Tweet | ||||||
Saturday, September 10, 2011
பர்கர் சாண்ட்விச் - Burgar Sandwich
பர்கர் இது விரும்பாதவர்களே கிடையாது.இப்ப எங்கு பார்த்தாலும் பிக் பஜார் களில் Mcdonal's உண்டு இது போல் செய்து கொடுத்தால் Mcdonalds சில் சாப்பிட்ட எபக்ட் கிடைக்கும்.இதனுடன் பிரெஞ்ச் ஃப்ரைஸ், ஒரு ஜுஸ் கொடுத்துட்டா போதும் பிள்ளைகள் உங்களை வாழ்த்தி வாழ்த்தி சாப்பிடுவாங்க பாஸ்புட்
என்றால் இப்ப அனைவரும் ஈசியா சாப்பிட்டு முடிக்க இது போல் பர்கர் , நக்கெட்ஸ் சாண்ட்விச்கள் தான்.
இது ரெடிமேட் தான் ஆனால் அதை முறையாக செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும். பிள்ளைகள் விரும்பும் வண்ணம் அழகாக செய்து கொடுத்தால் இன்னும் நல்ல இருக்கும்.
தேவையானவை
சாதியா ரெடிமேட் பர்கர் பாக்கெட்
வட்ட வடிவமான எள் பன் - 4
பட்டர் - பன் பொரிக்க
சாண்ட்விச் மயானஸ்
டொமேட்டோ கெட்சப்
கேரட்
குகும்பர்
செய்முறை
இது சில பேர் பொரிக்கும் போது அப்படியே நிறைய எண்ணையை வானலியில் ஊற்றி முழ்க பொரித்து எடுத்தால் அந்த எண்ணையில் இதில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் உருகி அடுத்ததா அந்த எண்னைய பயன் படுத்த கூட முடியாது.
முதலில் எல்லா பன்களை நட்வில் கட் செய்து இருபுறமும். பட்டரை தடவி தோசை தவ்வாவில் கருகாமல் சூடு படுத்தி கொள்ளவும்.
அதே தவ்வாவில் சிறிது எண்ணை + பட்டர் ஊற்றி (ஒரு பாக்கெட்டில் 4 பர்கர்கள் இருக்கும்) நான்கையும் போட்டு கருகாமல் இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
பன்னில் ஒருபக்கம் கெட்சபும், மறுபக்கம் சாண்ட்விச் மனானசும் தடவி, ஒருபக்கம் வட்ட வடிவமாக அரிந்த கேரட்டும் மறு பக்கம் வட்டவடிவமாக அரிந்த குகும்பரரையும் வைக்கவும்.
அடுத்து பொரித்த பர்கரை நடுவில் வைத்து இரண்டு பன்களையும் முடவும்.
.
குழந்தைகளுக்கு ஈசியாக எடுத்து சாப்பிடும் படி நான்காக கட் செய்து டிபன் பாக்ஸில் வைக்கவும்.
அப்படியே வைத்தால் குழந்தைகள் எடுத்து சாப்பிடும் அவச்ரத்தில் பர்கர் மட்டும் நழுவி கீழே விழுந்துடும் அப்பரம் ( ஆஹா வட போச்சே)
இதே சேம் Mcdonal's போலவே வேண்டும் என்றால், கேரட் குக்கும்பருக்கு பதில் அமெரிக்கன் கேபேஜ் வாங்கி இதழ் இதழாக பிரித்து. பன்னின் இருபுறமும் சாதா மயானஸை மட்டும் தடவி பன்னின் இடையே கேபேஜை வைத்து இடையே சதுர வ்டிவ சீஸ் ஸ்லைஸ் வைத்து பர்கரை பொரித்து வைத்த பர்கரையும் வைத்து மூடவும்.
தேவைக்கு கெட்சப் தடவி சாப்பிடவும்.
ஆனால் இத்தனையும் செய்ய கொஞ்சம் டைம் ஆகும். மதிய உணவு இரவு உணவு தயாரிப்பதை விட காலை டிபனுக்கு தயாரிக்கும் நேரம் தான் எனக்கு அதிகமாகும். அது சரியாக செட் பண்ணிவைத்து கொடுக்க தான் நேரம் ஆகும்.
அப்பரம் என்ன பிள்ளைகளுக்கு யம்மி யம்மி தான்......
Subscribe to:
Post Comments (Atom)
24 கருத்துகள்:
இங்கே இந்த பன் கிடைக்காதுக்கா :-(
ரொம்ப நாளா பாவ்பாஜி சாப்பிடணூம்னு ஆச. அதுக்கும் வழி இல்ல. என்ன ஊர் வச்சு நடத்துறானுங்க? :-)
எதுலையும் இணைச்ச மாதிரி தெரியலையே..... அப்பறமா வந்து ஓட்டு போடுறேன்
Super delicious sandwich,simply filling..
ஏன் ஆமினா பேக்கரியில் கிடைக்கும் சாதா பன்னிலே முயற்சி செய்யலாமே?
பிள்ளைகளுக்கு மட்டுமா
எங்களுக்கும்
யம்மி யம்மி தான் ...
ஏன் இப்படி ஒரு சலிப்பு
பாஜி யை வீட்டிலேயே எளிமையாக செய்துடலாம்,
பன் தான் தொட்டு சாப்பிடனும் இல்லையே தோசை, பிரெட் வைத்தும் சாப்பிடலாம் இல்லையா?
evalavu vendumnaalum naan sapiduven.. too good..
ஊரில் இருந்த போது இதை டிரை செய்து பார்த்தேன் . செம சூப்பர் :-)
இறால் , சிக்கன் , மட்டன் வேக வைத்து சைனீஸ் டைப்பில் செய்தால் அப்புறம் பிள்ளைகள் வெளியில் உள்ளதை கேட்கவே மாட்டார்கள் :-)
looks perfect and delicious :)
வருகைக்கு மிக்க நன்றி பிரியா
வாங்க சகோ ஜமால்
பிள்ளைகலுக்கு மட்டும் இல்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவது.
வருகைக்கு மிக்க நன்றி
பிள்ளைகளுக்கு தான் கணக்கு தெரியாம உள்ளே போகும் உங்களுக்குமா>
பேஷ்
வருகைக்கு மிக்க நன்றி
ஜெய்லானி ஊருக்கு போய் எல்லாத்தையும் செய்து அசத்திட்டீங்க போல
அடுத்து ஜெய்லானி டீவியில் வருமா?
கருத்து தெரிவித்தமைக்கு மிக்கநன்றி அருனா
என் மகளுக்கு ரொம்ப பிடிச்ச உணவு .எனக்கு இதுநாள் வரை செய்யவும் தெரியாது .எல்லா பொருளும் கிடைக்கும் செய்து அசத்திடறேன் .பகிர்வுக்கு நன்றி .
nalla payanulla suvayana pathivu
பிச்சா பிடிச்ச அளவுக்கு பர்கர் பிடிக்கலை எனக்கு
இதுவும் பிள்ளைங்களுக்கு ஃபேவரைட்!!
பர்கரை தவாவில் பொரிச்சா, எண்ணெய் வேஸ்டாவது மட்டுமல்ல், ஒருமாதிரி ஸ்டிஃப்ஃபா வளைஞ்சு போய், நடுவுல வேகாதமாதிரி இருக்கும் எனக்கு.
அதனால, நான் அதை டோஸ்டரில்தான் ஃபிரை பண்ணுவேன். சொட்டு எண்ணெய் போதும்; ஸாஃப்டா இருக்கும்; அடுப்பு, பாத்திரமெல்லாம் எண்ணெய் தெறிச்சு அழுக்காகாது.
இப்ப, ஃபாஸ்ட் ஃபுட் அடியோட குறைச்சாச்சு. அதனால் செஞ்சு நாளாச்சு. :-))))
//எல் கே said...
பிச்சா பிடிச்ச அளவுக்கு//
ஏன் எல்.கே., பீட்ஸாவ இப்படிப் பிச்சுப் போடுறீங்க? ;-))))
நீங்க சொன்னமாதிரி, பிள்ளைகளுக்கு டிஃபன்பாக்ஸ்ல என்ன கொடுக்கிறதுன்னுதான் மண்டை காஞ்சுபோயிடும். மற்ற சமையலைவிட இதுக்குத்தான் ரொம்ப மெனக்கெடவும் வேண்டுமாருக்கு.
ஏஞ்சலின் எல்லா பொருட்களும் கிடைத்த வுடன் உங்கள் மகளுக்கு கண்டிப்பா செய்து கொடுங்க, எப்படியும் வாரம் ஒரு முறை செய்ய வேண்டிவரும்.
வாங்க அல்கான் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
ஆமாம் ஹுஸைனாம்மா அதிக எண்னையில் போட்டு பொரித்தால் ஓரம் கரிந்து நடுவில் வேகாத கலர்.
வளைந்தும் போய்விடும்
எனக்கு அத பார்க்கவே பிடிக்காது. அகலமான ஈவனான த்வ்வாவில் கொஞ்சம் பட்டர் கொஞ்சம் எண்ணை பிறகு அது சூடாக சூடாக அதில் இருந்தும் எண்ணைகக்கும்
செய்யும் போது பார்க்க அழகாக இருக்கனும்
பிள்ளைகள் அதை பார்க்கும் போதே கண்ணு விரியனும்
சின்னவன் வந்து கேட்பான் நிறைய பசஙக் என்னை சூழ்ந்து கொண்டாங்க எல்ல்லாத்துக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்தேன்
மதியம் சாப்பிட அதே வைக்கிறீங்கலான்னு கேட்பான்
எல் கே வாங்க ரொம்ப மாதம் கழித்து வந்து இருக்கீங்க
ரொம்ப சந்தோஷம் ஹுஸைனாம்மா ஏன் பிட்சாவா பிச்சி ட்டீங்கன்னு கேட்கிறாஙக் பாருஙக்.
பிட்சா ( வெஜ்)தான் அடுத்த குறிப்பில் போட்டுட்டேன் பாருங்கள்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா