Sunday, November 20, 2011

ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை - Ragi Barley ,Nijella Seed thattai


மருத்துவ குணமுள்ள சூப்பர் ஸ்நாக்ஸ்.





தேவையானவை


ராகி பவுடர் – அரை டம்ளர்
பார்லி பொடித்த்து – அரை டம்ளர்
உளுந்து வறுத்து பொடித்தது – ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
மிளகு கொர கொரப்பாக திரித்தது – ஒரு தேக்கரண்டி
ஓமம் (AJWAIN)– அரைத்தேக்கரண்டி
இட்லி சோடா மாவு – அரை சிட்டிக்கை
கருஞ்சீரகம் (NAJILA SEED)– அரை தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
பட்டர் – ஒன்னறை மேசைகரண்டி
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி





செய்முறை




கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ராகி மாவு, அரிசிமாவு, பார்லி உளுந்து பொடித்தது, மிளகு , கருஞ்சீரகம், ஓமம்,பட்டர் , உப்பு , இட்லி சோடா அனைத்தையும் சிறிது நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான டயட் தட்டை ரெடி




20 தட்டைகள் வரும்.


26 கருத்துகள்:

Unknown said...

ட்யட் தட்டை சூப்பர் அக்கா

ஸாதிகா said...

வித்தியாசமாக செய்து காட்டி இருக்கிங்க ஜலி

அம்பலத்தார் said...

அதென்னங்க தேவையான பொருட்களில் இட்லி சோடா என்று எழுதியிருக்கிறியள். what is idly soda?

ஆச்சி ஸ்ரீதர் said...

முயற்சிக்கிறேன்,பகிர்விற்கு நன்றி.

Unknown said...

ஹ்ம் ஒரே அட்டாகாசம் தான் போங்க..

Lifewithspices said...

too good

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி பாயிஜா

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா போன வருடம் பச்ச மிளகாய் தடடை.
இந்த வருடம் ராகி தடடை.

Jaleela Kamal said...

அம்பலத்தார் அது, இட்லி , ஆப்பத்துக்கு எல்லாம் ஒரு சிட்டிக்கை கலப்பது. அதான் இட்லி சோடான்னு போட்டு இருக்கேன் , வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

திரும்தி ஸ்ரீதர் கண்டிப்பாக முயற்சித்து ்பாருங்கள்

Jaleela Kamal said...

மழை ,நீங்க போட்ட கம்்்மெண்டில் ஆ சமையல் அட்டகாசம் முழுவது நனைந்துவிட்டது.

Jaleela Kamal said...

மிக்க ந்னறி கல்பனா

Angel said...

கர கர மொரு மொரு தட்டை .பகிர்வுக்கு நன்றி .
அப்புறம் அந்த நெல்லிக்கா சாதம் செய்தேன் ரொம்ப அருமையா டேஸ்டியா
வந்தது .

M.R said...

அருமையான ஸ்நாக்ஸ் சகோ ,செய்து பார்த்து விடுகிறேன் .நன்றி பகிர்வுக்கு

தையல் லிங்க் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ

Priya Suresh said...

Super healthy thatti..thanks Jaleela.

Unknown said...

Romba super, healthy, pramadhamana thatai - Tamizh padika theriyaadhu, aanal, idhu deep fried ah? shallow fried na, neenga idha enoda event ikku link panninga :) thanks, priya


http://priyasnowserving.blogspot.com/2011/11/fast-food-not-fat-food-7.html

Angel said...

மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர்பதிவை தொடர உங்களை அழைத்திருக்கிறேன் .நேரமிருக்கும்போது எழுதுங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு.
பாராட்டுக்கள்.

மழலைகள் உலகம் மகத்தானது
புதிய வெளியீடு
http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html

பழைய வெளியீடு படிக்க முடியாமல் இருந்ததாக முதல் தகவல் கொடுத்திருந்தீர்கள். நன்றி.
அதை சரிசெய்து மீண்டும் வெளியிட்டு விட்டேன். அன்புடன் vgk

Asiya Omar said...

innovative recipe..

சித்தாரா மகேஷ். said...

அருமையான குறிப்பு.முயற்சி செய்து பார்க்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டோம். என் மனைவி விரும்பி படித்தார்கள். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையா செய்து இருக்கீங்க..

ஆயிஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அருமையான ராகி தடடை.பகிர்விற்கு நன்றி.

//போன வருடம் பச்ச மிளகாய் தடடை.இந்த வருடம் ராகி தடடை.//

அடுத்த வருடம் ....தடடை? இன்ஷா அல்லாஹ் ...

நட்புடன் ஜமால் said...

யாரு செய்து தரப்போறா இதெல்லாம், கடையில் எங்கனா கிடைக்காதுன்னு பார்க்க வேன்டியது தான்

Kanchana Radhakrishnan said...

healthy recipe.

Mahi said...

நல்லா இருக்கு ஜலீலாக்கா!பார்லிய வறுத்து மிக்ஸில அரைச்சீங்களா,இல்ல பார்லி மாவு யூஸ் பண்ணீங்களா?

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா