Tuesday, May 22, 2018

இள‌நீர் க‌ட‌ற்பாசி Tender Coconut Agar Agar








இளநீர் ற்பாசி Tender Coconut Agar Agar

கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு

தேவையானவை



  • கடல் பாசி - 10 கிராம்

  • தண்ணீர் - இரண்டு டம்ளர்
  • இளநீர் = ஒன்று முழுவதும்

  • இளநீரில் கிடைக்கும் தண்ணீர் - அரை (அ) முக்கால் டம்ளர்

  • சர்க்கரை - தேவையான அளவு

  • இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய்

  • பாதா‌ம் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து தேவைப்ப‌ட்டால்)





  • செய்முறை


    ஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்



    நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்




    இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்



    சதுரமாக உள்ள இரண்டு பாத்திரங்களில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும். பாதாமை மேலே தூவவும்.




    சூடு அறியதும் லேசாக கெட்டி ஆகும். இப்போது அந்த இரண்டு பாத்திரங்களையும் ப்ரிட்ஜில் வைக்கவும்


    கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.


    இது சாப்பிடசாப்பிடநிறையசாப்பிடனும்போல் தோன்றும் அவ்வவுருசியாகஇருக்கும்

    Note:

    கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்






    linking to Agar Agar Recipe contest sponsored by Marine Chemicals , Kochi. www.Indiaagar.com hosted at Food Corner



    19 கருத்துகள்:

    வலையுகம் said...

    பகிர்வுக்கு நன்றி
    கடல்பாசி இளநீர் இரண்டுமே குளிச்சியானது உடலுக்கு நல்லது நீங்கள் செய்து காட்டிய முறையில் செய்ய முயற்சிக்கிறேன்

    திண்டுக்கல் தனபாலன் said...

    இதுவரை செய்ததில்லை...

    நன்றி...

    சாந்தி மாரியப்பன் said...

    அருமையான குறிப்பு ஜலீலாக்கா. வரப்போற வெயில் காலத்துக்கேற்றது.

    Unknown said...

    mmm... romba arumaiyaga seithu irukeega...

    Mahi said...

    Looks yummy!

    Amila said...

    wow!!I like tender coconut much....sure,this is delicious!
    Thanks for sharing & good luck with your entry!

    Asiya Omar said...

    Super, neenga thaan agar agar recipe specialist ache! ketkanuma?

    கோமதி அரசு said...

    கடல் பாசி சாப்பிட்டதே இல்லை.
    அருமையான செய்முறை குறிப்புக்கு நன்றி.

    'பரிவை' சே.குமார் said...

    கடல்பாசி சாப்பிட்டதே இல்லை...
    இளநீர் கடல் பாசி அருமையா இருக்கும் போல...
    உண்மையை சொன்னால் யாராவது செய்து கொடுத்தால் சாப்பிடலாம்....

    priyasaki said...

    எங்க வீட்டு பேவரிட் அகர் அகர். வித்தியாசமாகவும்,பார்க்க அழகாகவும் இருக்கு. குறிப்புக்கு நன்றி .

    ஸாதிகா said...

    கோடை வந்து கொண்டே உள்லது.பொருத்தமான பகிர்வு ஜலீலா.

    Vikis Kitchen said...

    Super looking agar sweet. Healthy and delicious. Akka How are You?

    Jaleela Kamal said...

    சே குமார் கடல் பாசி சாப்பிட்டதே இல்லையா?
    ரெடி மேட் பவுடரும் விற்கிறதே.

    வாங்கி ரொம்ப ஈசியாக செய்துடலே.

    Jaleela Kamal said...

    வருகைக்கு மிக்க நன்றி ஹைதர் அலி
    செய்து பாருஙக்ள்

    Jaleela Kamal said...

    தனபாலன் சார் இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலங்களில் செய்யபடும் உணவு
    செய்து பாருஙகள், ஒரு முறை சுவைத்து விட்டால் இனி அடிக்கடி உங்கள் வீட்டில் இளநீர் கடல் பாசி தான்

    Jaleela Kamal said...

    ஆமாம் சாந்தி வருகிற கோடைக்கு குளு குளுன்னு இருக்கும்

    வை.கோபாலகிருஷ்ணன் said...

    கடற்பாசியை சாப்பிடுவது என்பதை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

    புதிய செய்தி. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.பாராட்ட்க்கள்.

    Divya A said...

    Wow arumayana ideaa akka :) Looks super!!

    Unknown said...

    Hi super easy tasty receipe. Thank u

    Post a Comment

    அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

    உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
    ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
    ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








    என்றும் உங்கள்
    ஜலீலாக்கா