இஸ்லாமிய இல்லங்களில் தயாரிக்கும் டிபன் வகைகளில் சேமியா பிரியாணி எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான ஒன்று. கல்யாண விஷேஷங்களில் கண்டிப்பா ஒரு நாள் மட்டன் சேர்த்து செய்யும் சேமியா பிரியாணியும் உண்டு. வீட்டில் தினசரி டிபனுக்கு காய்கறிகள் சேர்த்தோ, கீமா சேர்த்தோ , முட்டை சேர்த்தோ செய்யலாம்.
இதை சிக்கன் மற்றும் இறாலிலும் செய்தால் எல்லா வகைகளும் மிக அருமையாக இருக்கும்.
வெளிநாடுகளில் சமைத்து சாப்பிடும் பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்.
தேவையானவை
சேமியா – கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – முக்கால் தேக்கரண்டி
பச்சமிளகாய் - ஒன்று
முட்டை – இரண்டு
கொத்துமல்லி தழை – சிறிது
எண்ணை – ஒரு மேசை கரண்டி
நெய் – அரை தேக்கரண்டி
பட்டை – ஒரு அங்குலம் அளவு ஒன்று
செய்முறை
1.சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ளவும்
2. எண்ணையை காயவைத்து பட்டை சேர்த்து வெடிய விட்டு அதில் வெங்காயம் சேர்த்து வதக்க்வும்.
3. பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கி தக்காளி தயிர், மிளகாய் தூள், உப்பு தூள்,கொத்துமல்லி தழை சேர்த்து கிளறி பச்சமிளகாயை இரண்டாக ஒடித்து போட்டு சிறிது நேரம் வதங்க விடவும்.
4. தண்ணீர் ஒருகப்புக்கு ஒன்னறை வீதம் (கால் கிலோ என்பது ஒன்னேகால் கப் இருக்கும், இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுகொதிக்கவிட்டு சேமியாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
5. கடைசியாக முட்டையை ஊற்றி 5 நிமிடம் தீயின் தனலை குறைத்து சிம்மில் வைக்கவும்.
6. முட்டை வெந்து பாதி சேமியாவுடன் கலந்து. மஞ்சள் கரு முழுசாக வெந்து நிற்கும், தேவை பட்டல் இரண்டாக வெட்டி விடலாம்,
எக் சேமியா ரெடி.
குறிப்பு: காலை டிபனுக்கும் , லஞ்ச் பாக்ஸ்க்கும் ஏற்ற உணவு.
பேச்சுலர்ஸ் பிரியாணி டோஸ்ட்
இறால் காய்கறி சேமியா
சேமியா கேசரி
20 கருத்துகள்:
Super akka... Semiya recipeku nanri..:)
Reva
மிகவும் அருமையாக இருக்கு..
Looks great and yummy friend:)
ரொம்ப எளிமையானதாக இருக்கே
தேவைப்படும் நோட் செய்துகிட்டேன்
சாப்பிட்டு இருக்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
ரேவா
வாங்க மேனகா உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
வாங்க சரஸ்வதி ரொம்ப நாட்கள் கழித்து வந்து இருக்கீங்க
கருத்துக்கு மிக்க நன்றி
சகோ ஜமால் உங்கள் தொடர் ஊக்கத்துக்கு மிக்க நன்றி
நோட் பண்ணியாச்சா. ம்ம் செய்து பார்த்து சொல்லுங்கள்
சே.குமார் உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
assalamu alaikkum
arumaiya irukku. palaiya template varaliyaa?
பிளாக் திரும்ப வந்தாச்சா வாழ்த்துக்கள் :-)
ப்ளாக் சரியாகிடுச்சா ஜலீலா நாலஞ்சு நாளா என்னை உள்ள விட மாட்டேன்னு சொல்லிச்சு ,.
எங்கம்மாக்கு இந்த சேமியா ரெசிபிஸ் எல்லாமே பிடிக்கும் .நானும் செய்து பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி சகோதரி!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பகிர்வுக்கு நன்றி சகோ
இப்படிக்கு
சவூதி பேச்சுலர் சங்கம்
சுலபமாக செய்யக்கூடிய டிபன்.நன்றி பகிர்வுக்கு ஜலி.
வா அலைக்கும் சலாம ஆயிஷா
பழைய டெம்லேட் வைத்தா மறுபடி வைரஸ் வருமான்னு தெரியல.
ஆமாம் ஜெய்லானி பிலாக் திரும்ப வந்துடுச்சி நன்றி
Oh luvly recipe Jamal.If U twist this recipe slightly -Will get Spanish Omelette.Luv ur entertaining and useful posts here.U have a fabulous blog here.Following U.
டேஸ்ட்டி குறிப்பு.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா