Sunday, November 27, 2011

ஒரு சோக செய்தி

என் வாப்பாவின் கடைசி தம்பி முஸ்தபா சின்ன வாப்பா ஒரு வருடமாக சுகர் வந்தது தெரியாததால் கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு,  கிட்னி பிரப்ளத்தால் இப்ப கொஞ்சம் நாளா படுத்த படுக்கையாகி இன்று காலை . வருஷ கடைசி முஹரம் முதல் நாளில் 12.30 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள்

///'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.//

இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள்.
மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி
கப்ரின் அதாபிலிருந்து  இடுக்கத்திலிருந்தும், பாதுகாத்து கப்ரில் வெளிச்சத்தையும, விசாலத்தையும் தந்தருள்வானாக.!!
ஆண்டவன் அவர்களின் பாவங்களை ம்ன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானக!!

மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!ஆமின்

(சின்னடாடி 4 அண்ணன் தம்பிகளில் கடைகுட்டி நல்ல எல்லோரும் நல்ல உதவி செய்யும் குணம் படைத்தவர்.  படிப்பு முடித்ததும் சவுதி சென்று சிலகாலம் இருந்து மீண்டும் இந்தியா வந்து , மறுபடி சவுதி சென்ற்று சில வருடம் இருந்தார் , அப்பதான் சர்க்கரைவியாதி இருப்பது தெரியமலே இருந்து இருக்க்கு. ஊருக்கு வந்து செட்டில் ஆகும் போது செக் பண்ணிய போது தெரிந்து இருக்கு சுகர் லெவல் ஹை கிட்னிய பாதித்து விட்டது.ஒரு வருட காலம் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை.)

(அண்ணன்கள் பெண்குழந்தைகள் அனைவரை பெற்ற பிள்ளைகள் போல கண்டிப்புடனும் பாசத்துடனும் பாதுகாத்தவர். எல்லோருக்கும் சின்னவாப்பான்னா தனி பிரியம். என் கணவர் சவுதி போயிருந்த போதும் எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு கூட வருவது பாஸ்போட் எடுக்க எல்லாம் உதவி செய்தது சின்ன டாடி தான்.)


சின்ன வாப்பாவை இழந்து வாடும் எங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆண்டவன் பொறுமையையும், மனதைரியத்தையும்,தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் கொடுப்பானாக!! ஆமின்










18 கருத்துகள்:

ஆமினா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நட்புடன் ஜமால் said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்

[[சின்ன வாப்பாவை இழந்து வாடும் உங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆண்டவன் பொறுமையையும், மனதைரியத்தையும்,தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் கொடுப்பானாக!! ஆமின்]]

Aashiq Ahamed said...

இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஹிவூன்

அஸ்மா said...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! கவலைப்படாதீங்க ஜலீலாக்கா.

அல்லாஹ் அவர்களின் பாவப்பிழைகளைப் பொறுத்து, மறுமையின் நல்வாழ்வை அளிப்பானாக! சின்ன வாப்பான்னா ரொம்ப சின்ன வயதாக இருக்கும்னு நினைக்கிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையைக் கொடுப்பானாக!

ஆயிஷா அபுல். said...

இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Asiya Omar said...

\\இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\\
சபூர் செய்யுங்க ஜலீலா..எல்லாம் வல்ல அல்லாஹ்வே சின்னவாப்பவை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு மனதிடத்தை கொடுக்கவேண்டும்.

Priya Suresh said...

Thats really sad,may his soul rest in peace..

ஸாதிகா said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

அந்நியன் 2 said...

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கிறேன்.

vanathy said...

ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

எம் அப்துல் காதர் said...

'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்'

ஜலீலாக்கா, எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களுக்கும் உங்கள் குடும்பத் தாருக்கும் சபூர் செய்துக் கொள்ளும் மன தைரியத்தையும், ஆஹிரத்தில் அன்னாருக்கு அழகிய சுவனத்தில் நல்லிடத்தையும் தர துஆ இறைஞ்சியவனாக! ஆமீன்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் மனம் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

VANJOOR said...

'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்'

அன்பின் ஜலீலா,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் துயரம் தாங்கி சபூர் செய்துக் கொள்ளும் மனபலத்தை தரவும்,

மறுமையில் சின்ன வாப்பா மர்ஹூம் முஸ்தபா அழகிய சுவனத்தில் அமர்ந்திட (ஆமீன்)

துஆ இறைஞ்சியவனாக! .

வாஞ்சையுடன் வாஜ்ஜூர்.

Mahi said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ஜலீலாக்கா! அவரது ஆத்மா சாந்தியடையவும் என் ப்ரார்த்தனைகள்!

Muruganandan M.K. said...

சின்ன வாப்பாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் எனது ஆழ்ந்த துயரைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஜலீலாக்கா... கவலைப்படாதீங்க, விதிப்படி நடப்பதை, நாம் என்ன செய்வது, அவரது ஆத்மா சாந்தியடையவும், அவர்கள் குடும்பம் மன அமைதி பெறவும் பிரார்த்திக்கிறேன்.

இப்போ ஆரோடு பேசினாலும், பேப்பரிலும், நியூஷிலும்... எங்கு பார்த்தாலும்... துன்பமான செய்திகளே அதிகமாக இருக்கு... வீட்டுக்கு வீடு நடந்துகொண்டே இருக்கு.... உலகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கென்றே தெரியவில்லை.

உங்கள் தலைப்பு எப்பவும் மேலே வருகுதில்லை எனக்கு:(.

கோமதி அரசு said...

ஜலீலா, சின்ன வாப்பாவை இழந்து வாடும் உங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் ஆண்டவன் பொறுமையையும், மனதைரியத்தையும்,தாங்கிக்கொள்ள கூடிய சக்தியையும் கொடுக்க வேண்டுகிறேன்.

குடும்பத்துடன் வந்து இருக்கும் போது நோயை கொடுத்து எடுத்துக் கொண்டது மிகவும் கொடுமை. என்ன செயவது இறைவன் சித்தம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா