர்த்து நன்கு கழுவவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, அரபிக் ஜாத்தார் மசாலா, ஆலிவ் ஆயில், மிளகு தூள், வினிகர், உப்புசேர்த்து நன்கு பிசரி 3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும்.
பிறகு எலக்ரிக் கிரில்லில் பட்டர் தடவி இரண்டு புறமும் திருப்பி போட்டு கிரில் செய்து எடுக்கவும்.

பரிமாறும் அளவு : இரு நபர்களுக்கு


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, November 10, 2017

சிக்கன் லாலிப்பாப் எலக்ட்ரிக் கிரில் ( பார்பிகியு) - Chicken Lolipop Electric Grill



சிக்கன் லாலிப்பாப் எலக்ட்ரிக் கிரில் ( பார்பிகியு)

Chicken Barbecue same charcoal taste


நம்ம பார்க் போய் தான் சார்கோல் பார்பிகியு செய்யனும் என்றில்லை வீட்டிலேயே அதே சுவையில் எலக்ட்ரிக் அடுப்புகள் வந்து விட்டன. 
சிக்கன் இறால் எல்லாம் 20 நிமிடத்தில் செய்துடலாம்.
இந்த அடுப்பு அந்த கம்பியின் கீழ் தண்ணீர் ஊற்றனும்.

அதிலேயே அட்ஜெஸ்ட்மென்ட்ம் இருக்கும் ஸ்லோவாவும் வைத்து கொள்ளலாம் அதிகமாகவும் வைத்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி  பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் – 1 மேசைகரண்டி
தயிர் -2 மேசைகரண்டி
காய்ந்த வெந்தய கீரை – 1 மேசைகரண்டி
சிக்கன் லாலிபாப் – 1 கிலோ
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

 செய்முறை

சிக்கனை கழுவி சுத்தம் செய்து அங்காங்கே 4, 5 கீரல் போடவும்.
ஒரு பவுளில் சிக்க்கனை சேர்த்து மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து  மசாலாவகைகளையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எலக்ட்ரிக் பார்பிகியு அடுப்பை ஆன் செய்து அதில் கிழே தண்ணீர் சேர்த்து மேலே பார்பிகியு கம்பியை போட்டு ஆன் செய்து சிக்கனை வைத்து இரண்டு பகக்மும்  10 நிமிடம் , 10 நிமிடம் வைத்து கிரில் செய்யவும்.
சார்கோல் கிரில்லில் செய்த சுவை இதில்கிடைக்கும்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, June 29, 2017

சிக்கன் சால்னா - Chicken Salna



சிக்கன் சால்னா

அஸ்ஸலாமு அலைக்கும் ஈத் ஸ்பெஷல் சாப்பாடு வகைகள் போடனும் என்று ஆனால் இங்கு துபாயில் சரியான வெயில் நோன்பு நேரத்தில் பிஸியாகிவிட்டது போஸ்ட் பண்ண முடியவில்லை

அனைவருக்கும் ஈத் வாழ்த்துக்கள் & அட்வான்ஸ் ஆறு நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.
ஆறு நோன்பு என்பது 30 நாள் ரமலான் நோன்பு முடிந்து அடுத்து வரும் ஆறு நோன்பு, இதை முடிந்தவர்கள் வைக்கலாம்.

ஈத் க்கு எப்போதும் கறி சேமியாதான் போடுவது வழக்கம், இப்ப பிள்ளைகளுக்காக சிக்கன் சால்னா பூரி, ஷீர் குருமா.


( மெயிலில் சிலர் சிக்கன் சால்னா கேட்டு இருந்தனர் அவர்களுக்காக )



சிக்கன் குருமா/ சால்னா - 1

  • சிக்கன்1 கிலோ
  • வெங்காயம் - 500 கிராம்
  • தக்காளி - 400 கிராம்
  • தயிர் - கால் கப்
  • மிளகாய் தூள் - ஒன்னறை மேசைகரண்டி
  • தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று மேசைகரண்டி
  • கொத்தமல்லி, புதினாஒரு கைபிடி
  • பச்சை மிளகாய் - 6
  • பட்டை, லவங்கம், ஏலம் - தலா ஒன்று
  • எண்ணை (அ) நல்லெண்ணைஅரை கப்
  • நெய்  - முன்று தேக்கரண்டி
  • தேங்காய் பால்இரண்டு டம்ளர் திக் பால் (அ) ஒரு முடி அரைத்து ஊற்றவும்.
  • முந்திரி 50 கிராம்
  • கசகசா - சிறிது
  • லெமன் சாறு – இரண்டு தேக்கரண்டி

  • கோழியில் வினிகர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சுத்தம் செய்து ஏழு முறை கழுவவும்.கழுவி தண்ணீரை வடிக்கவும்.
  • எண்ணெயை காய வைத்து பட்டை, லவங்கம், ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாடை போகும் வரை கிளறவும்.
  • கிளறி கொத்தமல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி மிளகாய் தூள், உப்பு தூள், மஞ்சள் தூள் போட்டு தீயை சிம்மில் வைத்து வேக விடவும்.
  • தக்காளி வெந்ததும் சிக்கனை சேர்த்து கிளறி தயிரும் சேர்த்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு கடைசியில் சிறிது
  • கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

சாதம், நெய் சோறு, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவைக்கு தொட்டு சாப்பிடலாம். விஷேசங்களுக்கு செய்வதாக இருந்தால் முந்திரி, கசகசா அரைத்து ஊற்றவும். தேவைப்பட்டால் உருளைக்கிழங்கும் சேர்க்கலாம். நல்லா இருக்கும். கோழியை தக்காளி வெந்ததும் கடைசியில் போடனும். ஏனென்றால் கோழி சீக்கிரம் வெந்து விடும்





சிக்கன் சால்னா - 2
இது நார்மலாக செய்யும் அளவு முறை  இதையே இன்னும் கொஞ்சம் ஈசியாக 

  • கோழியில் வினிகர்எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து சுத்தம் செய்து ஏழு முறை கழுவவும்.கழுவி தண்ணீரை வடிக்கவும்.தண்ணீர் வடிந்ததும் கோழியில்   பாதி இஞ்சி பூண்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் தயிர், தக்காளி பிழிந்து விட்டு 3 பச்சமிளகாய், உப்பு, கொத்துமல்லி தழை,சிறிது வெங்காயம் போட்டு நன்கு பிரட்டி மெரினேட் செய்யவும். 











  •  
    வாயகன்ற சட்டியை காயவைத்து நல்லெண்ணை + நெய்யை சேர்த்து காய வைத்து அதில் பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து பொரிய விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும், வதக்கி பொன்னிறம் ஆனதும் மீதி உள்ள இஞ்சி  பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சவாடை போனதும் அதில் கொத்துமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.இப்போது மேரினேட் செய்த சிக்கனை இதில் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் கொதிக்க விட்டு சிறிது வெந்ததும் தேவைப்பட்டால் ஒரு உருளை கிழங்கை நாலாக வெட்டி போட்டு தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்து ஊற்றி தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வேகவைத்து இரக்கவும்.

    ரொம்ப்  ஈசியான சிக்கன் சால்னா. சிம்பிள் மசாலா வகைகளை கொண்டு ஈசியாக தயாரிக்கலாம்.
     Eid Special, Friday Special Recipe, Sunday Special Recipe , Easy chicken salan/ kurma. Tradtional Muslim Home Salna 



  •  ரொட்டி பூரி சப்பாத்தி , ப்லைன் ரைஸ், கீ ரைஸ், பகாரா கானா, தோசை , ஆப்பம் , இட்லி அனைத்துக்கும் பொருந்தும் இந்த சால்னா.


இதில் இரண்டு முறை போட்டுள்ளேன் . ஒன்று பிரியாணி போல சட்டியில் அல்லது குக்கரில் தாளித்து அப்படியே செய்வது/
மற்றொன்று மேரினேட் செய்து சிம்பிளாக ஈசியாக செய்வது

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, June 8, 2015

சிக்கன் மக்லூபா Chciken Maqlooba (upside Down Arabic Biriyani)





அரேபியர்கள் தினம் செய்யும் கப்ஸா, மந்தி, மஜ்பூஸ் போன்ற உணவுகளில் இந்த மக்லூபாவும் ஒன்றாகும்.




Chciken Maqlooba (upside Down Rice)/சிக்கன் மக்பூலா/ அரபிக் பிரியாணி / Chicken Makloubeh


தேவையான பொருட்கள்

சிக்கன் ஹோல் லெக் ‍ 4 தூண்டுகள்//மட்டன் - அரை கிலோ/சிக்கன் எலும்புடன் -600 கிராம்
அரிசி ‍ 400 கிராம் ( டோனார் லாங்க் கிரைன் அரிசி)
சிக்கன் ஸ்டாக் (அ) வெஜிடேபுள் ஸ்டாக்  ( மேகி (அ) நார் பிராண்ட்) - 1


சிக்கனில் பிரட்டி கொள்ள

லெமன் ஜூஸ் - ஒரு மேசைகரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைகரண்டி
நிஹாரி மசாலா/பாஷா கிச்சன் கிங் மசாலா - 1 tbspn
உப்பு தூள்


தாளிக்க 

பட்டர் ‍ 50 கிராம்
எண்ணை ‍ 50 கிராம்
( காய்களை பொரிக்க + தாளிக்க)
காய்ந்த லெமன்
வெங்காயம்  - 2 பொடியாக அரிந்தது
அரபிக் மசாலா - ஒரு மேசைகரண்டி ( கிழே  அரபிக் மசாலா அளவு இருக்கு பார்ககவும்)
மசாலாக்கள்

இஞ்சி பொடி  - அரை தேக்கரண்டி
சீரகதூள் - 1 தேக்கரண்டி
பட்டை தூள் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - விதைகள் ( 2 ஏலக்காய்)
மிளகு தூள் - அரை தேக்கரண்டி ( ஒன்றும் பாதியுமாய் திரித்தது)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு




தனியாக வட்டவடிவமாக நறுக்கி பொரித்து வைத்துகொள்ளவும்.

கத்திரிக்காய் - பெரிய கத்திரிக்காய் ஒன்று
காளிப்ளவர் - 8 பூ
புரோகோலி - 8 பூ
கேரட் - 1
உருளைகிழங்கு - 2
கேப்சிகம் -  இரண்டு மேசைகரண்டி நறுக்கியது

கடைசியாக மேலே தூவ ( தேவை பட்டால்)
பிஸ்தா
பாதம் 
பைன் நட்ஸ்

செய்முறை:

சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து அதில் மேலே மேரினேட் செய்ய  கொடுக்கப்படுள்ள மசாலாக்களை சேர்த்து அரை மணி நேரம்  ஊறவைக்கவும்.( சிக்கன் மேரினேட் செய்வது எப்போதும் ஒரு நாள் முன் செய்தால் நல்ல இருக்கும்)
அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
கத்திரிக்காயை வட்டவடிவமாக நறுக்கி அதில் சிறிதத உப்பு தூவி பிரட்டி கண்தட்டில் வைக்கவும்.
கேரட், உருளை கிழங்கை வட்டவடிவமாக நறுக்கி ஒரு வாயகன்ற வானலியில் சிறிது எண்ணை + பட்டர் சேர்த்து பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
ப்ரோக்கோலி மற்றும் காலிப்ளவரை  பூ பூ வாக பிரித்து அதையும் அதே எண்ணையில் பொரித்து எடுத்து வைக்கவும்
சிக்கன் ஸ்டாக்கை 600 மில்லி தண்ணீரில் கரைத்து கொதிக்கவிடவும்.
மீதி உள்ள பட்டர் + எண்ணையை சூடு படுத்தி அதில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து ஊறிய சிக்கனை சமமாக பரத்தவும்.
அதன் மேல் பொரித்த காய்களை பாதியை அடுக்கி வைக்கவும்
அதன் மேல் அரிசியை தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
அதன் மேல் பொரித்த காய்கள் மீதியை அடுக்கி வைக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் சிக்கன் ஸ்டாக் தண்ணீரை இதன் மேல் ஊற்றி அப்படியே தம்மில் 20 லிருந்து 30 நிமிடம் வரை மிகக்குறைந்த தீயில் வேக விடவும்.



தலை கீழாக கவிழ்த்தும் போது கை தவறி விட்டது, அதான் சாதம் உடைந்து விட்டது. இது தலைகீழாக கவிழ்த்தினால் எப்படி இருக்கும் என்று தோழி ஆசியா பதிவில் பார்த்து கொள்ளுங்கள்.


சிக்கன் சாதம் காய்கள் எல்லாம் ஒரு சேர சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். 

வெஜிடேரியன்கள் இதில் மட்டன் சிக்கனுக்கு பதில் மஷ்ரூம் சேர்த்து செய்யலாம்.

இங்குள்ள அல் தஜாஜ் ஜில் Al Tajaj /Taza வெஜ் மக்லூபா கிடைக்கும்.

தேவைப்பட்டால் நட்ஸ் வகைகளை சிறிது பட்டரில் வறுத்து தூவிக்கொள்ளலாம்.


அரேபியர்கள் தினம் செய்யும் கப்ஸா, மந்தி, மஜ்பூஸ் போன்ற உணவுகளில் இந்த மக்லூபாவும் ஒன்றாகும்.

இது அடிக்கடி செய்வது போட்டோக்கள் சரியாக இல்லாததால் பகிற முடியவில்லை..போன வருடம் போட்டு வைத்த போஸ்ட்,  
மட்டன் மக்பூலா (குக்கர் முறையில்)

Mutton Maqlooba ( Pressure Cooker Method)


கிழே உள்ள மட்டன் மக்லூபா குக்கரில் செய்தது , மேலே சொன்ன முறைப்படி எல்லாவற்றையும் தயாராக வைத்துகொண்டு , மட்டனை தாளித்து 10 நிமிடம் வேகவைத்து, மற்றபடி காய்கறிகள், அரிசியை லேயராக வைத்து குக்கரில் 3 விசில் விட்டு இரக்கவும்.





சிக்கன் ஹோல்லெக் மக்பூலா ரைஸ் குக்கர் மெதட்
Chicken Whole leg Maqlooba ( Rice Cooker Method) 



இது ரைஸ் குக்கரில் முன்பு செய்தது, சிக்கனை தாளித்து சிறிது வேகவைத்து விட்டு, லேயராக சிக்கன், காய்கறிகள், அரிசியை சேர்த்து ரைஸ்குக்கர் டைம் படி சமைக்கவும்.







மட்டனில், போன்லெஸ் சிக்கனில், போன்லெஸ் மட்டனில் நான் இதை   அடிக்கடி செய்து இருக்கிறேன். குக்கரிலேயே 20 நிமிடத்தில் செய்து முடித்துவிடுவேன்.

இது அழகாக சட்டியில் செய்தால் அப்படியே 30 நிமிடம் மெதுவாக வேக விட்டு, பிறகு ஒரு பெரிய தாளாவில் ( தாளி தட்டில்) கவிழ்த்தினால் அப்படியே கீழே சாதம் அடுத்து காய் வகைகள், அடுத்து சிக்கன் என சூப்பராக இருக்கும். 

Titlis Busy Kitchen  - மசலாவுக்காக கொஞ்சம் யுடிப்பும் செக் பண்ணேன். இதில் அழகாக சூப்பராக போட்டு இருக்கிறார்கள்.  கத்திரிக்காய் தனியாக உப்பு சேர்த்து வேகவைக்கனும் என்று இதில் தெரிந்து கொண்டேன்.

ஆசியா செய்துள்ள மக்லூபாவும் ரொம்ப சூப்பராக இருக்கும் அவங்க ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு இருப்பார்கள்.
நமக்கு கொஞ்சம் மசாலாக்கள் வேண்டும் என்று  நிஹாரி மசாலா சேர்த்து மேரினேட் செய்து சேர்த்து இருக்கிறேன்.மசாலாக்கள் நம் இஷ்டத்துக்கு சேர்த்து செய்யலாம்.

அரபிக் கரம் மசாலா இதை திரித்து வைத்து கொண்டாலும் இதிலிருந்து ஒரு மேசைகரண்டி போட்டு கொள்ளலாம்.

அரபிக் கரம் மசாலா

மிளகு -  அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - இரண்டு
சீரகம் - ஒரு மேசைகரண்டி
ஜாதிக்காய் - சிறிய துண்டு
பிரிஞ்சி இலை - இரண்டு

செய்முறை 

மேற்கண்ட அனைத்து பொருட்களையும் கரகரப்பாக திரித்து கொள்ளவும்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, April 1, 2015

இத்தாலியன் & அரபிக் சிக்கன் சாட்டே - Italian Chicken Satay





சிக்கன் எலும்பில்லாதது - அரை கிலோ

கீரீம் - ஒரு  மேசைகரண்டி
சீஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 2
ஆலிவ் ஆயில்- ஒரு மேசைகரண்டி
தயிர் - ஒரு  மேசைகரண்டி
ஒரிகானோ, ரோஸ்மேரி, பேசில், தைம் - 1 தேக்கரண்டி




செய்முறை

அரை கிலோ சிக்கன் எலும்பில்லாதது துண்டுகளாக வெட்டாமல் அப்படியே இங்கு கிடைக்கின்றன.
அதை முன்று இஞ்ச் நீளத்துக்கு பார்பிகியு குச்சியில் சொருகுவது போல் வெட்டி கொள்ளவேண்டியது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் போட்டு பிரட்டி. முன்று மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.


கபாப் குச்சிகளை அரை மணி நேரம் வெண்ணீரில் ஊறவைத்து , கழுவி அதில் மேரினேட் செய்து வைத்துள்ள சிக்கன் சாட்டேக்களை நீளமாக சொருகி பிறகு ஆங்காங்கே லேசாகா கீறி விடவேண்டும்.
.


மேலே உள்ளது பார்பிகியு அடுப்பு வீட்டில் வைத்தே செய்வது.அதில் வைத்து இரண்டு பக்கமும் கிரில் செய்து எடுத்துள்ளேன்.


நீங்கள் உங்கள் வசதி படி பார்பிகியு அல்லது கேஸ் ஓவன் , அல்லது கேக்  ஓவனில் வைத்து கிரில் செய்யவும், இல்லை கனமான தவ்வாவில் எண்ணை விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேக விட்டு பொரித்தும் எடுக்கலாம்.


Chicken Lolipop

மேலே உள்ளது சிக்கன் லாலிபாப்,  அதே  பார்பிகியு அடுப்பில்  வெரும் இஞ்சி பூண்டு மிளகாய் தூள், உப்பு தூள் , லெமன் சேர்த்து பார்பிகியு செய்தது.




மேலே உள்ளது இறால் மட்டன் கீமா கபாப் ஏற்கனவே இங்கு போஸ்ட் செய்துள்ளேன். இது தவ்வாவில் வைத்து பொரித்தது.

பார்பிகியு, ஓவன் இல்லாதவர்கள் இதே மசாலாவை போட்டு தயாரித்து பொரித்தும் எடுக்கலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, January 11, 2015

போன்லெஸ் சிக்கன் டிக்கா - Boneless Chicken Tikka



பார்டியில் குழந்தைகளுக்காக சாப்பிட சுலபமாக இது போல் எலும்பில்லாத சிக்கனில் டிக்கா செய்து வைக்கலாம்.

Boneless Chicken Tikka


போன்லெஸ் சிக்கன் டிக்கா
தேவையானவை

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி - 2 சிட்டிக்கை
உப்பு அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
சோம்பு  தூள் கால் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - கால் தேக்கரண்டி
தயிர் - இரண்டு தேக்கரண்டி 
லெமன் சாறு - ஒரு தேக்கரண்டி
கசூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி

அலங்கரிக்க

வட்டவடிவமாக அரிந்த கேரட்
கொத்துமல்லி தழை







செய்முறை

சிக்கனை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

மேலே குறிப்பிட்ட அனைத்து மசலாக்களையும் ஒரு சேர ஒரு பவுளில் கலக்கி சிக்கனுடன் நன்கு பிசறி 10 நிமிடம் ஊறவைக்கவும்


ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து தீயின் தணலை மிதமாக வைத்து ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்.



.
பொரித்து முடித்ததும் எண்ணையை வடித்து தட்டில் வைத்து அலங்கரித்து பரிமாறவும்

இதே பனீரில் செய்யலாம்

இதே மசாலாவை அமுல் பனீர் கியுப்ஸ் வாங்கி அதை தண்ணீரில் போட்டு கழுவி மேற்கண்ட சிக்கனில் சொல்லி உள்ளபடி மசாலாக்களை பனீரில் சேர்த்து பொரித்து எடுத்து அதே போல் செய்யலாம்.


மற்றொரு முறை 

டூத் பிக்கில் பனீரை சொருகி இரண்டு புறமும் கேப்ஸிகம் சொருகி எண்ணையில் உடையாமல் பக்குவமாக திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

மேலே உள்ள குறிப்பு தான் பனீர் ரெசிபியாக ஃபஜீலாவுக்கு நான் சொல்லி கொடுத்தது. இதோ இந்த சுட்டியை சொடுகி பார்க்கவும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/