இப்ப ஹே ஹே நானும் ஒரு வீடு வாங்கிட்டேன், கார் வாங்கிட்டேன் என்பது போல் ஹே ஹே நானும் ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டேன். என்று சொல்லி கொள்வதும் எல்லோருக்கும் சந்தோஷம்
உங்கள் எண்ணங்கள், மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய அட்வைஸ், டிப்ஸ்கள், எல்லாம் நேர உட்காத்தி வைத்து சொன்னா கேட்பாங்களா?
இப்படி எழுதுவதன் மூலம் எல்லோருக்கும் சொல்லலாம்.
இன்னும் சமையல் கலை, தையற்கலை, ஆர்ட், கிராப்ட் வொர்க்கள்,
/முதலில் பிளாக் ஆரம்பிக்கும் முன் இதுவரை பயன்படுத்தி கொண்டு இருக்கும் ஜீமெயில் ஐடியில் ஆரம்பிக்காதீர்கள்.
பிளாக்குக்கு என்று தனியாக ஜீமெயில் ஐடி கிரியேட் செய்து அதையே பிளாக்குக்கும் பயன் படுத்துங்கள்.//
முதலே பிளாக் பெயர், தலைப்பு எல்லாம் யோசித்து தேர்ந்தெடுத்து கொண்டு பிறகு ஆரம்பிக்கவும்.
அப்போது தான் கமெண்ட் மாட்ரேட்டுக்கும் இதை தனியாக பயன் படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.
எப்போதும் பயன் படுத்தும் மெயில் ஐடியில் ஆரம்பித்தால் இதில் வரும் கமெண்டுகள் உங்களுக்கு வரும் நண்பர்கள், சொந்தங்களின் மெயில்கள் எல்லாம் ஒன்றாக வந்து குமிந்து முக்கியமான மெயில்களை பார்க்க தவறி விடுவீர்கள்.
கவிதை, கதை, கட்டுரைகள் மட்டும் பதிவல்ல, தெரிந்த அனைத்து நல்ல விஷியங்களை பகிர்தலும் நல்ல பதிவுகள் தான். இப்படி எழுதுவதால் தேவைபடுபவர்கள் கண்டிப்பாக பயனடைவார்கள்.
கூட்டம் சேரவில்லையே என்று கவலை வேண்டாம் அதோடு எழுதுவதை நிறுத்தி விடவேண்டாம். சில நல்ல பதிவுகள் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்.
இப்ப ஹே ஹே நானும் ஒரு வீடு வாங்கிட்டேன், கார் வாங்கிட்டேன் என்பது போல் ஹே ஹே நானும் ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டேன். என்று சொல்லி கொள்வதும் எல்லோருக்கும் சந்தோஷம்.
நான் பிளாக் ஆரம்பித்ததே, பல வலை தளங்களில் சிதறலாக உள்ள பதிவுகள் ஒன்றாக சேர்க்கனும் என்று தான் போட்டேன். ஆரம்பித்து 9 மாதம் ஆகியும் 20 பாலோவர்ஸ்கள் தான், பிறகு தமிலிஷில், தமிழ்மணத்தில் இனைந்த பிறகு தான் இப்போது 200 க்கு மேல் பாலோவர்கள் இத்தனை பேருக்கு என் பதிவுகள் உபயோகப்படுகிறதே என்று ரொம்ப சந்தோஷம்.
இது போல் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
//edit user profile லில் show my blogs என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் பிளாக் பெயர்கள் இருக்கும் அதில் இருக்கும் tick கை எடுத்து விட்டு விட்டு நீங்கள் போட்ட பதிவுகளை சரி பார்த்து விட்டு பிறகு பிளாக் ஐடியை டிக் செய்யவும். இனி அடுத்து அடுத்து போடும் பதிவுகளுக்கு இப்படி சரிபார்க்க தேவையில்லல். முதல் முதல் ஆரம்பிக்கும் போது மட்டும் செய்தால் போதும். //
உங்கள் பெயரில் நேரிடையாக பதிவுகள் போடுவதில் ஏதும் பிரச்சனை என்றால் கண்டிப்பாக ஏதாவது அழகான புனைப்பெயரில் போடுங்கள்.
பின்னூட்டங்கள்:
பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.
பின்னூட்டம் இடுபவர்களின் வலைபூக்களுக்கு சென்று தவறாமல் பின்னூட்டம் இடுங்கள். நீங்கள் போடும் பின்னூட்டமும் பிறர் மனம் நோகாத வண்ணம் நல்ல முறையில் போடுங்கள். எந்த இடத்தில் நல்ல பதிவுகள் இருந்தாலும் அதை வாழ்த்த தவறாதீர்கள்.
தமிலிஷ், தமிழ்மணம் ஆகியவற்றில் இனைவதின் மூலம் எல்லோருக்கும் உங்கள் பதிவுகள் தெரியவந்து பிரபலபதிவர்கள் ஆகலாம்.
பதிவுகளை எந்த தலத்திலிருந்து எடுத்து காப்பி செய்து போடாதீர்கள். எல்லோரும் வலை உலகில் எல்லா தளங்களையும் பார்க்கின்றனர். காப்பி பதிவுகளுக்கு நிறைய எதிர் மறை கமெண்டுகள் வரும்.
(என் பதிவுகள் தினகரனில் நான் பதிவு போட போட 3 மாதம் கழித்து என் பதிவுகள் அங்கும் இருக்கு ஆனால் கீழே என் பெயர் இல்லாமல் இது மிகவும் மனவருத்தம் எனக்கு.)
அப்படி ரொம்ப பிடித்து மற்றவர்கள் பதிவுகளை, மற்ற தலத்திலிருது பதிவுகளை எடுத்து போட்டால் கண்டிப்பாக கீழே அவர்கள் பெயரை குறிப்பிடுங்கள்.
மெயிலில் வரும் தகவல்களை எடுத்து போடும் போதும் மெயில் தகவல் என்று குறிப்பிடுங்கள்.
பல நீதிக்கதைகளை பகிர்ந்து கொண்டால் அதையும் எந்த புத்தகத்திலிருது எடுத்து போட்டீர்கள் என்பதை தவறாமல் போடவும்.
ஆன்மீக தகவல்களை எடுத்து போடும் போது கண்டிப்பாக நூல் பெயரை குறிப்பிடுஙக்ள்.இல்லை என்றால் பல இன்னல்கள் வரும்.
அதே போல் ஹிந்தி மற்றும் ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்து போடும் போதும் கண்டிப்பாக தெரியபடுத்தவும்.சொந்த பதிவு போல் போடாதீர்கள்.
நேரில் பார்க்கும் அசம்பாவிதஙக்ள், அனியாயங்கள், மன வேதனையான சம்பவங்கள் எவ்வளவோ இருக்கு அதை கூட நல்ல முறையில் அடுத்து யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற நல்ல கருத்துகளாக பகிர்ந்து கொள்ளலாம்.
குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பலருக்கும் ஓவ்வொரு விதமான டிப்ஸ்கள் , டிரிக்ஸ் கள் தெரிந்து இருக்கலாம் அதையும் அழகான முறையில் எடுத்து சொல்லலாம்.
//நான் பிளாக் ஆரம்பித்ததே, பல வலை தளங்களில் என் சொந்த பதிவுகள் சிதறலாக உள்ள பதிவுகள் ஒன்றாக சேர்க்கனும் என்று தான் போட்டேன். ஆரம்பித்து 9 மாதம் ஆகியும் 20 பாலோவர்ஸ்கள் தான், பிறகு தமிலிஷில், தமிழ்மணத்தில் இனைந்த பிறகு தான் இப்போது 200 க்கு மேல் பாலோவர்கள் இத்தனை பேருக்கு என் பதிவுகள் உபயோகப்படுகிறதே என்று ரொம்ப சந்தோஷம். //
இதில் மெயினாக சொல்ல வந்ததே இரண்டு விஷியம் 1. வேறு ஐடி கிரியேட் செய்து அதன் மூலம் ஆரப்பிப்பது நல்லது. 2. மனதை நோகடிக்காத பின்னூட்டஙக்ள்/
இந்த் பதிவு பிளாக் உலகில் சகல கலா வல்லி வல்லர்களுக்கு இந்த டிப்ஸ் இல்லை, புதுசா ஆரம்பிப்பவர்களுக்கு இது கண்டிப்பாக பயன் படும்.
எல் கேவின் பதிவுலகம் ஒரு பார்வை இந்த பதிவையும் பாருங்கள்
பதிவுலகில் எல்லோரும் நல்ல படியாக பிளாக்கர் டிப்ஸ் போட்டு வருகிறார்கள் .
இந்த பதிவு யுத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸில் வந்துள்ளது ரொம்ப சந்தோஷம். யுத் ஃபுல் விகடனுக்கு மிக்க நன்றி.
Tweet | ||||||
87 கருத்துகள்:
அருமையான தகவல்கள். என்னோட பதிவுக்கும் இணைப்பு கொடுத்தற்கு நன்றி
//பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.
பின்னூட்டம் இடுபவர்களின் வலைபூக்களுக்கு சென்று தவறாமல் பின்னூட்டம் இடுங்கள். நீங்கள் போடும் பின்னூட்டமும் பிறர் மனம் நோகாத வண்ணம் நல்ல முறையில் போடுங்கள். எந்த இடத்தில் நல்ல பதிவுகளை வாழ்த்த தவறாதீர்கள்./
இதுதான் முக்கியம்.. இன்னிக்கு பல பிரச்சனைக்கு இதுதான் காரணம்
tamilishla add panniten
அக்கா நல்ல டிப்ஸ் அக்கா, புதியவர்களுக்கு சுலபமாக இருக்கும். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அடேங்கப்பா... பின்றீங்களே...
பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.
///
உண்மை தான் இதை சில பதிவர்கள் பின்பற்றியிருந்தால் இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சனை வர வாய்ப்பே இருந்திருக்காது.
நன்று.. நன்றி..!
[[[பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.
பின்னூட்டம் இடுபவர்களின் வலைபூக்களுக்கு சென்று தவறாமல் பின்னூட்டம் இடுங்கள். நீங்கள் போடும் பின்னூட்டமும் பிறர் மனம் நோகாத வண்ணம் நல்ல முறையில் போடுங்கள். எந்த இடத்தில் நல்ல பதிவுகளை வாழ்த்த தவறாதீர்கள்.]]]
அக்காவின் இந்த அறிவுரைதான் இன்றைய நிலைமையில் வலையுலகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று..!
கேட்டுத் தொலைங்கப்பா..!
நானும் தமிழ் மணத்தில் இணைந்து பதில் மெயிலும் வந்தது.இன்னும் தமிழ்மணம் பட்டையை இணைக்கவில்லை.
நல்ல தகவல்.
தமிழ் 10 ல்யும்.சேர்தாச்சு.. மொத்தம் எட்டு பிளாக்காஆஆஆ மாஷா அல்லாஹ் .அப்ப நீங்க தாராளமா டிப்ஸ் குடுக்கலாம் . இதில என்னையும் சேர்த்தா!!!!!!!!!!
இந்த நேரத்தில் இந்த பதிவு அவசியம்தான்...
//பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.//...சரியா சொல்லி இருக்கிங்க.
அருமையான டிப்ஸ்!
நல்ல தகவல் சூப்பர் கா.....
/// ஹே ஹே நானும் ஒரு வீடு வாங்கிட்டேன், கார் வாங்கிட்டேன் என்பது போல் ஹே ஹே நானும் ஒரு பிளாக் ஆரம்பித்துவிட்டேன். என்று சொல்லி கொள்வதும் எல்லோருக்கும் சந்தோஷம் ///
என்னை மாதிரியே பல பேர் இருகாங்களா !!!!
அருமையா எழுதிட்டீங்க...
உபயோகமான தகவல்கள், நல்லா இருக்கு.
ரொம்ப பயனுள்ள பதிவு சகோதரி. இப்போது தான் புதிதாக ஒரு ப்ளாக் தொடங்கிடுள்ளேன். இன்றே இப்பரிந்துரைகளை பின்பற்றுகிறேன். நன்றி சகோ..=)
ஆல் இன் ஆல் என்பதை திரும்ப திரும்ப ஊர்ஜிதப்படுகின்றீர்கள் ஜலி.
சூப்பர் ஜலீலா அக்கா எப்பையும் போல கலக்கீட்டிங்க வாழ்த்துக்கள் அக்கா.
நல்லதா சொன்னீங்க :)
கருத்திடுவது ரொம்ப யோசிச்சி செய்யனும் :)
அசத்தலா சொல்லியிருக்கீங்க. புதுசா ப்ளாக் ஆரம்பிக்கிறவங்களுக்கு நிச்சயமா பயனுள்ளதா இருக்கும்.
புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். அப்படியே என் thagavalmalar.blogspot.com வந்து பாருங்கள்.
நான் பிளாக் ஆரம்பித்த போது, இந்த மாதிரி ஆலோசனைக் கிடைக்கவில்லையே என
நினைக்கத் தோன்றுகிறது. புதியவர்களுக்கு நல்ல ஆலோசனை.
நன்றி.
/கவிதை, கதை, கட்டுரைகள் மட்டும் பதிவல்ல,//
எனக்கு அதுமட்டும்தானே தெரியும்
உங்களைபோல நான் அறிவாளியில்லைக்கா. அதுக்கும் ஆப்பா. அச்சோ.
//பின்னூட்டங்கள் கொடுப்பவர்களுக்கு தகுந்தவாறு பதில் யார் மனதையும் நோகடிக்காமல் அழகிய முறையில் பின்னூட்டம் இடுங்கள்.//
நல்ல அறிவுரைக்கா.. சூப்பர்..
super akka
அக்காவின் இந்த அறிவுரைதான் இன்றைய நிலைமையில் வலையுலகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று..!
கேட்டுத் தொலைங்கப்பா..!
உண்மையான தமிழினின் உண்மையான வார்த்தைகள். உங்களுக்கும் நன்றி.
நல்ல பதிவு!!
ரொம்ப அருமையான விசயங்கள். பகிர்வுக்கு நன்றி.
உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்து இருக்கிறது. வாழ்த்துகள்.
//சுந்ததிர மென்பொருள்// தவறு
சுதந்திர இலவச மென்பொருள் - சரி.
நன்றி.
பயனுள்ள தகவல்கள்... நன்றி...
பயனுள்ள தகவல்கள்... நன்றி...
மிக, மிக அவசியமான ஆலோசனைகள். நன்றி!
how to add my blog with tamilish? please explain.
நம்பிக்கை தருகிறது புதியவர்களுக்கு உங்கள் பதிவு,,,
That's our Acca J. Well said. =))
நானும் இந்த சமையல் புளொக்ல எல்லாம் போய் வோட்டு போட்டுட்டே இருக்கேன். ஆனா, இந்த அக்காக்கள் யாரும் எனக்கு பிரியாணி பார்சல் அனுப்ப மாட்டேங்கிறாங்க. எல்லோரோடையும் கா. =))
நன்று. நன்றி.
சின்ன பிளாக்கர் டிப்ஸ் என்றாலும் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்...
மேலும் ஒரு சின்ன correction //அப்படியே யோசிக்காம ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விட்டு (போங்களே!)//போங்களே என்பது ‘போங்கடா’ என்பது தென் மாவட்ட வழக்குச்சொல்.எழுத்து பிழை சரி செய்யவும்.
சின்ன பிளாக்கர் டிப்ஸ் என்றாலும் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்...மேலும் ஒரு சின்ன correction //அப்படியே யோசிக்காம ஒரே ஒரு ஓட்டையும் போட்டு விட்டு (போங்களே!)//போங்களே என்பது ‘போங்கடா’ தென் மாவட்ட வழக்குச்சொல்,எழுத்து பிழை சரி செய்யவும்
//எப்போதும் பயன் படுத்தும் மெயில் ஐடியில் ஆரம்பித்தால் இதில் வரும் கமெண்டுகள் உங்களுக்கு வரும் நண்பர்கள், சொந்தங்களின் மெயில்கள் எல்லாம் ஒன்றாக வந்து குமிந்து முக்கியமான மெயில்களை பார்க்க தவறி விடுவீர்கள்.//
நான் செய்ததவறு இதுதான் அக்கா...புதியவர்களுக்கு மட்டும் இல்லை பழையவருக்கும் நல்லா தகவல்கள் இருக்கு ஜலி அக்கா...நன்றி....
உங்கள் பக்கத்தில் கிழே நிறைய இடைவெளி ஏன் அக்கா??
//போங்களே!)//போங்களே என்பது ‘போங்கடா’ தென் மாவட்ட வழக்குச்சொல்//
அரைஸ் இது எங்க ஊரில் ரொமப் மரியாதையான வார்த்தை,
எதுக்கு வம்பு, என்னை விட சின்னவர்களையும் வாங்க போங்க என்று தான் கூப்பிடுவேன். நீ வா போ என்று சொன்னதில்லை.
போடுஙக்ள் என்று மாற்றிவிட்டேன்
உங்கள் வருகைக்கும் கருத்து தெரிவித்த்மைக்கும் மிக்க நன்றி.
அனானி தமிலிஷ் பற்றி கேட்டு இருந்தீங்க.
பெயரை குறிப்பிடுங்கள்.
விபரமாக சொல்ல ஆசை தான்.
சொன்னால் இங்கு நான் யார் கிட்ட பேசி கொண்டு இருக்கேனுன்னு எனக்கு தெரியாது.
எல் கே என் பதிவுகளுக்கு முதலாவது வந்து கருத்து தெரிவித்து ஊக்கமளிபப்தற்கு மிக்க நன்றி.
தமிலிஷில் சம்மிட் செய்ததற்கும் மிக்க நன்றி.
நாஞ்சிலாலாரே உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
வருகைக்கு மிகக் நன்றி
தம்பி சசி உங்கள் அன்பான பாராட்டுக்கும் தொடர் வருகைகைக்கும் மிக்க நன்றி
வெறும் பய உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
அப்படியா நடந்து கொண்டு இருப்பது என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியாது,
எனக்கு மனதில் பட்டதை எழுதினேன்.
பிரசன்னா உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
மனதில் பதிந்த பதிவாக இடம்பிடிக்கிறது @
http://www.sinhacity.com/
தமிச் 10 பப்லிஷ் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
தொடர் வருகைக்கும் கருத்து தெரிவிபப்தற்கும் மிக்க நன்றி.
எட்டு பிளாக் எப்படி என்னன்னு தெரியாம ஆரம்பித்த்தது, இப்போதைக்கு சமையல் அட்டகாசங்களிலும், முத்தான துஆக்களிலும் மட்டும் தான் பதிவுகள்.
அப்ப ஒரு பிளாக் எழுதி இருந்தா டிப்ஸ் கொடுகக் கூடாதா, ஹிஹி
போனி பேஸ் வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க
ஆமாம் நான் முதல் முதல் ஆரம்பிக்கும் போது அப்படி தான் இருந்தது.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
ஷபிக்ஸ் வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
சகோ.ஜமால் வாங்க , ஆமாம் நீங்கள் சொல்வது சரி கருத்திடுவது ரொமப் கவனமாக போடனும்.
நன்றி
மலிக்கா சமையல் , டிப்ஸாவது யார் வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் கவிதை ஒரு சில அறிவி ஜீவிகளுக்கு தான் ஊற்றாக வரும்.
வருகைக்கு மிக்க நன்றி,
மோகன் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
ஜோதிஜி உங்கள் முதல் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி..
கடைசீல காமெடி ட்ரேக்க(பதிவுகளை ) விட்டிங்களே
உண்மை தமிழன் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
நன்றி ஆசியா நானும் ஒன்னறை வருட காலமா அதோடு போராடி தமிழ்மன்ம் இபப் தான் புரிந்தது.
நீஙக்ளும் நான் மெயிலில் சொன்ன படி முயற்சித்து பாருங்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி பிரியா/
அக்பர் தொடர் வருகைக்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மிகக் நன்றி
ஷிர்டி சாய்தாசன், உங்கள் முதல் வருகைக்கு மிகக் நன்றி.
யுத் ஃபுல் விகடனில் வந்ததை வந்து தெரியபடுத்தியமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.
சுதந்திர இலவச மென்பொருளை மாற்றி விடுகிறேன்.
ரியாஸ் வாங்க நம்பிக்கையோடு எழுதுங்கள்.
வருகைக்கு மிக்க நன்றி/
இப்னு ஹம்துன் , உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
இந்த பதிவில் நிறைய புது முகங்கள். ரொம்ப சந்தோஷம்.
உங்கள் முதல் வருகைக்கு மிகக் நன்றி செந்தழல் ரவி.
வருகைக்கு மிக்க நன்றி சகோ.வினோ. கண்டிப்பாக இது எல்லோருக்கும் பயனளிக்கும்./
ஸாதிகா அக்கா அருமையாக வாழ்த்துவதில் உங்களுக்கு ஈடு யாரும் இல்லை.
நன்றி பிரபா, ஊரிலிருந்து வந்தாச்சா?
செ.சரவண குமார் புதுசா பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு இது கண்டிப்பாக பயன் படும்/
வருகைக்கு மிக்க நன்றீ
குடந்தை மனி உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
உங்கள் தகவல் மலர் பற்றி லிங்க் கொடுத்தது ரொம்ப சந்தோஷம் பிறகு நேரம் கிடைக்கும் போது பார்த்து கொள்கீறேன்.
மிக்க நன்றி
//நான் பிளாக் ஆரம்பித்த போது, இந்த மாதிரி ஆலோசனைக் கிடைக்கவில்லையே என
நினைக்கத் தோன்றுகிறது. புதியவர்களுக்கு நல்ல ஆலோசனை//.
அமைதி அப்பா எனக்கும் அப்படி தான் தோனுச்சி அதான் இந்த பதிவு.
அமைதி அப்பா மிக்க ந்னறி
நன்றி மேனகா
ரஞ்சித் குமார் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி
நிஜாமுதீன் தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.
அனாமிகா கருத்து தெரிவிப்பதற்கு, ஓட்டு போடுவத்ற்கும் மிக்க நன்றி,
நேரமில்லாததால் வர முடியல . முடிந்த போது கண்டிப்பாக வரேன்.
//எப்போதும் பயன் படுத்தும் மெயில் ஐடியில் ஆரம்பித்தால் இதில் வரும் கமெண்டுகள் உங்களுக்கு வரும் நண்பர்கள், சொந்தங்களின் மெயில்கள் எல்லாம் ஒன்றாக வந்து குமிந்து முக்கியமான மெயில்களை பார்க்க தவறி விடுவீர்கள்.//
நான் செய்ததவறு இதுதான் அக்கா...புதியவர்களுக்கு மட்டும் இல்லை பழையவருக்கும் நல்லா தகவல்கள் இருக்கு ஜலி அக்கா...நன்றி....
உங்கள் பக்கத்தில் கிழே நிறைய இடைவெளி ஏன் அக்கா?? //
சீமான் கனி நான் சொன்ன பாயிண்ட் கரெக்டா நீங்க தான் பார்த்து பதில் சொல்லி இர்க்கீங்க.
இடைவெளியா என்னனு எனக்கு தெரியலையே.
தொடர் வருகை தந்து ஜலி அக்கா என்று என்வீட்டில் என் தம்பிகள் கூப்பிடுவது போல் கூப்பிடுவார்கல்.
உங்கள் பதிவுக்கும் வர முடியல.
முடிந்த போது கண்டிப்பாக வரும்/
அனானி பாராட்டுக்கு நன்றி
சின்ஹா சிட்டி டாப் டென்னில் என் பிளாக்கும் இடம் பெற்றமைக்கு மிக்க சந்தோஷம்.
அமைச்சரே காமடி ஆமாம் விட்டு போச்சு அப்பரம் சேர்த்தா போச்சு.
வருகைக்கு மிக்க நன்றி.
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள், ஜலீலா!
பயனுள்ள தகவல்கள்.
ஆ.. ஜலீலாக்கா நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்கள்..
ஆழக் குழிதோண்டி அதிலேஓர் முட்டையிட்டு, அண்ணாந்து பார்த்தால் 90 முட்டைகளாம்.... அப்படியிருக்கு உங்கள் பதிவும் அதற்கான பின்னூட்டங்களும்... நான் தான் தாமதமாகிவிட்டேனாக்கும்.
உண்மைதான், பின்னூட்டங்கள் வராவிட்டாலும் நிறையப்பேர் படிக்கிறார்கள் என்பதை அறியும்போதே மனதில் ஆர்வம் அதிகமாகிறது.
When I see all blogger's profile, the caption appears in Arabic. How do I get it in English / Tamil?.
அக்கா, அசத்துறீங்க அக்கா. உங்க உழைப்பு இந்தப் பதிவுல உறுதியாத் தெரியுது அக்கா. போகிறபோக்கில ஒரு பதிவுனு எழுதாம, ஒரு பதிவர்ன் பார்வையில தேவையான விஷயங்களை எழுதிருக்கீங்க!!
யூத் விகடன்லயும் வந்துருக்கது ரொம்ப மகிழ்ச்சி அக்கா! மனமார்ந்த வாழ்த்துகள்!!
நன்றி மனோ அக்கா
நன்றி காஞ்சனா
அதிரா நீங்கள் சொல்வது போல் பின்னூட்டம் இடவில்லை என்றாலும் நிறைய பேர் படிக்கிறார்கள் எல்லோருக்கும் உதவுது.அது ஒரு மனதிருப்தி.
My verses
when you login blogger, first select the language
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஹுஸைனாம்மா, இது எல்லோருக்கும் பயன்படும் அதான் தொகுத்து போட்டேன்.
ஜலீ கங்கிராட்ஸ் உங்க இனையம் குட் ப்ளாக்ஸில் வந்துள்ளது.
ஆல் இன் ஆல் ஜலிக்கு எல்லாரும் ஒரு பெரிய O போடுங்க.
ஆமாம் நிங்கள் சொன்ன்ன எல்லா விஷயமும் எல்லாருக்கும் பயனுள்ளது.
நிறைய்ய பேர் பார்ர்பாங்க ஆனால் பதிவு போட மாட்டங்க, குட் சில பேர் படிக்காமலே கடமைக்காக ஒரு பதிவு போடுபவர்களும் உண்டு. சில பேர் படித்து நல்ல அருமையான கருத்தோட பதிவுகளும் போடுபவர்களும் உண்டு. எத்தனையோ வித விதமான் மக்கள் நாம் நம் வலை தளத்தில் சந்திக்கிறோம் என்பதை நினத்து நான் பெருமை படுகிறேன். நல்ல கருத்துகள் பகிர்ந்த ஜலீ நன்றி..
நான் புதுசா வலைப்பூ துவங்கியுள்ளேன். அதுக்கு உங்க ஆதரவும், உதவியும் தேவை. தமிழ்மணத்திலும், தமிலிஷ்யிளும் நம் பதிவை இணைப்பது எப்படி?... ப்ளீஸ், விளக்கம் தேவை. உங்க வாய்ப்பு அருமையா இருக்கு.
விஜி ரொம்ப பிஸி நீங்க ரொம்ப நன்றி பா வந்து பின்னூட்டமிட்டமைக்கு.
எஸ் எஸ் பூங்கதிர் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
உங்கள் பிளாக் வந்து பார்த்தேன் கமெண்ட் ஆப்ஷனே இல்லை
கூடிய விரைவில் தமிலிஷ் , தமிழ் மணம் பதிவு போடுகீறேன்.
ஹோ ஹோ எங்க அக்கா, விகடன்ல வர்ர அளவுக்கு பெரிய்ய்ய்ய்ய எழுத்தாளர் ஆகிட்டாங்களே! சந்தோஷமா இருக்கும்!
வாங்க சுஹைனா நீங்க வந்து கமெண்ட் போட்டது ரொமப் சந்தோஷ்ம்.
எல்லாம் நீங்கள் முன்பு சொல்லி கொடுத்ததன் மூலம், என் அனுபவ பதிவு இது.
Gud info....
தொடர்ந்து சிறந்த பதிவுகள் எழுதிவரும் உங்களை வரவேற்கிறோம்....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா