அமீரக பண்ணாட்டு இஸ்லாமிய கழகம் நடத்திய இலக்கிய விழா மற்றும் நடந்து முடிந்த இஸ்லாமிய இலக்கியத்தைப் பற்றிய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா, கொழும்பு தமிழ்சங்க தலைவர் திரு.ஜின்னா சர்புதீன் அவர்களின் “தீரன் திப்பு சுல்தான் காவியம்” மற்றும் நம் (என் அன்பு வலை உலக ) தோழி”நீரோடை மலிக்காவின் உணர்வுகளின் ஓசை “ புத்தக வெளியீடு மற்றும் கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் துரு குர் ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
நுழைந்ததும் எங்க ஆபிஸ் பேனர், ஒரே சந்தோஷம் தான்
மலிக்கா கண்டிப்பாக வரனும் என்று முதலே மெயில் மூலமாகவும், போனிலும் சொன்னார்கள்,இது வரை எந்த மன்றத்துக்கோ , சங்கத்துக்கோ நான் சென்றதில்லை, காரணம் நானும் பெரிய ஆணி சின்ன ஆணியெல்லாம் பிடிங்கி கொண்டுதான் இருக்கேன். பிள்ளைகள் படிப்பு, விருந்தினர் வருகை வெள்ளி ஒரு நாள் தான் எனக்கு விடுமுறை அதிலும் வெளியில் செல்ல அவ்வளவாக விரும்புவதில்லை.
கடைசியில் யாருடன் போவது எல்லாம் நம் தோழிகள் எல்லாம் வருகிறார்களா என்று கேட்டேன் ஹுஸைனாம்மா வருவாஙக் இன்னும் சில தோழிகள் என்றார்கள், அப்சாரா இல்லம் என்னும் வலை பூவை எழுதும் தோழி தான் என்னையும் மலிக்காவையும் எப்படியாவது சந்திக்கனும் என்று விரும்பினார்கள் , உடனே அப்சாராவிற்கு போன் செய்து வரும் படி சொன்னேன் அவர்களுக்கு மிகவும் ஆசையாக இருந்தாலும், பையனுக்கு மறுநாள் தேர்வு இருக்கு அதுக்கு அவனை ரெடி பண்ணனும் , வேண்டுமானால் 10 நிமிடம் வந்து உங்கள் இருவரையும் பார்த்து விட்டு செல்கீறேன் என்றார்கள், சரி , மதியம் சாப்பாட்டு வேலை முடிந்தது,
ஆசியா உடைய பரங்கி பேட்டை பிரியாணி, என் கிரிஸ்பி சிக்கன் பிரை, தயிர் பச்சடி செய்து சாப்பிட்டாச்சு.அப்படியே மலிக்காவுக்கு ஒரு பார்சல் எடுத்து கொண்டேன்.
அடுத்து கிளம்பலாம் என்று இருந்தால் தீடீர் விருந்தாளியாக ஊரிலிருந்து வந்த என் சாச்சி சாச்சா வந்துட்டாங்க , சரி இவர்கள் தான் முக்கியம் அவர்களை கவனித்து விட்டு டீ கடை போண்டா கேசரி, இஞ்சி டீ போட்டு அவர்களுக்கு கொடுத்து வழியனுப்ப மணி 7 ஆகிவிட்டது.கடைசி நேரத்தில்அப்சாராவும் வர இயலவில்லை என்று சொல்லிவிட்டார்கள் இவரும் வர மாட்டேன் சொல்லிட்டார்,யார்கூட போவது, இவர் சொன்னார் சரி வா உன்னை வாசலியே விட்டுட்டு வரேன் , ஒகே உடனே மக்ரீப் தொழுதுட்டு கிளம்பியாச்சு அப்பாடா ,10 நிமிடத்தில் அங்கு போய் சேர்ந்தாச்சு ,மலிக்காவிற்கு போன் அடித்தேன் ஒரே சந்தோஷம், பஸ்ட் புலோருக்கு வாஙக் என்றார்கள், போய் நுழைந்ததும் எங்க ஆபிஸ் பேனர் ஓ இங்க தான் உள்ளே போனோம் பின்னாடியே வரமாட்டேன்னு சொன்ன ஹஸ்ஸும் வந்து விட்டார், அப்பாடா திரும்பி போகும் போது யாரையும் தேடதேவையில்லை..போனதும் மலிக்கா பக்கத்தில் சீட்ட போட்டு வரவேற்று உட்கார வைத்தார்கள்.
ஈடிஏ எம் டி சலாவுதின் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.அவரும் அருமையான முறையில் சிறப்புறை ஆற்றினார்
நிகழ்சிகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்தன
,காவிய திலகம் ஜின்னா சர்புதீன் அவர்களின் தீரன் திப்பு சுல்தான் புத்தகத்தை வெளியிட்டார்கள், அடுத்து கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் துரு குர் ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியிட்டார்கள்.
இடையில் பிஸ்கேட், சமோசா, டீ வந்தது, எல்லாம் சாப்பிட்டாச்சு, அடுத்து 9 மணிக்கு மலிக்காவின் புத்தக வெளியிடு பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது,
இது நம் மலிக்க்காவின் புத்தகம் உடனே புரட்டி பார்த்தேன் ஆஹா தலைப்பே பிரமாதம், “உணர்வுகளின் ஓசை” மிக அருமையான முறையில் தொகுத்து எழுதி இருகிறங்க நம் தோழி மலிக்கா.
கடைசியாக இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா அதை தான் பார்க்க முடியவில்லை.
ஆண்கள் பதிவர்கள் நிறைய பேர் வந்திருப்பதாக சொன்னார்கள் யார் யார் வந்தார்கள் என்று தெரியல, மீதி போட்டோக்கள் பதிவுகள் மலிக்கா விபரமாக போடுவார்கள் பாருங்கள்.
அன்று மாலை இனிமையாக கழிந்தது, விழா முடிய 11 மணிக்கு மேல ஆகியதாம் , நான் பையன் வீட்டில் தனியாக இருப்பதால் 9.30 க்கெல்லாம் கிளம்பி விட்டேன்.
.
.
டாக்டர். ஜின்னாஹ் ஷரீபுத்தீன் துணைத் தலைவர், கொழும்புத் தமிழ்சங்கம்
டாக்டர்.சேமுமு. முகமதலி
பொதுச் செயலாளர், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் தலைமையகம் - சென்னை
கவிச்சித்தர்.மு.மேத்தா
கலாபூஷணம்.மானா மக்கீன் எழுத்தாளர்-இலங்கை
இசையரசி. நூர்ஜஹான் இஸ்லாமியப் பாடகி -இலங்கை
இஸ்லாமிய பாடகி இலங்கை இசை அரசி நூர்ஜஹான் அவர்களின் பாடல் காதுக்கு இனிமையாக இருந்தது.
இந்த விழாசிறப்பாக நடக்க உதவிய பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டக்கள்.
.
நிற்பவர்களில் இரண்டாவதாக நிற்பவர் அதிரை சர்புதீன் அவர்கள், 5 வருடம் முன் நான் வலை உலகில் குறிப்பு கொடுக்க ஆரம்பிக்கும் முன் துபாயில் வெளி வந்த தென்றல் புத்தகத்துக்கு ஏதாவது கட்டுரை எழுதி கொடுக்குமாறு கேட்ட போது எனக்கு சமையல் குறிப்பு தான் கொடுக்க தோன்றியது பூண்டு கோழியும் , பீட்ரூட் ஹல்வாவும் 2005 தென்றல் மாத இதழுக்கு எழுதி கொடுத்தேன்.
ஐந்து வருடம் முன் பார்த்தது, அதோடு இப்ப தான் அவரை பார்த்தேன், அவரால் தான் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன், பயந்து பயந்து நலல் வரனுமேன்னு ஒரு பேப்பரில் தான் எழுதி கொடுத்தேன்.இதில் என்னை பற்றி குறிப்பிடனும் நினைக்கல அங்கு அதிரை சர்புதீன் அவர்களை கண்டதால் அவருக்கு நன்றி சொல்லும் வீதம் இங்கு பகிர்ந்து கொண்டேன்.
தென்றல் இதழில் குறிப்பு கொடுக்க ஆரம்பித்த பிறகு தான் அறுசுவைடாட்காம்யில் சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன் .அதன் பிறகு தமிழ்குடும்பம்டாட்காம்,சமையலறைடாட்காம்,என் பிலாக் சமையல் அட்டகாங்கள் அடுத்து கீழக்கரை அஞ்சல், விகடன் தீபாவளி மலர், லேடீஸ் ஸ்பெஷல் .எல்லாத்துலேயும் என் பதிவுகள். இன்னும் நிறைய பிலாக்குகள், மலேஷியா, அதிரை,இலங்கை போன்ற பிலாக்குகளிலும் என் சம்மதத்துடன் லின்க் கொடுத்து இருக்கிறார்கள். சில இடங்களில் காப்பி அடித்தும் அவர்கள் பதிவு போல் போட்டு வருகிறார்கள், என் பதிவுகள் எல்லோருக்கும் பயனளிப்பதில் மிகுந்த சந்தோஷம்.
எனக்கு முதலாவதாக ஊக்கமளித்த சர்புதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
35 கருத்துகள்:
ஜலீலாக்கா, நீங்க எழுதியிருப்பது எனக்கு பாதிதான் இதில புரிஞ்சிருக்கு, என்ன மலிக்காவின் புத்தக வெளியீடோ?... ஆஆஆஆஆ?
வாழ்த்துக்கள் மலிக்கா.
ஜலீலாக்கா நீங்களும் உங்களைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறீங்க.. உங்களைமாதிரி பெரியவங்களோட குட்டிப் ஃபிரெண்டாக இருக்க நான் கொடுத்துவச்சனான்.
ஜல் அக்கா இனிமேல் சிகப்பு எழுத்து பாவிக்காதீங்க, கண்குத்துது, படிக்க முடியவில்லை, வேறுகலர் பூஸ் சே..சே யூஸ் பண்ணுங்க... வாழ்த்துக்கள் அக்கா... மேன்மேலும் தொடரட்டும் உங்கள் குறிப்புக்கள்.
ஜலீலா அருமையான பகிர்வு,என்னால் மலிக்காவிற்கு மெயில் மூலம் தான் வாழ்த்து தெரிவிக்க முடிந்தது,என் மகனிற்கு ப்ள்ஸ் 2 இறுதித்தேர்வு மார்ச் 1 ஆரம்பிப்பதால் எங்கும் நகர முடியலை.பரங்கி பேட்டை பிரியாணி செய்து பார்த்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
அருமையா தொகுத்து போட்டிருக்கீங்க ..!!
பிரியாணிப் போச்சே...!! அவ்வ்வ்வ்
ஜலீலாக்கா, அதிரை என்பவர் ஒரு ஆணா? பல இடங்களில் பார்த்ததுண்டு, பெண்ணென நினைத்திருந்தேன்.
/// பரங்கி பேட்டை பிரியாணி, என் கிரிஸ்பி சிக்கன் பிரை, தயிர் பச்சடி செய்து சாப்பிட்டாச்சு.அப்படியே மலிக்காவுக்கு ஒரு பார்சல் எடுத்து கொண்டேன்///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்.
அதில படம் வேறு போட்டுக்காட்டி என் உணர்வுகளைத் தூண்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)(ஒரு குட்டிப்பூஸால , கர்ர்ர் சொல்வதைத்தவிர வேற என்னதான் செய்ய முடியும்?:)).... ஆஆ அடிக்காதீங்கோ... அடிச்சா வலிக்குமில்ல?:))))
///இடையில் பிஸ்கேட், சமோசா, டீ வந்தது, எல்லாம் சாப்பிட்டாச்சு/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
சில படங்கள் எனக்கு லோட் ஆகவில்லை.
ஜெய்லானி said...
பிரியாணிப் போச்சே...!! அவ்வ்வ்வ்
/// இனி நான் வந்திட்டனில்ல:):)..
விட மாட்டனே..:))
ஜலி,அருமையா பகிர்ந்து இருக்கீங்க.படங்களும் நன்றாக உள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா...,நலமா...?
உங்க பதிவை பார்த்ததும் ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும்,இதுல நாம கலந்துக்க முடியலையேன்னு எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு.
நல்ல படியா அண்ணனோடையே போய்ட்டு வந்துட்டீங்க போலிருக்கு... ரொம்ப சந்தோஷம்.எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் கை நழுவி போச்சு....
எல்லாம் நன்மைக்கே என்று கருதிகொள்ள வேண்டியதுதான்... வேறு என்ன சொல்ல...
உங்களுடைய இருவர் ஃபோட்டோவும் வரும்னு நினைத்தேன்.ஏமாற்றமே...
சரி போய் வந்த அனுபவத்தை சொன்னீங்களே அதுவே பெரிய விஷயம்.என்னை போன்றவர்களுக்கு படிக்க பார்க்க சந்தோஷமாக இருந்தது.
அன்புடன்,
அப்சரா.
ஜலீலா அக்கா, சூப்பரா இருக்கு எல்லாமே. மலிக்காவின் புத்தக வெளியீடு வதனப் புத்தகத்தில் பார்த்தேன். மிகவும் சந்தோஷமா இருந்தது. இன்னும் நிறைய உயரங்களை தொடுவார் மலிக்கா. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
என்ன அக்கா.. கட்டுரைக்கு காட்டுரைன்னு போட்டு இருக்கியளே !!!
இலக்கிய விழாவை நேரில் பார்த்த உணர்வு தெரிகின்றது.
சாயா குடிச்சதிலிருந்து சமூசா திண்டது வரை எழுதி இருக்கியளே இது கொஞ்சம் ஓவரா தெரியலை (எங்களுக்கும் தந்திருந்தால் சும்மா இருந்திருப்போம் )
நல்ல விதமாக நடந்து முடிந்த விழாவிற்கும் மலிக்கா சேச்சியின் புத்தகம் வெளியானதற்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை எங்களுக்கும் காண்பித்த உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
\அதிரா , அதிரை என்பது அதிராமபட்டனத்து காரர்கள்,
காயல்பட்னம்,நாகப்பட்னம் என்பது ப்போல்.
அது ஒரு சின்ன சின்ன ஊர்,
நானெல்லாம் பெரியவஙக இல்ல நாங்களும் உஙக்ட மாதிரி தான்...நாம் எல்லாம் நல்ல அறிமுகமான அறுசுவை தோழிகள் தான், அதில் மலிக்காவும்.சாப்ட்டாடு எல்லாம் கண்டிப்பா உங்களுக்கும் பார்சல் போடுறேன். உங்கள் பூஸார் என் வீட்டு வாசலுக்கு தினம் வருகிறார்.
ஆசியா பிள்ளைகளுக்கு தேர்வு என்றால் அப்படி தான்., எங்கும் அசைய முடியாது.
ஜெய்லாணி இனி சான்ஸே இல்ல.
நன்றி ஸாதிகா அக்கா உங்கள் ஊர் ஆட்களும் நிறைய அங்கு வந்து இருந்தார்கள்
வானதி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்ரி
அப்சாரா கிளம்பும் போது ஏற்கனவே லேட் ஆகிவிட்டது அதான் உங்களிடம் சரியா பேச முடியல,பரவாயிலை அடுத்த முறை பார்ப்போம்
நாட்டம தவற்றை சுட்டி காண்பித்தமைக்கு நன்றி, இதே போட முடியாம 4 முறை எடிட் பன்னிட்டேன்,முடிந்த திருத்தி விடுகிறேன்/
நல்ல வேலை சமோசா பிஸ்கேட்ட போட்டோ எடுக்கல
நல்ல விளக்கத்துடன் கூடிய படங்கள் அருமை.
ஸலாம் ஜலீலாக்கா..அந்த விழாவிக்கு கட்டுரை சமர்ப்பித்ததால்,எனக்கும் அழைப்பு வந்தது.தவிர சகோ மலிக்கா அவர்களின் புத்தக வெளியீடு வேற இருந்ததால்,வருவதற்கு கூடுதல் காரணங்களும்,மகிழ்ச்சியும்...
விழா அருமையாக இருந்தது.எங்க எம்டி சலாஹுத்தீன் அவர்களின் உரை,மகுடமாக இருந்தது..
சகோ மலிக்கா அவர்களின் பையன் ம்ஃரூஃப் உடன் பேசிக்கொண்டிருந்தேன்.ஸாலிஹான பையன்..
மற்றவை படங்களுடன் என் பதிவில்/
அன்புடன்
ரஜின்
வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றி பெறுவீர்கள்
அருமையா தொகுத்து போட்டிருக்கீங்கக்கா ..!!
எனக்கு மலிக்கா அக்கா மெயில் அனுப்பியிருந்தார்கள். சனிக்கிழமை வேலை இருந்ததால் அபுதாபியில் இருந்து துபாய் வரமுடியாத நிலை... அதனால் அக்காவுக்கு மெயிலிலேயே வாழ்த்துச் சொல்லும்படியாகிவிட்டது.
நீங்கள் சென்றது எங்கள் சார்பாகவும்தான் என்று நினைத்து உங்களுக்கும் அக்காவுக்கும் வாழ்த்துக்கள்.
யக்கோவ் அசத்தீங்க போங்க.
ரொம்ப சந்தோஷ்ம்கா தாங்களும் அண்ணன்னும் வந்தது. பார்தீர்களா எங்கும் போகாத உங்கத்தான் என் அண்ணன் எங்களுக்காக வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு மட்டும் ரொம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் நன்றி சொல்லுங்க..
அப்புறம் சமூசா எப்படியிருந்தது. எனக்கு தரவேயில்லை நீங்க..
அந்த பிரியாணி அடுத்தநாள்தான் பசங்க சாப்பிட்டாங்கக்கா. வீடுவரவே 2 மணியாயிடுச்சி அப்படியேபோய் நஜஃப் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு வந்துட்டோம்.
ரொம்ப நன்றிக்கா பதிவுக்கும் எங்களுக்காக வந்தமைமைக்கும்.
மகிழ்ச்சியான நிகழ்வு.
புத்தகம் வெளியிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
அக்கா அருமையான தொகுப்பு
இளம் தூயவன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வா அலைக்கும் சலாம் ரஜின் நீங்களும் பதிவு போட்டு இருந்தீங்க பார்த்தேன்,பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஆர் கே சத்தீஷ் குமார்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சே.குமார்
மலிக்கா என்னப்பா இது சமோசா தரலன்னு சொல்லிட்டீங்க நீங்க சாப்பிடும் மூடிலா இருந்தீங்க.
அதான் ஒரு பார்சல் என் கைமணத்தில் கொடுத்தேனே, சாப்பிட்டீங்கலா
எனக்கும் இவர் வந்து உட்கார்ந்தது ஆச்சரியம்,தான் ம்லிக்கா
மிக்க நன்றி அக்பர்
மிக்க நன்றீ சாரு
அமீரகம் வந்தால் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை போலயே:-)
உங்க எல்லோரையும் பார்க்கனும் னு எனக்கும் ஆசையாக இருக்கிறது.
உங்க தோழிக்கு என் வாழ்த்துகள்.
ஆஹா...
ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா... ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா....
ஜலீலா மேடம்... நானும் அந்த விழாவிற்கு வந்திருக்க வேண்டியது.. எப்படியோ மிஸ் பண்ணிட்டேன்...
கோபி ராமமூர்த்தி வாஙக் அமீரகம் வந்தால் எங்குமே சாப்ப்பாட்டு பிரச்சனை இல்லை,, தாராளமாக வாங்க
க்ருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
வாங்க மஹா கண்டிப்பா பார்க்கலாம்
கோபி அவர்களே வந்திருந்தால் உஙக்ள் எம் டியுடன் இனிய மாலை பொழுது கழிந்து இருக்கும், விழாவையும் பார்த்து இருக்கலாம்,
You have narrated the whole episode beautifully. Good that at last you made to the function. Me too love kalai-ilakkiyam-poems-talk shows etc, but hardly make a point of going to such gatherings.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா