| Tweet | ||||||
Showing posts with label தோசை ரோல். Show all posts
Showing posts with label தோசை ரோல். Show all posts
Monday, January 7, 2013
நூடுல்ஸ் தோசை ரோல் - Noodles Dosa Roll
இது முதல் முதல் மலிக்க பதிவர் சந்திப்பின் போது கொண்டு வந்தார்கள் கோதுமை தோசையில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி சாண்ட்விச் போல அப்போது இருந்தே செய்து பார்க்கனும் என்று இருந்தேன்.
கொஞ்ச நாளில் மலர் காந்தி தோசை மாவில் செய்து இருந்தாஙக் அதை பார்த்து ஆசியாவும் செய்து இருந்தார்கள். ஒரு முறை செய்து பார்ப்போம் என்று செய்தேன்.
தேவையானவை
தோசை மாவு : 2 குழிகரண்டி
ரெடியாக தயாரித்து வைத்துள்ள் நூடுல்ஸ்
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
செய்முறை
தவ்வாவை சுடு படுத்தி தோசைமாவை சுற்றிலும் ஊற்றி தோசை வெந்ததும் நூடுல்ஸை வைத்து சுருட்டவும்.
பேச்சுலர்களுக்கு காலையில் சட்னி அரைத்து எடுத்து செல்வது ரொம்ப பெரிய மலை போல வேலையாக தெரியும்.
இரவே டின்னருக்கு நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டு விட்டு மீதி ஆனாலும் அதை இப்படி தோசைமாவில் வைத்து சுட்டு எடுத்து செல்லலாம்.
பேச்சுலர்களுக்கு காலை டிபன் அல்லது லஞ்ச் பாக்ஸுகு நல்ல ஃபில்லிங்காக இருக்கும்.
பரிமாறும் அளவு : 1 நபருக்கு
ஆனால் எனக்கு தோசைக்கு புதினா சட்னி , வேறு ஏதாவது சட்னி வகைதான் பிடிக்கும்.
ஆசியாவின் ஈவண்டுக்காக செய்தது. இணைப்பு கொடுக்கமுடியாமல் போய்விட்டது.
Linking to my own Event - Bachelor's Feast.
Labels:
சாண்ட்விச்,
தோசை ரோல்,
தோழிகளின் சமையல்,
புதினா
Subscribe to:
Posts (Atom)


