Thursday, August 27, 2015

கேரளா காய்கறி சாம்பார் - Kerala Specila veggie Sambar


கேரளா சாம்பார்
 

தென்னிந்திய உணவுகளில் குழம்புவகைகளில் முதலிடம் வகிப்பது சாம்பார் தான். இட்லி,தோசை, பொங்கல், உப்புமா,அடை, மைதா தோசை , பிளைன் சாதம் அனைத்துக்கும் பொருந்தும், இங்கு பரோட்டாவுடன் சாம்பாரை  ஊற்றி சாப்பிட்டால் ஒன்று சாப்பிட்டாலும் நல்ல பசிதாங்குமாம். என் பையனுக்கு பூரி, சப்பாத்தியுடன் சாப்பிட பிடிக்கும்.

 

இங்கு ஏற்கனவே சாம்பார் வகைகள் போஸ்ட் செய்துள்ளேன்.
கேரளாவில் கொண்டாடும் ஓணம் பண்டிகையில் தாளி சாப்பாடு பல வகையாக வாழையில் பரிமார படும் அதில் முதன்மையான ஒரு பக்க உணவு  கேரளா ஸ்பெஷல் காய்கறி சாம்பார்.
இதற்கென்றே இங்குள்ள குராசரி ஸ்டோர் மற்றும் லுலு  ஹைப்பர் மார்கெட்டில் அரை கிலோ , 1 கிலோ பாக்கெட்டுகளாக காய்கறிகளை மிக்ஸ் ஆக வைத்து பேக் செய்து வைத்திருப்பார்கள். அதில் நான் ருசித்த சுவையில் இதை இங்கு பகிர்ந்துள்ளேன்.
நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளூங்கள்.
 

தேவையானவை
வேகவைக்க
துவரம் பருப்பு – 125 கிராம்
மஞ்சள் தூள்
வெந்தயம் – கால் தேக்கரண்டி

 
காய்கறி வகைகள்

சேனை
பூசனிக்காய்
பீன்ஸ்
கேரட்
கோவைகாய்
கத்திரிக்காய்
மாங்காய்
பெரிய வெள்ளரிக்காய்
முருங்கக்காய்
வாழைக்காய்
பாவைக்காய்

எல்லா காய்கறிகளும் சேர்த்து அரை கிலோ
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் சிறியது – 1
பச்சமிளகாய் – 2
தக்காளி – 2
குடம்புளி – 3

தாளிக்க
எண்ணை ( தேங்காய் எண்ணை (அ) சன்ப்ளவர் ஆயில் – 4 ஸ்பூன்
நெய் – இரண்டு ஸ்பூன்
காஞ்ச மிளகாய் – 3
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – 3 சிட்டிக்கை (அ) சிறிய துண்டு
பூண்டு – 4 பல்
கருவேப்பில்லை
சாம்பார் பொடி (Eastern Sambar pwd) – இரண்டு ஸ்பூன்

Method

முதலில் பருப்பை மஞ்சள் தூள் வெந்தயம் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
 
குடம்புளியை கழுவி வெண்ணீரில் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணையை காயவைத்து ஒரு ஸ்பூன் எண்ணை மற்றும் சிறிது கடுகு கருவேப்பிலை , ஒரு பல் பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம் பச்சமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்.





 


 
வதங்கியதும் எல்லா காய்கறிகளையும் சேர்த்து கிளறி மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.


ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்துஅதில் எண்ணை + நெய் சேர்த்து சூடு வந்ததும் கடுகு, காஞ்சமிளகாய், கருவேப்பிலை, பூண்டு , பெருங்காயம், வெங்காயம் , சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறி தாளிக்கவும்.
அதில் வெந்த பருப்பை மசித்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


பிறகு வெந்த காய்கறிகளை சேர்த்து ஊறவைத்த குடம்புளியையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இரக்கவும்.
Onam Recipes
 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

குறிப்பு அருமை அக்கா...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா