Showing posts with label குழந்தை உணவு. Show all posts
Showing posts with label குழந்தை உணவு. Show all posts

Tuesday, May 5, 2020

மிட்டா மீன் /தால் கிச்சிடி /Mitta Meen Dal Kichidi







Mitta Meen & Dal Kichidi Easy & Healthy  Suhoor Recipe//மிட்டா மீன் /

Please click below link and watch - please support

மிட்டா மீன் /தால் கிச்சிடி /Mitta Meen Dal Kichidi

கடல் உணவு, பக்க உணவு, சாதம் வகைகள், குழந்தை உணவு, நோன்புகால சஹர் உணவு
Ramadan 2020




மீன் மிட்டா
தேவையான பொருட்கள்
சீலா மீன் - அரைகிலோ
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முன்று தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - அரை கட்டு
பட்டை - ஒன்று
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணை - ஐந்து தேக்கரண்டி
பச்சமிளகாய் - இரண்டு
கரம் மசாலா - கால் தேக்கரண்டி

samaiyalattakaasam.blogspot.com

செய்முறை
மீனை சுத்தமா கழுவி முள்ளில்லாமல் பிரித்தெடுக்கவும்.
எண்ணையை காய வைத்து பட்டையை போட்டு வெங்காயத்தை பொடியக அரிந்து வதக்கவும் வதக்கி இஞ்சி பூன்டு பேஸ்ட் சேர்க்கவும்.
பிறகு பாதி கொத்து மல்லி தழை போட்டு தக்காளி சேர்த்து வதக்கி பச்சமிளகாய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா, உப்பு போட்டு நல்ல வதக்கவும்.
பிறகு மீனை முள் இல்லாமல் அரிந்து சேர்த்து தேங்காய் பாலையும் ஊற்றி இரண்டு கப் தண்ணீரும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து நல்ல கொதித்து கூட்டானதும் இரக்கி கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
ரெட் கலரில் பார்க்கவெ நல்ல இருக்கும் கூட்டுடன்.
இதற்கு புளி தேவையில்லை.
சுவையான மிட்டா மீன் ரெடி.

by
jaleelakamal




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Friday, April 24, 2020

ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/ Samaiyal...

Hi Friends

Ramdan Mubarak 2020

Due to sever problem cannot upload picture  friends pls watch my recipes on my channel and support



#Agar Agar #Ramadan Recipes













https://youtu.be/EwhRnPFt1fw





Due to sever problem cannot upload picture  friends pls watch my recipes on my channel and support





Orange agar agar 

https://youtu.be/EwhRnPFt1fw



Simple and Easy Recipes and Traditional Recipes
ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகராHow to Make Orange fruit Agar Agar/ Samaiyal_attakaasam
#ramadan


China grass /kadal paasi /Agar Agar - 10gram
water - 400ml
sugar - 10 tspn
fresh fruit juice - 100 ml

**********
கடல் பாசி நோன்பு காலத்தில் செய்யும் பலவகை பதார்த்தங்களில் இதுவும் ஒன்று. இது ஒரு சைவ உணவு. இதை ஜெல்லியை போல் ஹோட்டல்களில் பாலுடா மற்றும் விதவிதமான ஸ்வீட் வகைகளில் பயன்படுத்துவார்கள். இது நோன்பு பிடிக்கும் போது ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும். கடல் பாசியை பல வகையாக செய்யலாம், ப்ளைனாக செய்து அதில் வேண்டிய புட்கலர் சேர்த்து நட்ஸ் தூவி கொள்ளலாம். இல்லை பழ வகைகளை நறுக்கி போட்டு செய்யலாம். பால், ஜவ்வரிசி, கடல்பாசி சேர்த்து காய்ச்சி செய்து சாப்பிடலாம். ரூ ஆப்ஷா மற்றும் டேங்க் பவுடர், தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம்
இதை நோன்புகாலதில் தான் என்றில்ல்லை மற்ற சீசன் களிலும் சாப்பிடலாம். வயிற்றுபுண் வாய் புண்ணிற்கும் ஏற்ற நல்ல ரெசிபி,​

ஆரஞ்சு சைனா கிராஸ்
****************************
சைனா கிராஸ் - 10 கிராம்
ஆரஞ்சு பழ சாறு - 100 மில்லி
சர்க்க்ரை -10 தேக்கரண்டி
தண்ணீர் - 400 கிராம்
ஆரஞ்சு பழத்தை வட்ட வடிவமாக அரிந்து விட்டு சாறு எடுத்து விட்டு பழத்தோலை வைக்கவும்,

சைனா கிராசை கட் செய்து 400 மில்லி தண்ணீரில் கொதிக்க விடவும் கெட்டியாகி வரும் போது அதில் சர்க்கரை மற்றும் ஆரஞ்சு பழ சாறை கலந்து கலக்கி கொதிக்க விட்டு சிறிது ஆறியதும் பிழிந்த ஆரஞ்சு பழ தோலை வட்ட வடிவமாக
அப்படியே அதன் வடிவிலேயே வைத்து அதை ஒரு கோப்பையில் வைத்து தயார் செய்த ஆரஞ்சு பழ சைனா கிராசை அதில் ஊற்றவும். மீதி உள்ளதை மற்ற கிண்ணங்களில் ஊற்றி கொள்ளலாம்.நன்கு குளிர விடவும்.
சில ஆரஞ்சு பழம் சில ரொம்ப புளிப்பாக இருக்க்கும் அதற்கு நாம் இப்படி செய்தால் புளிப்பு சுவை தித்திப்பாக மாறிடும்.
ஆரஞ்சு பழ சுவையில் சூப்பரான் அகர் அகர் - சைனா கிராஸ் ரெடி.

ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்#
Facebook:
https://www.facebook.com/jaleela.kamal
Face Book Page:
https://www.facebook.com/Samaiyalatta...
Dubai Burka Group wholesale and Retail:
https://www.facebook.com/groups/Dubai...
Tamil Blog:
http://samaiyalattakaasam.blogspot.com
English Blog:
http://cookbookjaleela.blogspot.com/
for Inquiry: cookbookjaleela@gmail.com



Veg nonbu kanji
http://samaiyalattakaasam.blogspot.com/2017/06/7-veggie-ramadan-soup.html


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, March 24, 2020

Beetroot Halwa //பீட்ரூட் ஹல்வா/துபாய் தென்றல் மாத இதழ்

பீட்ரூட் ஹல்வா பழைய பிலாக் போஸ்ட், வீடியோ ரெசிபி
samaiyal attakaasam by jaleelakamal
ஈத் ஸ்பெஷல் ஹல்வா, இதில் கொடுத்துள்ள அளவு  ஒரு கிலோ. வீடியோவில் அரை கிலோ அளவுக்கு செய்து காண்பித்துள்ளேன்.

How to Make Perfect Beetroot Halwa?தென்றல் மாத இதழ் துபாய்/

துபாய் தென்றல் மாத இதழில் பல வருடம் முன் வெளியான குறிப்பு.
Beetroot halwa

பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி ஹல்வா போல செய்து பிள்ளைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி , பிரட்டில் சாண்ட்விச் ஆக செய்து கொடுக்கலாம்.

பீட்ரூட் - ஒரு கிலோ
சர்க்கரை - 400 கிராம்
மில்க் மெயிட் - 200 கிராம்
பால் - 200 மில்லி
ஏலம் – முன்று
கிஸ்மிஸ் பழம் – கருப்பு (அ) மஞ்சள்
பாதம் - 50 கிராம் (பொடிக்க)
முந்திரி - 50 கிராம்
(பாதம் - 25 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
அக்ரூட் - 25 கிராம்)
உப்பு - ஒரு சிட்டிக்கை










பீட் - 1. தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.
பீட் - 2.பீட்ரூட்டை தோலெடுத்து கழுவி துருவி கொள்ள வேண்டும்.பொடிக்க கொடுத்துள்ள பாதத்தை பொடித்து கொள்ள வேண்டும், பாதம் , பிஸ்தா முந்திரி, அக்ரூட்டை பொடியாக அரிந்து, அதோடு கிஸ்மிஸ் பழத்தையும் சேர்த்து நெய்யில் வருத்து வைக்கவேண்டும்.
பிட்- 3.ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் தவ்வாவில் பட்டரை உருக்கி துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்ச வாடை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பீட்- 4.காய்ச்சிய பாலை சேர்த்து ஏலக்காயையும் போட்டு வேக விட வேண்டும்.
பீட்- 5.முக்கால் பாகம் வெந்து கொண்டிருக்கும் போது  பொடித்த பாதத்தை போட்டு கிளறவேண்டும்.
பிட்- 6.சிறிது நேரம் மூடி போட்டு நன்ற்கு வேக விட வேண்டும்.
பீட்- 7.இப்போது சர்க்கரையை சேர்த்து கிளறவேண்டும்.
பீட்- 8.சர்க்கரை சேர்த்ததும் தண்ணீ மாதிரி இளகிவரும் நன்கு கிளறி விட்டு வத்த விட வேணுட்ம்.
பீட்- 9.பிறகு இரன்டு மேசை கரண்டி  நெய்யை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
பீட் - 10. கடைசியாக மில்க் மெயிடை ஊற்றி நன்கு கிளரவும், மில்க் மெயிட் சேர்த்ததும் அபப்டியே விட கூடாது இல்லை என்றால் அடிபிடிக்கும்.
பீட்- 11 .நன்கு வற்றி கிரிபானதும் வருத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை தூவி கிளறி இரக்கவும்.
பீட்- 12. சுவையான பீட்ரூட் ஹல்வா ரெடி

குறிப்பு
நட்ஸ் வகைகள் இருப்பது போடால் போதும்,வெரும் பாதம், முந்திரி குட போதுமானது.குழந்தைகளுக்கு எல்லாத்தையும் அரைத்தே செய்து விடுங்கள்.அபப்டியே பிரெட், தோசை, சப்பாத்தியில் வைத்து கொடுக்கலாம்.சர்கக்ரை இல்லாத பால் கோவ சேர்ப்பதாக இருந்தால் மில்க் மெயிட் தேவையில்லை.இது நல்ல ரிச்சான கலர்புல் ஸ்வீட்டும் கூட சுவைத்து மகிழுங்கள்.
ஜலீலா





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Saturday, October 19, 2019

How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?



How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?






பிஸ்காஃப் சீஸ் கேக் (மாதுளை & ஸ்டாரா பெர்ரி)

How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?

இந்த பிஸ்காஃப் பிஸ்கேட் விலை மிக அதிகம் ஆனால் இப்ப இந்த ப்லேவர் தான் வேனும் என்று என் மகன் அடம் பிடித்து வாங்குவார்,

சரி இதிலேயே சீஸ் கேக் செய்யலாம் என்று நான் என் இஷ்டத்துக்கு செய்து பார்த்தது. சுவை மிக அருமை.




பிஸ்காஃப் பிஸ்கேட் – 10 பிஸ்கேட்

லுர்பார்க் பட்டர் – 3 மேசைகரண்டி

வால்நட்



பிஸ்காஃப் கிடைக்கலான்னா ( டைஜெஸ்டிவ் பிஸ்கேட் அல்லது சாக்கோ சிப் பிஸ்கேட்)



ஸ்டெப் – 1


பிஸ்கேட்டை பொடித்து அதில் பட்டர் வால்நட் பொடித்து நல்ல மிக்ஸ் செய்து அதை எந்த கேக் டின்னில் செய்ய போகிறீர்களோ அதில் நன்கு அழுத்தி வைத்து பிரிட்ஜில் வைத்து செட் செய்யவும்.










பில்லிங் தயாரிக்க

அகர் அகர் – 3 கிராம்

கிரீம் சீஸ்

ப்ரஷ் கிரீம்

பிஸ்காஃப் பிஸ்கேட் – 3 எண்ணிக்கை

ஸ்ட்ராபெர்ரி – 1  எண்ணிக்கை

மாதுளை – 1 தேக்கரண்டி

சர்க்கரை- 3 மேசைகரண்டி



அகர் அகரை சிறிது தண்ணீரில் ஊறவைத்து அதை கொதிக்கவிட்டு அதில் மாதுளை, ஸ்ட்ராபெர்ரி அரைத்து ஊற்றி கலக்கி சிறிது ஆறவிடவும். கெட்டியாக விடவேண்டாம்.



கீரீம் சீஸ் மற்றும் சீஸ் பிஸ்காஃப் பிஸ்கேட்டை நன்கு கலக்கவும் , கலக்கிய கலவையில் அகர் அகர் கலவையை சேர்க்கவும்.சேர்த்து அதை ஏற்கனவே பிரிட்சில் செட் செய்த பிஸ்கேட் கலவையின் மேல் ஊற்றி மறுபடி பிரிட்ஜில் வைத்து 1 மணி நேரம்  செட்டாக்கவும்.

செட்டானதும் மேலே ஊற்ற கிலேஸ் தயாரிக்கவும்.



கிலேஸ்



அகர் அகர்

மாதுளை

ஸ்ராபெர்ரி.

சர்க்கரை

எசன்ஸ் ( விருப்பபட்டால்)





கிலேஸ் தயாரிக்க மறுபடி அகர் அகரை ஊற வைத்து அதில் மாதுளை மற்றும் ஸ்ராபெர்ரியை அரைத்து ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும் கெட்டியாகி வரும் போது ஏற்கனவே வைத்து செட்டாக்கிய சீஸ் கேக் மேலேவைத்து மறுபடி பிரிட்ஜில் அரைமணி நேரம் செட்டாக்கவும்.





மேலே கார்னிஷிங்க் கு பிஸ்காஃப் பிஸ்கேட்டை பொடித்து தூவிவிடவும் .



மிக அருமையான டெசஸ்ட் எனக்கு ரொம்ப பிடிச்ச டெசர்டும் ஆகும்..





கவனிக்க



நான் இதில் சுகர் சிரப் தயாரிக்க வில்லை என்னிடம் குலோப் ஜாமூன் ஜீரா ( சுகர் சிரப்) மீதியானது இருந்தது அதில் சாப்ரான் எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Thursday, August 15, 2019

Indian Flag Recipe/ Independence Day Recipe/Indian Flag Agar Agar/ Samai...




Indian Flag Recipe/ Independence Day Recipe/Indian Flag Agar Agar/ Samai...







2. தேசிய கொடி அகர் அகர்

தேவையான பொருட்கள்
அகர் அகர் – 5 கிராம்
பால் – 200 மில்லி
தண்ணீர் – 100 மில்லி
சர்க்கரை - 50 கிராம்

அகர் அகரை தண்ணீரில் ஊரவைத்து அத்துடன் பால் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
காய்ச்சிய அகர் அகரை முன்று பிரிவாக முன்று டம்ளரில் ஊற்றி இரண்டு டம்ளரில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் கலக்கவும்.

இப்போது மூன்று டம்ளரில் உள்ள அகர் அகரையும் ஐஸ் கீரிம் மோல்டில் தனித்தனியாக ஊற்றி  ஓரு மணி நேரம் குளிரவைக்கவும்.
மேலே இனைக்கப்பட்டுள்ள முழுவீடியோவையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர்செய்யவும்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Tuesday, April 23, 2019

ஒரு வயது குழந்தைக்கு உணவு Samaiyal_attakaasam



வறுத்த சேமியா - 3/4 கப்
லேசாக கருகாமல் வறுத்த பாசி பயிறு - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஜாதிக்காய் - ஒரு சிட்டிக்கை
பால் - அரை டம்ளர்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை அல்லது ப்ரவுன் சுகர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய முந்திரி - சிறிதளவு

ஒரு வயது குழந்தைக்கு இந்த சேமியா பொங்கலை கொடுக்கலாம் சப்பு கொட்டி கொண்டு சாப்பிடுவார்கள்



குக்கரில் பாசிப்பயிறை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேகவைக்கவும்.
வெந்ததும் சேமியாவை சேர்த்து வேகவைக்கவும். 10 நிமிடத்திற்குள் சேமியா வெந்துடும்.
இப்ப பால்,சர்க்கரை,ஜாதிக்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக முந்திரியை நெய் யில் வறுத்து சேர்த்து கிளறி பரிமாறவும்.





Semiya pongal

roasted Semiya - 3/4 cup
roasted yellow moong dal - 1/4 cup
ghee - 2 tspn
milk - 1/2 cup
nutmeg powder - pinch
cardamom powder - 1/4 tspn
sugar - 1/4 cup / brown sugar
chopped cashew nuts - few



In a cooker add roasted yellow moong dal add 1 cup of water and close the cooker lid and cook the moong dhall, after pressure releases add roasted semiyaa and cook for 5 to 10 minutes.
 Now add milk ,sugar, nutmeg powder,cardamom powder  and cook well.
Finally roast the cashew nuts in ghee and pour it in  semiya pongal and mix  it well. Semiya pongal is ready you can serve it   with methu vada (urad dal vadai).





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Monday, June 11, 2018

ஸ்ராபெர்ரி கேசரி -Strawberry Kesari


ஸ்ராபெர்ரி கேசரி



நாம் அடிக்கடி செய்யும் கேசரி தான் ஆனால் அதே சிறிது பழம் சேர்த்து அல்லது காய் சேர்த்து செய்தால் சத்தாக சாப்பிடலாமே

கேசரியில் பல விதம் பைனாப்பிள் கேசரி, பீட்ரூட் கேசரி,கேரட் கேசரி,என்று பட்டியிலிட்டு கொண்டே போகலாம். ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி கேசரியை செய்து பாருங்கள் சுவையே அலாதி தான்..பார்ட்டியில் வைக்கும் போது வித்தியாசமான சுவையில் கலரும் சிவப்பு வண்ணதில் பார்க்கவே அசத்தலாக இருக்கும்.


Strawberry Kesariஇ
தேவையான பொருடகள்

ஸ்ராபெர்ரி பழம் – 5
ரவை – 100 கிராம்
சர்க்கரை – 75 கிராம்
தண்ணீர் – 200 மில்லி
பிஸ்தா ப்ளேக்ஸ் – இரண்டு ஸ்பூன்
முந்திரி – 6 நெய்யில் வறுத்தது
நெய் – 2 தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசைகரண்டி






செய்முறை

பட்டரில் ரவையை கருகாமல் வறுக்கவும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தை மிக்ஸியில் அரைக்கவும்
200 மில்லி தண்ணீரை சூடுபடுத்தி அதில் சர்க்கரையை கொட்டி கரைந்ததும் அதில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேர்த்து கொதிக்க விட்டவும்
தீயின் தனலை குறைவாக வைத்து விட்டு வறுத்து வைத்துள்ள ரவையை தூவி கிளறவும்.
கிளறும் போது இடையில் நெய்விட்டு வறுத்த முந்திரி சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
பிஸ்தா பிலேக்ஸ் தூவி தட்டில் கொட்டி ஆறவைத்து இதய வடிவில் அல்லதுவேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


மூவர்ண கேசரி .

பைனாப்பிள் கேசரி

சாப்ரான் நட்ஸ் பிலைன் கேசரி

சிம்பிள் ஸ்வீட் , ஈத் ஸ்பெஷல்ல்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, May 17, 2018

ஈசியான முன்று வகை மாலை நேர சிற்றுண்டி - Quick and easy Evening Snacks for kids




எல்லா அம்மா மார்களுக்கும் பள்ளிவிட்டு வரும் பிள்ளைகளுக்கு மற்றும் பள்ளி விடுமுறையில் ஆட்டம் போட்டு வரும் பிள்ளைகளுக்கு என்ன டிபன் செய்து கொடுப்பது என்று மண்ட காயுதா, வாங்க சுலபமாக முன்று வகையான ஈசி மாலை நேர சிற்றுண்டியை சமையல் அட்டகாசங்கள் யுடியுப் சேனலில் பார்க்கலாம்,.

இது வரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து பக்கத்தில் உள்ள பெல் பட்டனையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.





ரெசிபி - 1
சால்டட் பிஸ்கேட் சாண்ட்விச்
சால்டட் பிஸ்கேட் – 6
கேபேஜ் – 3 மேசைகரண்டி துருவியது
கேரட் – இரண்டு மேசைகரண்டி துருவியது
கேப்சிகம் – ஒரு தேக்கரண்டி
மையன்ஸ்  அ ஏதாவது ஒரு ஸ்ப்ரெட் – முன்று மேசைகரண்டி
பெப்பர் – ஒரு பின்ச்
சால்ட் - சிறிது
லெமன் – அரை டீஸ்பூன்
சுகர் – அரை டீஸ்பூன்
மில்க் – ஒரு தேக்கண்டி

செய்முறை
பிஸ்கேட் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பவுளில் கலந்து பிஸ்கேட்டில் வைத்து பிள்லைகளுக்கு சாண்ட்விச் போல செய்து கொடுக்கவும்.
ரெசிபி - 2
கார்ன் வேகவைத்தது அல்லது ரெடி மேட் டின் 100 gram
பட்டர் – ஒரு தேக்கரண்டி
பெப்ப்ர் சால்ட்
ஒரிகனோ – அரை தேக்கரண்டி
சில்லி பொடி – கால் தேக்கரண்டி
சால்ட்

கார்னில் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்த்து கலக்கி பிள்ளைகளுக்கு கொடுக்கவும்.

ரெசிபி - 3
ஹனி பிளேவர் நெஸ்ல் கிரீம்
புரூட் டின் (அ) ப்ரஷ் ப்ரூட்
சாப்ரான்

தேன்
சீசன்களில் கிடைக்கும் பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், அன்னாசி ,வாழைபழம் செர்ரி) போன்றவைகளை பொடியாக நறுக்கி அதில் நெஸ்ஸில் கிரீம், சாப்ரான் தேன் கலந்து கொடுக்கவும்.

முன்று விதமான ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு ரெடி.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Thursday, January 11, 2018

Easy Chichen or veg Bread Pizza by Jaleelakamal ஈசி சிக்கன் ப்ரட் பிட்சா


பிள்ளைகளுக்கு தினபப்டி சாப்பாட்டை விட பிட்சா என்றால் முச்சு பேச்சு இல்லாமல் சாப்பாடு உள்ளே போகும்.
Pizza
அதற்கு நாம சுலபமாக வீட்டிலேயே பிரட்டில், தோசையில் தினப்படி செய்யும் சப்பாத்தியிலும் வீட்டில் தயாரிக்கும் கூட்டு , பொரியல் , சிக்கன் , மட்டன், கீமாவை வைத்து செய்து கொடுக்கலாம்.




Onion capsicum Pizza Bread link eduththu paarkkalaam

Chicken pizza dosai
http://samaiyalattakaasam.blogspot.ae/2011/07/chicken-pizza-dosai.html

சிக்கன் தோசை பிட்ஸா நான் முன்பு போஸ்ட் பண்ணியது,

http://samaiyalattakaasam.blogspot.ae/2011/09/onion-capsicum-pizza-bread.html
ஆனியன் கேப்ஸிகம் பிட்சா





 How to Make Chicken Pizza Bread
How to prepare Bindy Pizza
How to Prepare yummy yummy pizza variety







பிள்ளைகளுக்கு தினபப்டி சாப்பாட்டை விட பிட்சா என்றால் முச்சு பேச்சு இல்லாமல் சாப்பாடு உள்ளே போகும்.

அதற்கு நாம சுலபமாக வீட்டிலேயே பிரட்டில், தோசையில் தினப்படி செய்யும் சப்பாத்தியிலும் வீட்டில் தயாரிக்கும் கூட்டு , பொரியல் , சிக்கன் , மட்டன், கீமாவை வைத்து செய்து கொடுக்கலாம்.

இதற்கு தேவையானவை


வீட்டில் செய்து வைத்துள்ள ஏதேனும் பொரியல் அல்லது சிக்கன் கூட்டு மட்டன் கூட்டு வகைகள்
ஆலிவ் காய்கள்
மொசெரல்லா சீஸ்
டொமெட்டோ கெட்சப் அல்லது பிட்சா சாஸ்

பிரட் , பன் அது உங்கள் விருப்பம்


பிரட்டாக இருந்தால் அதை 4 ஆக கட் செய்து அதில் சிறிது கெட்சப் தடவி நாம் செய்து வைத்துள்ள பில்லிங்கை வைத்து  முன்று வகையான குட மிள்காயை வதக்கி சேர்த்து மேலே சீஸ் மற்றும் கெட்சப் தடவி முற்சூடு படுத்திய ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான பிரட் பிட்சா தயார்.

இதே  ஓவன் இல்லாதவர்கள் இதை தோசை தவ்வாவில் மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் ப்ரட்டைபொரித்து எடுத்து மேலே கூற பட்ட அனைத்து பில்லிங்கையை யும் வைத்து மூடி போட்டு சிறிது தனலில் 7 நிமிடம் வைத்து எடுத்தால் போதுமானது. இதே போல தோசை பிட்ஸா, மினி தோசை பிட்சா என செய்து கொடுக்கலாம்.


என் யுடியுப் சேனலில் சில குறிப்புகள் போட்டு கொண்டு இருக்கிறேன். ரொம்ப ப்ர்பஷனால இல்லை என்றாலும் உங்களும் புரியும் அளவிற்கு பதிவுகள் இருக்கும் , என் சேனலை லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

வீடியோ சமையல், Jaleela's cookery video
How to make Bread Pizza

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/