பல குறிப்புகள் பிலாக்கில் பதிந்ததாலும் நம் சமையல் குறிப்பு மாத இதழில் வந்தாலே ஒரு அளப்பரிய சந்தோஷம் தான் . இது வரை நம் விகடன், குங்குமம் தோழி மற்றும் பல வெப்சைட்களில் என் குறிப்புகள் பிரசுரம் ஆகி உள்ளது.
இப்போது பிரபல துபாய் நியுஸ் பேப்பர் - Khaleej Times Daily Paper ரில் 24.03.17 அன்று பிரசுரமாகி உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
ஸ்பைசி தால் பாலக் - Spicy Indian Dal Palak
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
– 100 கிராம்
மஞ்சள் பொடி –
கால் தேக்கரண்டி
இஞ்சி பொடியாக
அரிந்தது – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் பொடியாக
அரிந்தது – ஒன்று
தாளிக்க
எண்ணை + நெய்
– 2 தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
பொடியாக அரிந்தது
மிளகாய் தூள்
– அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் –
கால் தேக்கரண்டி
பாலக் கீரை – இரண்டு
கப்
மெஹ்ரான் தால்
மசாலா – 2 தேக்கரண்டி
தயிர் – முன்று
மேசைகரண்டி
கரம் மசாலா – கால்தேக்கரண்டி
( பட்டை ஏலம் கிராம்பு பொடி)
செய்முறை
கடலை பருப்பில்
இஞ்சி பச்சமிளகாய் மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில்
வேகவைத்து லேசாக மசிக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள
பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து நன்கு வதக்கி மெஹ்ரன் தால் மசாலா சேர்த்த்து
நன்கு வேகவைத்து கடைசியாக வெந்த பருப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கலக்கி கொதிக்க
விட்டு இரக்கவும்.
சுவையான ஸ்பைசி
பஞ்சாபி மலாய் பாலக் ரெடி
Tweet | ||||||
4 கருத்துகள்:
நல்ல சமையல் குறிப்பு அக்கா...
வாழ்த்துகள்கள்ப்பா ஜலீ ..அந்த மெஹ்ரான் மசாலா என்பது பிராண்ட் பேரா .வேறு ஏதாவது மசாலா இதுக்கு பதில் யூஸ் செயலாமா ?
? இங்கே ஷானாஸ் தான் நிறைய கிடைக்குது
ஏஞ்சலின் இதில் மெஹ்ரன் தால் மசாலா கிடைகக்லான வேற ஷான் மசாலாவும் போடலாம் செய்து பாருங்கள் .
வாழ்த்துகக்ளுக்கு மிக்க நன்றி குமார்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா