கேரளா
அவியல்
தேவையான பொருட்கள்
சேனை
கிழங்கு
கத்திரிக்காய்
பூசனிக்காய்
பெரிய
குகும்பர்
கேரட்
கோவைக்காய்
வாழக்காய்
முருங்கக்காய்
பீன்ஸ்
எல்லாம் சேர்ந்து அரை கிலோ
அரைக்க
பச்ச
மிளகாய் - 5
சீரகம் - ஒரு மேசைகரண்டி
தாளிக்க
தேங்காய்
எண்ணை - ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை - சிறிது
கட்டி தேங்காய் பால்(முதல் பால்) – 1 கப்
தண்ணீ
தேங்காய் பால் ( இரண்டாம் பால் )– 2 கப்
செய்முறை
மேலே
கொடுக்கப்படுள்ள அனைத்து காய்கறிகளையும் நன்கு கழுவி கட் செய்து தண்ணீ தேங்காய் பால்
ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அரைக்க
கொடுத்துள்ளவைகளை அரைத்து வெந்து கொண்டிருக்கும் காய்களில் சேர்த்து மீண்டும் கொதிக்க
விடவும். கட்டி தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியாக
தேங்காய் எண்ணை, கருவேப்பிலை, 5 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
இதை
தாளிக்க தேவையில்லை , தேவைப்பட்டால் தாளித்து கொள்ளலாம்.
அடை
அவியல் என்பது பிரமண வீடுகளில் செய்யும் காம்பினேஷன் மெனு. இதே அவியல் கேரளாவிலும் பண்டிகை காலங்களில் செய்வார்கள். செய்முறை சிறிது வித்தியாசப்படும் . அடையுடன் அவியல், வெல்லம்
தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
ஐயர்
ஆத்து பருப்படை
தேவையானவை
கடலை
பருப்பு – 100 கிராம்
உளுந்து
– 25 கிராம்
துவரம்
பருப்பு – 25 கிராம்
அரிசி
– 25 கிராம்
உப்பு - தேவைக்கு
பெருங்காயம்
– கால் தேக்கரண்டி
கருவேப்பிலை
– சிறிது
முழு
சிவப்பு மிளகாய் – 3
இஞ்சி
– ஒரு இன்ச் அளவு
செய்முறை
அரிசியை
தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு
வகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில்
மிளகாய், இஞ்சி கருவேப்பிலை சேர்த்து அரைத்து
அரிசி சேர்த்து அரைக்கவும்.
அடுத்து
எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து கொர கொரப்பாக முக்கால் பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.
இதில்
வெங்காயம், கருவேப்பிலை , கொத்துமல்லி தழை தேவை பட்டால் பொடியாக அரிந்து சேர்த்து கொள்ளலாம்.
இந்த
மாவு பதம் கட்டியாக அள்ளி ஊற்றி பரத்தும் பதமாக இருக்கனும்
சுற்றிலும்
எண்ணை விட்டு இரண்டு பக்கமும் மொருகலாக சுட்டு எடுக்கவும்,
இதற்கு
புதினா சட்னியும் வெல்லமும் சூப்பர் காம்புனேஷன்.
சிவப்பு
மிளகாய்க்கு பதில் பச்ச மிளகாயும் சேர்க்கலாம்.
Moringa Leaves Mixed Dal Pancake
முருங்க்கீரை அடை
அடை எனக்கு ரொம்ப பிடிச்ச டிபன், சட்னி சால்னா எதுவும் தேவையில்லை
வெரும் வெல்லம் போதும் சூப்பரோ சூப்பர் உங்கள் குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் இது சூப்பரான டிபன்.
முருங்க்கக்கீரை
இருந்தால் அதுவும் ஒரு கைப்பிடி சேர்த்து கலக்கி கொள்ளாலாம்.சுவை சூப்பராக இருக்கும் சில நேரம் முருங்கக்கீரைக்கு பதில் நான் பாலக் கீரையும் சேர்த்து செய்வேன்.
ஐயர் ஆத்து சமையல், ஜலீலாஸ் ஸ்பெஷல் அடை
சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்
சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்
ஆங்கில வலைதளம்
: cookbookjaleela
www.chennaiplazaki.com
www.chennaiplazaik.com
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
1 கருத்துகள்:
அஹா... சூப்பர் அக்கா...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா