இந்த கிணற்றில் எத்தனை முழு ஆட்டை இரக்கியிருப்பார்கள்.
//பழங்ககாலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் பெரிய தட்டு தாலாவில் தான் அதை கலம் என்று சொல்வார்கள் ஒரு களத்தில் ஐந்து பேர் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
இஸ்லாமியர்கள் இப்படி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது சகோதரத்துவமும், ஒற்றுமையையும் உண்டாகும்,ரிஸுக் விஸ்திரணம் (உணவில் அபிவிருத்தி)ஏற்படும்.
இது இஸ்லாமிய இல்ல கல்யாணங்களில் 5 நபர்கள் ஒரு தாலா(சஹன், கலத்தில்) உட்கார்ந்து சாப்பிடுவோம்.
சில இடங்களில் வாழையிலையிலும் சாப்பிடுவோம்//
டிஸ்கி:இது அருசுவை தோழிகள் (அதிரா, இலா, ஜீனோ,இமா, செல்வி அக்கா, கவி,ஆசியா,ஸாதிகா அக்கா,ஹுஸைன்னாம்மா, பாயிஜா,மேனகா, கீதா ஆச்சல் பீ சீரியஸ், இளமதி, உமா, சகோ.ஹைஷ் இவர்களுக்காக போட்ட பிரியாணி , வாங்க எல்லோரும் சாப்பிடலாம்.
Tweet | ||||||
62 கருத்துகள்:
ஜலீலாக்கா இவ்ளோ சாப்பாட்டைப் பார்த்தவுடனேயே வயிறு நிறைஞ்சிடுச்சே அப்புறம் எப்படி சாப்பிடுவேன் :-(. எனக்காக கொஞ்சம் பெரிய டிபன் பாக்ஸில் போட்டுக் கொடுங்க வீட்டில் போய் சாப்பிட்டுக்கறேன் :-). ஹி ஹி இங்கியே சாப்பிட்டா எல்லாரும் கண்ணு வச்சிடுவாங்க
இத ஆயுசு முழுதும் உக்காந்து சாப்பிடணும் போல....
ஜீனோ சீக்கிரமா வா நமக்காக ஜலீலா அக்கா உனக்கு ஒரு மண் எனக்கு ஒரு மண் பிரியாணி போட்டு இருக்காங்க மீதி பேருக்கு ஒரு மண்ணாம்.
உள்ள அதிரா, இலா அக்காஸுக்கு தெரியாம அவிச்ச முட்டையும் வைச்சு இருக்காங்க
தேங்ஸ்ஸ்ஸ்ஸ்
வாழ்க வளமுடன்
பி.கு: சூப்பர் பிரியாணி என் நண்பர் வீட்டில் நடுவில் பெரிய தட்டு வைச்சு அனைவரும் ஒன்றாக தான் சாப்பிடுவோம் :)
enakkuuuuuuuuuuuuu
பிரியாணி படங்கள், கல்யாண வீட்டில சமைச்சப்போ எடுத்ததா ஜலீலாக்கா?
ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தாவிற்கு மூணு பிளேட் பார்சல் அனுப்பவும். நன்றி.
ஆஹா..பிரியாணி..அதென்னவோ தெரிய வில்லை ஜலி.பிரியாணி என்றாலே நான்வெஜ் பிரியர்களுக்கு அப்படி ஒரு கொண்டாட்டம்.(எனக்கும்தான்.)
///
பழங்ககாலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் பெரிய தட்டு தாலாவில் தான் அதை கலம் என்று சொல்வார்கள் ஒரு களத்தில் ஐந்து பேர் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.///
பழங்காலத்தில் என்ன?இன்றுவரை எங்களூரில் இந்த முறை வழக்கத்தில் உள்ளது.இதனை "சஹன்" என்போம்.பெண்களுக்கு என்று வைக்கும் விருந்துக்கு நாங்கள் செல்வதாக இருந்தால் ஐந்து தோழிகளாக அல்லது உறவினர்களாக கூட்டாக செல்வோம்/ஐந்து பேரும் சஹனை சுற்றி அமர்ந்து சாப்பாட்டை வெட்ட வேண்டியதுதான்.ம்ம்ம்ம்..இதெல்லாம் இங்கிருப்பதால் ரொம்பவே மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்..:(
ஹலோ அப்படியே சைடுல வெஜிட்டபுள் பிரியாணியும் போட்டுருந்தா நாங்களும் வந்துருப்போம் இல்லை. படங்கள் அருமை.
நாஸியாக்கு கொடுக்காதீர்கள், அவங்க ஊட்டுல பிரியாணி பண்ணி எனக்குக் கொடுக்கவில்லை.
எனக்கு????????????
யக்கோவ் இதை எப்படி 4 பேரு சாப்பிட மாதிரி செய்றதுன்னு ஒரு பதிவு போடுங்க - இல்லாட்டி நாஸியா போட்டுவிடுவாங்க - அவங்க(ளும்) சாப்பிடமாட்டாங்க
முன்பெல்லாம் விஷேஷங்களுக்கு இந்த சஹனில் சாப்பாடு வைத்து,சைட் டிஷ்களைசிறிய பாத்திரங்களில் நிரப்பி மேலே பேப்பர் அல்லது இன்னொரும் பெரிய தட்டால் மூடி மற்ற வீடுகளுக்கு விநியோகிப்பார்கள்.இப்பொழுது பிளாஸ்டிசக்,எவர்சில்வர் வாளி,டப்பா வந்ததில் இருந்து அதில் சாப்பாட்டை நிரப்பி அனுப்பி வைக்கின்றனர்.இந்த முறை செலவு சற்று அதிகமென்றாலும் சுலபமாக கையால்வதற்கு வசதியாக இருக்கும்.சிலர் பாத்திரங்கள் நூற்றுக்கணக்கில் வாங்கிவிநியோகிக்க விரும்பாவிட்டால் பிளாஸ்டிக் பை,பாலித்தீன் பைகளில் நிரப்பி பேக் செய்தும் அனுப்பி விடுகிறார்கள்.இப்பொழுதெல்லாம் எங்களூரில் சாப்பாட்டை விநியோகிக்க சஹன் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் விருந்தில் சஹன் தான் பயன்பாட்டில் உள்ளது.
எனக்கொரு சந்தேகம். முதலில் இவ்ளோபெரிய தட்டின் ஓரத்தில் உள்ளதெல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு நடுவுல இருக்கற சாப்பாட்டை தட்டுக்குள்ள போய் உட்கார்ந்து சாப்பிடுவாங்களா?! ப்ளீஸ் க்ளியர் மை டவுட்டு :-)
//இது அருசுவை தோழிகள் (அதிரா, இலா, ஜீனோ,இமா, செல்வி அக்கா, கவி,ஆசியா,ஸாதிகா அக்கா,ஹுஸைன்னாம்மா, பாயிஜா,மேனகா, கீதா ஆச்சல் பீ சீரியஸ், இளமதி, உமா, சகோ.ஹைஷ் இவர்களுக்காக போட்ட பிரியாணி //
லிஸ்ட் கம்மியா இருக்கு, ஆனா பிரியாணி ஜாஸ்தியா இருக்கே...!!! அரபு கார பிரியாணினா அவங்க ஸ்டைலுல ஒரு வா சாப்பிட்டு மிச்சத்த கொட்டனுமா என்ன....? ஏன் நாங்கல்லாம் சாப்பிட்டா பிர்ர்ரியாணி பத்தாதுங்கிற பயமா ஜலீலாக்காக்கு..?
//பழங்ககாலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் பெரிய தட்டு தாலாவில் தான் அதை கலம் என்று சொல்வார்கள் ஒரு களத்தில் ஐந்து பேர் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்//
பழங்காலத்துல இல்ல, இப்பவும் எங்க ஊருல விசேஷங்களில் அதான்... அத சஹ்ன்னு சொல்வாங்க.... 4 பீப்புள் சிங்கிள் plate... பெரும்பாலும் மாற்று மத சகோதரர்களுக்கு மட்டும் தனி தனி plate-ல குடுப்பாங்க.... நம்மவர்கள் இப்டி தான் சேந்து உக்காந்து ரவுண்டு கட்டி ரகளையே நடக்கும்... ஹா ஹா...
ஆஹா பிரியாணி நாஸியா (சின்ன பொண்ண ) மறந்துட்டேனே
பிரியாணி படங்கள், கல்யாண வீட்டில சமைச்சப்போ எடுத்ததா ஜலீலாக்கா?
ஹுஸைனாம்மா இந்த நக்கல் தானே வேணாங்குறது.
இது அரபிகள் செய்து கொண்டு இருக்காங்க பார்க்கலையா?
இல்ல அக்கா, அரபி வீட்டுக் கல்யாணம்னு எழுத விட்டுப்போச்சு.
எங்க ஊர்லயும் “தாலா”விலத்தான் கல்யாண வீடுகள்ல சாப்படு வைக்கீறது; முந்தியெல்லாம் 4 பேர் தாராளமா உக்காந்து சாப்பிடலாம்; இப்ப விலைவாசி ஏறுனதில முண்ணு பேர் சாப்பிடற அளவுக்குத்தான் சஹன்ல வைக்கீறாங்க; அது ஒரு தனி சுகம் கலத்துல சாப்பிடறது.
என் பசங்களுக்கு கலத்துல சாப்பிட ரொம்ப பிடிக்கும்; வீட்டிலயும் உறவுகளுக்கு விருந்து வச்சா கலம்தான்!!
இப்படி சேர்ந்து உக்காந்து சஹனில் சாப்பிடும் பொழுது ஏற்படக்கூடிய நன்மைகளுள் சில (எனக்கு தெரிந்தவை)
எற்றத்தால்வின்மை.
சகோதரத்துவம்
உணவில் அபிவிருத்தி
புதிய நட்பு வட்டம்
ஒற்றுமை உணர்வு
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..... யாரு எவ்ளோ சாப்பிட்ராங்கன்னே தெரியாது... ஹி ஹி.... ;-)
இதெல்லாம்.ரொம்ப மோசம் என்னைய விட்டுட்டு பிரியாணியா?
இனி சேர்த்தா நாவரமாட்டேன் போங்கக்கா உங்க கூட டுக்கா..
சுதாகர் அண்ணே இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா... உண்மையாவே உங்களுக்கு மன தைரியம் இருந்தா நான் செய்யும் பிரியாணி சாப்ப்ட்டு பாருங்க.
ஜலீலாக்கா இதுக்கு தண்டனை எனக்கு நீங்க செஞ்ச பிரியாணி தரனும்.. சொல்லுங்க எப்ப ஃபோன் பண்ண?
//என் பசங்களுக்கு கலத்துல சாப்பிட ரொம்ப பிடிக்கும்; வீட்டிலயும் உறவுகளுக்கு விருந்து வச்சா கலம்தான்!!//
அட நீங்களும் நம் கட்சி தானா.... ஹ்ம்ம்....
(உங்களுக்கு மட்டும் புரியும்: இனிமே அறிக்கைகள் குறையும்னு நெனைக்கிறேன், நாம எல்லாம் ஒரே கூட்டணி கட்சி ஹுஸைனம்மா... ஹி ஹி ;-) )
//யாரு எவ்ளோ சாப்பிட்ராங்கன்னே தெரியாது... //
அன்புத்தோழன் போட்டீங்க பாரு ஒரு போடு!! இது பாயிண்டு!! ஆமா, சாப்பிடற அளவு தெரியாது, சரிதான்.
சஹன்ல இருக்க நாலு பேர்ல ரெண்டு பேர் நல்லா சாப்பிடறவங்களாவும், ரெண்டு பேர் கொஞ்சமா சாப்பிடறவங்களாவும் இருந்துட்டா பிரச்னையில்ல.. நாலுமே வெட்டுற பார்ட்டீஸா இருந்தா கொஞ்சம் கஷ்டந்தான், ஏன்னா எங்க ஊர்ல கறிக்குழம்பு முதல்ல வக்கிறதுதான், ரெண்டாவது சப்ளை கிடையாது!! அதனால, முதல்லயே மட்டனைப் பதுக்கும் சாமர்த்தியமும் வேணும்!!
ஸோ, "Street smart" ஆக மாறவும் இந்த சஹன் முறை உதவுதுன்னு சொல்லலாமா? ஹி.. ஹீ...
நானும் விருந்தில் கலந்து கொண்டேன்.சூப்பர் சுவை.
ஜலீலா!
இது ரொம்ப பெரிய அநியாயம். புதுசா வந்து சேர்ந்தவங்களுக்கெல்லாம் பிரியாணி கிடையாதா?
என்னமோ போங்க!!!
சமையல் அட்டகாசங்களில், சாப்பாட்டுக்கு நாக்கலான சொற்கள், கொஞ்ச ஓவர். அரபு நாட்டுல இருந்துகிட்டு அரபிகளை கிண்டலா? அது சரி அரபிகாரர்களின் பிரியாணி அவர்கள் சாப்பிட்டதை நான் பார்ததில்லை, நம்ம மக்களும், பாக் மக்களும், பங்காளி மக்களும், லங்கா மக்களும் தான் சாப்பிட்ராங்க.. ருசி இருக்காது ஆனா பசி தானா பறந்துடும்.
ஜலீலாக்கா!! ஜலீலாக்கா!!! எல்லாமேயா ??? எங்களுக்கோ????? கடவுளே... வேளைக்குச் சொல்லியிருந்தால் நான் ”ஓசை”க்குப் போடவேண்டாமென அம்மாக்குச் சொல்லியிருப்பேனே.... இட்ஸ் ஓக்கை.
இருந்தாலும் ஜலீலாக்கா அவித்த முட்டை கேட்டது நானும் இலாவும்தான், ஹைஷ் அண்ணனும் ஜீனோவும் “கோலி”தானே கேட்டவை:). என்ர ”மண்”ணுக்குள்ள நீங்க ஒளிச்சுவச்ச(எனக்காக) முட்டையைக் காணவில்லையே.. எனக்கு ஜீனோவிலதான் சந்தேகம்.. அவர்தான்.. இதில கெட்டிக்காரராம் தானாகத்தான் சொன்னார்....
எப்போ இதெல்லாம் உண்மையாகத் தரப்போறீங்க ஜலீலாக்கா.. சூப்பர் படங்கள்..
ஊசிக்குறிப்பு:
நிறைய இடத்தில இருந்து புகைப் புகையா வருதே.. எதுக்கும் சீலிங் ஃபானை புல் ஸ்பீட்டில:) விடுங்கோ...
ஜலீலாக்கா.. லிஸ்ட் கம்மியா இருக்காம், பிரியாணி ஜாஸ்தியாக இருக்காம்....:), இப்படிப் புகையுது:):):),நாங்க 3 மண் மட்டுமில்ல 4 மண்” ஐயும் சாப்பிட ரெடியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இருக்கோம்...
அக்கா எனக்கு குடுக்க மறந்தாலும்... நான் நல்ல சாப்பிட்டேன் அக்கா....உங்க குறிப்பை பார்த்து கத்துகிட்டது இதை விட அதிகம் :-)
//ஒரு பழக்கடையே நடுவுல வைத்து சாப்பிடுவது இந்த அரபிகளால் தான் முடியும்.//
//கல்யாண சமையல் சாதம் சாப்பிடும் மாய ஜால பூதம் போல இருந்தால் தான் எறி நின்றி கிளற முடியும் போல//
//இந்த கிணற்றில் எத்தனை முழு ஆட்டை இரக்கியிருப்பார்கள்.//
//சகோ.ஹைஷ், அதிரா இலாவிற்கு தெரியாம் இரண்டு முட்டை பிரியாணியுனுள் ஒளித்து வைத்துள்ளேன் . பார்த்து சாப்பிடுங்கள்.//
ஆஹா... பட்டையை கிளப்புகிறது உங்களின் நகைச்சுவை எழுத்து... நன்றாக ரசித்து, சிரித்து படித்தேன். நான் உங்களுக்கு ஏற்கனவே “சிறப்பு சிரிப்பு சமையலரசி”ன்னு பட்டம் கொடுத்துட்டேன்...
//மகளிர் தின ஸ்பெஷல் பதிவில் என்னிடம் ஏதும் ஸ்பெஷலா போடலையான்னு கேட்டவர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்ளலாம். சாப்பிடலாம்//
கலந்துக்கலாம்... ஆனா சாப்பிட முடியாது... வெறுமனே வேடிக்கை என் வாடிக்கை...
வாழ்த்துக்கள் ஜலீலா மேடம்...
கவி ஆமாம் இது போல் சட்டி நிறைய ஆக்கும் போது செய்ய தோனாது அதை பார்த்தாலே வயிறு நிறைந்து விடும்.
பெரிய டிபன் பாக்ஸிலா உங்களுக்கு அரை மண் அளவு கொடுக்கிறேன்.
ஷபிக்ஸ் ஆயிசு முழுவது எங்கே சட்டி உள்ள உட்கார்ந்து சாப்பிடனுமா?
சகோ.ஹைஷ் என்னதிருப்தியா ஒரு மண் சாப்பாடு சாப்பிட்டீஙக்ளா, முட்டை கிடைச்சுதா? ரொம்ப சந்தோஷம்.
ஆமாம் பெரிய தாலாவில் மொத்தமா உட்கார்ந்து சாப்பிடுவது ரொம்ப நல்லா இருக்கும்.
சுதாகர் சார் உங்களுக்கு தான் ஒரு பழக்கடைய நடுவுல வைத்து இருக்கேனே பார்க்கல
//ஸ்ரீலஸ்ரீ.தொப்பையானந்தாவிற்கு மூணு பிளேட் பார்சல் அனுப்பவும்.//
ஒன்லி பழம் தான்
//எனக்கொரு சந்தேகம். முதலில் இவ்ளோபெரிய தட்டின் ஓரத்தில் உள்ளதெல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு நடுவுல இருக்கற சாப்பாட்டை தட்டுக்குள்ள போய் உட்கார்ந்து சாப்பிடுவாங்களா?! ப்ளீஸ் க்ளியர் மை டவுட்டு :-)//
ஹா ஹா கவி சரியான டவுட் , நாஞ்சிலாந்தா இதுக்கு பதில் சொல்வாரான்னுபார்க்கலாம் ..
//எனக்கொரு சந்தேகம். முதலில் இவ்ளோபெரிய தட்டின் ஓரத்தில் உள்ளதெல்லாம் சாப்பிட்டு முடிச்சுட்டு நடுவுல இருக்கற சாப்பாட்டை தட்டுக்குள்ள போய் உட்கார்ந்து சாப்பிடுவாங்களா?! ப்ளீஸ் க்ளியர் மை டவுட்டு :-)//
ஹா ஹா கவி சரியான டவுட் , நாஞ்சிலாந்தா இதுக்கு பதில் சொல்வாரான்னுபார்க்கலாம் ..
//எங்க ஊர்லயும் “தாலா”விலத்தான் கல்யாண வீடுகள்ல சாப்படு வைக்கீறது; முந்தியெல்லாம் 4 பேர் தாராளமா உக்காந்து சாப்பிடலாம்; இப்ப விலைவாசி ஏறுனதில முண்ணு பேர் சாப்பிடற அளவுக்குத்தான் சஹன்ல வைக்கீறாங்க; அது ஒரு தனி சுகம் கலத்துல சாப்பிடறது.//
அப்படியா ?அவர்களும் என்ன செய்வார்கள்.
1998 டில் மேலபாளையம் போன போது அப்பா அவர்கள் கவனித்த கவனிப்பை மறக்கவே முடியாது, அன்புதொல்லை ரொம்ப அதிகமா இருந்தது.
நடுவில் கறி சால்னாவ பாத்திகட்டி தள்ளி தள்ளி சாப்பிடசூப்பரா இருக்கும்.
சகோ.ஜமால் 4 பேர் சாப்பிடும் அளவு தானே ஒகே.... போட்டுட்டா போச்சு
அன்புத்தோழன் has left a new comment on your post "அரபிகாரர்களின் பிரியாணி(தோழிகளுக்காக)":
//இது அருசுவை தோழிகள் (அதிரா, இலா, ஜீனோ,இமா, செல்வி அக்கா, கவி,ஆசியா,ஸாதிகா அக்கா,ஹுஸைன்னாம்மா, பாயிஜா,மேனகா, கீதா ஆச்சல் பீ சீரியஸ், இளமதி, உமா, சகோ.ஹைஷ் இவர்களுக்காக போட்ட பிரியாணி //
லிஸ்ட் கம்மியா இருக்கு, ஆனா பிரியாணி ஜாஸ்தியா இருக்கே...!!! அரபு கார பிரியாணினா அவங்க ஸ்டைலுல ஒரு வா சாப்பிட்டு மிச்சத்த கொட்டனுமா என்ன....? ஏன் நாங்கல்லாம் சாப்பிட்டா பிர்ர்ரியாணி பத்தாதுங்கிற பயமா ஜலீலாக்காக்கு..?
இதெல்லாம் (கீழே உள்ள )அன்புதோழன் போட்ட கமெண்ட் இதில் பதிவாகல டெலிட் ஆகி இருக்கு, அதை இங்கு போட்டு இருக்கேன்.
அதான் கீழே யாரெல்லாம் வருகிறீர்களோ வந்து கலந்து கொள்ளும் படி சொன்னேனே படிக்கலையா?
அன்புத்தோழன் has left a new comment on your post "அரபிகாரர்களின் பிரியாணி(தோழிகளுக்காக)":
//பழங்ககாலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் பெரிய தட்டு தாலாவில் தான் அதை கலம் என்று சொல்வார்கள் ஒரு களத்தில் ஐந்து பேர் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்//
பழங்காலத்துல இல்ல, இப்பவும் எங்க ஊருல விசேஷங்களில் அதான்... அத சஹ்ன்னு சொல்வாங்க.... 4 பீப்புள் சிங்கிள் plate... பெரும்பாலும் மாற்று மத சகோதரர்களுக்கு மட்டும் தனி தனி plate-ல குடுப்பாங்க.... நம்மவர்கள் இப்டி தான் சேந்து உக்காந்து ரவுண்டு கட்டி ரகளையே நடக்கும்... ஹா ஹா...
ஆமாம் இது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்வது போல் ஒற்றுமையை எண்ணி இப்படி உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.
அன்புத்தோழன் has left a new comment on your post "அரபிகாரர்களின் பிரியாணி(தோழிகளுக்காக)":
//இப்படி சேர்ந்து உக்காந்து சஹனில் சாப்பிடும் பொழுது ஏற்படக்கூடிய நன்மைகளுள் சில (எனக்கு தெரிந்தவை)
எற்றத்தால்வின்மை.
சகோதரத்துவம்
உணவில் அபிவிருத்தி
புதிய நட்பு வட்டம்
ஒற்றுமை உணர்வு//
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க
///லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..... யாரு எவ்ளோ சாப்பிட்ராங்கன்னே தெரியாது... ஹி ஹி.... ;-) //
.. அது என்னவோ சரிதான்....
ஃபுல் கட்டு தான்
ஹுஸைனம்மா has left a new comment on your post "அரபிகாரர்களின் பிரியாணி(தோழிகளுக்காக)":
//யாரு எவ்ளோ சாப்பிட்ராங்கன்னே தெரியாது... //
அன்புத்தோழன் போட்டீங்க பாரு ஒரு போடு!! இது பாயிண்டு!! ஆமா, சாப்பிடற அளவு தெரியாது, சரிதான்.
சஹன்ல இருக்க நாலு பேர்ல ரெண்டு பேர் நல்லா சாப்பிடறவங்களாவும், ரெண்டு பேர் கொஞ்சமா சாப்பிடறவங்களாவும் இருந்துட்டா பிரச்னையில்ல.. நாலுமே வெட்டுற பார்ட்டீஸா இருந்தா கொஞ்சம் கஷ்டந்தான், ஏன்னா எங்க ஊர்ல கறிக்குழம்பு முதல்ல வக்கிறதுதான், ரெண்டாவது சப்ளை கிடையாது!! அதனால, முதல்லயே மட்டனைப் பதுக்கும் சாமர்த்தியமும் வேணும்!!
ஸோ, "Street smart" ஆக மாறவும் இந்த சஹன் முறை உதவுதுன்னு சொல்லலாமா? ஹி.. ஹீ...
ஓ அப்ப சாப்பாட்டுல கறிய பதுக்கிடுவீங்க
ஆசியா வந்து கலந்து கொண்டதுக்கு மிக்க நன்றி.
ரொம்ப சந்தோஷம்
கீதா அதற்குள் கோச்சிக்கக்கூடாது, அடுத்த பங்ஷனில் உங்க பெயரையும் சேர்த்து விடுகிறேன். கீழே வந்து கலந்து கொள்ளும் படி போட்டுள்ளேன், பாக்கலையா?
தாஜ் இந்த பிரியாணி ய பார்த்ததும் இப்படி தான் எழுத தோனுது.
நீங்கள் சொல்வதும் சரிதான் ஒரு ருசியும் இருக்காது காரமும் இருக்காது. எந்த மசாலாவும் கிடையாது.
நாஸியா,மலிக்கா,ஹுஸைனாம்மா ஒன்றும் அழப்படாது , வாங்க நம்ம நாலு பேரும் ஒரு கலம்(சஹன் ) போட்டு சாப்பிடலாம்.
என்ன அதிரா ஒளித்து வைத்த முட்டை காணுமா? இதுக்கு தான் சொல்வது பந்திக்கு முந்தனும் என்று, சரி அடுத்த முறை நாலு முட்டை சேர்த்து வைக்கிறேன்..
ஆகா தோசைக்கு அரைத்து விட்டீர்களா, பரவாயில்லை ஊத்தாப்பமாக்கிடுங்க..
இதென்ன புதுசா ஊசி குறிப்பு.... ஹா ஹா
ஹர்ஷினி அம்மா உங்கள் பெயரை நான் மறந்தாலும் பெருந்தன்மையா பதில் போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்..
//ஆஹா... பட்டையை கிளப்புகிறது உங்களின் நகைச்சுவை எழுத்து... நன்றாக ரசித்து, சிரித்து படித்தேன். நான் உங்களுக்கு ஏற்கனவே “சிறப்பு சிரிப்பு சமையலரசி”ன்னு பட்டம் கொடுத்துட்டேன்...//
கலந்துக்கலாம்... ஆனா சாப்பிட முடியாது... வெறுமனே வேடிக்கை என் வாடிக்கை...
கோபி வழக்கம் போல் வரிகளை நல்ல படிச்சி ரசிச்சி பதில் போட்டு இருக்கீங்க , பட்டம் கொடுத்ததற்கு ரொம்ப சந்தோஷம்.
தொப்பையானந்தாவுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்/// பிரியாணி சாப்பிடாமல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு பழக்கடை ...
துரோஹி பெண்கள் தினம் ஒழிக்க
நம்ம வூட்டுகாரம்மாவ அனுப்புறேன்
அமைச்சரே கண்ண நல்ல விளக்கெண்ணைய ஊற்றி கழுவி விட்டு டிஸ்கியில உள்ள கடைசி லைன பாரும் .அந்த கடைசி லைன் போட்டதே உமக்காதான்.... இப்படி எல்லாம் சொல்லப்பாடாது அப்பறம் பெரிய பாறாங்ககல்ல தூக்கி போட்டுவிடுவேனாக்கும்.ஒழுங்க வந்து பந்தியல கலந்து கொள்ளனுமாக்கும்.
அடடா ஜலீலா,
இப்பத்தான் பார்த்தேன், இவ்வளவு நல்ல பிரியாணி இங்கிருக்குன்னு தெரிஞ்சிருந்தா இன்னைக்கு சமைச்சே இருந்திருக்க மாட்டேன். தேங்க்ஸ் ஜலீ, எனனையும் ம்மறக்காமல் கூப்பிட்டதற்கு..
ஆ...அய்...ஜலீலாக்கா சொன்ன மாதிரியே பிரியாணி போட்டுட்டாங்களே..ஜீனோ கொஞ்சம் லேட்டா வந்துடுச்சி..இட்ஸ் ஓக்கை..ஹைஷ் அண்ணே(பூஸு க்கு)முதல்லையே வந்து கோலி முட்டையோட அள்ளிக்கினு வந்துட்டாரு. ஸோ நோ ப்ராப்ளம்!
ஜலீலாக்கா..முட்ட ஸூ...ப்ப்பப்ப்ப்...ப்பரா இருந்தது!! அது ஒண்டிதான் ஜீனோ சாப்பூடும்! ஆடு வெட்டரதெல்லாம் பாத்தா ஜீனோ அயுதுடும்!! அடுத்த தபா நல்ல வெஜிடேரியன் பில்லாணி ஒரு 7 மண் போட்டு ஜீனோஸ் கார்னர்க்கு பார்சல் அனுப்புங்கோ எண்டு இந்த பாசக்காரப் பய கேட்டுக்கொண்டு விடை பெறுகிறது. நன்றி,வணக்கம்!
அன்புள்ள சகோதரி,அஸ்ஸலாமு அலைக்கும்.தங்கள் இணைய தளம் சிறந்ததாக தேர்வு பெற்றுள்ளது.தங்களைப்பற்றிய சிறு அறிமுக குறிப்பு ஒன்று வரைந்து,பேனாமுனை பிளாகிற்கு பின்னூட்டம் இடும்படி அன்புடன் வேண்டும்,சகோதரன்.
அடடா... இதைபார்க்காலையே...
அதென்ன தோழிகளுக்காக மட்டும். நாங்க என்ன பாவம் பண்ணோம்.
பிரியாணின்னு சொன்னாலே எனக்கு பசிக்க ஆரம்பிச்சுரும்...பிரியாணி ஆசை வந்துடுச்சு... இப்போ ஓட்டலுக்கு சாப்பிடத்தான் போய்ட்டு இருக்கேன்... பிரியாணித்தான் சப்பிடப்போறேன்....
ஆமா இவ்ளோ பிரியாணி செய்திருக்காங்களே...எல்லாத்தையும் தின்னு தீத்துரவாய்ங்களா??? ஒரு கை குறையுதுன்னா நானும் வர்றேன்...
நாஞ்சிலாரே பார்த்து பிரியாணி சாப்பிட ஹோட்டலுக்கு போன அங்கு ஏதாவது வெரும் சாதத்தில் சாம்பாரை ஊற்றி இதான் பிரியாணின்னு சொல்ல போறாங்க/
லேட்டா வந்ததால் எல்லா மட்டன் பீஸும் தீர்ந்து விட்டது.. இதுக்கு தான் பந்திக்கு முந்தனும் என்பது
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா