டயட்டுக்கு ஏற்ற சைட் டிஷ், இதில் தேங்காய் எதுவும் சேர்க்கவில்லை.சப்பாத்தி பரோட்டாவிற்கு தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.இதே போல் காலிபிளவரில் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.
கேபேஜ் = கால் கிலோ
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் = அரைதேக்கரண்டி
கொத்துமல்லி தூள் = கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = அரை தேக்கரண்டி(தேவைக்கு)
கரம் மசாலா தூள் = கால் தேக்கரண்டி
கேபேஜை பொடியாக அரிந்து கொள்ளவும்.
வானலியில் எண்ணை விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பொடியாக அரிந்த கேபேஜை சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் முடி போட்டு தம்மில், சிறு தீயில் வேக விடவும்.பிறகு தூள் வகைகளை சேர்த்து (கரம் மசாலா தவிர) மீண்டும் ஐந்து நிமிடம் தம்மில் வேக விடவும்.
கடைசியாக கரம் மசாலா தூவி இரக்கவும்.
//முட்டை கோஸ் என்றாலே யாருக்கும் பிடிக்காது அதை பிரைட் ரைஸ்,KFC சாலட் , கடலை பருப்போடு கூட்டு, முர்தபாவில் , சமோசாவில் எல்லாம் சிறிது சேர்த்து கொண்டால் பிடிக்காதவர்களுக்கு சைலண்டா உள்ளே தள்ளிடலாம்.//
டிஸ்கி: ஸாதிகா அக்காவிற்கு கேபேஜ்ன்னா பிடிக்காதாம் அதான் ஸாதிகா அக்கா இது போல் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
Tweet | ||||||
40 கருத்துகள்:
ஆஹா ஜலி எனக்காக ஒரு ரெசிப்பி போட்டு இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ்.அவசியம் செய்து படத்தை மெயில் பண்ணுகிறேன்.அதென்ன மங்குனியாருக்கு மட்டும் டைனோசர் முட்டை??? எல்லாவித சத்துக்களும் டைனோசர் முட்டை சாப்பிட்டு இன்னும் வீறு கொண்டு பதிவுகளில் முஸ்கி,நஸ்கி,நுஸ்கி,விஸ்கி இப்படி போட்டு பாடாக படுத்திவிடப்போகிறார்.ஜாக்கிரதை.
இதற்கு சரியான பதில் புதுவை சிவா வந்தா தான் சொல்ல முடியும். அவர் தான் சொன்னார்.
இல்லை ஜெய்லானி வந்தாலும் சொல்லலாம்.
எனக்கும் பிடிக்காது தான், ஆனால் எதாவது செய்து உள்ளே தள்ளிடுவாங்க.
இதுவும் செய்ய சொல்றேன்.
அது யாருங்க மங்குனி
டைனோசர் முட்டை - ஹா ஹா ஹா
படிக்கும்போதே, சாப்பிடும் ஆவலை தூண்டி விட்டது, இந்த செய்முறை விளக்கம்.
புது விதமான ரெசிபி டிரை பண்ணி பார்கிறேன்
நல்ல பதிவு சகோதரி...வாழ்க வளமுட்ன.வேலன்.
this is fantastic...i like it
புதுசாதே இருக்கு நானும் ட்ரை பண்ணி பாக்குறேன்...நன்றி அக்கா...அருமை....
அட கோஸ் மசலாவா செய்து பார்க்கிறேன் ஜலீலா நான் கொத்துக் கறி செய்யும் போது இதையும் சேர்ப்பேன் கடலைப் பருப்போடு
//ஆனால் மங்குனி அமைச்சருக்கு மட்டும் ஸ்பெஷலா டயனோசர் முட்டை தான்//
நல்லா பாருங்க மேடம்ஸ்(ஸாதிகாக்கா+ஜலீலாக்கா) டைனோசார் இப்ப இல்ல அதனால கொசு முட்டைல செய்ய சொல்லலாம்.
///Jaleela said...இதற்கு சரியான பதில் புதுவை சிவா வந்தா தான் சொல்ல முடியும். அவர் தான் சொன்னார்.
இல்லை ஜெய்லானி வந்தாலும் சொல்லலாம்.//
ஆமை முட்டை ஓகே...(( அதுதான் சும்மா வத வதன்னு நிறைய போடும்.))
மங்கு பசிக்கு அதுதான் கட்டுபடியாகும்.
(யோவ் மங்கு இணி பசிய கிளப்பிட்டிங்க கமெண்ட் போடுவ )
நானும் இதுல முட்டை சேர்த்து தான் செய்வேன்.நல்லாயிருக்கு அக்கா இந்த குறிப்பு!!
Unique and outstanding recipe, dhum cabbage sounds awesome, I really dislike cabbage, but ur version made me to crave for it:)
இனி மங்குனிக்கு பசிக்காது ஜெய்லானி இப்படியா போட்டு அவரை வாருவது
என்ன ஆமை முட்டை இத கேட்டாலே ம்ங்குனி முட்டையவே மறந்துடுவார்
அக்கா, இந்த ரெசிபில கொத்து கறி , பச்சை பட்டாணி போட்டு சமைத்து சாப்பிட்டாலும் நல்லா இருக்கும்.
ஜலீலாக்கா சூப்பர் ரெசிப்பி. இனிக் கடைகளில் முட்டைக்கோசுக்கு தட்டுப்பாடாகிடும்போல இருக்கே...
அதென்ன ஜலீலாக்கா.. டைனோசர் முட்டையெல்லாம் வினியோகம் பண்ணுறீங்க.. அதிரா கேட்டதுக்கு ஒரு புறா முட்டைகூடத் தரவில்லை:(:(.
நல்லாருக்கு ஜலீலாக்கா..முட்டை சேர்த்து செய்தால் எங்க வீட்டுல முகத்தை சுளிப்பார்.அதனால எக் இல்லாமதான் நான் செய்வேன்.
நல்லா இருக்கு ஜலில்லா, என் பிளாக்கு பக்கம் வருவது இல்லை என்று எதாவது பிரார்த்தனையா?. நான் நீங்க கேட்ட பாகற்க்காய்ப் பிட்ல கூடப் போட்டுவிட்டேன்.
இன்னைக்கு நான் இந்த தம் கேபேஜ்ஜை வைத்து ஒரு காமெடி போட்டுவிட்டேன்.
மங்குனிக்கு இப்ப கொசு முட்டை ஆம்லேட்தான் பேவரைட், ஆதலால் நீங்க கொசு முட்டைகளை இதில் போட்டுக் கொடுக்கவும். நன்றி ஜலில்லா.
நல்ல சுவையான ரெசிப்பி அக்கா,வழக்கம் போலவே,நாக்கு ஊருது,துபாய் வந்தா செஞ்சு தருவீங்களா
//ஸாதிகா said...
ஜெய்லானி said...
பித்தனின் வாக்கு said... //
தோடா இங்க பார்ரா , ஜலீலா மேடம் டோன்ட் ஓரி இதுக்கு நான் ஒரு சின்ன கத சொல்றேன் ,
ஒரு குளத்தில 25 எறும்புகள் குளிதுகிட்டு இருதுச்சு , அப்ப ஒரு யான வந்து குளத்துல தொபுகடீர்னு குதிச்சு , அதுல 24 எறும்புகள் குளத்துக்கு வெளியே வந்து விழுந்துச்சாம் , ஒரே ஒரு எறும்பு மட்டும் யான தலைமேல மாட்டிகிசாம் , அத பாத்து மத்த 24 எறும்பும் சொல்லுச்சாம்.......................
"டே மாப்ள விடாதடா அந்த யானைய ஒரே அமுக்க தண்ணீல அமுக்குன்னு )
அது மாதிரி தான் இதுகளும்...........................
(நாங்கல்லாம் சின்ன வயசிலே சிங்கத்தோட சீட்டு விளையாண்டவுக , இதெல்லாம் சுசூபி ..............)
என்னக்கா நீங்க என் பசிய வேற கலப்பீடீங்க இப்பவே கேண்டீனுக்கு போக வேண்டியது தான். அக்கா ஒன்னு மட்டும் சொல்றேன் பசியா இருக்கிறவன் உங்கள் தளத்தை பார்த்தால் அவ்வளவு தான் அவன் கதை.
Nice dish.
சகோ.ஜமால் , அப்ப ஏதாவது ஒரு டிஷ் செய்து தான் உள்ளே தள்ளுவதா இந்த முட்டை கோசை...
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சைவ கொத்து பரோட்டா//
சாருஸ்ரீ முயற்சி செய்து பாருங்கள்., தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி வேலன் சார்
நன்றி மலர்
சீமான் கனி இது ஈசியாக பேச்சுலர்களும் செய்து விடலாம். தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
ஆமாம் தேனக்கா நாங்கள்(இஸ்லாமிய இல்லத்தில்) மெயினாக செய்வதே கொத்துகறி கடலை பருப்பில் முட்டை கோஸ் தான் ,
இது டயட் செய்பவர்களுக்காக செய்தது, கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
ஆஹா ஜெய்லானிக்கும் மங்குக்கும் தீராத பந்தம் என்று நினைக்கிறேன். இப்ப கொசு முட்டையா?
முதலில் அந்த கொசு முட்டை மங்குனிக்கு பத்துமா?
ஆமை முட்டை ஒகேன்னு நினைக்கிறேன்.
மேனகா முட்டை சேர்த்து செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும். , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
//Unique and outstanding recipe, dhum cabbage sounds awesome, I really dislike cabbage, but ur version made me to crave for it:)//
மலர் காந்தி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
சித்ரா நீங்கள் சொல்வதும் சரிதான், இது அவசரத்துக்கு உடனடி பக்க உணவு.
கருத்து தெரிவித்தமைக்கு மிகக் நன்றி
அதிரா வருகை தந்தமைக்கு மிகக் நன்றி.
ஆம் இனிகடைகளில் முட்டை கோஸ் தட்டுபாடானாலும் ஆகலாம்.
புறா முட்டை எல்லாம் வித விதமான முட்டை சொல்றீஙக் இப்ப எந்த முட்டையில் செய்வதுன்னு கொஞ்சம் குழப்பம்.. ஹிஹி
//நாங்கல்லாம் சின்ன வயசிலே சிங்கத்தோட சீட்டு விளையாண்டவுக , இதெல்லாம் சுசூபி /
அமைச்சரே இந்த டகாலெல்லாம் நான் நம்ப மாட்டேன். எங்கே ஒரு கா எங்களுக்காக சிங்கத்தோடு சீட்டு விளையாடி காட்டுங்க பார்க்கலாம் . அப்ப நான் ஒத்துக்குவேன்.
மகி ஆமாம் நிறைய பேர் முட்டை கோஸ் என்றாலே முக சுளிப்பார்கள், நல்ல இருக்கு என்றீர்கள் செய்து பார்த்து சொல்லுங்கள். மிக்க நன்றி
சுதாகர் சார் நேரமின்மையால் வரமுடியாமல் போய் விட்டது, ஆனால் உங்கள் பக்கத்துக்கு. கண்டிப்பா எப்படியும் வருவேன்.
கடைசியா நீங்க சொன்னதால் மங்குனிக்கு கொசுமுட்டை ஆம்பேட்
தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
பாகற்காய் பிட்லை வந்து பார்க்கிறேன்
சசிகுமார் , வெளிநாட்டில் வாழும் பேச்சுலர்கள் ஈசியாக செய்ய தான் இப்படி சில ரெசிபிகள். ஆஹா எல்லோருக்கும் பசிய கிளப்பி விடுதா?
நன்றி விஜி
முட்டைக்கோஸ் பச்சையா சாலட் மாதிரி சாப்பிடுவேன், சமைச்சது கொஞ்சம் கஷ்டம்தான். ஏதோ நீங்க சொல்றிங்க ட்ரை பண்ணிடுவோம்.
அக்கா எனக்கும் காபேஜ் ரொம்ப பிட்க்கும். வாங்கி வெச்சு இருக்கேன். கட்டாயம் செய்து பார்த்து சொல்லுரேன். நன்றிக்கா.
ஜலீலா அக்கனா அக்காதான். கலக்குரிங்க வாழ்த்துக்கள் அக்கா.
அக்கா, ரெண்டு நாள் முன்னாடி நைட்டு சப்பாத்திக்கு இதைத்தான் செஞ்சேன். வெங்காயம் போட நேரமில்லாம வெறும் கேபேஜ் மட்டுமே வச்சு செஞ்சேன். ஒரியாக்காரர், ஆஹா இதென்ன சிக்கன் புதுசா ருசியா இருக்கேன்னு சொல்லிட்டே சாப்பிட்டார். நான் சப்பாத்திக்கு நடுவில் வச்சு ரோல் மாதிரி தந்ததுல கட்டாயம் ஆஃபீஸுக்கு இப்படி செஞ்சு தர சொல்லிட்டார். அருமையா இருந்தது. இன்னும் காளிஃபிளவரில் டிரை செய்யலை. செஞ்சுட்டு சொல்றேன். :)
ரொம்ப நன்றி :)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா