Wednesday, March 29, 2017

ஸ்பைசி தால் பாலக் - Spicy Indian Dal Palakபல குறிப்புகள் பிலாக்கில் பதிந்ததாலும் நம் சமையல்  குறிப்பு மாத இதழில் வந்தாலே ஒரு அளப்பரிய சந்தோஷம் தான் . இது வரை நம் விகடன், குங்குமம் தோழி மற்றும் பல வெப்சைட்களில் என் குறிப்புகள் பிரசுரம் ஆகி உள்ளது.
இப்போது பிரபல துபாய் நியுஸ் பேப்பர் - Khaleej Times Daily Paper ரில் 24.03.17 அன்று பிரசுரமாகி உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.


ஸ்பைசி தால்  பாலக் - Spicy Indian Dal Palak


தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 100 கிராம்
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
இஞ்சி பொடியாக அரிந்தது – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் பொடியாக அரிந்தது – ஒன்று

தாளிக்க
எண்ணை + நெய் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று பொடியாக அரிந்தது
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
பாலக் கீரை – இரண்டு கப்
மெஹ்ரான் தால் மசாலா – 2 தேக்கரண்டி
தயிர் – முன்று மேசைகரண்டி
கரம் மசாலா – கால்தேக்கரண்டி ( பட்டை ஏலம் கிராம்பு பொடி)செய்முறை
கடலை பருப்பில் இஞ்சி பச்சமிளகாய் மஞ்சள் பொடி சேர்த்து  குக்கரில் வேகவைத்து லேசாக மசிக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து நன்கு வதக்கி மெஹ்ரன் தால் மசாலா சேர்த்த்து நன்கு வேகவைத்து கடைசியாக வெந்த பருப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கலக்கி கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக் ரெடி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, March 15, 2017

கம்பு பாலக் கீரை பத்திரி/தட்டு ரொட்டி - Bajra Palak Roti


கம்பு பாலக் கீரை பத்திரி/தட்டு ரொட்டி
Bajra palak leaves roti ( paththiri)
kambu roti

நோன்பு காலங்களில் டயபட்டீஸ் உள்ளவர்கள் அதிக காலை நோன்பு வைக்க அல்லது இரவு டிபனுக்கு இதை செய்து சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்கம்பு மாவு ‍ - 200 கிராம்
உப்பு ‍ - தேவைக்கு
கரகரப்பாக திரித்த மிளகு தூள் ‍ - அரை தேக்கரண்டி
பாலக் கீரை (பசலை கீரை) - பொடியாக அரிந்தது ‍அரை கப்
நெய் ‍ ஒரு தேக்கரண்டி
தண்ணீர் ‍ ‍ - கால் கப் + தேவைக்கு
தேங்காய் துருவல் - ‍ முன்று மேசைகரண்டி
பச்ச மிளகாய் ‍ ‍ - ஒன்று பொடியாக அரிந்தது
வெங்காயம் - ஒன்று பொடியாக அரிந்தது

செய்முறை


1.      கம்பு மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.
2.      கம்பு மாவுடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்3.      பிசைந்த மாவை சம  உருண்டைகளாக பிரிக்கவும்.  
4.      ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியைவிரித்து அதில் ஒரு
 உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக
தட்டவும்.
5.      நான்ஸ்டி பானை காயவைத்து சிறிதுபட்டர் அல்லது நெய்
 தடவிதட்டிய ரொட்டியை இட்டு இரண்டுபுறமும்நன்கு சிவற வேகவைத்து லேசாகா நெய்தடவி இரக்கவும்.
6.      நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில்தடவி சுட்டு எடுக்கவும்.
7.      சுவையான கம்பு பாலக் கீரை ரொட்டி ரெடி

.
  டயட் செய்பவர்களுக்கு இது ரொம்பருசியான சத்தான உணவு
கம்பு உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும்
வயிற்றில் ஏற்படும் புண்ணைஆற்றும்.
இதில் சரியான பதம் வரவில்லை என்றால்அதில் சிறிது ரவை,
சிறிது அரிசி மாவு கலந்துகொள்ளலாம்.
இதற்கு தொட்டு கொள்ள் பக்க உணவு ஏதும்தேவைபடாது
வேண்டுமானால்தக்காளி சட்னி,ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்.இல்லை வெங்காய முட்டை சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.பரிமாறும் அளவு : 3 நபர்களுக்குBajra Palak Roti
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, March 13, 2017

அதே ருசி ஆனால் சைவம்
My 30 Veg recipes for Iftar special has been published in Kunkumam Thozi Monthly Magazine (Tamil) on 15th June 2016.
Thank you very much Vaidehi Ranganathan  for giving me the opportunity (15.06.2016)

2015 னில் குங்குமம் தோழியில் நோன்பு கால சமையல் வெளி வந்தது அதை தொடர்ந்து 2016 ஒரு சவாலாக நாங்க எங்க வீடுகளில் செய்யும் அசைவ சமையலை சைவமாக செய்து அனுப்பபசொன்னார்கள், இதில் அரபிக் பிரியாணி வகைகளையும் சைவமாக செய்துள்ளேன்.இஸ்லாமிய வீட்டு விருந்தென்றால் அசைவப் பிரியர்களுக்கு வாயில் நீர் ஊறும்.
நோன்பு காலங்களில் இஸ்லாமிய வீட்டு விருந்து களில் இடம்பெறுகிற கஞ்சி முதல் கடைசியாகப் பரிமாறபடுகிற இனிப்பு வரை எல்லாம் அசைவ மயம் என்பதில் சைவ உணவுகாரர்களுக்கு கொஞ்சம் தர்மசங்கடம்.

உலகில் பிரபல உணவு களில் இஸ்லாமிய மெனுவுக்கு ஸ்பெஷல் இடம் உண்டு எப்போதும்.அசைவம் என்கிற காரத்துக்காகவே அந்த ருசி அனுபவத்தை மிஸ் பண்ணுகிறவர்களுக்கு அதை சைவமாக மாற்றி ஒரு ட்ரீட்கொடுத்துள்ளேன்.


அதிகாலையில் நோன்பு வைக்கச் செய்கிற பிரியாணி மற்றும் குழம்பு வகைகலில் தொடங்கி , மாலையில் நோன்பு திறக்க செய்கிற கஞ்சி, சிற்றுண்டிவகைகள் என எல்லாவற்றிலும் அசைவம் சேறர்ப்பது எங்கள் வழக்கம்.
இஸ்லாமிய உணவுகளின் உன்னத ருசியை மற்றர்வர்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே நோன்பு கால ஸ்பெஷல் ரெசிபிகள் அனைத்திலும் அசைவத்தை முற்றிலுமாக தவிர்த்து சைவமாக மாற்றி செய்து காட்டி இருக்கேன். அசைவ உணவு காரர்களே சாப்பிட்டால் கூட அந்த அளவுக்கு துளியும் ருசி மாறமல் செய்து காட்டி இருக்கிறேன்.


நான் இதில் செய்து காட்டிய 30 குறிப்பில் மிக ரசித்து ஆச்சரயப்பட்ட ரெசிபி

ஆட்டு குடல் சால்னாவை பீர்க்கங்காய் கத்திரிக்காய் சால்னாவாக செய்துள்ளேன்.

அடுத்து கேரளா மீன் சால்னாவை கப்பக்கிழங்கு ( மரவள்ளி கிழங்கு) கில் செய்துள்ளேன்  அவ்வளவு அருமையாக இருந்தது.


30 வகை ரமலான் ஸ்பெஷல் சைவ சமையலில்
மற்ற இரண்டும் பிரியாணியும் சான்ஸே இல்ல.
இனி வரும் பதிவுகளில் அதை பதிகின்றேன். நீங்களும் ருசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

இதில் எந்த ரெசிபி முதலில் வேண்டும் என்று யாராவது கேட்டாலும் அதை முதலில் போஸ்ட் செய்கிறேன்.


நேரம் கிடைக்கும் போது இங்கு  ஒவ்வொன்றாக போஸ்ட் செய்கிறேன்.

 1.  கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி
 2. கிரீன் கார்டன் சூப்
 3. ம்ஷ்ம்ம மசாலா நோன்பு கஞ்சி
 4. மலேசியா ஸ்பெஷல் டவுன்பாண்டன் இலை கடல் பாசி
 5. கலோட்டி கபாப்
 6. பீர்க்கங்காய் கத்திரிக்காய் சால்னா
 7. .ஹைத்ராபாத் வெஜ் பிரியாணி
 8. கோவைக்காய் பொரிச்ச கறி
 9. நூல்கோல் சேப்பங்கிழங்கு கொழுக்கட்டை ( தக்குடி)
 10. கம்பு பாலக்கீரை பத்திரி (தட்டு ரொட்டி)
 11. மஷ்ரூம் பீஸ் மினி சாண்ட்விச்
 12. ஏழுகறி சைவ நோன்புக்கஞ்சி
 13. சேனைகிழங்கு டிக்கா
 14. பாலக் பனீர் பால் சாண்ட்விச்
 15. கார்லிக் பனீர்
 16. காலிஃப்ளவர் மினி லாலி பாப் 65
 17. பலாக்காய் சோயா மற்றும் வெஜ்ஜி மக்பூலா (அரபிக் பிரியாணி)
 18. வெஜ் கட்லெட் லாலிபாப்
 19. பலாக்காய் உருளை குருமா
 20. ஸ்டீம்ட் ஃப்ரைடு மனி பேக்
 21. சேப்பங்கிழங்கு கபாப்
 22. ஈசி கொத்து புரோட்டா
 23. தில் கீரை ப்லாஃபல் சாண்ட்விச்
 24. மஷ்ரூம் கீரை புலாவ்
 25. தூல் துல்லாரி
 26. பீட்ரூட் கடலைபருப்புகறி ( பாகிஸ்தானி ஸ்டைல்)
 27. வாழைக்காய் புட்டு
 28. கேரட் சோயா சூப்
 29. டோஃபு புரோட்டா சாண்ட்விச்
 30. மஷ்ரூம் கூட்டு
 15.16.2016
tag: magazine, jaleela's Special Iftar Recipes, kungkumam thozi, 30 days Ramadan recipe, Vegetarian Recipes, Biriyani, Side Dishes, Agar Agar,Arabic Recipes, Hyderabad Recipes, Kerala Recipes


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, March 6, 2017

மல்டி பீன் சுண்டல் / கலவை பயறு சுண்டல்


மல்டி பீன் சுண்டல் / கலவை பயறு சுண்டல்
Multibean Sundal
தேவையான பொருட்கள்

வெள்ளைகொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு உளுந்து
கொள்ளு
முழு பாசி பயிறு
காராமணி
ராஜ்மா ( கிட்னி பின்ஸ்)
பட்டாணி

எல்லாம் வகை கடலையும் கால் கிலோ

தாளிக்க

எண்ணை - 2 தேக்கரண்டி
பச்ச மிளகாய் - 3  ( பொடியாக நறுக்கியது)
கடுகு - ஒரு தேக்க்ரண்டி
கருவேப்பிலை - கை கால் கொத்து
உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் - அரை கப்
உப்பு - தேவைக்கு

கடைசியாக மேலே தூவ

லெமன் சாறு - ஒரு தேக்க்ரண்டி
கொத்துமல்லிதழை - சிறிது
சர்க்கரை - 2 சிட்டிக்கை

செய்முறை

எல்லாவகையான பீன் ( கடலைவகைகளையும் ) 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
இரவு ஊறவைத்து காலை செய்தால் சரியாக இருக்கும்.

நன்கு களைந்து குக்கரில் பயறு வகைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேகவைக்கவும்.


வெந்தததை வடிக்கட்டி தனியாக வைக்கவும்.

ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்து அதில்  தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து, கொத்துமல்லி, சர்க்கரை , லெமன் சாறு தூவி இரக்கவும்.

காலை நேர உணவுக்கு இட்லி தோசை, பொங்கல் என்று சாப்பிடாலம் ஒரு மாறுதலுக்கு இப்படி மல்டி பீன் சுண்டல் செய்து கூடவே அதற்கு ராகி குழிபணியாரம் ,மற்றும் ஏதாவது வெல்லம் கலந்த டிபன் வகை செய்து சாப்ப்பிடால் மிக அருமையாக இருக்கும், லைட் டிபன் ஆனால் ஆரோக்கியமான உணவு.கவனிக்க:

இதையே முளைவிடவிட்டு (படத்தில் காட்டியுள்ள படி) அதில் காய் பழ வகைகள் கலந்து சாலடாகவும் செய்தும் சாப்பிடலாம்.
காலையில் ஊறிய பீன் வகைகளை வடிகட்டி , ஒரு ஈர துணியில் கட்டி மூட்டை போல் கட்டி ஒரு ஹாட் பாக்ஸில் முற்றிலும் மூடி வைக்காமல் லேசாக மூடி வைக்கவும். பயிறு வகைகள் முளைவிட்டுடும், அதை எடுத்து வேண்டிய (காய்கள் பழவகைகள் )சேர்த்து(  கேரட், குக்கும்பர்,ஆப்பிள், திராட்சை லெமன் சாறு உப்பு மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, March 4, 2017

பாலக் பனீர் மீட் பால் சம்மூன் / Palak Paneer Meat Ball Samoon (Veg Recipe)


பாலக் பனீர் மீட் பால் சம்மூன்

தேவையான பொருட்கள்

பாலக் கீரை – இரண்டு கப் பொடியாக நறுக்கியது
பனீர் – 100 கிராம்
இஞ்சி  - ஒரு மேசைகரண்டி துருவியது
பச்சமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது
கடலை மாவு – கால் கப்
ப்ரட் கிரம்ஸ் – இரண்டு மேசைகரண்டி
வெங்காயம் – ஒன்று பொடியாக நறுக்கியது
கரம் மசாலா பொடி – அரை தேக்கரண்டி


செய்முறை

பனீரை உதிர்த்து கொள்ளவும், பாலக்கீரை, இஞ்சி, பச்சமிளகாய், கொத்துமல்லி தழை வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து கடலைமாவு, கரம் மசாலா மற்றும் ப்ரட் கிரம்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
வாயகன்ற கிடாயில் எண்ணையை காயவைத்து உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சம்மூன் என்னும் லாங் பண் ல் டொமேட்டோ கெட்சப் தடவி கேரட் லெட்டியுஸ் இலை வைத்து பொரித்த பாலக் பனீர் பாலை வைத்து பரிமாறவும்.
சுவையான சமூன் பாலக் பனீர் மீட்பால் சாண்ட்விச் ரெடி.

போன வருடம் நோன்பு கால ரெசிபி குங்குமம் தோழியில் வெளிவந்த ரெசிபிhttps://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/