Showing posts with label என் கண்டுபிடிப்பு. Show all posts
Showing posts with label என் கண்டுபிடிப்பு. Show all posts

Saturday, August 15, 2015

மூவர்ண கேசரி




இந்த காம்பினேஷனில் ரெசிபிகள் செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இது எங்க திருமணநாளுக்கு செய்தது.



பொதுவாக கேசரியில் சர்க்கரையின் அளவு ஒன்றுக்கு ஒன்னறை அல்லது இரண்டு என தூக்கலாக போடுவார்கள்.

கேசரியில் பட்டர் + மீடியமான சர்க்கரை சேர்ப்பதால் இதை லன்ச் பாக்ஸ்க்கும் கொண்டு செல்லலாம் , இனிப்பு இதனுடன் காரத்துக்கு வடை அல்லது சுண்டல் செய்து கொள்ளலாம்.

தேவையானவை
ரவை – 100 + 100 +100 கிராம்
சர்க்கரை – 75+75+75 கிராம்
நெய் – 3 மேசைகரண்டி
முந்திரி, பாதாம்  - 50 கிராம் பொடித்து கொள்ளவும்
கேரட் துருவல் – 2 மேசைகரண்டி
கேசரி கலர் பொடி – சிறிது
பச்சை வண்ண கலர் (பிஸ்தா இலாச்சி எசன்ஸ்) – சிறிது
கிவி டேங்க் பவுடர் – 1 மேசைகரண்டி
பட்டர் – முன்று மேசைகரண்டி
சூடான வெண்ணீர் – 200 + 200 + 200  மில்லி


கேரட் கேசரி
 செய்முறை

ஆரஞ்சு கலர் ரவா கேசரிக்கு

ரவையையும் கேரட்டையும் பட்டரில் வறுக்கவும். சூடானா வெண்ணீரில் கலர் பொடி கலந்து வறுத்த கேரட் ரவாவில் ஊற்றி கிளறி சர்க்கரை சேர்த்து வறுத்து பாதாம் முந்திரி தூவி கடைசியாக ஒரு தேக்கரண்டி நெய் விட்டு இரக்கவும். சூடு பொறுக்கும் அளவில் சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

பிளைன் கேசரி

ப்ளைன் கேசரிக்கு

ரவையை பட்டரில் வறுத்து சூடானா வெண்ணீர் + நெய் ஊற்றி கிளறி சர்க்கரை வறுத்த முந்திரி பாதம்சேர்த்து கிளறி லேசாக ஆறவிட்டு சூடு பொறுக்கும் அளவில் சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.


கிவி அன்ட் ஸ்ராபெர்ரி ப்லேவர் டேங் கேசரி.இது தான் சூப்பர் ஹிட் எங்க வீட்டில் .
kiwi and strawberry flavor kesari




 பச்சை வண்ண கேசரிக்கு
ரவையை பட்டரில் வறுத்து சூடான வெண்ணீரில் கிவி டேங்கை கரைத்து வறுத்து வைத்த ரவையில் ஊற்றி கிளறி சர்க்கரை பாதாம் முந்திரி, நெய் சேர்த்து கிளறி சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
முவர்ண கேசரியை தட்டில் வைத்து அலங்கரிக்கவும்.



Heart Shape Keesari


முவர்ண கேசரி லட்டு



 உங்கள் வீட்டு குட்டீஸ் ஒரு உருண்டையையும் மிச்சம் வைக்க மாட்டார்கள், இதை பள்ளிக்கு லன்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து அனுப்பலாம். ஒன்றுமே சாப்பிடாமல் அடம் பிடிக்கும் பிள்ளைகள் முன் இதை செய்து டேபிளில் வைத்து பாருங்கள். எல்லா உருண்டைகளும் எப்படி காலி ஆகுதுன்னு .. பாருங்கள்
பொதுவாக கேசரிக்கு சர்க்கரையின் அளவு ஒன்றுக்கு இரண்டு பங்கு அளவு போடுவார்கள். ஆனால் இப்படி செய்வது திகட்டாமல் சாப்பிட நல்ல இருக்கும்.



குங்குமம் தோழியில் வெளி வந்தவை June 2015
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, July 22, 2010

ஜோவர் ஆட்டா,ராகி லட்டு

தேவையானவை

ஜோவர் ஆட்டா - அரை கப்
சர்க்கரை - இரண்டு மேசை கரண்டி
ராகி - கால் கப்
நெய் ஒரு மேசை கரண்டி
நட்ஸ் - இரண்டு மேசை கரண்டி (பொடியாக அரிந்தது)
ஏலக்காய் - ஒன்று



செய்முறை
1. நட்ஸ் வகைகளை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.

2. ஜோவர் ஆட்டா, ராகியை லேசாக வறுக்கவும்.
சர்க்கரையை ஏலக்காயுடன் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

3. மாவுடன் சர்க்கரை, நட்ஸ் சேர்த்து சிறிது நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

4. இதன் மனமும் ருசியும் சொல்ல வார்த்தைகள் இல்லை.



விஜியின் ராகி லட்டு பார்த்ததும் ஜோவர் ஆட்டாவில் இதை செய்து பார்த்தேன்.

ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு.




Monday, April 12, 2010

ட்ரூட்டி ஃபுரூட்டி வித் பனானா கஸ்டட்/truity fruity with banana custurd




வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி கூல் கூலாகா இருப்போம்


இந்த கோடைக்கு ஏற்ற குளு குளு கஸ்டட், பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது நமக்கும் தான்.ஈசியா செய்துவிடலாம்.




தேவையான‌வை



பால் = ஒரு கப்
க‌ஸ்ட‌ட் ப‌வுட‌ர் = ஒரு மேசை கரண்டி
பாத‌ம் ஃபிளேக்ஸ் = ஒரு மேசை க‌ர‌ண்டி
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி (பெரிய‌வ‌ர்க‌ளுக்கு கொஞ்ச‌ம் குறைத்து கொள்ள‌லாம்)
ப‌னானா = ஒன்று பெரிய‌து
ட்ரூட்டி ஃபுரூட்டி = ஒரு மேசை க‌ர‌ண்டி

செய்முறை
பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும்.
சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும்.
ச‌ர்க்க‌ரை , பாத‌ம் பிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும், கைவிடாம‌ல் கிள‌ற‌வும், க‌ட்டியாகி வ‌ரும், அப்ப‌டியே ஆற‌விட்டு குளிற‌விட‌வும்.
கூலாக‌ உள்ள‌ க‌ஸ்ட‌டை எடுத்து அதில் வ‌ட்ட‌வ‌டிவமாக‌ பனானாவை க‌ட் செய்து போட்டு மேலே ட்ரூட்டி ஃபுரூட்டியை தூவி குழ‌ந்தைக‌ளுக்கு கொடுக்க‌வும்.

குறிப்பு:


இத‌ பார்ர்டியில் வைத்தாலும் க‌ல‌ர்ஃபுல்லாக‌ இருக்கும்.
ப‌னானா அரிந்த‌தும் க‌ருத்துவிடும், க‌ருத்து போகாம‌ல் இருக்க‌ அரிந்த‌து சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளலாம்.
உட‌னே சாப்பிடுவ‌தாக‌ இருந்தால் எலுமிச்சை சாறு தேவையில்லை
இதில் ச‌ர்க்க‌ரைக்கு ப‌தில் ஸ்வீட்ட‌ன் க‌ண்டென்ஸ்ட் மில்க்கும் சேர்க்க‌லாம்.




வாவ் யெம்மி யெம்மி ஒன்ஸ் மோர்.....தான் போங்க‌
மேலும் குளு குளுன்னு ஜில்லுன்னு ஐஸ் ரெசிபி வேண்மா கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.

Saturday, April 10, 2010

ட்யிட்டி ஃப்ரூட்டி பான் கேக்ஸ்/Tutti Fruity Pancakes


Indiblogger - Master chef India 2 contest winner - recipe (2011)



Tutti Fruity Pancakes

You can make Pancakes for breakfast or for parties.  Kids love to eat these colorful pancakes.

Ingredients:

All purpose flour  (Maida) - 200 grams
eggs - 2
salt - 1 pinch
sugar - 100 grams
vanilla   essence - 1 drop
Tutti  frutti - required qty
Oil + Butter - required qty
ghee - required qty


Method

Mix the ingredients (except oil+ butter, ghee and tutti frutti) .   Add water and milk and blend well  in a mixer (blender)  to a  thick batter.  You can also mix well with a fork or a whisk to make a thick batter.  Make sure that there are no lumps.
Heat a non stick pan.   Pour a ladle full of batter and  spread to have  a thick pancake.  Sprinkle the tutti frutti over it.   Cook on low heat.   Add little oil or butter.   Carefully, flip or turn over the pancake and cook the other side on low heat to golden brown.  Make sure that it does not get burned.
Enjoy. 
Note:
Instead of tutti fruity you can use pomegranate or black raisins..






தேவையானவை


மைதா = 200 கிராம்,
முட்டை = இரண்டு,
உப்பு = ஒரு சிட்டிக்கை,
சர்க்கரை = 100 கிராம்,
வென்னிலா எஸன்ஸ் = ஒரு டிராப்,
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி,
டுட்டிஃபுரூட்டி = தேவைக்கு.
எண்ணை (அ) ப‌ட்ட‌ர் = தேவைக்குநெய் = சிறிது



செய்முறை
மைதாவுடன் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் டுட்டிஃபுரூட்டி தவிர ஒன்றாக சேர்த்து கட்டியில்லாமல் மிக்ஸியில் சிறிது பால் + தண்ணீர் சேர்த்து அடிக்கவும்.


பிறகு தவ்வாவில் சிறிது தடிமனாக ஒரு கரண்டி அளவிற்கு ஊற்றி டூட்டி ஃப்ரூட்டி கலவையை தூவி, திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணை அல்லது பட்டரில் சுட்டெடுக்கவும்



சுட்டதும் மேலே லேசாக நெய் தடவும்.
குழந்தைகளுக்கு பிடித்த சத்தானா கலர்ஃபுல் பிரேக் பாஸ்ட்.

(ட்ரூட்டி புரூட்டி கிடைக்காதவர்கள் , கருப்பு ரெயிஸின்ஸ் (அ) மாதுளை முத்துக்களை பயன்படுத்தலாம்.)

I am sending this receipe to priya's pancake event.

இது மேனகா பிளாக்கில் பார்த்தேன் , எனக்கும் ஈவண்டுக்கு  அனுப்ப ஆசையா இருந்தது இந்த ரெசிபி நான் முயற்சி செய்தது/ எதிர் பார்த்ததை விட ரொம்ப அருமையாக இருந்தது. இது எப்போதும் இந்த முறையில் மைதா தோசை, பாம்பே டோஸ்ட்டில் செய்வது தான் இதில் சிறிய மாற்றம். இப்படி செய்து வைத்தீங்கன்ன்ன் உங்கள் வீட்டு வாண்டுகள் சத்தமில்லாமால் தட்டை காலி பண்ணிடுவார்கள்.

Wednesday, March 17, 2010

எக் வெல்லம் இட்லி - egg jaggery idly

தேவையான பொருட்கள்



இட்லி மாவு = 5 இட்லிக்கு தேவையான அளவு
வெல்லம் பாகு (கட்டிப்பாகு) = ஒன்னறை மேசைகரண்டி
நெய் = தேவைக்கு
முட்டை = ஒன்று
உப்பு = ஒரு சிட்டிக்கை





செய்முறை


இட்லி த‌ட்டில் நெய் த‌ட‌வி முட்டையுட‌ன் வெல்ல‌பாகை க‌ல‌ந்து முத‌லில் வெல்ல‌ம் முட்டை க‌ல‌வை, பிறகு மாவில் உப்பு கலந்து ஊற்றவும். மாவு இட்லி குழியில் முக்கால் பாகம் தான் இருக்கனும். அப்ப தான் பொங்கி வர சரியாக இருக்கும்.ஏழு நிமிடங்கள் வேக விட்டு இரக்கவும்.

வெல்ல‌ம் எக் இட்லி (பெரிய‌வ‌ர்க‌ளுக்கு)
மேலே குறிப்பிட்ட‌ பொருட்க‌ளுட‌ன், ஏல‌ப்பொடி கால் தேக்க‌ர‌ண்டி, தேங்காய் துருவ‌ல் ஐந்து தேக்க‌ர‌ண்டி சேர்த்து செய்து கொள்ள‌லாம்.



குறிப்பு

வெல்ல பாகு எடுக்கும் போது முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து ஒரு கொதி வரும் போது வடிகட்டி கொள்ளவும், வெல்லத்தில் கல் இருக்கும்.பிறகு பாகை வற்றவிட்டு கொள்ளவும்.

இதில் முட்டை சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாகிறது.நல்ல மெத்துன்னு ஷாப்டாகவும் இருக்கும்.இது ஏற்கவே கொடுத்த தேன் இட்லி, மிளகு இட்லி.இதை கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு டிபனில் செய்து வைக்கலாம்.
இட்லி கேக்குன்னு சொல்லி கொடுங்கள்.
இந்த படம் என் தோழி ரூபி செய்து அனுப்பியது.நான் முன்பு கொடுத்த எக் இட்லி முறையில் செய்து இருக்கிறார்கள்.

Thursday, March 11, 2010

எக் இட்லி (தேன் & மிளகு) - egg idly honey & pepper








இட்லி என்றாலே அது போல ஒரு லைட்டான உணவு எதுவுமே கிடையாது.நமக்கு சட்னியோ ,குழம்போ வைத்து சாப்பிடுவோம். வயிற்று புண், அல்ச‌ர், வ‌ந்த‌வ‌ர்க‌ள் கூட இந்த‌ இனிப்பு இட்லியை சாப்பிட‌லாம். குழந்தைகளுக்கு என்று தனியாக செய்ய முடியாத போது
இப்படி கொடுத்தால் நல்ல சத்தான இட்லி சாப்பிட்ட மாதிரி ஆச்சு.
முட்டை தேன் இட்லி

முட்டை = ஒன்று
இட்லி மாவு = 5 இட்லி சுட‌ தேவையான‌ அளவு
தேன் = 5 தேக்கர‌ண்டி
நெய் = சிறிது








முட்டையை நுரை பொங்க‌ அடித்து கொள்ள‌ வேண்டும்.அதில் தேனை க‌ல‌ந்து கொள்ள‌வும்.
இட்லி பாத்திர‌த்தில் நெய்யை த‌ட‌வி அதில் ஓவ்வொரு குழியிலும் சிறிது மாவை ஊற்றி அத‌ன் மேல் முட்டை க‌ல‌ந்த‌ தேனை ஊற்றி மேலே சிறிது மாவு ஊற்ற‌வும்.
இதே போல் 5 இட்லியிலும் ச‌மமாக‌ ஊற்றி இட்லி வேக‌ 7 நிமிட‌ம் ஆகும்.
வெந்த‌தும் எடுத்தால் பூப்போல் மெத்துன்னு இருக்கும்.


//குழ‌ந்தைக‌ளுக்கு எந்த‌ ப‌க்க‌ உண‌வும் இல்லாம‌ல் சின்ன‌ பீஸா க‌ட் செய்து அப்ப‌டியே ஒரு ஃபோர்க்கை போட்டு கொடுத்தால் ஈசியாக‌ சாப்பிடுவார்க‌ள்.
ப‌ள்ளி செல்லும் குழ‌ந்தைக‌ளுக்கும் கொடுத்து அனுப்ப‌லாம். //


முட்டை மிள‌கு இட்லி

இனிப்பு இட்லி பிடிக்காத‌ குழ‌ந்தைக‌ளுக்கு இப்ப‌டி மிளகு சேர்த்து செய்து கொடுக்க‌லாம்.



இட்லி மாவு = 5 இட்லிக்குக்கு தேவையான‌ அள‌வு
முட்டை = ஒன்று
மிள‌கு தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = சிறிது
நெய் = சிறிது





மிள‌கு, முட்டை, உப்பை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து கொள்ள‌வும்.
இட்லி த‌ட்டில் நெய்யை த‌ட‌வி முத‌லில் சிறிது இட்லி மாவு பிற‌கு முட்டை க‌ல‌வை மீண்டும் சிறிது இட்லி மாவு ஊற்றி இட்லிக‌ளாக‌ வார்த்து எடுக்க‌வும்.



எங்க‌ளுக்கெல்லாம் (நான் வெஜ் சாப்பிடுபவர்கள்) குழ‌ம்பில்லாம‌ல் இர‌ங்காது என்கிறீர்க‌ளா?

ம்ம் மீன் குழ‌ம்பு, சாம்பார், கால் பாயா , மட்டன் எலும்பு சூப் எல்லாம் இட்லிக்கு பொருந்தும், ஆனால் குழ‌ம்பு க‌ட்டியா வைக்காமால் ஓடு த‌ண்ணீரா வைக்க‌னும்.




இட்லி, பாகற்காய் சாம்பார்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பாகற்காய் சாம்பார் வைத்து கொள்ளலாம். சாம்பாரில் போடுவதால் பாகற்காயில் கசப்பு கூட இதில் தெரியாது.
இந்த ரெசிபி , என் தம்பி, என் தங்கை,என் தோழிகளின் குழந்தைகளுக்காக‌ (8 மாத குழந்தைகளுக்கு) க்காக நான் முயற்சி செய்தது.

Saturday, February 20, 2010

ஜோவர் ஆட்டா தோக்ளா - jowar atta dhokla



தோக்ளா இது குஜாரத்தி அயிட்டம்,வெரும் கடலைமாவில் தயிர் சேர்த்து செய்வது ஒரு விதம், மற்றொன்று ரவை அரிசி மாவில் தயிர் சேர்க்காமல் செய்வது மற்றொரு விதம், ரொம்ப நாளா இத செய்து பார்க்கனும் என்று செய்து பார்த்தாச்சு.

இது இட்லி தோசை , பூரி கிழங்கு,பொங்கல் வடை சாப்பிடுவர்கள் வாய்க்கு இது பிடிக்காது.

மோர்களி, மோர் ரசம், தயிர் சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.
இது நம்மூர் இட்லி, அல்லது உப்புமா போல் தான்.



தேவையான பொருட்கள்

ஊறவைக்க‌

ஜோவர் ஆட்டா + கோதுமை மாவு = முன்று மேசைகரண்டி
கடலைமாவு = இரண்டு தேக்கரண்டி
ரவை = இரண்டு தேக்கரண்டி
உப்பு = சிறிது
மஞ்சள் பொடி = இரண்டு சிட்டிக்கை
தயிர் = இரண்டு மேசை கரண்டி
தண்ணீர் = இரண்டு மேசை கரண்டி

மாவில் கலக்க‌


இஞ்சி துருவல் = அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = அரை
கொத்து மல்லி தழை பொடியாக அரிந்தது = ஒரு தேக்கரண்டி
எண்ணை (நல்லெண்ணை) = ஒரு தேக்கரண்டி

தாளிக்க‌


எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
கருவேப்பிலை = 5 ஆர்க்





ஜோவர் ஆட்டா+கோதுமை மாவு,கடலை மாவு,ரவை,உப்பு, மஞ்சள் பொடி, தயிர், தண்ணீர் எல்லாவற்றையும் கலக்கி ஊறவைக்கவும். ( நான் இதை இரவே ஊறவைத்து விட்டேன்).

காலையில் லெமன் சாறு, கொத்துமல்லி தழை,வெங்காயம்,இஞ்சி துருவல் , எண்ணை சேர்த்து கலக்கி ஒரு சதுர வடிவ டிபனில் வைத்து இட்லி பானையில் வைத்து அவிக்கவும்.


சிறிது துண்டு போட வரும் போது கியுபுகளாக கட் செய்யவும்.


தனியாக வானலியில் எண்ணை,கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து இந்த தோக்ளாக்களை போட்டு பிரட்டி எடுக்கவும்.


தொட்டு கொள்ள கெட்சப் நல்ல இருக்கும், புதினா துவையலும் சூப்பராக இருக்கும்.


குறிப்பு

//டயட்டில் உள்ளவர்களுக்கு நல்ல டிஷ் இது, டயட்டில் இல்லாதவர்கள், இதில் எண்ணைக்கு பதில் நெய் விட்டு கொள்ளலாம், ஒரு மேசை கரண்டி தேங்காய் துருவல் சேர்த்தாலும் சுவை அமோகமாக இருக்கும்.//
Jaleela Banu, Dubai