மட்டன் = கால் கிலோ
அவரைக்காய் = கால் கிலோ
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
தனியா(கொத்துமல்லி தூள்) = ஒன்னறை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
எண்ணை = முன்று தேக்கரண்டி
பட்டை = ஒன்று ஒரு அங்குலம் அளவு
வெங்காயம் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
கொத்துமல்லி தழை = சிறிது
தக்காளி = இரண்டு பெரியது
பச்ச மிளகாய் = ஒன்று
தேங்காய் பவுடர் = ஒரு மேசைக்கரண்டி
மட்டனை கொழுப்பெடுத்து சுத்தமாக கழுவி தண்ணீரை வடிக்கவும். அவரைக்காயை கழுவி ஓரத்தில் உள்ள நாரை பிரித்து கழுவி இரண்டாக வெட்டவும்.
குக்கரில் எண்ணையை விட்டு காய்ந்ததும் பட்டை வெடிக்கவிட்டு,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி, கொத்துமல்லி தழை சேர்த்து பிரட்டி தக்காளியை பொடியாக அரிந்து சேர்த்து குழைய வதக்கவும்.தக்காளி வதங்கியதும் பச்சமிளகாய், அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி மட்டனை சேர்த்து கிளறி சிறிது நேரம் சிம்மில் விடவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடக்கியதும் குக்கரை திறந்து அவரக்காய் + தேங்காய் பவுடரை அரை டம்ளர் வெண்ணீரில் கரைத்து சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.தேங்காய் கொதித்து பச்சவாடை அடங்கவும், அவரைக்காய் வேகவும் நேரம் சரியாக இருக்கும்.சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் போதுமானது.குழம்பு கெட்டியாக இருந்தால் தேங்காய் பவுடர் கரைத்து ஊற்றும் போதே தேவைக்கு தண்ணீர் குழம்பு பதத்திற்கு சேர்த்து கொள்ளவும்.
சுவையான மட்டன் அவரைக்காய் குழம்பு ரெடி
குறிப்பு:
இது டயட்டில் உள்ளவர்கள் அவர்களுக்கென்று தனியாக சமைக்க முடியவில்லை என்றால். அவரைக்காயையும் குழம்பு தொட்டு சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மட்டன் வைத்து கொடுக்கலாம்.இதே போல் முருங்ககாய், கத்திரிக்காயிலும் செய்யலாம்./
டிஸ்கி :எல்லோரும் டு டே லொள்ளு என்று போட்டு கொள்கிறார்கள் நானும் ஒரு லொள்ளு போடுகிறேன்
Tweet | ||||||
43 கருத்துகள்:
நல்லா இருக்கு மேடம் , அப்புறம் இந்த இறால் (prawn) பிரியாணி எப்படி செய்றதுன்னு உங்கள்டயோ , ஆயிசா மேடம் கிட்டயோ கேட்டேன் பதிலே காணோம் ? ஏற்கனவே உங்க பதிவுல எழுதி இருந்தா எங்க இருக்குன்னு சொல்லுங்க ?
மீன் பிரியாணி போட்டு இருக்கேன், இன்னொரு மீன் பிரியாணியும் போட்டுவைத்துள்ளேன், எடிட் பண்ண டைம் இல்லை, சீக்கிரத்தில் அதையும் , இறால் பிரியாணியும் போடு கிறேன். மற்றபடி மட்டன் பிரியானி எல்லாம் இருக்கும் பாருங்கள், சாதம் வகைகளை கிளிச் செய்து பாருங்கள்.,.
//Jaleela said...
மீன் பிரியாணி போட்டு இருக்கேன், இன்னொரு மீன் பிரியாணியும் போட்டுவைத்துள்ளேன், எடிட் பண்ண டைம் இல்லை, சீக்கிரத்தில் அதையும் , இறால் பிரியாணியும் போடு கிறேன். மற்றபடி மட்டன் பிரியானி எல்லாம் இருக்கும் பாருங்கள், சாதம் வகைகளை கிளிச் செய்து பாருங்கள்.,.//
அப்ப வடை எனக்கா ?
நம்ம வூட்டு கரம்மாவுக்கு மட்டன் , சிக்கென் பிரியாணிஎல்லாம் நல்லா பண்ணுவாக , என்னா? நம்ம ஊர் சைடு இந்த இறால் கிடைக்காது , சென்னை வந்தப்புறம் தான் இறாலவே பாத்தாக (ஹி..ஹி..ஹி.. நானும் தான் ) அதுனால தான்
ராத்திரி தூங்கும் போதே கண்ணே தெரியலே .. அப்புறம்தான் என்னானு யோசிச்சு பாத்தேன் .... ஆமா திருட்டு பூனை மாதிரி இவர விட்டுல கறிய இப்படி தின்னுட்டு சொல்லாம கொல்லாம போனா எப்படி சாமி ..
சரி உங்களோட சமையல் ரெம்ப நன்னா இருக்கு miao.. miao..
"மட்டன் அவரைக்காய் குழம்பு"
....interesting......! Thank you, akka.
மட்டன் VS அவரைக்காய்!!!! வித்யாசமா இருக்கு ஆனால் அவரைக்காய் இங்கு கிடைக்குமா தெரியல கா எதுக்கு ரிஸ்க்கு நீங்க ஒரு எக்ச்ப்ரெஸ் பார்ஸல் அனுப்பிடுங்க...
மட்டன் அவரைக்காய் குழம்பு சூப்ப்ர்.அதில் உள்ள அவரையை சாப்பிடவே மண்மாக இருக்கும்.
ஜலி அக்கா உங்க பதிவெல்லாம் படிச்சு படிச்சு நான் சாப்பாட்டு ராமன் ஆய்டுவேன் போல...
ஹி..ஹி...
//மங்குனி அமைச்சர் said..சென்னை வந்தப்புறம் தான் இறாலவே பாத்தாக (ஹி..ஹி..ஹி.. நானும் தான்//
க்கி...க்கி...கீஈஈஈஈஈஈஈஈஈஈ
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஸைன்ட் பிளிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
மட்டன் தால்ச்சா தெரியும். மட்டன்ல அவரைக்காயா !!!!!!!!!!!!!!
டாக்டர் ஜலீ அக்காவ் , இந்த லொல்லு போட்டோவுல நம்ம மங்கு எது !!!!!!!
ஜலீலாக்கா நீங்க மட்டினுக்குள் என்னத்தப் போட்டுத்தந்தாலும் நான் சாப்பிட ரெடி. மட்டின் என்றால் விருப்பம்....
அதுசரி “டிஸ்கி” யில் யாருக்கு இந்த அடி அடிக்கிறீங்க???:).
நான் கொஞ்சம் லேட் ஜலீலாக்கா...:)
//காதல் கவிதை போடும்போதே இன்னைக்கு நெனச்சேன்.அதுல கத்திரிகாவும் ..ம்..முட்டையும்....ஹையோ...
(பூஸ் வரதுகுள்ள மீ.எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்//// இந்த பதிவுக்குரியவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்... அவர் இப்போ ஆணி பிடுங்கப்போயிருப்பார் என நினைக்கிறேன்... வந்தால் பிடிச்சுவையுங்கோ ஜலீலாக்கா... மீ எஸ்ஸ்ஸ்ஸ் இப்போதைக்கு...
///athira said...
ஜலீலாக்கா நீங்க மட்டினுக்குள் என்னத்தப் போட்டுத்தந்தாலும் நான் சாப்பிட ரெடி. மட்டின் என்றால் விருப்பம்..//
இப்படி சொல்லிதான் மங்கு என்னிடம் சரியா மாட்டுச்சி .இப்ப பூஸூ வா, வாங்க வாங்க!!லிங்க்( http://asiyaomar.blogspot.com/2010/03/blog-post_29.html ))
Blogger ஜெய்லானி said...
//மங்குனி அமைச்சர் said.--மேடம் எனக்கு இந்த பருப்பு போட்டு எது செய்தாலும் பிடிக்கும்//
கொசு-25 கிராம்
மரவட்டை--80 கிராம்
புள்ள பூச்சி--400 கிராம்
காலியாங்குட்டி( பாம்பு குட்டி)-2 pc
அரளிப்பூ--5
மசுக்குட்டி--400கிராம்
இதையெல்லாம் மங்குவை பிடித்து(வாங்கி வர) வரசொல்லி பசுநெய்யில இந்த பருப்பை சேர்த்து வதக்கி குடுங்க
அப்படியே சாப்பிடும்.வாழ்க மங்கு!!
வளர்க அறிவு..//
பதில் போதுமா ? இல்ல வேற பதில்!! மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இன்னைக்கு லீவு (வெள்ளி, சனி)
naa ninaiththeen
எங்கம்மா வைக்கிறமாதிரியே நல்லா அருமையா வச்சிருக்கீங்க ஜலீக்கா.
அவரைக்காய் மட்டன் குழம்பு மணம் சவூதி வரைக்கும் அடிக்குது.. ரொம்ப சூப்பர் ஜலீலா..
// asiya omar said...
மட்டன் அவரைக்காய் குழம்பு சூப்ப்ர்.அதில் உள்ள அவரையை சாப்பிடவே மண்மாக இருக்கும்.//
அக்கோவ் , அவரை உங்களுக்குன்னா அப்ப மட்டன் யாருக்கு (ஹி..ஹி..தமாசு..)
jalee nice kuzambu. But I also make without muttan avaraikai kuzambu. but totaaly taste different. You know my case.Avaraikai is good vegetable.
superb mutton avarai gravy....
லொள்ளு.......
நல்லா இருக்கு.
சூப்பர் குழம்பும் சூப்பர் லொள்ளும்.
அசத்துங்க. அப்படியே வாங்க..
சுட்ட இட்லி சுட்டுயிருக்கேன்..
எட்டி பார்த்தேன்.... எஸ்கேப் ஆனேன்...
இது எனக்கான சமையல் குறிப்பல்ல..
நன்றி ஜலீலா மேடம்...
வித்தியாசமான ருசி.
ஜலீலாக்கா, லீவு முடியும் வரை ஜெய்..லானிக்கு ஒரு போத்தல் “பிரிட்டனை” அப்படியே பருக்கி நித்திரையாக்கிவிடுங்கோ... என்னால முடியல்லே:):)... என் சிரிப்பையும் களவெடுத்திட்டார் கிக்.கிக்..கீஈஈஈஈஈ.
ஜெய்..லானிக்கு ஒரு அன்பு வேண்டுகோள்:-வாழ்க்கையில நீங்க சமையல் குறிப்பே எழுதிடாதீங்க.... பிளீஸ்ஸ்ஸ். இனி மட்டினைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மரவட்டைதான் நினைவுக்கு வரப்போகுது.. வடிவேல் அங்கிள் சொன்னதுபோல:):)...
ஊசிக்குறிப்பு: ஜெய்..லானியைப் பிடிச்சுத்தருவோருக்கு ஒருகிலோ மரவட்டை இல........வசம் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சீயா... மீயா...எஸ்ஸ்ஸ்ஸ்
அதிரா இது ஜெய்லானிக்கும் மங்கும் உள்ள பந்தம் அதான் அப்படி, பாருஙங்கள் டு டே லொள்ளில் அவஙக் இரண்டு பேர் போட்டோவை தான் போட்டு இருக்கேன், (ஜெய்லானி சும்மா சொன்னேன்
மு.அ.காலித் முதல் வருகைக்குமிக்க நன்றி, வந்ததும் மங்குவ கலச்சிட்டீங்கலா?
சித்ரா வழக்கம் போல் பாராட்டு என்னும் பூஸ்ட் கொடுத்திருக்கீங்க./
மட்டன் VS அவரைக்காய்!!!! வித்யாசமா இருக்கு சீமான் கனி என்ன கிரிக்கெட் பார்த்து கொன்டே கமெண்ட் ஆ?
ஆசியா ஆமாம் அதில் உள்ள அவரக்காய் நல்ல மணமாக இருக்கும்
. நான் கொஞ்சம் லேட் ஜலீலாக்கா ( அதிரா நானும் எப்போதும் லேட் தான்)
அதுசரி “டிஸ்கி” யில் யாருக்கு இந்த அடி அடிக்கிறீங்க???:).
அதான் சொல்லிட்டேனே. எங்கு போனாலும் , இவஙக் இரண்டு பேர் இல்லாத இடமே இல்லை
கொசு-25 கிராம்
மரவட்டை--80 கிராம்
புள்ள பூச்சி--400 கிராம்
காலியாங்குட்டி( பாம்பு குட்டி)-2 pc
அரளிப்பூ--5
மசுக்குட்டி--400கிராம்
இதையெல்லாம் மங்குவை பிடித்து(வாங்கி வர) வரசொல்லி பசுநெய்யில இந்த பருப்பை சேர்த்து வதக்கி குடுங்க
அப்படியே சாப்பிடும்.வாழ்க மங்கு!!
வளர்க அறிவு..//
பதில் போதுமா ? இல்ல வேற பதில்!! மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இன்னைக்கு லீவு (வெள்ளி, சனி//
//என்னால் ஆசியா பிலாக் போய் இத காப்பி பண்ணி வர முடியல ஆனால் அதற்குள் நீஙக் போட்டு ட்டீஙக்.
///
சரியான காமடி
மின்மினி இது இஸ்லாமிய இல்லங்களில் வைப்பது இல்லையா அதான் உங்கள் அம்மா செய்வது போல் இருக்கு, வருகைக்கு மிக்க நன்றி
ஸ்டார்ஜன் மணக்குதா அபப் செய்து பார்த்துட்டு சொல்லுங்கள். தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
சைவ கொத்து பரோட்டா லொள்ளு நல்ல இருக்கா அப்ப சால்னா?
மலிக்கா வருகைக்கு மிக்க நன்றி, சுட்ட இட்லி லொள்ளு அத விட ஜோரா இருக்கே///
கோபி நீங்கள் வெஜ்டேரியன் ஆச்சே,ஏன் மட்டன் இல்லாமல் அவரைக்காய இது போல் செய்யலாமே.
அமைதிச்சாரல் முதல் வருகைக்கு மிகக் நன்றி..
//ஜெய்..லானிக்கு ஒரு அன்பு வேண்டுகோள்:-வாழ்க்கையில நீங்க சமையல் குறிப்பே எழுதிடாதீங்க.... பிளீஸ்ஸ்ஸ். இனி மட்டினைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மரவட்டைதான் நினைவுக்கு வரப்போகுது.. வடிவேல் அங்கிள் சொன்னதுபோல:):)...//
அதிரா ரொம்ப காமடியா கதைத்து இருக்கீங்க.. ஹா ஹா
அப்பாடா இன்னைக்கு தான் நேரம் கிடைச்சது. மட்டன் அவரைக்காய் குழம்புடன் அந்த லொள்ளுப் படமும் சூப்பர்.
இல்லத்தரசிகள் வீட்டில் சமையல் வேலையெல்லாம் முடித்து விட்டு அப்பாடான்னு ஒரு பெருமூச்சு விடுவது போல் இருக்கு ஷபி, வாங்க இப்ப தான் வழி தெரிந்ததா?
இந்த லொள்ளு நல்ல இருக்கா?
அப்ப கிச்சனிலிருந்து நேர வந்து பதிவு போட்டீங்கலா? ஷபி
நாங்கள் சிலசமயம் சிக்கன் கறியில் அவரைக்காய் சேர்த்து சமைப்போம்.இதற்காவே இதன் பெயர் தென் மாவட்டங்களில் இதனை கோழிஅவரக்காய் என்பார்கள்.
ஸாதிகா சிக்கன் அவரையா இது வரை செய்ததில்லை, இனி செய்து பாத்துடுவோம்
மட்டனில் உருளை,முருங்கை தவிர எதுவும் சேர்த்து செய்ததில்லை.அவரை சேர்த்து செய்வதால் மனமாக இருக்குமென நினைக்கிறேன்.நல்லாயிருக்குக்கா..
புதுமயான மட்டன் அவரைக்காய் குழம்புதான் .
அருமையாக இருக்குப்போல தெரிகிறது பார்க்கும்பொழுதே . பகிர்வுக்கு நன்றி !
மேனகா மட்டனில் எல்லாவகையான காய்களை சேர்த்து சமைத்தாலும் நல்ல இருக்கும்.
. புதுமை தான் நாங்கள் இஸ்லாமிய இல்லங்களில் அடிகக்டி செய்வது தான்.
வாஙக் பனித்துளி சங்கர் உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா