Thursday, August 27, 2015

கேரளா காய்கறி சாம்பார் - Kerala Specila veggie Sambar


கேரளா சாம்பார்
 

தென்னிந்திய உணவுகளில் குழம்புவகைகளில் முதலிடம் வகிப்பது சாம்பார் தான். இட்லி,தோசை, பொங்கல், உப்புமா,அடை, மைதா தோசை , பிளைன் சாதம் அனைத்துக்கும் பொருந்தும், இங்கு பரோட்டாவுடன் சாம்பாரை  ஊற்றி சாப்பிட்டால் ஒன்று சாப்பிட்டாலும் நல்ல பசிதாங்குமாம். என் பையனுக்கு பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட பிடிக்கும்.

 

இங்கு ஏற்கனவே சாம்பார் வகைகள் போஸ்ட் செய்துள்ளேன்.
கேரளாவில் கொண்டாடும் ஓணம் பண்டிகையில் தாளி சாப்பாடு பல வகையாக வாழையில் பரிமார படும் அதில் முதன்மையான ஒரு பக்க உணவு  கேரளா ஸ்பெஷல் காய்கறி சாம்பார்.
இதற்கென்றே இங்குள்ள குராசரி ஸ்டோர் மற்றும் லுலு  ஹைப்பர் மார்கெட்டில் அரை கிலோ , 1 கிலோ பாக்கெட்டுகளாக காய்கறிகளை மிக்ஸ் ஆக வைத்து பேக் செய்து வைத்திருப்பார்கள். அதில் நான் ருசித்த சுவையில் இதை இங்கு பகிர்ந்துள்ளேன்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளூங்கள்.
 

தேவையானவை
வேகவைக்க
துவரம் பருப்பு – 125 கிராம்
மஞ்சள் தூள்
வெந்தயம் – கால் தேக்கரண்டி

 
காய்கறி வகைகள்

சேனை
பூசனிக்காய்
பீன்ஸ்
கேரட்
கோவைகாய்
கத்திரிக்காய்
மாங்காய்
பெரிய வெள்ளரிக்காய்
முருங்கக்காய்
வாழைக்காய்
பாவைக்காய்

எல்லா காய்கறிகளும் சேர்த்து அரை கிலோ
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் சிறியது – 1
பச்சமிளகாய் – 2
தக்காளி – 2
குடம்புளி – 3

தாளிக்க
எண்ணை ( தேங்காய் எண்ணை (அ) சன்ப்ளவர் ஆயில் – 4 ஸ்பூன்
நெய் – இரண்டு ஸ்பூன்
காஞ்ச மிளகாய் – 3
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிக்கை (அ) சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
கருவேப்பில்லை
சாம்பார் பொடி (Eastern Sambar pwd) – இரண்டு ஸ்பூன்

Method

முதலில் பருப்பை மஞ்சள் தூள் வெந்தயம் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
 
குடம்புளியை கழுவி வெண்ணீரில் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணையை காயவைத்து ஒரு ஸ்பூன் எண்ணை மற்றும் சிறிது கடுகு கருவேப்பிலை , ஒரு பல் பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம் பச்சமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்.





 


 
வதங்கியதும் எல்லா காய்கறிகளையும் சேர்த்து கிளறி மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.


ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்துஅதில் எண்ணை + நெய் சேர்த்து சூடு வந்ததும் கடுகு, காஞ்சமிளகாய், கருவேப்பிலை, பூண்டு , பெருங்காயம், வெங்காயம் , சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறி தாளிக்கவும்.
அதில் வெந்த பருப்பை மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


பிறகு வெந்த காய்கறிகளை சேர்த்து ஊறவைத்த குடம்புளியையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இரக்கவும்.
Onam Recipes
 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, August 22, 2015

டவுன்பாண்டன் இலை கடல்பாசி - Pandan Leaves Agar Agar with Coconut Milk and Egg



டவுன்பாண்டன் இலை கடல்பாசி 08.07.15

பான்டன் இலை, தேங்காய் பால் மற்றும் முட்டை கடல்பாசி
 இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் விதவிதமாக கடல் பாசி வகைகள் செய்வோம்அதில் இது மலேசியாவில் பிரத்தி பெற்ற புது வகையான கடல்பாசிடவுன் பாண்டன் இலை சேருவதால் மிகவும் வாசனையுடன் இருக்கும்.

தேவையானவை

அகர் அகர் – 10 கிராம்
டவுன் பான்டன் இலை -  3 இன்ச் அகலம் , 5 இஞ்ச் உயரம் உள்ளது
கட்டி தேங்காய் பால் – 200 கிராம்
முட்டை ஒன்று
ப்ரவுன் சுகர்சர்க்கரை – 50 கிராம்
தண்ணீர் 300 மில்லி
பிஸ்தா இலாச்சி எசன்ஸ்இரண்டு துளி
https://www.facebook.com/jaleela.kamal

செய்முறை
அகர் அகரை தண்ணீரில் ஊறவைத்து அத்துடன் டவுன் பாண்டன் இலைய சேர்த்து நன்கு காய்ச்சவும்.இரண்டு வகை சர்க்கரை மற்றும் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து அத்துடன் தேங்காய் பாலையும் சேர்த்து அடிக்கவும்.

முட்டை தேங்காய் பால் கலவையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கடல் பாசியில் சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும்.

பிறகு ஒரு பெரிய தாம்பாள தட்டில் ஊற்றி டவுன் பாண்டன் இலையை எடுத்து விட்டு ஆறவைத்து வேண்டிய வடிவில் துண்டுகளாக போடவும்.


தட்டில் ஊற்றி ஆறவைத்ததும் கிழே கலர் + கடல்பாசி தனியாகவும், மேலே தேங்காய் பால் முட்டை கலவை தனியாக வும் செட்டாகி இரண்டு லேயராக கிழே டார்க் கலராகவும், மேலே லைட் கலராகவும் இருக்கும் ..பார்க்க அழகாக இருக்கும். குளிர வைத்து நமக்கு தேவையான வடிவில் துண்டுகள் போட்டு சாப்பிடவும்

இந்த நட்சத்திர கடல் பாசி எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.




இஸ்லாமியர்கள் நோன்பு காலங்களில் விதவிதமாக கடல் பாசி வகைகள் செய்வோம், அதில் இது மலேசியாவில் பிரத்தி பெற்ற புது வகையான கடல்பாசி, டவுன் பாண்டன் இலை சேருவதால் மிகவும் வாசனையுடன் இருக்கும்.


அகர் அகர், கடல்பாசி, சைனா கிராஸ், நோன்பு கால‌ ச‌மைய‌ல், மலேசியா உணவு, முட்டை சமையல் 

சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்

ஆங்கில வலைதளம் : cookbookjaleela

www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, August 15, 2015

மூவர்ண கேசரி




இந்த காம்பினேஷனில் ரெசிபிகள் செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இது எங்க திருமணநாளுக்கு செய்தது.



பொதுவாக கேசரியில் சர்க்கரையின் அளவு ஒன்றுக்கு ஒன்னறை அல்லது இரண்டு என தூக்கலாக போடுவார்கள்.

கேசரியில் பட்டர் + மீடியமான சர்க்கரை சேர்ப்பதால் இதை லன்ச் பாக்ஸ்க்கும் கொண்டு செல்லலாம் , இனிப்பு இதனுடன் காரத்துக்கு வடை அல்லது சுண்டல் செய்து கொள்ளலாம்.

தேவையானவை
ரவை – 100 + 100 +100 கிராம்
சர்க்கரை – 75+75+75 கிராம்
நெய் – 3 மேசைகரண்டி
முந்திரி, பாதாம்  - 50 கிராம் பொடித்து கொள்ளவும்
கேரட் துருவல் – 2 மேசைகரண்டி
கேசரி கலர் பொடி – சிறிது
பச்சை வண்ண கலர் (பிஸ்தா இலாச்சி எசன்ஸ்) – சிறிது
கிவி டேங்க் பவுடர் – 1 மேசைகரண்டி
பட்டர் – முன்று மேசைகரண்டி
சூடான வெண்ணீர் – 200 + 200 + 200  மில்லி


கேரட் கேசரி
 செய்முறை

ஆரஞ்சு கலர் ரவா கேசரிக்கு

ரவையையும் கேரட்டையும் பட்டரில் வறுக்கவும். சூடானா வெண்ணீரில் கலர் பொடி கலந்து வறுத்த கேரட் ரவாவில் ஊற்றி கிளறி சர்க்கரை சேர்த்து வறுத்து பாதாம் முந்திரி தூவி கடைசியாக ஒரு தேக்கரண்டி நெய் விட்டு இரக்கவும். சூடு பொறுக்கும் அளவில் சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.

பிளைன் கேசரி

ப்ளைன் கேசரிக்கு

ரவையை பட்டரில் வறுத்து சூடானா வெண்ணீர் + நெய் ஊற்றி கிளறி சர்க்கரை வறுத்த முந்திரி பாதம்சேர்த்து கிளறி லேசாக ஆறவிட்டு சூடு பொறுக்கும் அளவில் சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.


கிவி அன்ட் ஸ்ராபெர்ரி ப்லேவர் டேங் கேசரி.இது தான் சூப்பர் ஹிட் எங்க வீட்டில் .
kiwi and strawberry flavor kesari




 பச்சை வண்ண கேசரிக்கு
ரவையை பட்டரில் வறுத்து சூடான வெண்ணீரில் கிவி டேங்கை கரைத்து வறுத்து வைத்த ரவையில் ஊற்றி கிளறி சர்க்கரை பாதாம் முந்திரி, நெய் சேர்த்து கிளறி சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
முவர்ண கேசரியை தட்டில் வைத்து அலங்கரிக்கவும்.



Heart Shape Keesari


முவர்ண கேசரி லட்டு



 உங்கள் வீட்டு குட்டீஸ் ஒரு உருண்டையையும் மிச்சம் வைக்க மாட்டார்கள், இதை பள்ளிக்கு லன்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து அனுப்பலாம். ஒன்றுமே சாப்பிடாமல் அடம் பிடிக்கும் பிள்ளைகள் முன் இதை செய்து டேபிளில் வைத்து பாருங்கள். எல்லா உருண்டைகளும் எப்படி காலி ஆகுதுன்னு .. பாருங்கள்
பொதுவாக கேசரிக்கு சர்க்கரையின் அளவு ஒன்றுக்கு இரண்டு பங்கு அளவு போடுவார்கள். ஆனால் இப்படி செய்வது திகட்டாமல் சாப்பிட நல்ல இருக்கும்.



குங்குமம் தோழியில் வெளி வந்தவை June 2015
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, August 6, 2015

கேரளா அவியல் & ஐயர் ஆத்து பருப்படை






கேரளா அவியல்
 தேவையான பொருட்கள்
சேனை கிழங்கு
கத்திரிக்காய்
பூசனிக்காய்
பெரிய குகும்பர்
கேரட்
கோவைக்காய்
வாழக்காய்
முருங்கக்காய்
பீன்ஸ்
எல்லாம் சேர்ந்து அரை கிலோ 
அரைக்க
பச்ச மிளகாய் - 5
சீரகம் - ஒரு மேசைகரண்டி
தாளிக்க
தேங்காய் எண்ணை - ஒரு மேசைகரண்டி 
கருவேப்பிலை - சிறிது 
கட்டி தேங்காய் பால்(முதல் பால்) – 1 கப் 
தண்ணீ தேங்காய் பால் ( இரண்டாம் பால் )– 2 கப்




செய்முறை

 மேலே கொடுக்கப்படுள்ள அனைத்து காய்கறிகளையும் நன்கு கழுவி கட் செய்து தண்ணீ தேங்காய் பால் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து வெந்து கொண்டிருக்கும் காய்களில் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். கட்டி தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

கடைசியாக தேங்காய் எண்ணை, கருவேப்பிலை, 5 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
இதை தாளிக்க தேவையில்லை , தேவைப்பட்டால் தாளித்து கொள்ளலாம்.

அடை அவியல் என்பது பிரமண வீடுகளில் செய்யும் காம்பினேஷன் மெனு. இதே அவியல் கேரளாவிலும் பண்டிகை காலங்களில் செய்வார்கள். செய்முறை சிறிது வித்தியாசப்படும் . அடையுடன் அவியல், வெல்லம் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.




ஐயர் ஆத்து பருப்படை

தேவையானவை
கடலை பருப்பு – 100 கிராம்
உளுந்து – 25 கிராம்
துவரம் பருப்பு – 25 கிராம்
அரிசி – 25 கிராம்
உப்பு - தேவைக்கு
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
முழு சிவப்பு மிளகாய் – 3
இஞ்சி – ஒரு இன்ச் அளவு


செய்முறை
அரிசியை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு வகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் மிளகாய், இஞ்சி கருவேப்பிலை  சேர்த்து அரைத்து அரிசி சேர்த்து அரைக்கவும்.



அடுத்து எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து கொர கொரப்பாக முக்கால் பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.
இதில் வெங்காயம், கருவேப்பிலை , கொத்துமல்லி தழை தேவை பட்டால் பொடியாக அரிந்து சேர்த்து கொள்ளலாம்.
இந்த மாவு பதம் கட்டியாக அள்ளி ஊற்றி பரத்தும் பதமாக இருக்கனும்



சுற்றிலும் எண்ணை விட்டு இரண்டு பக்கமும் மொருகலாக சுட்டு எடுக்கவும்,



இதற்கு புதினா சட்னியும் வெல்லமும் சூப்பர் காம்புனேஷன்.
சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்ச மிளகாயும் சேர்க்கலாம்.



Moringa Leaves Mixed Dal Pancake
முருங்க்கீரை அடை

அடை எனக்கு ரொம்ப பிடிச்ச டிபன், சட்னி சால்னா எதுவும் தேவையில்லை
வெரும் வெல்லம் போதும் சூப்பரோ சூப்பர் உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் இது சூப்பரான டிபன்.



முருங்க்கக்கீரை இருந்தால் அதுவும் ஒரு கைப்பிடி சேர்த்து கலக்கி கொள்ளாலாம்.சுவை சூப்பராக இருக்கும் சில நேரம்  முருங்கக்கீரைக்கு பதில் நான் பாலக் கீரையும் சேர்த்து செய்வேன்.
ஐயர் ஆத்து சமையல், ஜலீலாஸ் ஸ்பெஷல் அடை



சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்

ஆங்கில வலைதளம் : cookbookjaleela

www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, August 1, 2015

காக்காவுக்கும் முட்டை வட்லாப்பத்துக்கும் என்ன சம்பந்தம்?






முட்டை வட்லாப்பம்



இஸ்லாமிய இல்லங்களில், திருமண விசேஷங்களில் மிகவும் பிரத்தி பெற்ற இனிப்பு வகைகளில் முதன்மையான இனிப்பு வகை இது, 
இது எங்க அம்மாவின் ஸ்பெஷல் ஸ்வீட் , அவர்களிடம் இருந்து கற்றுகொண்ட முதல் இனிப்பு வகை இதுவே.

முன்பெல்லாம் பள்ளிகாலங்களில்  அம்மா வருடா வருடம்  புது வருட பிறப்புக்கு இதை தான் செய்வார்கள். கொண்டாட மாட்டோம் ஆனால் இனிப்பு கண்டிப்பாக உண்டு.

காக்காவுக்கும் இந்த முட்டை வட்லாப்பத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பார்க்கிறீர்களா? கிழே படியுங்கள்.




2011 - பாலவாக்கம்
நாத்தனார் பொண்ணு கல்யாணத்தில் முட்டைவட்லாப்பமும் காகமும்...

இடியாப்பம் , முட்டை வட்லாப்பம் , கால்பாயா ( இடியாப்பம் , கோதுமை ரொட்டி) சூப்பர் காம்பினேஷன்..



தேவையான பொருட்கள்

முட்டை - பத்து (அ) 12
சர்க்கரைஇரண்டு டம்ளர் 
(அதிக இனிப்பு சாப்பிடாதவர்கள் தேவைக்கு அரை டம்ளர் குறைத்து கொள்ளலாம்)
தேங்காய்ஒரு முழு பெரிய தேங்காய் 
ஏலக்காய் - முன்று
முந்திரி - 6
நெய் - அரைதேக்கரண்டி
அலங்கரிக்க
பாதாம் , முந்திரி
மாதுளை முத்துக்கள்




செய்முறை
தேங்காயை அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கட்டியாக பால் எடுக்கவும்.
(மீதி இருப்பதை மறுபடி பிழிந்து தேங்காய் பால் சாதம், சால்னா வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.)
முட்டையை நல்ல நுரை பொங்க அடித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து வைக்கவும்.
 சர்க்கரை, தேங்காய் பால், முட்டை முன்றையும் நன்கு கலக்கவும்.
முந்திரியை பொடியாக அரிந்து நெய்யில் வறுத்து  சேர்க்கவும்.
ஏலக்காயை பிரித்து உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்து பொடித்து சேர்த்து நன்கு கலக்கி குக்கரில் அடியில்வைக்கும் தட்டை வைத்து அதன் மேல் , ஒரு டிபன் பாக்ஸில் கலவையை ஊற்றி முடிபோட்டு குக்கரை மூடி 5 விசில் விட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து அவிக்கவும்.
சுவையான சூப்பரான முட்டை வட்லாப்பம்ரெடி.
இது இடியாப்பம், ஆப்பம், தோசை ஆகியவற்றிற்குபொருந்தும், இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாகும்.சர்க்கரை அதிகம் விரும்பாதவர்கள் சர்க்கரையின் அளவை அரை டம்ளர் குறைத்து  கொள்ளலாம்
கவனிக்க: இடுப்பு எலும்புக்கு பலம் பெறும். .பூப்பெய்திய பெண்களுக்கு இதை செய்து கொடுப்போம்.







மேலே உள்ளது 100 பேருக்கு நாங்க எல்லாரும் சேர்ந்து நாத்தானார் (எங்க மைனி )மகள் திருமணத்தின் போது 2011 லில் இந்த முட்டை வட்லாப்பத்தை ஆளுக்கு ஒரு வேளையாக செய்து கொண்டு இருக்கும் போது ....  

நான் முட்டையை உடைத்து பிளண்டரில் அடிக்க, பெரிய நாத்தனார் மகள்  கல்வத் தேங்காயை உடைத்து துண்டுகள் போட, பெரிமா பொண்ணு  மீரா தேஙகாய் அரைத்து ஊற்ற, சின்ன நாத்தனார் பொண்ணு குட்டி அஃப்ரின் முந்திரி பாதாம் வெட்டி கொடுக்க எல்லாரும் சேர்ந்து செய்தோம், அப்ப வீட்டின் வெளியில் ஷாமியானா போட்டு இருந்தார்கள். 

அப்ப தான் தீடீரென்று ஒரு காக்கா வெளியில் இருந்து ஹால் வழியாக கிழே கிரவுன்ட் ஃப்ளோரில் வந்து படிக்கட்டில் உட்கார்ந்து விட்டது. வெளியே எங்கும் போக இடம் இல்லை, சுற்றி இருந்தவர்கள், மேலே ஹாலில் இருந்தவர்கள் எல்லாம் ஒரே கூச்சல் போட

கிழே கிச்சனில் நாங்க எல்லோரும் முட்டை , தேஙகாய் பால் , எல்லாவற்றையும் காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

.

உடனே சிங்கம் போல என் மகன் ஓடி வந்தான் அப்படியே அந்த காகத்தை கையில் மெதுவாக பிடித்து வெளியில் கொண்டு போய் விட்டான், இதை எங்க யாராலும் மறக்க முடியாது.

அங்கு ஒருத்தங்க  ஒரு இறந்து போன எங்க மாமாவுக்கு முட்டை வட்லாப்பம் ரொம்ப பிடிக்கும் அதான் வந்து இருக்காங்களா என்று சொன்னார்கள்... 
நீங்க யாராவது காக்கா வை பிடிச்சி இருக்கீங்களா.




இந்த குறிப்பு ஓவ்வொரு முறையும் போடனும் என்று தளளி போய் கொண்டே இருந்தது.அறுசுவை டாட்காமில் நான் கொடுத்த முதல் இனிப்பு வகையும் இதுவே..

எங்க வீட்டுகல்யாணங்களில் திருமணம் முடிந்து மறுநாள் மாப்பிள்ளை தஸ்தர் என்று வைப்பார்கள் அதில் கண்டிபபாக இந்த ஸ்வீட் இடம் பெறும் , இப்ப எலலாரும் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள்,

 
குக்கரில் அரைமணி நேரம் செய்து முடித்தது நல்ல ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து துண்டுகள் போட்டால் தான் நல்ல வரும்.

இது கொஞ்சம் பெரிய வேலை தான் ஆனால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

ருசித்து மகிழுங்கள்.
இது 10 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள்
சில டைம் , 12 முட்டைக்கு ஒரு தேங்காயும் போடுவார்கள். தேங்காய் நல்ல முத்தலாக பெரியதாக இருந்தால் நல்லது.

முட்டை அதிகமானாலோ, தேங்காய் பால் கட்டியாக இல்லாமல் இருந்தாலோ கலர் கிரே கலர் வராது.

மேலே உள்ளது போல் இருக்கும்.

கிரே கலரில் இருக்கனும் அது தான் பதம்.
தேங்காய் பால் நல்ல கட்டியாக இருக்கனும். முட்டையை நன்கு அடிக்ககனும். இதில் பாதாம் முந்திரியும் அரைத்து ஊற்றலாம்.




ஜூன் மாதம் 2015 குங்குமம் தோழியில் 30 நான் வெஜ் ரமலான் ரெசிபியில் இதுவும் ஒன்று.










https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/