தோக்ளா இது குஜாரத்தி அயிட்டம்,வெரும் கடலைமாவில் தயிர் சேர்த்து செய்வது ஒரு விதம், மற்றொன்று ரவை அரிசி மாவில் தயிர் சேர்க்காமல் செய்வது மற்றொரு விதம், ரொம்ப நாளா இத செய்து பார்க்கனும் என்று செய்து பார்த்தாச்சு.
இது இட்லி தோசை , பூரி கிழங்கு,பொங்கல் வடை சாப்பிடுவர்கள் வாய்க்கு இது பிடிக்காது.
மோர்களி, மோர் ரசம், தயிர் சம்பந்தப்பட்ட உணவு சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும்.
இது நம்மூர் இட்லி, அல்லது உப்புமா போல் தான்.
தேவையான பொருட்கள்
ஊறவைக்க
ஜோவர் ஆட்டா + கோதுமை மாவு = முன்று மேசைகரண்டி
கடலைமாவு = இரண்டு தேக்கரண்டி
ரவை = இரண்டு தேக்கரண்டி
உப்பு = சிறிது
மஞ்சள் பொடி = இரண்டு சிட்டிக்கை
தயிர் = இரண்டு மேசை கரண்டி
தண்ணீர் = இரண்டு மேசை கரண்டி
மாவில் கலக்க
இஞ்சி துருவல் = அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = அரை
கொத்து மல்லி தழை பொடியாக அரிந்தது = ஒரு தேக்கரண்டி
எண்ணை (நல்லெண்ணை) = ஒரு தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
கருவேப்பிலை = 5 ஆர்க்
ஜோவர் ஆட்டா+கோதுமை மாவு,கடலை மாவு,ரவை,உப்பு, மஞ்சள் பொடி, தயிர், தண்ணீர் எல்லாவற்றையும் கலக்கி ஊறவைக்கவும். ( நான் இதை இரவே ஊறவைத்து விட்டேன்).
காலையில் லெமன் சாறு, கொத்துமல்லி தழை,வெங்காயம்,இஞ்சி துருவல் , எண்ணை சேர்த்து கலக்கி ஒரு சதுர வடிவ டிபனில் வைத்து இட்லி பானையில் வைத்து அவிக்கவும்.
சிறிது துண்டு போட வரும் போது கியுபுகளாக கட் செய்யவும்.
தனியாக வானலியில் எண்ணை,கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து இந்த தோக்ளாக்களை போட்டு பிரட்டி எடுக்கவும்.
தொட்டு கொள்ள கெட்சப் நல்ல இருக்கும், புதினா துவையலும் சூப்பராக இருக்கும்.
குறிப்பு
//டயட்டில் உள்ளவர்களுக்கு நல்ல டிஷ் இது, டயட்டில் இல்லாதவர்கள், இதில் எண்ணைக்கு பதில் நெய் விட்டு கொள்ளலாம், ஒரு மேசை கரண்டி தேங்காய் துருவல் சேர்த்தாலும் சுவை அமோகமாக இருக்கும்.//
Tweet | ||||||
33 கருத்துகள்:
http://murugaperuman.blogspot.com/2008/09/0708.html
ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு என்று இந்த பிளாக்கில் இந்த பதிவில் இருக்கு, இது தினை மாவு உருண்டையும் செய்தேன் ரொம்ப சூப்பரா வந்தது, அடுத்த குறிப்பில் போடுகீறேன்
அக்கா, இது இட்லி வடை தோசை சாப்பிட்டு ருசி கண்ட நாக்கு. ஹி,ஹி,ஹி,ஹி.....
ஆமாம் சித்ரா இது ருசிக்கு சாப்பிடுபவர்களுக்கு பிடிக்காது பசிக்கு சாப்பிடுபவர்களுக்கு பிடிக்கும்.
நம்மூர் ஆட்களிடம் இத கொடுத்த அய்யோ தெரியாத அயிட்டம் நான் சாப்பிடமாட்டேன் பா என்பார்கள்
இது இட்லி தோசை , பூரி கிழங்கு,பொங்கல் வடை சாப்பிடுவர்கள் வாய்க்கு இது பிடிக்காது.]]
கரீட்டா சொல்லிட்டீங்க மீ தி எஸ்கேப்பு
புதுசு புதுசா !! இன்னானான்னவோ செய்றாங்களே !! வொக்காந்து ரோசிப்பாங்களோ !!
ஐ டோக்ளா... எனக்கு ரொம்பப்பிடிக்கும்...வாய்ல வச்சா புஸ்சுன்னு காணாமே போய்டும். புனாவுல இருந்தபோது டோக்லா திங்காத நாளே கிடையாது... டோக்ளாவும், இனிப்பு சட்னியும் நம்ப பேவரேட்... துபாய்ல கிடைக்குது.. ஆனா எங்கஊர்ல எங்கேயும் கிடைக்கமாட்டுது...
Dhokla nalla irruku!!!
Kindly accept the award from my blog
ஆஹா இவ்வளவு நாள் ஜோவார் மாவுன்னா என்னவோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். தினை மாவுதானா?! நான் அதில் சப்பாத்தி மட்டும்தான் செய்வேன். இனி டோக்ளாவும் செய்துட வேண்டியதுதான்.
நாஞ்சிலாரே டோக்ளா நம்மூரிலா?! கஷ்டம்தான். இப்பதேன் ரெசிப்பி கிடைச்சாச்சே வீட்டுலயே செய்து சாப்பிடுங்க
கவி, இனி தினம் சப்பாத்தி தான் என்று டயட்டில் இரங்கியாச்சு, நிறைய வாங்கியாச்சு, (பஞ்சாபி ஆட்டா, ஜோவர் ஆட்டா, சக்கி பிரெஷ் ஆட்டா என்று) ஆனால் ஜோவர் ஆட்டா தமிழில் பெயர் தெரியாமல் தேடிய போது இந்த லிங்கை கொடுத்து தெரிய படுத்திய பிரபாவிற்கு மிக்க நன்றி.
வாங்க நாஞ்சிலாரே இப்ப தான் வழி தெரிந்ததா?
ஒகே ஒகே வருகைக்கு, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
சகோ.ஜமால் ஆமாம் இது இட்லி வடை சாப்பிடுபவர்களுக்கு, பிடிக்காது.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
ஆமாம் பாண்டி அண்ணாத்தே, கிச்சனில் நின்னா இது போல ஏதாவது ரோசனை தான் மன்சுல ஓடும்/
அருனா அவார்டுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
சலாம் அக்கா. ஜோவர் ஆட்டா என்றால் என்னது?
கடலைபருப்பை ஊறவைத்து அரைத்து டோக்ளா செய்து இருக்கேன்,இது புதுசாக இருக்கே.வெரைட்டியாக செய்து அசத்துறீங்க.
ஜலீலா ரொம்ப நல்லா இருக்கு , என்ன இப்படி சொல்லிட்டிங்க இட்லி தோசை சாப்பிட்ட வாய்க்கு இது புடிக்காதுன்னு சும்மாவே பசங்க இட்லி தோசை தான் விரும்புறாங்க ஒரு தடவை செய்து பார்துவிடுவோம் ஆனால் ஜோவர் ஆட்டா இங்கு கிடைக்குமா?
தினைமாவில் தோக்ளாவா???சூப்பராயிருக்குக்கா...
அம்மடியோ இது புயிக்கும் நேக்கு புயிக்காது..ஹா ஹா
ஜலி அட..டோக்ளா கூட அழகாக செய்கின்றீர்கள்.நான் இதெல்லாம் செய்து ரிஸ்க் எடுப்பதில்லை.நேரே "மன்சூக்" போய் உட்கார்ந்தால் டோக்ளாவுடன் பச்சை இனிப்பு சட்னியுடன் தருவார்கள்.இருபதே ரூபாய்க்கு ஒரு பிளேட்.அருமையாக இருக்கும்.
என்னவோ புதுசு புதுசா அயிட்டம் காட்டி கண்ணுக்கு விருந்து வைக்குறீங்க...அக்கா..கலக்கல்...
சகோதரி, அசத்தல்..:)
புதுசு புதுசான-
தினுசு தினுசான மெனு,
செஞ்சுத் தந்தா சாப்பிடலாம்!! ;-))
வா அலைக்கும் சலாம் , ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு, அங்கு ஒரு லிங்கில் போட்டு இருந்தது கொடுதுள்ளேன் பாருஙக்ள்.
ஆமாம் ஆசியா , இது புது விதம் நான் செய்து பார்த்தது.
சாருஸ்ரீ, உங்களுக்கு டோக்ளா பிடிக்கும் என்றால் செய்து பாருங்கள், ஜோவர் ஆட்டா இங்கு கிடைக்குமா என்றால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். அங்குள்ள உங்கள் தோழிகளை கேளுங்கள்
ஆமாம் மேனகா தினைமாவில் டோக்ளா, நீங்க்ள் எல்லாம் டோக்ளா செய்யும் போதே செய்யனும் என்று அதான் வித்தியாசமா செய்து பார்க்கனும் என்று, செய்தேன்.
மலிக்கா இது புயிக்குமா அப்ப சாப்பிட வேண்டாம். ஹி ஹி
ஸாதிகா அக்கா ஊருக்கு வந்தால் உங்கள் கிட்ட தான் இடம் கேட்டு போய் சாப்பிட்டு பார்க்கனும்.
//என்னவோ புதுசு புதுசா அயிட்டம் காட்டி கண்ணுக்கு விருந்து வைக்குறீங்க.//
நன்றீ சீமான் கனி ஆமாம் புதுசா செஞ்சுட்டு எப்படி போடமல் இருப்பது அதான் போட்டாச்சு.
நன்றி சங்கர்
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பாத்திமா ஆமாம் புதுசு புது தினுசு தான், கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஹுஸைனாம்மா செஞ்சு கொடுத்துட்டா போச்சு
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா