Tuesday, September 6, 2011

மருதாணி மோகம் ஏன் இப்படி?



மருதாணி மோகம் ஏன் இப்படி பெண்களை ஆட்டிப்படைக்குது.

மருதாணிய விரும்பாத பெண்களே கிடையாது, முன்பெல்லாம் கல்யானங்களுக்கு கல்யாண பெண்களுக்கு தான் கை முழுவதும் வைப்பார்கள், ஆனால் இப்ப சின்ன சின்ன விஷேசங்களுக்கெல்லாம் எல்லோரும் மருதாணியை விரும்பி கை முழுவதும் வைத்த் கொள்கின்றனர்.

மருதாணி பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று முன்பெல்லாம் உள்ளங்கையில் ஒரு ரவுண்டு ஷேப்பு, கை விரல்களில் தொப்பி இப்படிதான் வைப்பார்கள்
எனக்கு மருதாணி வைத்துகொள்ள் ரொம்ப பிடிக்கும்.
ஆனால் டிசைனோ சுத்தம் ஒன்றுமே தெரியாது, சின்னவயதில் என் தங்கைகளுக்கெல்லாம் நான் தான் வைப்பேன் ஆனால் நான் வைப்பது தான் டிசைன்.

ஆனால் அதே இப்ப காலம் மாறி போச்சு இப்ப ஊர் சென்றிருந்த போது ஆச்சரியம் என் தங்கை பெண்கள் மற்றும் என் நாத்தனார் பிள்ளைகள் எல்லாம் அடிச்சி தூள் கிளப்புறாங்க, சின்ன குட்டிகள் எல்லாம் என்னமா டிசைன் போடுறாங்க , என் கையையும் கொடுத்தேன், எனக்கு டிசைன் வைத்து முடிக்கும் வரை பொருமை இல்ல ஆண்டி அசைக்காதீஙக், கைய நேரா காட்டுங்கள், இன்னும் மாமி ஆட்டகூடாது. எப்பா எனக்கு பெருமையே போச்சு.

அதே போல் இப்ப இந்த ஈதுக்கு ஒரு கையில் எப்படியோ வைத்து கொண்டேன்.முதல் முறையா பொறுமையாக ஒரு டிசைன் போட்டேன், எனக்கே சந்தோஷம் தாங்கல



இது நான் கிறுக்கியது



இன்னொரு கையில் என் தோழி மகள் சாதியா போட்டுவிட்டால். ( அந்த டிசைன் இங்கு பதியவில்லை ) வலது கையில் கொஞ்சம் ஹனீஃப் போட்டு விட்டான்.


அவளுக்கும் என் கையில் டிசைன் போடுமுன் பத்து முறை ஆட்டி ஆட்டி அவளுக்கும் வைப்பதற்குள் போதும் போது என்று ஆகிவிட்டது.

சாதியா ரொம்ப சூப்பரா மருதாணி போடுவா . இது அவள் கையில் போட்ட டிசைன்.


இது இந்த தடவை போட்ட புது டிசைன்.


(பதிவு போட வந்ததோ மருதாணி டிசைன்கள் இந்த இரண்டு மாதமாக போட்ட்து சேகரித்துவைத்ததை ஆனால், கீழ் காணும் வீடியோ பார்த்ததில் மற்ற இன்னொரு பதிவும் சேர்ந்து கொண்டது)

சாதியா போட்ட டிசைனை வீடியோ எடுத்து போடலாமுன்னு எடிட் செய்து எல்லோருக்கும் விடியோ லிங்க் கொடுக்கலாம் என்று  அட கொடுமையே அங்கு இந்த விடியோ பார்க்க்க நேர்ந்தது .
கீழே உள்ள இந்த வீடியோ பார்த்ததும். சே ஏன் இப்படி மருதாணி மோகம் பெண்கள் இப்படி ஆட்டி படைக்குது.

ஏன் இப்படியும் மெகந்தி வைத்துகொள்ளனுமா? இந்த வீடியோவை பாருங்க

எவ்வளவோ பெண்கள் பியிட்டி பார்லர் இருக்கின்றன, நிறைய பெண்கள் வீட்டிற்கும் வந்து வைத்து விடுகின்றனர்.
மெகந்தி மேலே ரொம்ப கிரேஸ் உள்ளவர்கள் மெகந்தி கிளாஸ் போயும் கற்றுகொள்ளலாலே.நாமே வீட்டில் போட்டு கொள்ளலாமே//



இது ஆக்ராவில் நான் எடுத்த போட்டோ


போன வருடம் டெல்லி, ஆக்ரா, ராஜஸ்தான் போன போது ஆக்ராவில் இந்த வாலிப ஆண்கள் சின்ன பெண்களுக்கு மெகந்தி போட்டு விடுவத பார்த்து அதிர்ந்து போனேன், ஆனால் அதே போல் நம் தமிழ் பெண்களும் இப்படி முகம் தெரியதவனுடன் மருதாணிக்காக அதுவும் நல்ல டிசைனுக்கா ஒட்டி கொண்டு போட்டு கொள்ளனுமா என்ன?
வட இந்தியாவில் அங்குள்ள கலாச்சாரத்துக்கு எல்லோரும் டேக்கிட் ஈசியா எடுத்து கொண்டாலும், இங்கு தமிழ் பெண்களை இப்படி பார்ப்பது ரொம்ப வருத்தபடவைக்கிறது.யாரோ ஒரு முகம் தெரியாதவன் மெகந்தி போட்டு விடுகிறன், சின்ன சின்ன பதின்மவயது பெண்களும், கல்லூரி பெண்களும் இபப்டி ஒட்டி உட்கார்ந்து போட்டு கொள்வதை பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கிறது.
வட இந்தியாவில் இருந்து சென்னையில் கடை போட்டு அங்கிருந்தே மெகந்திக்கும் ஆட்களை கூப்பிட்டு வந்து கடை வாசலிலேயே கடைய போட்டு விடுகின்றனர்.


வெளியில் செல்லும் உங்கள் வீட்டு பிள்ளைகளை இப்படி மருதாணி போட்டு கொள்ள அனுமதிப்பீங்களா? இது தவறு அல்லாவா? இதனால் சில பேரை வழிதவறவைக்கும் இல்லையா?

டிஸ்கி: காண்டு பிடிச்ச அனானி உங்கள யாரும் இங்க வெத்தல பாக்கு வைத்து அழைத்தா , வந்துட்டு வயத்தெரிச்சல் பட்டு கொண்டு ஏன் வீனாக  கமெண்ட் போட்டுட்டு போறீங்க. ஹிஹி


54 கருத்துகள்:

இமா க்றிஸ் said...

சாதியா உங்க கைல போட்டுவிட்ட டிசைன் சூப்பர். நீங்க போட்டு இருக்கிறதும் அழகா தான் இருக்கு.

Jaleela Kamal said...

இமா எனக்கு டிசைனே தெரியாது

ஏன் நல்ல இருக்குன்னு பொய் சொல்றீங்க

இமா க்றிஸ் said...

பொய் சொல்லல. நல்லாத்தான் இருக்கு. க்ர்ர். ;) மாடர்ன் ஆர்ட். ;)

அமுதா கிருஷ்ணா said...

சாதியா போட்ட டிசைன் நல்லாயிருக்கு.

மெகந்தி போட்டு விடும் பையன்களுக்கு அது ஒரு தொழில்.வருமானம் தர கூடிய ஒரு நல்ல வேலை செய்றாங்க என்று நினைப்போமே.எனக்கு ஏனோ இதில் தப்பு இருப்பதாக தெரியவில்லை. பியூட்டி பார்லரில் போடுவதை விட இவர்களிடம் விலையும் குறைவு. இவ்ளோ தொலைவில் இருந்து வந்து இப்படி நடுரோட்டில் அமர்ந்து கஷ்டப்படுகிறார்களே என்று தான் தி.நகர் போகும் போது எனக்கு தோன்றும்.திருமண மண்டப்பத்திற்கு அல்லது வீட்டிற்கு வர சொன்னாலும் வருகிறார்கள்.

Thenammai Lakshmanan said...

ஜலீலா நம்ம கிராமங்கள்ல வளையல்காரர்தான் வளையல் போடுவார்னு கேள்விப்பட்டு இருக்கேன். அது போல மருதாணி போடுறதும் தப்பில்லைனு நினைக்கிறேன்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

நீங்க போட்ட டிசைன் நல்லாயிருக்குங்க.

இங்கு தில்லியில் மெகந்தி போட்டுக்கொள்ள மணிக்கணக்காக செலவிடுவார்கள்.

அம்பலத்தார் said...

மருதாணிபோட்ட கைகளைப் பார்க்க அழகாக இருக்கும் ரசிக்கத்தோன்றும். ஒவ்வொருவரும் தன்னை அழகுபடித்திக்கொள்வதில் தப்பில்லையே. தொழில்ரீதியாக மருதாணி இடும் ஆண்களிடம் மருதாணி இட்டுக்கொள்வதிலேயோ அல்லது ஒரு காப்பு விற்பவரிடம் கையில் மாட்டிவிடக் கேட்பதிலோ பெரிய தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை

நட்புடன் ஜமால் said...

தவறெல்லாம் சரியென்ற காலம்

மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று

Jaleela Kamal said...

அமுதா நீங்கள் சொல்வது சரி என்றாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியல

தேனக்கா வளையல் ஒரு பத்து நிமிடத்துக்குள் போட்டுவிடுவாஙகளா அதுவும் வயதான கிழவர்கள் வீடு விட்டா போவர்கள்,அதுவும் படத்தில் எம் ஜி ஆர் வளையல் பாட்டு பாடி போடும் போது தான் எனக்கு தெரியும்.
இது எப்படியும் ஒரு மணி நேரம் எடுக்கும்.

ரோடில் இந்த முறை அந்த காட்சிய பார்க்கும் போது அது எனக்கு பிடிக்கல

Jaleela Kamal said...

ரத்ன வேல் சார் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோவை2தில்லி நெசமாவே நான் போட்ட டிசைன் நல்ல இருககா?

அப்ப அடுத்த பெருநாளுக்கும் வேறு ஒரு சிம்பிள் டிசைன். போட்டு போட்டோ போடுறேன்.

ரொம்ப நன்றி

Jaleela Kamal said...

//தவறெல்லாம் சரியென்ற காலம்

மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று.//

சகோ ஜமால்

இது புரிபவர்கள் புரிந்து கொண்டால் சரி..

Jaleela Kamal said...

அம்பலத்தார்

வாந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டில், சென்னையில் எத்தனை தொழிலகள் இருக்கின்றன
ஆனால் ஆண்கள் இபப்டி போடு வது எனக்கு பிடிக்கல, அதான் இப்படி ஒரு பதிவு,

பிலஹரி:) ) அதிரா said...

சூப்பர் ஜலீலாக்கா. இங்கு ஒரு பாகிஸ்தான் கேர்ளைச் சந்தித்தேன், பெருநாளுக்காகப் போட்டவவாம், இரு கைகளும் நல்ல சிகப்பாக அழகாக இருந்துது மெகந்தி.

பிலஹரி:) ) அதிரா said...

//ஆனால் ஆண்கள் இபப்டி போடு வது எனக்கு பிடிக்கல, அதான் இப்படி ஒரு பதிவு,//

ஜலீலாக்கா, நீங்க எந்தக் காலத்தில இருக்கிறீங்க? சினிமாவில மேக்கப் போட்டுவிடுவதெல்லாம் ஆண்கள்தானாமே.

Jaleela Kamal said...

அதிரா அது சினிமாவில்

ஹுஸைனம்மா said...

அக்கா, சாதியா போட்ட டிஸைன் அட்டகாசம்!! கையால போட்டதா, இல்லை இப்ப அதுக்குன்னு டிஸைன் பேப்பர்கள் கிடைக்குதே, அத வச்சு போட்டதா? ஒவ்வொண்ணும் பெஃபெக்டா இருக்கு அசத்தலா!!

சாந்தி மாரியப்பன் said...

ஸாதியா போட்டிருக்கும் டிசைன் ஜூப்பர் :-)

ஹுஸைனம்மா said...

கொஞ்சம் செலவும், நேரமும் அதிகம் ஆனாலும், பார்லர்களில் அல்லது வீடுகளில் பெண்களிடம் போட்டுக் கொள்வதே நல்லது. சில அசௌகரியங்கள் தவிர்க்க முடியும்.

ஸாதிகா said...

ஒரு ஜோடிகைகளுக்கு மட்டும் போடுவதற்கு 700 ரூபாய் சார்ஜ்.விஷேஷ தினமென்றால் இன்னும் ரேட் அதிகம்.இதற்கு நாமே கற்றுக்கொண்டுவிடலாம்.

ஜெய்லானி said...

மெஹந்தி டிஸைன்ஸ் எல்லாமே அழகா இருக்கு :-)

ஜெய்லானி said...

நாகரீகமுன்னு நினைச்சி சில அனாச்சாரங்களும் நடந்துகிட்டுதான் இருக்கு ? அவசர உலகில நிறைய பேர் இதை நினைப்பதில்லை :-)

கானல் நீர் ...!!

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஜலீலாக்கா...

முதல்ல அந்த மருதாணி டிஸைன்க்கு ஒரு அப்ளாஸ்//

கழுவிய பிறகு உள்ள போட்டோவும் போட்டு இருக்கலாம்..

ப்ரிண்ட் பண்ணுனமாதிரியே இருக்கு...

நீங்க ட்ரை பண்ணுனதும் நல்லா இருக்கு..நீங்களே ஏன் நலல இல்லன்னு சொல்ரீங்க...அப்டித்தா இருக்கும் நாம ட்ரை பண்ணுரது அதுதா அழகு//

நாம ஒன்னும் ப்ரொஃபஷனல் இல்லதானே..

இந்த தெருவோர ஆண்கள் மருதாணி,பலருக்கும் சகஜமான விசயம்..ஆனா எனக்கு துளியும் உடன்பாடு இல்லை..

அன்புடன்
ரஜின்

ஆமினா said...

எதுசரி எது தப்புன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்லுவேன்னா....??????........

இல்லல்ல.......... நான் சொல்லல.....


டிசைன் நல்லா இருக்குக்கா...

RAZIN ABDUL RAHMAN said...

அனானி தொல்லை உங்களுக்குமா??

அதுசரி..யாரத்தா இவனுங்க உட்டுவச்சானுக...

Angel said...

சாதியா போட்ட டிசைன் அபாரம் .உங்க டிசைனும் அழகு ஜலீலா .
இங்கே பாகிஸ்தானிய தோழி கிட்டதான் நான் போட்டுப்பேன் .
டிஸ்கி ......ஹா ஹா ஹா .
நானும் பார்த்தேன் தி நகர்ல .நான் இருட்டில பார்த்ததில் ஏதோ ஜோசியம் பாக்கிரங்கன்னு முதல்ல நினைச்சுகிட்டேன்

பிலஹரி:) ) அதிரா said...

//அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். உங்கள் பின்னூட்டம் தான் என் அடுத்த பதிவுக்கு பூஸ்//

என்னாது பூஸ் ஆஆஆஆஆஆ?:))))

மாய உலகம் said...

யாரோ ஒரு முகம் தெரியாதவன் மெகந்தி போட்டு விடுகிறன், சின்ன சின்ன பதின்மவயது பெண்களும், கல்லூரி பெண்களும் இபப்டி ஒட்டி உட்கார்ந்து போட்டு கொள்வதை பார்த்தாலே முகம் சுளிக்க வைக்கிறது.//

அட... உண்மை தாங்க... என்ன இருந்தாலும் மனதை பிசைய செய்கிற காரியந்தான்....சரியாக சொன்னீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

athira said...
//ஆனால் ஆண்கள் இபப்டி போடு வது எனக்கு பிடிக்கல, அதான் இப்படி ஒரு பதிவு,//

ஜலீலாக்கா, நீங்க எந்தக் காலத்தில இருக்கிறீங்க? சினிமாவில மேக்கப் போட்டுவிடுவதெல்லாம் ஆண்கள்தானாமே.//

ஆஹா... இதெல்லாம் தெரிஞ்சிவச்சிருக்கீங்களா... இருங்க போய் தேம்ஸ்ல முதலைக்கிட்ட சொல்றேன்....ஓடறா மாயா

இமா க்றிஸ் said...

//உங்கள் பின்னூட்டம் தான் என் அடுத்த பதிவுக்கு பூஸ்// [_00_] ஒழுங்கா பாருங்க அதீஸ்; அது பூட்ஸ்ஸ்.. ;)))))))))

பித்தனின் வாக்கு said...

good design. good article

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா
சாதியா அவளே இழ்டத்துக்கு போடுவது தான்
எல்லாமே நல்ல இருக்கும், கொஞ்சம் அவசர பட்டு நான் என் உள்ளங்கையிலும், மேற்புறமும் வைத்து விட்டேன் இல்லை என்றால் அவளே போட்டு விட்டு இருப்பாள்.

Jaleela Kamal said...

உஙகள் பாராட்டுக்கு மிக்க நன்றி அமைதிச்சாரல் ப்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா
700 ரூபாயா இது வரை எங்க வீடுகளில் பார்லர் போய் வைத்ததில்லை
வீட்டிலே தங்கை பெண்கள், நாத்தானார் பெண்கள் எல்லாம் சூப்பரா போடுறாஙக்//

Jaleela Kamal said...

சகோ ஜெய்லானி வருகைக்கும் கருத்திருக்கும் மிகக நன்றி

Jaleela Kamal said...

ஆம்மாம் ஹுஸைனாம்மா
நீங்க சொல்வது முற்றிலும் சரியே, மருதாணி வைக்கும் போது எப்படி எப்படியோ உட்காரவேண்டி வரும், எப்படி தான் ரோட்டில் இபப்டி உட்காருகிறார்களோ?
கருத்திற்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சகோ ரஜின் வாங்க ,
சலாம்

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

இன்னும் மருதானி படங்கள் இருக்கு, இது போட வந்த் பதிவு விடியோ வால் திசை மாறிபோய் விட்டது
அடுத்து வரும்

வருகைக்கு மிக நன்றி

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

எனக்கும் மருதாணி ரெம்ப பிடிக்கும்
டிசைனெல்லாம் வைக்க தெரியாது.
நாமளும் உங்கள மாதிரித்தான்.

அழகாக இருக்கு.

Jaleela Kamal said...

ஆமினா இப்படி எஸ்கேப்பு ஆனா எப்பூடி

Jaleela Kamal said...

ரஜின்.
, அனானி ஆமா ரஜின் அது ரொம்ப நாள என் மேல காண்டு
என்ன பண்னட்டும் இது போல சமைக்கமுடியலைஅய ந்ன்னுதெரியல அதான் பொறாம பிடிச்ச கமெண்ட்

நானும் தோல் தட்டி எலே யாரு லே அந்த அனானி தைரியம் இருந்த சொந்த் பேருல வாலேன்னு

இதுகளுக்கு பதில் சொல்வதால் நம் டைம் தான் வேஸ்ட்

Jaleela Kamal said...

ஏஞ்சலில் உங்கள் வருகைகு மிக்க நன்றி
ஹாஹா
ஜோசியம் பாக்குராஙகன்னா நினைச்சீங்க சரியா போச்சு போங்க

Jaleela Kamal said...

ஆமாம் பாக்கிஸ்தானிகள் ரொம்ப அருமையா போடுங்க,,

Jaleela Kamal said...

அதிரா ஒரே பூஸோடு சேர்ந்து சேர்ந்து பூஸ்ட் கூட பூஸா தெரியுதா உஙக்ளுக்கு,,

Jaleela Kamal said...

மாய உலகம் நீங்களாவது நான் சொல்லவந்தத புரிந்து பதில் போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

இமா என்ன பூட்ஸ் ஆ

Jaleela Kamal said...

வாங்க சுதாகர் சார் நைச்சா வந்து எட்டி பார்த்துட்டு போன மாதிரி இருக்கு,
பரவாயில்லை மறக்காமல் வந்து கமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம்
ஆயிஷா
எனக்கு டிசைனே வராது இத்தன வருட காலம் முதல தொப்பி வைத்துவிடுவேன் அபப்ரம் தெரிந்த கிறுக்கல்கள் தான்
இப்ப சீரியஸா டிசைன் போட கத்து கொண்டே ஆகனும் என்று போட்டு பார்த்தது.

Asiya Omar said...

மருதாணி டிசைன் சூப்பர்.மருதாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது?

பித்தனின் வாக்கு said...

நைச்சா வந்து எட்டி பார்த்துட்டு போன மாதிரி இருக்கு,

ada ithu enna kodumai. nan time kidaikkum pothu ellam pathivarkal pathivai padikkinren.

un pathivukalaiyum vidamal padiththuk konduthan irukken.

Vikis Kitchen said...

Lovely designs....Your nephew did a good design and so are u.
Well said akka. These girls are not supposed to do like this....disgusting! I love to draw mehendi :) Recently some people invited me to do it in a large party and I refused to give my name, as we Indian women won't touch other men to draw the mehendi....good that no one mistook me for not doing that:)

Anonymous said...

மேசை ஒன்று வைத்து அதில் கையை வைத்து ஆண்கள் போட்டுவிடுவதைப் பாத்திருக்கேன். இப்படி பெண்கள் மடியில் கை வைத்து போடவே கொடுப்பேனா தெரியாது. இதில் ஆண்கள் என்றால் , பெரிய நோ என்று நினைக்கிறேன். ஆனாலும் கொடுப்பதில் தப்பு என்று தோன்றவுமில்லை. என்ன கஷ்டத்தில வேலை செய்கிறார்களோ என்னவோ. பாவம். ஒவ்வொருவர் ஷூவிலும் இருந்தால் தான் அவங்க கஷ்டம் புரியும். இந்த வேலை தான் செய்ய வேணும் என்றில்லை என்றும் சிலர் சொல்வார்கள். நல்ல வேலை கிடைத்தவர்களோ, அல்லது இஷ்டமில்லாத வேலை செய்ய வேண்டிய நிலை இல்லாதவரக்ளோ வரம் கிடைத்தவர்கள். மற்றவர்களுக்கு அப்படி இல்லை. அதனால் முடிஞ்ச வேலை செய்கிறார்கள். அந்த கோணத்தில் பார்க்கலாமே.

முன்ன எல்லாம் அம்மா வாங்கித்தரும் போது எதுவும் தெரியவில்லை. பட் இப்ப நானே ஷொப்பிங் போகும் போது சில விடயங்களில் உடன்பாடில்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. உதாரணத்துக்கு, உள்ளாடைகள் வாங்கும் இடங்களில் பெண்கள் இருந்தாலும் கஷ்யர் இடத்தில் பெண்கள் தான் வேணும் என்று கேட்க முடியாதே. சில சமயம் பெண்களே இல்லாமலும் கவுண்டர் இருக்கும். இல்லாவிட்டால் பெண் பில் போட ஆண் பாக் பண்ணுவதும் நடக்கும். முதலில் எரிச்சலாக இருந்துச்சு. பிறகு பழகிடுச்சு. சில விடயங்களை ஒன்றும் செய்ய முடியாது. கொஞ்சம் அன் ஈசியாக இருக்கும். பெண்கள் பையில் போட்டு கொடுத்தாலும் அந்த அன்-ஈசினெஸ் இருக்கும். கொஞ்ச நாட்களில் பழகிடும்.

படம் எடுக்கற ஆண்கள் கூட தொட்டு திருப்பும் போதோ, டாக்டரிடம் காட்டும் போதோ தப்பாகத் தோன்றுவதில்லையே. பெண்கள் எல்லாவற்றிற்கும் கிடைத்தால் சந்தோசம். பட் எப்பவுமே அப்படி கிடைக்கும் என்று சொல்ல முடியாதே.

டான்ஸ் மாஸ்டர்ஸ் சில வேளைகளில் தொட்டு பழக்குவார்கள். அப்போது குருன்னு சொல்லிக்கிறோம்.
பஸ்ஸில போகற போது ரெயினில போகுற போது எல்லாம் கூட இடிவாங்கறோம். அதை சகிச்சுக்கொள்றோம். பொதுவாக ஃபொஸ்ட் எயிட், ஃப்யர் ஸ்குவாட் எல்லாம் ஆண்கள் நிறைந்தது. காப்பாத்தும் போது ஆண் என்பதால் வேண்டாம் என்று மறுக்கப் போவதில்லையே. சந்தர்ப்பம் சூழ்நிலையை வைச்சு நாமலே நமக்கு இது ஓக்கேன்னு சொல்லிக்கிறோம். இல்லையா?

இந்த ஆண்களிடம் கொடுப்பேனா என்றால், பெரும்பாலும் மாட்டேன் தான். ஆனால், அவங்க போடற டிசைன் ரொம்பவே அட்டகாசமாக இருக்குன்னா, மே பி கையை நீட்டலாம். இல்லையேல் அவங்க வீட்டு நிலையைக் காணக் கிடைத்தால் கூட கையை நீட்டலாம்.

Anonymous said...

மே பி கொஞ்ச நாட்களில் உங்களோட மனசில மாற்றம் வரலாம். எதுக்கும் சரி தப்புன்னு சொல்ல அளவுகோல் இல்லை. பட், கொஞ்சம் செக்கன்ட் தாட் கொடுத்தீங்கன்னா சந்தோசம்.

Anonymous said...

இந்த வீடியோல நரேட் பண்ணற பொண்ணு மூஞ்சில குத்தனும் மாதிரி இருக்கு. ஏதோ ப்ரொஸ்டிடியூசன் பண்ணற மாதிரி நரேட் பண்ணுவது கடுப்பாக இருக்கு.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா