Tweet | ||||||
Thursday, February 3, 2011
புல்ஜெய் ஆஃப் பாயில் - bull's eye
புல் ஜய்
ஆம்லேட் , ஆஃப் பாயில்
ஆம்லேட் போடுவது எப்படி ஆஃப் பாயில் சில பேர் விரும்பி சாப்பிடுவாங்க,.
சத்திழந்தவங்க ,காலையில் இது போல் இரண்டு போட்டு சாப்ப்பிட ரொம்ப நல்லது, புது மண தம்பதிகளுக்கு செய்து கொடுப்பாங்க..
தவ்வாவை காய வைத்து எண்ணை (அ) பட்டர்( நெய்) விட்டு முட்டைய ஊற்றியதும், தீயின் தனலை குறைத்து வைக்கனும்.
சில பேர் சரியாக வேகாம எடுப்பாங்க மேலே உள்ள வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கருவும் வெந்து இருக்கனும், ( மேலே மட்டும் மஞ்சள் கரு உடையாமல் நல்ல வெந்து வரனும் என்றால். தவ்வாவில் ஊற்றியதும், ஆப்பம் செய்வது போல் ஒரு மூடி போட்டு மூடி வைக்கனும்ம்) வெந்ததும் மிளகு உப்பு தூவி இரக்கவும்.
பன் , பிரெட் , ரொட்டி சப்பாத்தி அனைத்திற்கும் பொருந்தும்
மாலை நேரம் பசி எடுத்தால் அவசரத்துக்கு பசி எடுத்தால் முட்டை விரும்பிகள் இது போல் டபுள் ஆம்லெட், போட்டு சாப்பிடலாம்.,
டபுள் ஆம்லேட் என்பது இரண்டு முட்டையையும் ஒண்றாக ஊற்றி மஞ்சள் கரு உடையாமல் ஊற்றிய இடத்தை விட்டு நகராமல் வெந்து எடுக்கனும்.
இங்கு துபாயில் ஹாஸ்பிட்ட்டலில் குழந்தை பிறந்ததும் , காலை நேர சிற்றுண்டி ஓட்ஸ், இரண்டு ப்ரெட் ஸ்லைஸ், ஆஃப் பாயில் , ஒரு பழம் கண்டிப்பாக இருக்கும்.
இதே போல் அவித்த முட்டையும் அரை வேகாடில் செய்து ப்ரெட் பன்னுடன் சாப்பிட்டால் எண்ணையில்லாத டயட் உணவாகவும் ஆகும்.
இது என் பிள்ளைகள் ஹஸுடைய பேவரிட், என் அம்மாவுக்கும் நான் செய்து கொடுக்கும் இந்த புல் ஜெய் ரொம்ப பிடிக்கும்.
இந்த படம் குட்டி முட்டை ஐந்து
ஒரு முட்டைய நல்ல அடித்து அதில் மிளகு தூள், உப்பு தூள் கலக்கி குட்டி குட்டியா ஐந்து முட்டை ஊற்றனும். குட்டி பன்னில் வைத்து ஆபிஸ் ,எடுத்து செல்ல , குழந்தைகளுக்கு கொடுத்தனுப்ப கியுட்டான சாண்ட் விச்.
இன்னொரு முறை ஒரு முட்டையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவைக்கு சேர்த்து குட்டி குட்டியா ஐந்து ஊற்றனும்.
டிஸ்கி: சின்னதில் 7 வகுப்பு படிக்கும் போது அம்மா டெலிவரிக்கு போ ய் விட்ட போது அப்பாவுக்கும் தங்கை களுக்கும் நான் செய்து கொடுத்த என் முதல் சமையல் இந்த குட்டி முட்டை. குக்கரில் சாதம் வைத்து வெரும் ரசம் , அல்லது புளி குழம்பு இந்த முட்டை, துணைக்கு , கடையில் பொட்டலம் கட்டி வரும் பகோடாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
36 கருத்துகள்:
படங்கள் பார்க்கவே அழகு ஜலீலா.என் மகனை அனுப்பி வைக்கிறேன்,போட்டு கொடுங்க,அவனுக்கு புல்ஸ் ஐ ரொம்ப பிடிக்கும்.
ஜாஹிதை அனுப்பி வைங்க போட்டு தரேன்,
இது என்னான்னா, ம்ஞ்சள் கரு உடையம அப்படியே எடுத்து சாப்பிடனும்
என் பசஙக் சாப்பிட்டுட்டு உடனே கையைல் பலம் வந்துடுச்சான்னு பார்ப்பாஙக்,
அதிலும் ஒருத்தனுக்கு லேசா மஞ்சள் கரு ஓரமா போய் விட்டால் ஒரே சண்டை தான் அவனுக்கு மட்டும்நல்ல போட்டு கொடுத்தூட்டீங்க எனக்கு மட்டும் இப்படி, என்று
இப்ப இங்கு சின்னவன் மட்டும் தான் சண்டை போட யாரும் இல்லை
ஸலாம் ஜலீலாக்கா,,
புல்ஸ் ரொம்ப ப்ரியமான வகை எனக்கு..பெரும்பாலும் வீட்டில் செய்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக பிச்சு சாப்பிடுவதுதான் வழக்கம்..ஆனா வேலைன்னு வெளிய வந்ததுக்கப்பரம்தான் ஹோட்டல்ல சாப்பிடும்போது என் நண்பன் சொல்லிக்கொடுத்தான்..அதை அப்படியே உடையாமல் முழுவதுமாக வாயில் போட்டு சாப்பிடனும்ன்னு..அதோட டேஸ்டே அப்போதா எனக்கு தெரிஞ்சுச்சு..அதுல இருந்து அப்டித்தான்...சாப்பிடுறேன்..
அன்புடன்
ரஜின்
வா அலைக்கும் அஸ்ஸ்லாம் ரஜின்
இது போல் ஈசியான சமையலை கற்று கொண்டால் தேவைக்கு பேச்சிலர்கள் தானே சமைத்து சாப்பிடலாம்
சத்தாகவும் ஆரோக்கியமாகவும்,.
( ஆனால் என்னக்க்கு பிடிக்காது லேசா வெந்தாதான் பிடிக்கும்.)
இதே போல் அவித்தமுட்டையையும் செய்து சாப்பிடலாம். அது எண்ணை இல்லாத அயிட்டம்,.உடம்புக்கு
இன்னும் நல்லது
வருகைக்கும் கருத்தி தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி ரஜின்
Very cute presentation with half boil. Sister I still don't get the updates :(
ஜலீலா.. எனக்கும் புல்ஸ் ஐ போட்டுத்தாங்க..:))
naanum unga katchi thaan enakum half boil pudikathu but paarka romba alaga eruku
Hi Akka J,
Thanks for the award.
நன்றி சொன்னேனான்னு ஞாபகம் இல்லை. ஸாரிக்கா.
எனக்கும் முட்டைப் பொரியலும், ரசமும், பகோடா அல்லது மிக்சர் பருப்பு வடை சேர்த்து சாப்பிட பிடிக்கும். சேம் ப்ளட்.
இப்டி படம் போட்டு வயிற்றெரிச்சல் படுத்தறீங்க. இருங்க போய் நாலு முட்டை பொரிச்சு சாப்பிட்டு வறேன்.
Ana
என் வீட்டுக்காரரின் பேவரிட் இது...இட்லி,தோசைக்கு சட்னி இல்லாத சமயம் இதை போட்டுக் கொடுத்துட்டா போதும் அமிர்தம் மாதிரி தொட்டு சாப்பிடுவார்..
looks so good.
thank you for u r comment umm.
நன்றி மீனகம்
தேனக்கா கண்டிப்பா போட்டு தரேன் வாங்க,
ஆமாம் மஹா விஜெய் எனக்கு கொஞ்ச்ம் வேக வைத்து கொள்வேன், ஹஸ் பையனுக்கு எல்லாம் அப்படியே இப்படி தான் எல்லோருக்கும் ரொம்ப பேவரிட்
அனாமிகா இப்ப கூட பழைய ஞாபகத்தில் ரசத்துக்கு, பகோடா , (அ) வடை (அ) மிக்சர் வைத்து சாப்பிடுவேன்.
அனாமிகா இரண்டு நிமிட வேலை உடனே நாலென்ன எட்டு போட்டு சாப்பிட்டுட்டு வாங்க
மேனகா இங்கும் அப்படி தான்.
தொட்டுக்க எதுவும் இல்லை
என்றால் , இது மட்டும் போதும்
இன்று கூட குபூஸ், புல் ஜெய் மதியம் உள்ள மூளை பொரியல் கொஞ்சம் ,
என் மாமானார், கொழுந்தனார்கள் எல்லோரின் பேவரிட்டும் இது,.
சித்ரா, ஆம் எனக்கே படம் ரொம்ப பிடிசிருக்கு,
வருகைக்கு மிக்க நன்றி
தலைப்ப பார்த்தா ஏதோ என்னைதான் திட்டுறீங்களோன்னு ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..... நல்ல வேளை இங்கிலீஷல தலைப்ப வச்சீங்க ஹா.ஹா...
நமக்கு எப்பவுமே ஃபுல் பாயில் + ஃபுல் ஃபிரைதான் பிடிக்கும் ... கொஞ்சமாவது வேகாத மாதிரி தெரிஞ்சா அது ஹோட்டலா இருந்தாலும் விடறதில்லை :-))
அதிரா ஜெய் ஜெய் என்றதும் ஜெய்லானி சொல்றேன் நினைகக் வேண்டாம்
//அதிரா ஜெய் ஜெய் என்றதும் ஜெய்லானி சொல்றேன் நினைகக் வேண்டாம்//
ஆஹா...நெருப்ப வச்சிட்டு பின்னாடியே விசிறி வேர விட்டுட்டீங்களே...எனன் பதில் வரப்போகுதோ எஸ் கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
பூஸார் இன்று வருவார,
நான் புல்ஸ் ஐ ய, ஒரு இதுக்கு தான் புல் ஜெய் ஆ மாற்றி இருக்கேன்.
என்னடா உலகம் இது முட்டைக்கு ஒரு நியாயம் மனுசனுக்கு ஒரு நியாயமா? மனுசன மட்டும் அரைவேக்காடுன்னு திட்டரது !!!
அழகான ஆம்லெட்!!
ஜல் ஜல் ஜலீலாக்கா இது எப்ப நடந்தது? என்ன கோபம் ஜெய்யோட உங்களுக்கு, அவர் அழகாகப் பாடினது புடிக்கலையோ? ஆனா ஒரு விதத்தில இதுவும் சரிதான் ஜலீலாக்கா... அவர் ஆம்லெட் செய்து காட்டினாரில்ல:)...
//புது மண தம்பதிகளுக்கு செய்து கொடுப்பாங்க..
/// இது மட்டும்தான் எனக்குப் புடிக்கேல்லை:), பகல் முழுக்க பாடுபடுற எங்களுக்கு தராமல் அது எதுக்கு மணவறையில சொகுசா இருந்திட்டு வந்த தம்பதிகளுக்குக் கொடுக்கோணும்? கொடுக்கோணும்?:)))).
ஜெய்லானி said...
தலைப்ப பார்த்தா ஏதோ என்னைதான் திட்டுறீங்களோன்னு ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..... நல்ல வேளை இங்கிலீஷல தலைப்ப வச்சீங்க ஹா.ஹா...
/// ஜெய்..ஜெய்.. வெயிட் வெயிட்... கேள்வியும் கேட்டு பதிலையும் சொல்லி சமாதானமாப் போயிட்டா நாங்க விட்டுடுவமா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அது ஜெய் யேஏஏஏஏஏஏஏஏஏஏ தான்.
நல்லவேளை கால்வ் ஜெய் எனப் போடாமல் புல் ஜெய்யெனப் போட்டாவே என சந்தோசப்படுங்க :)))) மீ....பூஸ் மீயா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
ஜலீலாக்கா இது சைட் குறிப்பு:
சின்ன வயதில எனக்கும் இந்த புல்ல்ல்ல் ஜெய் தான் புடிக்கும்... அப்படியே அம்புலிமாமா மாதிரி இருக்கோணும் மஞ்சள்கரு எனக் கேட்பேன். அப்புலிமாமா முட்டைதான் வேணும் புட்டுக்கு. பின்புதான் அ.கோ.மு க்கு ரான்ஃசர் ஆகிட்டேன் கிக்..கிக்..கிக்....
கொஞ்ச நாளைக்கு என்னால வர முடியாது ஜலீலாக்கா... சொன்னாலும் வராமல் இருக்க முடியவில்லை:(.
Jaleela Kamal said...
அதிரா ஜெய் ஜெய் என்றதும் ஜெய்லானி சொல்றேன் நினைகக் வேண்டாம்
/// ஹீ..ஹீ.. ஹீ.. ஜலீலாக்கா நம்ம ஜெய்..லாவைப் பார்த்து நான் அப்பூடி நினைப்பேனா?:))))))
This is my everyday breakfast'...bulls eye and black coffee to kick start the day...you have done it beautiful and inviting, wish I live somewhere close to ur house:)
பார்க்கவே அழகா இருக்குங்க.. எளிமையான லஞ்ச் ஐடியா..
ட்ரை பண்றேன்.. :)
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.
பார்க்கவே அழகா இருக்கு.
எனக்கும் புல்ஸ் ஐ பிடிக்காது ஜலீலாக்கா! அவருக்குதான் செய்துகொடுப்பேன். போட்டோஸ் அழகா இருக்கு.
அதிரா & ஜெய் அண்ணா,உங்க கமெண்ட்ஸ்-ஐ படித்து சிரித்துக்கொண்டே இந்த கமெண்ட்டை டைப் பண்ணறேன்! :) :)
ஜெய்லானி பெயர் வைக்கும் போது புல்ஸ் ஐ , கொஞ்சம் மாற்றி நான் தான் புல் ஜெய் ந்னு வைத்தேன்.
பூஸார் வந்துட்டார், ஆமாம் அதிரா புதுமண தமப்திகள் நல்ல படியான சந்ததிகள் உருவாகவும். களைப்பு தீரவும் ஹிஹி
ஆனால் எனக்கெல்லாம் யரும் போட்டு தரல
சாச்சி சொல்வாங்க, இது போல் கொடுத்தால் நல்லதுன்னு,தெம்பிழந்தவஙக் அடிக்கடி சாப்பிட்டாலும் நல்லது.
வாங்க ரியாஸ் என்ன புலப்பம்
அதிரா என் மாமனார், என் ஹஸ் எல்லாம் கூட புட்டுக்கு இந்த புல்ஸ் ஐ சாப்பிடுவாங்க.
நன்றி தெய்வ சுகந்தி.
வாங்க மலர் காந்தி உஙக்ள் வருகைக்கு மிக்க மகிழ்சி/
ஆனந்தி முயற்சி செய்து பாருஙக்ள்.
வாஙக் ஷமீமா கருத்திற்கு மிக்க நன்றி
ஆமாம் மகி எனக்கு முக்கால் வேக்காடாவது வெந்து இருக்கனும்,
எல்லாத்துக்கு போட்டு கொடுத்துட்டு கடைசியா நான் எனக்கு நல்ல வேக வைத்துகொள்வேன்.
asalamu alaikum,
aiyaio sorry sister, nann unga kurippugala kaapi adichu thaan ippa half boil seiya poren.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா