விஷேஷங்களுக்கு செல்லும் போது நகைகளை பெட்டியோடு கொண்டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ்களில் வைத்து கொண்டு செல்லவும்.இதனால் நகை பெட்டி நகைபெட்டி என்று அந்த பெரிய பேக் களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அடக்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ளலாம்.
வெளியூருக்கு சென்று அணியும் நகைகளை, அதாவது கல்யாண சத்திரத்தில் போய் தங்கி அங்கு அணிய வேண்டி வந்தால். பெரிய பார்சலாக தூக்கி கொண்டு போகாமல் சின்ன இரண்டு முன்று பர்ஸ்கள் வைத்து கொள்ளவும்.அதில் கம்மல், மோதிரம், மாட்டல் ஒரு பர்ஸிலும், வளையல் ஒரு பர்ஸிலும், பெரிய ஹார்கள், மாலைகள் ஒரு பர்ஸிலும் வைத்து கொண்டால் எடுப்பது சுலபம் இலலை என்றால் ஒரு சிறிய, கம்மலோ (அ) மோதிரமோ காணமல் போக வாய்ப்பிருக்கு. கவரிங் நகைகள் செண்ட் போன்றவை தனித்தனியாக வைக்கவும்.
முக்கியமாக பிரேஸ்லேட் அணிவர்கள் கல்யாணவீடுகளில் தவறவிடுவதை நேரில் பார்த்தும் இருக்கிறேன், அதை கண்டு பிடித்து கொடுத்தும் இருக்கிறேன்.
ஆகையால் பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்காலாம்.
கல்யாண பெண்களுக்கு கழுத்தில் நிறைய செயின் போடுபவர்கள் கூடவே மெல்லிய செயினும் போட்டு இருப்பார்கள்.
அதுவும் தொலைந்து போக சான்ஸ் இருக்கு அதற்கும் சேஃப்டி பின் தான் எல்லா செயின் வளையங்களிலும் சேர்த்தாற் போல் சின்ன கோல்ட் சேஃப்டி பின்னை குத்தி கொள்ளவும்.
கல்யாண பெண்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு நெற்றி சுட்டி வைக்கும்போது அது தலையில் ஒரு இடத்தில் நிற்காது அதற்கும்சேஃப்டி பி ன் தான் நேர் வ்கிடு ஆரம்பிக்கும் இடத்தில் முடியோடு சேர்த்து ரிங்கில் குத்தி விடுங்கள் அது நீங்க சொன்ன பேச்சை கேட்கும்.
இப்ப தஙக் விற்கிற விலையில் யாரு கழுத்து நிறைய செயின போடுறதுன்னு கேட்கீறீங்களா? என்னதான் விலை ஏறினாலும் வாங்குகிறவர்கள் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்,\
Tweet | ||||||
71 கருத்துகள்:
அக்கோவ் இவ்ளோ சொன்நீங்கதானே , அப்படியே ஒரே ஒரு கிலோ தங்கம் வாங்கி தாங்க
nice post jaleela- am looking toungue-tied at the girls wearing such heavy jewellery; they sure have a lot of patience
ஜல் ஜல் ஜலீலாக்கா.... கெதியா நகையைத் தாங்கோ..சே..சே.. வடையைத் தாங்கோ.... நான் இப்பவும் கொஞ்சம் பிசிதான் ஜலீலாக்கா, ஆனாலும் அப்பப்ப பார்த்து மயிலும் பதிலும் எல்லோருக்கும் போடுறேன், அதிரா ரொம்ப ஒயுங்கான நல்ல பிள்ளை 6 வயதிலிருந்தே...:))).
கடசிப் படம் அதென்ன அது நகைதானா? தங்க நகையா?..
இன்றுகூட என் நகைகளைப் பார்த்து நான் கேட்டேன் எதுக்காகத்தான் காசு சிலவழித்து இப்படியெல்லாம் தந்தார்களோ என, அப்படியே அழகுப்பொம்மையாக இருக்கு, எங்குதான் போடுவது.... இப்போ தங்கம் போடுவதும் பாஷன் இல்லாமல் வருதே...
முழுக்க படிக்கல்ல... மெதுவாப் படிக்கிறேன்...
VERY USEFUL TIPS
பயனுள்ள பதிவு ஜலிலா..ஆனால் இத்தனை நகை அணிந்திருப்பது அழகாய் இல்லை அருவெருப்பாய் இருக்கு பார்க்க..அளவுக்கு மிஞ்சினால்.....
ஓட்டு போட முடியாது ஏன்னா நீங்க இண்ட்லி ல் சமிட் பண்ணவே இல்லை. பதிவும் கூட ரொம்ப விலைமதிப்பானவை. நம்ம லெவலுக்கு இல்லை.
Very informative..
நல்ல பயனுள்ள குறிப்புகள் ஜலீலா
தங்கம் விக்கிற விலையில் ரொம்ப அட்டகாசமாகவும் அருமையாகவும் டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க ஜலீலா..:))
அதி அவசிய, முக்கிய குறிப்பு!
Thanks!
அருமையான குறிப்பு ..ஜலீலாக்கா
எனக்கு ஒரு டவுட்டு மட்டும்தான்...!!
இந்த காது + மூக்கு திருகானி இருக்குதுள்ள அது மட்டும் தனியா கானாமப் போகுதே ..அது கானாமப்போகாம இருக்க ஏதாவது ஐடியா குடுங்களேன்..
பதில் திருப்தியா இருக்காட்டி நான் அதை பத்தி 4 பக்கத்துக்கு பதிவு போட்டு எல்லாரையும் குழப்பிடுவேன் ஹி..ஹி...!! :-))
கடைசி போட்டோவில இருக்காங்களே அவங்க என்ன யானையா ...?
தசராவில யானைக்கு போட்ட மாதிரி இருக்கே க்கி...க்கி.
அடடே...ஜலீலாக்கா பின்றீங்க போங்க...:))
போட்டோஸ் எங்க புடிச்சீங்க.... ஜாய் அலுக்காஸ், அட்லஸ் ஜிவல்லரியும் ஒரே இடத்துல பார்த்தா மாதிரி இருக்கு...:)
Labels: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ், பெண்கள் பகுதி
ஆஹா தெரியாம வந்துட்டேன். இவங்க போட்டுறுக்கிற ந்கையை பாத்தா மயக்கமே வருது
புதிய கருத்து
வாழ்த்துக்கள்
எல்லா போட்ட்ஸும் அருமை..கரக்டாக கண்டுபிடித்து போட்டு இருக்கின்றிங்க...
//என்னதான் விலை ஏறினாலும் வாங்குகிறவர்கள் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்,//உண்மை தான்..இல்லாடா இப்படி தங்கள் விலை ஏறுமா...
எல் கே வாங்க துபாய்க்கு, இப்ப நட்க்குற ச்ஷாப்பிங் பெஸ்டிவலுக்கு நிறைய கூப்ப்ன் கொடுக்குறாஙக் விழுந்தா ஒரு கிலோ தங்கம் தான் தராங்க , உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அள்ளிட்டு போயிடுங்க வாங்க
பிரியா எனக்கே சில நேரம் இந்த போட்டோவ பார்த்து ஆச்சரியாமா இருக்கு எப்படி இவ்வள்வு போட்டு கொண்டு நிற்கிறார்கள், எனகெல்லாம் ரொம்ப சிம்பிலா ஒரு நெக்லஸ் , ஒரு லாங்க் செயின் அப்படி இருந்தால் தான் பிடிக்கும்.
அதிரா ஒரு வாரமா நெட் சரியில்லை முந்தய் பதிவுக்கெல்லாம் பதில் போடல யார் பக்கமும் கூட போகல.
ஊரில் இருந்தால் தான் அடிக்கடி விஷேசங்கள் வரும்.
இங்கு எங்கும் போவதில்லை. வெளிய்ய்ரில் இருந்தால் நகை கூட் தேவையில்லை
ஒழுங்கா பதிவ படிச்சுட்டு மருக்கா ஒரு தபா பதில் போடனுமாக்கும்
நன்றீ ஏஞ்சலின்,
தமிழரசி வாங்க அத பார்க்க எனக்கும் சுத்தமா பிடிக்கல , ஆனால் பெண்களில் சில பேர் இப்படி நகை பைத்திய்ங்களும் இருக்கிறார்கள்.
இப்படி பார்க்கும் போது சிலருக்கு தோனனும் நிறய நகை போட்டால் நல்ல இல்லை என்று.
வருகைக்கு மிக்க நன்றி
கே ஆர் விஜயன் வருகைக்கு மிக்க நன்றி.
எஅன்க்கு நெட் சரிஅய வொர்க்காகல, அதான் போட்டு வைத்திருந்த தேதியில் பப்லிஷ் ஆகிவிட்டது. ஓட்டு பட்டை இனைக வில்லை என்றால் நிங்கள் கூட இனைத்து இருக்கலாம்.
வருகைக்கு நன்றி காயத்ரி.
மிக்க நன்றி ஸாதிகா அக்கா
ஆமாம் தேனக்கா இதெல்லாம் நேரில் பார்த்தது.
அதான் சில பேர் கேர்லஸா இருப்பார்கள், இத பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கு,
நேரமின்மையால் எழுத முடியல
வருகைக்கு மிக்க நன்றி
NIZAMUDEEN said...
அதி அவசிய, முக்கிய குறிப்பு!
Thanks!
February 12, 2011 10:08 PM
வருகைக்கு மிக்க நன்றி நிஜாமுதீன்
//இந்த காது + மூக்கு திருகானி இருக்குதுள்ள அது மட்டும் தனியா கானாமப் போகுதே ..அது கானாமப்போகாம இருக்க ஏதாவது ஐடியா குடுங்களேன்..//
ஜெய்லானி இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வருமுன்னு தெரியும், அந்த பாயிண்ட் விட்டு போச்சு,
( பேசி கொண்டே கம்மல் முக்குத்தி போட கூடாது. கிளம்பும் நேரம் கடைசி நேரத்தில் அவசர அவசரமா போட கூடாது,
மடியில் ஒரு வெள்ளை துணி விரித்து கொண்டு ஒரு இடமா அமர்ந்து போடனும்.
ரொம்ப பிஸியான ஆளாக இருந்தால் முன்கூட்டியே அணிந்து கொள்வது நலல்து...
ப்போதுமா இந்த பதில். பிற்கு தான் பதிவில் சேர்க்கனும்
நாஞ்சிலாரே ரொம்ப நாள் கழித்து வந்து எட்டி ப்பார்க்குராஅ மாதிரி இருக்கு/
இதேல்லாம் எங்கே பிடிச்சீங்களா எல்லாம் முன்பு பார்வேட் மெயிலில் வந்தது தான்,
ஜெய்லானி கடைசி போட்டோவில் இருப்பவஙக் யாருன்னு நெஜமாவே உங்களுக்கு தெரியலயா?
வாங்க தங்க ராசு , உங்களுக்கு மட்டும் இல்லை, இத பார்க்கும் எல்லா ரஙக்ஸ்க்கும் மயக்கம் தான் வரும்.
வாங்க யாதவன் வருகைக்கு மிக நன்றீ
ஆமாம் கீதா ஆச்சல் ஒரு கிராம் வாஙக்வே யோசனையா இருக்கு,ஆனால் பெண்பிள்ளைகளை வைத்து இருப்பவரக்ளை நினைதால் தான் எப்படி தான் கரைசேர்க்க போகிறார்கலோ என்று மிகவும், கழ்டமாக இருக்கும்.
சில பேர் என்ன விலை ஏறினாலும் நச்சரித்து வங்குகிறவர்கள் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள்
அப்ப்ப்பா.... இந்த நகையெல்லாம் எப்டித்தான் சுமந்துட்டு நேராக நிக்கிறாங்களோ?!
உங்க டிப்ஸும் அருமை அக்கா... லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்.இந்த திருமண நாள் போல் இன்னும் பல திருமண நாட்கள் காண வாழ்த்துக்கள்.[அந்த பதிவில் சொல்லமுடியவில்லை.:( ]
அருமையான குறிப்பு.
அன்பு ஜலீலா எங்கப்பா இந்தத் தங்கப் படங்களைப் பிடிச்சீங்க. ஒரே ஒரு சந்தேகம். இப்படியாவது மாட்டிக் கொண்டு நிற்கணுமா!! அது அவர்கள் இஷ்டம்:)
உங்க ஐடியாக்கள் அத்தனையும் கரெக்ட். புதிசாத் தங்கம் வாங்காட்டாலும் இருக்கிறதைப் பத்திரமா வைத்துக் கொள்ள நீங்க கொடுத்த டிப்ஸைப் படித்தாலே போதும். மிக நல்ல பதிவுப்பா.
//"கடைசி போட்டோவில இருக்காங்களே அவங்க என்ன யானையா ...? "//
இப்படி சொன்னவங்கள மும்பை தாவூத் இப்ராஹிம் வலைவீசி தேடிகிட்டு இருக்கிறாராம். அது அவரின் செல்ல மகள்.
/// Jaleela Kamal said...
ஜெய்லானி கடைசி போட்டோவில் இருப்பவஙக் யாருன்னு நெஜமாவே உங்களுக்கு தெரியலயா
////
ஆ... என்னா ஜலீலாக்கா... அது திரு.திருமதி ஜெய் ஆஆஆஆஆ? எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).
ஊ.கு:
கடசிப் படத்தைப் பார்த்ததும் எனக்கு ஆட்டுக்குடலை அப்படியே கழுத்திலே தொங்கவிட்டதுபோல தெரிந்துது:), பாவம் அப்பெண், ஆனால் மாப்பிள்ளையின் முகத்திலே என்ன ஒரு ஒளி:) தெரியுது.... எல்லாம் அந்த நகைக்காகத்தானோ?:))
கடைசி ஃபோட்டோல இருக்கறது ரொம்ப ரொம்ப பெரிய இடம்... அதான் தங்க நகை கடையையே கழுத்தில் மாட்டி இருக்கிறார்கள்...
பயனுள்ள பல குறிப்புகளை உள்ளடக்கிய இந்த பதிவும் மிக அருமை ஜலீலா அவர்களே..
அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சு என்று நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.
//ஜெய்லானி இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு வருமுன்னு தெரியும், அந்த பாயிண்ட் விட்டு போச்சு,
( பேசி கொண்டே கம்மல் முக்குத்தி போட கூடாது. கிளம்பும் நேரம் கடைசி நேரத்தில் அவசர அவசரமா போட கூடாது,
மடியில் ஒரு வெள்ளை துணி விரித்து கொண்டு ஒரு இடமா அமர்ந்து போடனும்.
ரொம்ப பிஸியான ஆளாக இருந்தால் முன்கூட்டியே அணிந்து கொள்வது நலல்து...
ப்போதுமா இந்த பதில். பிற்கு தான் பதிவில் சேர்க்கனும் //
நீங்க இதான் சொல்லுவீங்கன்னு எனக்கு நல்லவே தெரியும் ..நான் கேட்டது தூங்கி முழிக்கும் போது காணாமப்போயிடுதே...!! (( நானே கழட்டி பாக்கெட்டில போட்டுகிட்டேன்னு சொல்லப்பிடாது ))
கடவுளே...இந்த கேள்வி பூஸ் கண்ணுக்கு மாட்டக்கூடாது
நல்ல பகிர்வு. தில்லியில் மஞ்சள் கயிறை பார்த்தாலே தென்னிந்தியர்கள் ஒரு குண்டுமணி தங்கமாவது போட்டு இருப்பாங்கன்னு அறுத்துடறாங்க. இதில எங்கயிருந்து இவ்வளவு தங்கத்தை போடறது. எல்லாம் பெட்டியில் தூங்குது. இந்த புகைப்படங்களில் நகை போட்டிருப்பவர்களை பார்த்தாலே பயமா இருக்கு. எனக்கு சிம்பிளா இருந்தா தான் பிடிக்கும்.
//இப்படி சொன்னவங்கள மும்பை தாவூத் இப்ராஹிம் வலைவீசி தேடிகிட்டு இருக்கிறாராம். அது அவரின் செல்ல மகள்//
ஏனுங்க ..நீங்களே என் வீட்டு அட்ரஸை குடுத்துடுவீங்க போலிருக்கே அவ்வ்வ்வ்
good post akka.
உங்க பதிவைவிட, இந்தப் படஙக்ள்தான் இண்டரெஸ்டிங்!! :-)))))
நானே எல்லா போட்டோவும் போட்டுட்டு தாவூதி இப்ராஹிம் பொண்ணு போட்டவ கடைசியா பயந்து பயந்து போட்டேன், யாராவது பிலக்குல கல்ல துக்கிஅடிச்சிடுவாங்களோன்னு
ஆவதவங்கா யாரும் போட்டு கொடுத்துடாதீங்க, எப்படி அவங்க கழுத்து தொங்காம இருகுன்னு தெரியல
டிப்ஸ் தேவையான பகிர்வு,ஆனால் இந்த போட்டோஸ் பார்த்தால் கொஞ்சம் நகை மேல இருக்கிற ஆசையும் இல்லாமல் போய்விடும் போல.சுவாரசியமான பின்னூட்டங்கள்.
சலாம் ஜலீலாக்கா! இவை நாம் ஃபாலோ பண்ணும் விஷயங்கள் என்றாலும் அத்தனையும் சொல்லவேண்டிய அருமையான விஷயங்கள். சொன்ன விதமும் அருமை! வாழ்த்துக்கள் ஜலீலாக்கா. கடைசி ஃபோட்டோவ பார்த்தவுடன் நீங்க முதல்ல எனக்கு அனுப்பிய மெயில்தான் நினைவுக்கு வருது :-)
//ஊ.கு:
கடசிப் படத்தைப் பார்த்ததும் எனக்கு ஆட்டுக்குடலை அப்படியே கழுத்திலே தொங்கவிட்டதுபோல தெரிந்துது:), பாவம் அப்பெண், ஆனால் மாப்பிள்ளையின் முகத்திலே என்ன ஒரு ஒளி:) தெரியுது.... எல்லாம் அந்த நகைக்காகத்தானோ?:))
February 13, 2011 1:30 PM//
அதிரா அட அந்த நகைய பார்த்து மாப்பிள்லை கண்ணில் தெரியும் ஒளியெல்லாம் உங்கள் கண்ணுக்கு பளிச்சின்னு தெரிந்திடுச்சா/
// இப்ப நகை விற்கும் விலைக்கு மாப்பிள்ளைகள் இத்தனை பவுன் போட்டாந்தான் தாலிய கட்டுவேனு சொன்னலும் சொல்லுவாங்கள்.//
பின்ன்னாடி உதவும் என்று கேட்டாலும்கேட்பார்கள்/
ஆமாம் கோபி, என்ன இருந்தாலும் இப்படி போட்டு இருப்பத பார்த்தா நகையே பிடிக்கல எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு, இருக்குன்னு வாரி இப்படி அணியனும்/
என்றென்றும் பதினாறு உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி
எனக்கும் அதே சந்தேகம் தான், ஒரு பெரிய செயின் போட்டாலே எப்பாடாஅப்பா கழட்டி போடுவோமுன்னு இருக்கும்/
ஜெய்லானி இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா , அப்ப்ரம் கல்லு கொழுக்கட்டதான் பறக்கும்.
இருங்க பூஸ் வருவார்,கெதியா கதைக்க....
//சொல்லச் சொல்ல said...
//"கடைசி போட்டோவில இருக்காங்களே அவங்க என்ன யானையா ...? "//
இப்படி சொன்னவங்கள மும்பை தாவூத் இப்ராஹிம் வலைவீசி தேடிகிட்டு இருக்கிறாராம். அது அவரின் செல்ல மகள்.
February 13, 2011 12:06 PM//
சொல்ல சொல்ல வாங்க் பா வருகைக்கு மிக்க நன்றி.
, யாராவது தெரிந்த வங்க ந்னா போட்டு கொடுத்துடாதீங்க.
சே குமார் கருத்துக்கு மிக்க நன்றி
//வல்லிசிம்ஹன் said...
அன்பு ஜலீலா எங்கப்பா இந்தத் தங்கப் படங்களைப் பிடிச்சீங்க. ஒரே ஒரு சந்தேகம். இப்படியாவது மாட்டிக் கொண்டு நிற்கணுமா!! அது அவர்கள் இஷ்டம்:)
உங்க ஐடியாக்கள் அத்தனையும் கரெக்ட். புதிசாத் தங்கம் வாங்காட்டாலும் இருக்கிறதைப் பத்திரமா வைத்துக் கொள்ள நீங்க கொடுத்த டிப்ஸைப் படித்தாலே போதும். மிக நல்ல பதிவுப்பா.
February 13, 2011 11:24 AM//
வல்லிசிம்ஹன் அக்கா வாங்க , ஆமாம் இப்ப உள்ள ஜெனரேஷன் களுக்கு எல்லாம் பேஷன் மயமானதல் இருப்பதை பாதுகாக்க தெரியல, அப்படியாராவது இருந்தா உதவியாக இருக்கும்.
உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்சி
ஆசியா இது எல்லோருக்கும் பயன் படும நீஙக் சொல்வது சரி தான் இத பார்த்தா கொஞ்ச நஞ்ச நகை ஆசையும் போய்விடும்
சலாம் அஸ்மா நாஅன் முன்பு அனுப்பிய மெயில் சொல்றீங்கலா.அனைவருக்கும்
தேவையான டிப்ஸ் ஆனால் இன்னும் நிறைய இருக்கு போட முடியல்
வருகைகு மிக்க நன்றி அஸ்மா
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,இந்த பதிவு பலருக்கும் பயனளிக்கும்...
இந்த ஃபோட்டோக்கள் எனக்கு ஒரு வருடங்கள் முன்பே வந்தது.ப்ளாக் ஆரம்பித்ததும் இதை சுட்டி காட்டி ஒரு பதிவு போடலாமுன்னு நினைத்தேன்.அப்புறம் எதார்த்தமாக உங்க டிப்ஸ் பக்கம் போயிருந்தபோது இது கண்ணுல படவே பேசாம இருந்துட்டேன்.
நிஜமாவே இதை போடுபவர்களுக்கு எப்பைட் இருக்கோ தெரியல... பார்க்கும் நமக்குதான் எரிச்சலை உண்டு பண்ணுது....
நல்ல பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் அக்கா....
அன்புடன்,
அப்சரா.
ஜெய்லானி said...
நீங்க இதான் சொல்லுவீங்கன்னு எனக்கு நல்லவே தெரியும் ..நான் கேட்டது தூங்கி முழிக்கும் போது காணாமப்போயிடுதே...!! (( நானே கழட்டி பாக்கெட்டில போட்டுகிட்டேன்னு சொல்லப்பிடாது ))
கடவுளே...இந்த கேள்வி பூஸ் கண்ணுக்கு மாட்டக்கூடாது////
ஹா...ஹா...ஹா... நான் உண்மையிலயே பெயிண்ட் ஆயிட்டேன் என நினைச்சிட்டாராக்கும்...எங்கட ஜெய்...
ஜலீலாக்கா இந்தப் பிரச்சனையை கொஞ்சம் வேஏஏஏஏஏஏஏஏற விதமாத்தான் அணுகோணும்... அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்திடாதீங்க...:).
கடவுளே... முழுங்குறதுக்கு எவ்ளோ இருக்கே... அதைவிட்டுப்போட்டு மூக்குத்தியையா முழுங்கோணும்...
எனக்கு எங்கட கண்ணதாசனின் “சிகப்புக்கல் மூக்குத்தி” ஸ்டோரிதான் நினைவுக்கு வருது....
சரி அது போகட்டும்...
ஜெய்... இதுவரை சுமார் எத்தனை மூக்குத்திகளை முழுசாஆஆஆ முழுங்கியிருப்பீங்க ஞாபகம் இருக்கா?...???:).
ஆ.... ஜலீலாக்கா காப்பாத்துங்கோ....
Kerala wedding photos thane??
last photo paaratha romba tension aguthu.
//நீங்க இதான் சொல்லுவீங்கன்னு எனக்கு நல்லவே தெரியும் ..நான் கேட்டது தூங்கி முழிக்கும் போது காணாமப்போயிடுதே...!! (( நானே கழட்டி பாக்கெட்டில போட்டு கிட்டேன்னு சொல்லப்பிடாது )) கடவுளே...இந்த கேள்வி பூஸ் கண்ணுக்கு மாட்டக்கூடாது//
எல்லாமே உங்களுக்கு தெரிதிருந்தும் இப்படி எடக்கு மடக்கா
கேள்வி கேட்டா எப்படி பாஸ்? ஜலீலாக்கா பயந்து போயிடுவாங்கள்.
ஜலீலாக்கா பதிவு அசத்தல்! எல்லா போட்டோவிலும் ஒரு கண் வச்சுங்க. திடீர்னு யாரும் லூட் அடிச்சிக்கிட்டு போய்ட போறாங்க!! (நகை நிறைய இருக்கே!!)
முக்கியமான விஐபி யின் பிறந்தநாளை வாழத்தலாம் வாங்க பகுதியில் பதிவிட்டுள்ளேன் முகவரி-http://vazthalamvanga.blogspot.com/2011/02/blog-post_13.html வந்து வாழ்த்திவிட்டு செல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
தேவையான குறிப்புக்கள்
வா அலைகும் அஸ்ஸலாம் அப்சாரா,
இத பார்த்தாலே நெஜமாவே எரிச்சல் தான் வருது
போடுங்க நீங்களும் என்ன நினைக்கிறீங்களோ அத போடுங்கள்.
அதிரா அப்பாடா மூக்குத்திக்கு ஒரு பதில் போட்டாச்சு.சிவப்புகல் முக்குத்தி பதிவும் போடுங்களேஎன்
மஹா விஜெய் ஆமாம் எல்லோருக்கும் அந்த போட்டோ எரிச்சலை த்ருகிறது.
எம் அப்துல் காதர் எனக்கு பயமில்ல, பதில் சொல்லுவதா இருந்தா சொல்லி கொண்டே போகலாம்.
நகை தானே வந்தவஙக் எலாம் ஏற்கனவே அள்ளியாச்சு, உங்களுக்குதெரியாதா/
வேலன் சார் வாங்க இப்படி திடீருன்னு பதிவு போட்டு வாழ்த்தி இன்ப் வெள்ளத்தில் ஆழ்த்திட்டீங்க.
மிக்க நன்றி + சந்தோஷம்.
வருகைக்கும் மிக நன்றி
வாங்க பாத்திமா மிக்க நன்றி
aahaa.... naane ippathan konjam konjama nagai poda aasaippadaren, athukkulla inga ivvalavu pirachinaiyaa??
sari vidunga, naanum paarthu pathavisa irunthukkaren. :)
naan schoolukku porappa velli kolusu tholaichathuthan athigam.
jeylani bhai, unga valaippakkamthan intha santhega viyaathinna ippa comment podara edangalilumaa? allaahve...
//சரி அது போகட்டும்...
ஜெய்... இதுவரை சுமார் எத்தனை மூக்குத்திகளை முழுசாஆஆஆ முழுங்கியிருப்பீங்க ஞாபகம் இருக்கா?...???:).//
ஹி..ஹி....மாசத்துக்கா..?? இல்லை வருஷத்துக்கா..!!
//jeylani bhai, unga valaippakkamthan intha santhega viyaathinna ippa comment podara edangalilumaa? allaahve...//
இப்பதான் முதல் தடவையா பாக்குறீங்கன்னு நினைக்கிறேன் ஹா..ஹா..
//ஹா...ஹா...ஹா... நான் உண்மையிலயே பெயிண்ட் ஆயிட்டேன் என நினைச்சிட்டாராக்கும்...எங்கட ஜெய்...//
இதுக்கு பதில் வந்துகிட்டேஏஏஏ இருக்கு :-))))))))))))))))))))))
ஜலீலா அக்கா, நல்ல டிப்ஸ். இவ்வளவு நகைகள் போட்டு ஏன் இம்பூட்டு கஷ்டப்படணும்.
பயனுள்ள பதிவு...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா