- தரமான பாசுமதி அரிசி - அரைகிலோ
- எண்ணை + பட்டர் – 50 கிராம்
- காய்ந்த எலுமிச்சை – 1
- வெங்காயம் – 1 பெரியது
- கேரட் – 50 கிராம்
- பீட்ரூட் – 50 கிராம்
- கார்ன் – 50 கிராம்
- புரோக்கோலி – 50 கிராம்
- தக்காளி பேஸ்ட் – 25 கிராம்
- தக்காளி – அரை பழம்
- மேகி அல்லது நார் பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக் 1 துண்டு
- கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
- சீரகம் – முக்கால் தேக்கரண்டி
- பப்பரிக்கா – கால் தேக்கரண்டி
- முழுதனியா – ஒரு தேக்கரண்டி
- கிராம்பு - 2
- ஜாதிக்காய் – கால் தேக்கரண்டி
- பட்டை – 1 இன்ச் பீஸ்
- ஏலக்காய் - 1
- வெஜிடேபுள் ஸ்டாக்கை 3 ½ டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து வைக்கவும்.
- அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்,
- குக்கரில் எண்ணை + பட்டரை காயவைத்து காய்ந்த எலுமிச்சை ,வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
- அடுத்து தக்காளி ,தக்காளி பேஸ்ட் மற்றும் அரபிக் மசாலாவை சேர்த்து கிளறவும். பிறகு காய்களை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
- அரிசியை தண்ணீரை வடித்து சேர்த்து சமப்படுத்தி.காய் வெந்ததும் அதில் வெஜிடேபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, 2, 3 விசில் விட்டு இரக்கவும், சுவையான அரபிக் வெஜ் கப்ஸா (அரபிக் பிரியாணி) ரெடி. காய்கறி சல்சாவுடன்சாப்பிட அருமையாக இருக்கும்.
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
| Tweet | ||||||

