| Tweet | ||||||
Showing posts with label நேசம். Show all posts
Showing posts with label நேசம். Show all posts
Wednesday, March 28, 2012
சந்தோஷமான பரிசு - நன்றி நேசம் + உடான்ஸ்
நேசம் மற்றும் உடான்ஸ் நடத்திய கேன்சர் விழிப்புணர்வுக்காக நான் எழுதிய புற்றை வெல்வோம் (பெண்களுக்காக) ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது.
நேசம் மற்றும் உடான்ஸ் குழுவினர்களுக்கும் இதை தேர்ந்தெடுத்த டாக்டர் ராஜ் மோகன் மற்றும் டாக்டர் ஃப்ரூனோ அவர்களுக்கும் மிக்க நன்றி.
ரொம்ப சந்தோஷம். என்னை ஆதரித்து வரும் பதிவுலக தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி
இந்த பதிவு எல்லா இடத்திலும் அனைத்து பெண்களையும் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்பட்டால் அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம்.
பெண்க்ள் மட்டும் தான் என்றில்லை புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஆண்களும் பின்பற்றவேண்டும்.ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவை நேரம் கிடைக்கும் போது இங்கு பகிர்கிறேன்.
Monday, February 6, 2012
கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை
கேன்சர் நோயாளிகளுக்கான உணவு முறை
1..ராகி (கேழ்வரகு ) பானம் அதில் பாதம் மற்றும் வால்நட் பொடித்து சிறிது சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இது மிகச்சிறந்த பானம், ராகி பானம் .புட்டு ,சேமியா
இதே ரொட்டி, கொழுக்கட்டை, புட்டு , சேமியா, ஸ்னாக்ஸ் என்றால்
ராகி தட்டை முருக்கு போலும் செய்து சாப்பிடலாம்.
3. சிக்கன் சின்ன கோழியை வாங்கி சூப்பாக சமைத்து சாப்பிடவும்.
4. முட்டை வெள்ளை கரு காலை முன்று , மாலை முன்று. ( சாப்பிட முடியாது தான்) மருந்து மாத்திரைகள் போல நினைத்து கொண்டு சாப்பிடலாமே.
5.கொத்துமல்லி எலுமிச்சை சேர்த்து துவையல் இது ரத்தத்தை சுத்த படுத்தி கொண்டே இருக்கும்.நாக்கு மறத்து போய் இருப்பதற்கு ருசி தரும்.
6.ஆப்பிள் பழம் சாப்பிடால் ரொம்ப நல்லது நல்ல எவ்வளவு வேண்டுமானலும் சாப்பிடலாம். ஜூஸாக தினம் காலை மாலை குடிப்பது நல்லது.
9. சுண்டல் வகைகள் , சாலட் வகைகள் போன்றவை.
10. உள்ளே உள்ள புண்கள் ஆற ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சிய பால், கடல் பாசி, இளநீர் கடல் பாசி , ஜவ்வரிசி ரூ ஆப்ஷா ஜிகர்தண்டா போன்றவை சாப்பிடலாம்.
12. கருப்பு திராட்சை இது ரொம்ப நல்லது. இத்துடன் வால்நட் சேர்த்து சாப்பிடலாம்.
13.நெல்லிக்காய் இனிப்பு மற்றும் உப்பில் ஊறியது, நெல்லிக்காய் சாதம் போன்றவை நல்லது.
கவனிக்க: புற்று ஆப்ரேஷன் செய்து கொண்டவர்கள் மேற்கொண்ட உணவு வ்கைகள் எடுத்துகொண்டால் கண்டிப்பாக மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். மருத்துவரையும் கலந்தாலோசித்து கொள்ளுங்கள். இதெல்லாம் எந்த பக்கவிளைவும் தராதா இயற்கையான உணவு முறை தான் கேன்சர் என்றில்லை அனைவருக்குமே பொருந்தும்.
நேசம் மற்றும் உடான்ஸ் வழங்கும் கேன்சர் விழிப்புணர்வுக்கான பதிவு.
| Tweet | ||||||
Labels:
உடான்ஸ்,
கேன்சர் அபாயம்,
நேசம்,
விழிப்புணர்வு
Subscribe to:
Posts (Atom)

