Showing posts with label ஆறுதல் பரிசு. Show all posts
Showing posts with label ஆறுதல் பரிசு. Show all posts

Thursday, June 25, 2015

ஏன் ஹிஜாப்" - பரிசுப் போட்டி - ஆறுதல் பரிசு


ஏன் ஹிஜாப்" - பரிசுப் போட்டியின் முடிவுகள் மற்றும் வெற்றியாளர்கள் அறிவிப்பு

உலக ஹிஜாப் தினம் - February 1st World Hijab Day - மெகா பரிசு போட்டி

இஸ்லாமிய பெண்மணி நடத்திய "ஹிஜாப் ஏன்' என்ற கட்டுரை , பிப்ரவரி 1ம் தேதி உலக ஹிஜாப் தினத்தை ஒட்டி நடந்த கட்டுரை போட்டியில் எனக்கும் ஒரு ஆறுதல் பரிசு. மிகவும் சந்தோஷம்.

(மேலே உள்ள சுட்டியை  சொடுகி விபரம் அறிக)

முதல் பரிசு வென்றவரின் ஆக்கம் இதோ இந்த இனைப்பில் சென்று தெரிந்து கொள்ளலாம்.


46 கட்டுரைகளில்  முதல் முன்று இடங்கள் தவிர்த்து அடுத்து உள்ள ஆறு கட்டுரைகளுக்கு ஆறுதல் பரிசு அதில் என் கட்டுரையும்  தேர்வு செய்யப்படுள்ளது.

சென்னை ப்ளாசா சார்பாக ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு மேலே படத்தில் உள்ள பெரிய ஷால்( துப்பட்டா) பரிசாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனக்கும் சென்னை ப்ளாசா சார்பாக ஒரு ஷால் பரிசாக கிடைத்துள்ளதுள்ளது.


  •  முதல் பரிசான ரூபாய்.7000/-த்தை  தட்டி செல்லும் அந்த அதிர்ஷ்ட நபர்: 
  •  இரண்டாம் பரிசான ரூபாய்.4000/-த்தை தட்டி செல்லும் அந்த வெற்றியாளர்:
                           

          தனக்கு சம்மந்தமில்லாத தலைப்பு என்று ஒதுங்காமல் சிறப்பாக எழுதி                 இராண்டாம் இடத்தை வென்றவர் ஒரு ஆண் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
  • முஸ்லிமல்லாதவர்களுக்கான பிரத்யோகமாக ஒதுக்கப்பட்ட மூன்றாம் பரிசான ரூபாய். 2000/-த்தை  வென்றவர்:                                                                                        

அடுத்ததாக ஹிஜாபினைப் பரிசாக பெரும் ஆறு நபர்களின் வெற்றிப் பட்டியல்:
http://www.islamiyapenmani.com/2015/03/blog-post_30.html
  1.  சகோதரி ஆசியா 
  2. சகோதரி பிஸ்மி ஜொஹரா 
  3. சகோதரி  ஜலீலா  கமால் 
  4. சகோதரி சில்மியா பானு 
  5. சகோதரர் ஷேக் நஸ்ருதீன்  
  6. சகோதரி உம்மு உமாரா  

இது வரை நான் இஸ்லாமிய கட்டுரைகள் போட்டிக்கு எழுதியத்தில்லை.
இங்கு பிளாகில் அரபு நாடுகளில் பெண்கள் தொழுகை பற்றி மட்டும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து உள்ளேன், தேனக்காவின் வலை தளத்திலும் கெஸ்ட் போஸ்டாக கொடுத்துள்ளேன்.
இது தான் போட்டிக்கு என்று எழுதிய முதல் கட்டுரை.


கிழே உள்ளது நான் எழுதிய கட்டுரை

ஹிஜாப் ஏன்?

ஹிஜாப்/புர்கா/பர்தா

 ஹிஜாப் (hijab ) என்னும் வார்த்தை அரபியின் ஹஜபா ( hajaba) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. ஹஜபா என்றால் பார்வையில் இருந்து உடல் கன பரிணாமங்களை (conceals a figure) மறைத்துக் கொள்வது என்ற பொருள்படும்.

ஹிஜாப் உடையில் பல இரகங்கள் உள்ளது. 

அபயா (Abaya) Burka நம் உடுத்தும் ஆடை மேல் 

அணியும் தளர்வான முழு ஆடை தான் ஹிஜாப்

உலகில் உள்ள அனைத்துமுஸ்லீமான
 பெண்களும் ஹிஜாபை பேணுதல் வேண்டும். 

ஹிஜாப் என்பது உடல்முழுவதும் மறையும் படிஆடை அணிவதாகும்,

முழுமையான ஹிஜாப் அணிவதன் மூலம் வெயில்காலத்திலும், பனிக்காலத்திலும், கயவர்களிடம் இருந்தும், தீய பார்வைகளில்இருந்தும் நாம் காக்கபடுகிறோம்.
ஒரு ஹிஜாபை பேணும் பெண் சிப்பிக்குள் முத்து  எப்படியோ அது போல் பாதுக்காப்படுவாள்.

உங்கள் நகை சொத்து , ஏட்டியம் கார்ட் இதேல்லாம் பிறர் கண்ணில் படும் படி வைப்பீர்களா? ஒளித்து தானே வைப்பீர்கள் அதுபோல் தான் ஹிஜாப்.

இப்போது விலை உயர்ந்த மொபல் போனுக்கு ஏற்றார் போல் அதுக்கு அழகிய கவரை  தேடி தேடி வாங்கி மாட்டுகிறோம். ஏன் அந்த விலை உயர்ந்த மொபைல் பாழாகிவிட கூடாது என்று தானே? அதை போல் தான் பெண்கள் ஹிஜாபை பேணுவதும்.

ஒரு இஸ்லாமிய பெண்மணியின் அழகு அவளுக்கே சொந்த மான அவள் கணவனுக்காக மட்டும் தான், இந்த உலகுக்கு அல்ல.
ஹிஜாப் அணிந்து சென்றால் எங்கு சென்றாலும் நாம் பாதுக்காக்கப்படுவோம்.



இறுக்கமான ஆடை அணிவதையோ  உடல் முழுவதும் கவர் பண்ணுகிறேன் 
என்று மெல்லிய ஆடை அணிவதையோதவிர்க்கவேண்டும். நம் அங்கங்களை மறையும் படி ஆடை அணியவேண்டும்.

ஹிஜாப் உலகில் உள்ள ஓவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு, நம் மானத்தை காக்கிறது. முழுமையான ஹிஜாப் அணிவதன் மூலம்வெயில்காலத்திலும், பனிக்காலத்திலும், கயவர்களிடம் இருந்தும், தீய பார்வைகளில் இருந்தும் நாம் காக்கபடுகிறோம்.

பெண்குழந்தைகளுக்கு சிறிய வயதில் இருந்தே அவர்களை நாகரீக உடை அணிந்து அழகு பார்க்காமல் முழுமையான ஹிஜாபைபேணூம் வ்ண்ணம் ஆடை அணிய கற்று கொடுக்கவேண்டியது ஓவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.


//ஒரு சின்ன சம்பவம்: ரோட்டில் தினம் நடந்து செல்லும் போது வண்டிகள் அதிகம் வரும் என்று சின்ன குறுக்கு சந்தில் நுழைந்து செல்வேன், தினம் அந்த வழி தான் செல்வேன், அங்கு நிறைய கம்பேனிகளில் பின்புற வழி, சிலர் கண்டெயினரில் சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள், சிலர் போர்க் லிஃப்டில் அட்டை பெட்டி சாமான்களை ஏற்றி கொண்டு இருப்பார்கள், சிலர் கூட்டமாக பேசி கொண்டு இருப்பார்கள். நான் எதுவுமே என் கண்ணில் படாது நான் இரவு உணவுக்கு என்ன தயாரிப்பது, அடுத்த வேலைகள் என்ன என்ன இருக்கு லான்ட்ரி, கடைக்காக என்ன செய்யனும், யாருக்கு போன் செய்யவேண்டி இருக்கு என அதை பற்றி யோசித்து கொண்டு செல்வேன், திடீருன்னு ஒரு நாள் நடந்து கொண்டு அதே வழியில் போய் கொண்டு இருக்கும் போது அந்த அனைத்து நினைவுகளும் கலைந்து ரோட்டில் கவனம் சென்றது.ஐய்யோ இத்தனை பேர் மத்தியிலா  நடந்து போகிறோம் என் திடுக்கிட்டாலும் , ஆம் நாம் தாம் முழு ஹிஜாபில் இருக்கிறோமே என்ன பயம் என்று சட்டுன்னு ஒரு பெரிய தைரியம் அதுவும் ஒரு மாஹாராணி போலவே நான் நடந்து செல்வதை போலவும் உற்சாகமாக நடந்தேன், ஹிஜாப் அணிந்துசெல்வதின் பலனையும் முழுமையாக உணர்ந்தேன். இதே அரை குறை ஆடையில் சென்றிருந்தால் அனைவரின் பார்வையும் என்னை நோக்கி தான் இருந்திருக்கும். அன்று அந்த நிமிடம் அல்லாஹ்வே உலகில் உள்ள முஸ்லீம் பெண்களும் தங்கள் ஹிஜாபை முழுமையாக பேண கிருபைசெய்வாக என்று துஆ கேட்டு கொண்டு மீண்டும் என் நினைவுகளுடன் வீட்டைநோக்கி நடந்தேன்.//

///1.நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் 
கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
அல் குர் ஆன் (33: 59) ///


2. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு,நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
 அல் குர் ஆன்  ( 24: 31).

ஆக்கம்
ஜலீலாகமால்

துபாய்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, March 23, 2015

Radio Salaam Ladies Day - Sambar Competition - சாம்பார் போட்டி - ஹையா பரிசு வாங்கியாச்சு



Radio Salaam Ladies Day Out Family event which happened no 20th March. 

ரேடியோ சலாம் மகளிர் தினம் கொண்டாட்டம்





பிலாக்கில் ஈவண்டுகளுக்காக  போஸ்ட் செய்து நிறைய பரிசுகள் வாங்கி இருந்தாலும் மேடையில் வாங்கும் முதல் பரிசு இதுவே, அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.


ரேடியோ சலாம், 
https://www.facebook.com/radiosalaam1065/photos/a.734108473335104.1073741828.734107146668570/812395945506356/?type=1&theater
Ladies Day out - cookery competition - Sambhar.
ஆபிஸ் போற வழியில மட்டும் தான் ரேடியோ கேட்கமுடியும். இந்த சாம்பார் போட்டியை சொல்லி கொண்டே இருந்தாங்க. வெள்ளி மட்டும் தான் விடுமுறை, அன்று முழுவதும் சென்னை ப்ளாசா வேலைகள் , போகலாமா வேண்டாமா? போனால் ஒரு நாள் வேஸ்டாகிடுமே என்று நினைத்து கடைசியில் சரி சாம்பார் தானே ரொம்ப டென்ஷன் எடுக்கல எப்பவும் செய்வது போல் செய்துட்டு மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு போனோம். 
27 பெண்கள் சாம்பார் செய்து கொண்டு வந்தார்கள் , அதில் 7 பேரை செலக்ட் செய்து நான் 5 வது ஆச்சி மசாலா கிஃப்ட் பேக் ஒன்று பரிசாக கொடுத்தார்கள்,





Key Events on Radio Salaam Ladies Day Out 2015!
1. Sambhar Competition
Participants to bring in their pre-cooked Sambhar and display it to our judges. Categorized with Taste, Presentation and style

2. Mrs UAE Pageant
UAE’s first show to choose the most talented, bold, well informed, ambitious, motivated, enthusiastic woman. Beauty is a thing seldom seen. It is held by all within the soul it lies, waiting to come out to the surface. Competition is held in three rounds. Women to dress up in their best ethnic wear!

· Round One – Fashion Walk.
We lend you the stage and you show us the walk that will impress the judges

· Round Two – Smart Lady
This goes without saying, no pageant runs without asking questions and checking the smartness. Are you the smart lady?

· Round Three – Talent show
You can gladly choose to sing or dance or juggle the bottles, up to you. Make sure you impress the judges.

3. Pattimandram
Topic: Women today prefer to have good-looking men as their life partners / Women today prefer to have intelligent men as their life partners.

4. Activities for men (husbands) and children
Dialogue delivery, singing contests and many other games and prizes family members!

It is going to be a definite family entertainer!






 ஏழு கறி சாம்பார் /காய்கறி சாம்பார்                                                 20.03.2015


தேவையான பொருட்கள்
காய் வேகவைக்க
பீன்ஸ் - 6
கேரட் - 1
கத்திரிக்காய் - 3
அவரைக்காய் - 6
முருங்கைக்காய் - 1
பூசனிக்காய் – 50 கிராம்++
பெங்ளூர் கத்திரிக்காய் சௌ சௌ (chayote) – 50 கிராம்
தக்காளி பெரியது – 2
சின்ன வெங்காயம் – 10
பச்சமிளகாய் – 2
சாம்பார் பொடி  - முன்று தேக்கரண்டி
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
வெல்லம்  - சிறிது
புளி எலுமிச்சை அளவு – கட்டியாக கரைத்து கொள்ளவும்
பருப்பு வேகவைக்க
துவரம் பருப்பு – 150 கிராம்
வெங்காயம்  - பெரியது ஒன்று
வெந்தயம் – கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி – கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை – 3 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – 20 இதழ்கள்
சின்ன வெங்காயம் – 5
கொத்துமல்லி தழை – சிறிது
அலங்கரிக்க – கொத்து மல்லி தழை

Idli & veg sambhar

செய்முறை
துவரம் பருப்பை களைந்து அதில் ஓன்னறை டம்ளர் தண்ணீர் சேர்த்து வெங்காயம், வெந்தயம், பெருங்காயப்பொடி, 
மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
வெந்த பருப்பை மசித்து வைக்கவும்.
காய் கறிகளை கழுவி அரிந்து அதில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து கொதிக்க 
விட்டு அதில் சாம்பார் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
காய் வெந்த்தும் கரைத்த புளி சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து வெல்லம் மற்றும் வெந்த பருப்பை சேர்த்து கொத்துமல்லி தழை சிறிது கருவேப்பிலை சிறிது தூவி கொதிக்க விட்டு இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாம்பாரில் சேர்த்து இரக்கி கொத்துமல்லி தழை தூவி 
பரிமாறவும்.

குறிப்பு: பருப்பு வகைகளில் மசூர் தால் ,மூங் தால் சேர்த்தும் சாம்பார் செய்யலாம்.
காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு எல்லாவகையான காயும் சேர்த்து செய்தால் காய்களின் சத்து சூப் மற்றும் ஜூஸ் சாம்பாரில் இரங்கி சத்தான தாக இருக்கும்.
.நீரிழிவு நோய்கார்களுக்கு இந்த காய் கறிகளுடன் பாகற்காயைகூட சாம்பாரில் சேர்க்கலாம் கசப்பு தெரியாது



ஆச்சி ராகி பவுடர்
ஆச்சி சில்லி பவுடர்
ஆச்சி பெருங்காயப்பொடி  ( கம கமக்குது)
ஆச்சி சாம்பார் பொடி
ஆச்சி அப்பளம்
ஆச்சி ரவா கேசரி மிக்ஸ்







இது காரைக்கால் சாம்பார் ஆனால் இதில் சுண்டைக்காய் போட்டு சமைத்து இருந்தார்கள் பிரஷ்ன்டேஷன் அழகாக இருந்தது ஆனால் கசந்து விட்டது, நானும் பாகற்காய் போடலாம் என்று இருந்தேன் ,நல்ல வேளை போட வில்லை , என் சாம்பாரும் கொஞ்சம் டேஸ்ட் மாறி இருக்கும்.





அங்க டேஸ்ட் , ப்ரண்டேஷன் & ஸ்டைலுன்னு போட்டு இருந்தார்கள்.
நல்ல செய்துட்டு சரியா ப்ரண்ட் பண்ண தான் எனக்கு வராது. இதில் சாம்பாரில் கவனம் செலுத்த வில்லை, வறுத்து திரித்து செய்து இருக்கலாம் , இல்லை ஆச்சி சாம்பார் பொடி பயன் படுத்தி அந்த கவருடன் கொண்டு வந்து வச்சி இருக்கலாம்.
அங்க வைக்க இடமும் பத்தவில்லை ,

ஆனால் பரிசு பெற்றவர் அங்க ப்ளாஸ்டிக் கண்டெயினர் மூடி வைத்து நம்பர் 1 என்று எழுதி இருப்பதுக்கு தான் முதல் பரிசு. அவங்க எந்த பவுளிலும் வைத்து பிரஷன்ட் பண்ண வில்லை எதன் அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை.


அடுத்து ஒரே வீட்டில் முன்று பேர் முன்று விதமாக செய்து வைத்திருந்தார்கள் அதில் ஒருவர் செலக்ட் ஆனார்கள்.

தெரிந்து இருந்தால் முன்று பேரை நானும் கூப்பிட்டு போயிருப்பேன் ஹிஹி

அடுத்து அங்கு இருக்கும் வடையெல்லாம் வெளியில் விற்பதை வாங்கி வைத்து விட்டார்கள் சாம்பார் மணத்துடன் வடை மணம் தான் அதிகம் அங்கு/





நடுவில் குட்டியாக ஒரு சின்ன கிண்ணம் போல் இருக்கு பாருங்கள் அவங்க அதை தான் வைத்தார்கள் அழகாக ஒரு பவுளில் வைத்து இருக்கலாம்.

Heart Shape Idli



ஹார்ட் ஷேப் ல இட்லி செய்தாலும் செய்தேன் அதை பிள்ளைகள் கிட்ட இருந்து பாதுகாப்பாதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
டிஸ்ப்ளே செய்து எல்லாரும் போய் உட்கார்ந்து விட்டார்கள் என் பிளேட் கடைசில் விழுவது போல் இருந்தது நானும் என் பையனும் மாறி பார்த்து கொண்டு இருந்தோம்.

நுழைந்ததும் முதலில் கார்னரில் இருப்பது என் சாம்பார் பிள்ளைகள் எல்லாம் உடனே இதில் டூத் பிக் சொருகி வைத்து இருந்தேன் , நேர வந்து அந்த அப்படியே  எடுக்க வந்தார்கள், நான் கொஞ்சம் பொறுங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் கொடுத்து விடுகிறேன், இரண்டு பழம் வைத்தேன் ஒருபையன் நே ர வந்து அபேஸ் சரி ஒகே சாப்பிடு என்று சொல்லிட்டேன்.

ஜட்ஜ்கள் வந்து சாப்ப்பிட்டு பார்த்தார்கள் கலக்கி கலக்கி குடிச்சி பார்த்தார்கள்./

அதற்குள் அங்கே பெண்கள் திறமைகள் எல்லாம் ஓவ்வொருத்தராக ஆடி, பாடி, நடித்து , கவிதை சொல்லி, மிஸ் வோல்ட் போல் கேட் வாக் எல்லாம் செய்து காண்பித்தார்கள்,. இடையிலேயே சாம்பாருக்கான வின்னர்களை அறிவித்துவிட்டார்கள், 
நம்பர்  19 ,ஜலீலா கமால், ஜலீலா கமால், ஜலீலா கமால் முன்று முறை ஆடிட்டோரியம் அலற என் பெயரை கூப்பிட்டதும் எனக்கு ஒன்றுமே ஓடல  நேராக மேடையில் போய் பரிசை பெற்று கொண்டேன்.
கடைசி வரை அங்கு இருக்க வில்லை, இருந்திருந்தால் மேடையில் அனைவருடனும் மறுபடி நிற்க வச்சி புகைபடங்கள் எடுத்து இருப்பார்கள்.
ஆனால் மக்ரீப் தொழுகைக்குள் வீடு போய் சேரனும் என்பதால் உடனே கிளம்பிட்டோம்.
போலாமா வேண்டாமா இவர் கூப்பிட்டு போவாரோ மாட்டாரோன்னு நினைத்து கலந்து கொள்ள ஆர்வம் இல்லை , கடைசி நேரத்தில் கலந்து இவர் ஒகே போகலாம் என்றதும் 
, ஒரு தோழி வின் பண்ணுகிறீரோ இல்லையோ போங்க உங்களுக்கு சென்னை ப்ளாசாவுக்கு 4 காண்டாக்ட் ஆவது கிடைக்கும் என்று சொன்னார்கள் 
அதே போல் சில ஆட்கள் அறிமுகமும் ஆனார்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானா?
காலை பத்து மணிக்கு தான் செய்ய ஆரம்பித்தேன், அவசரத்தில் பிரிண்ட் எடுத்த்தில் குறிப்பில் என்ன சாம்பார் பொடி என்று எழுத மறந்துட்டேன்.

Radio salaam




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/