How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?
பிஸ்காஃப் சீஸ்
கேக் (மாதுளை & ஸ்டாரா பெர்ரி)
How to make Biscoff Cheese Cake /சீஸ் கேக் செய்வது எப்படி?
இந்த பிஸ்காஃப்
பிஸ்கேட் விலை மிக அதிகம் ஆனால் இப்ப இந்த ப்லேவர் தான் வேனும் என்று என் மகன் அடம்
பிடித்து வாங்குவார்,
சரி இதிலேயே சீஸ்
கேக் செய்யலாம் என்று நான் என் இஷ்டத்துக்கு செய்து பார்த்தது. சுவை மிக அருமை.
லுர்பார்க் பட்டர்
– 3 மேசைகரண்டி
வால்நட்
பிஸ்காஃப் கிடைக்கலான்னா
( டைஜெஸ்டிவ் பிஸ்கேட் அல்லது சாக்கோ சிப் பிஸ்கேட்)
ஸ்டெப் – 1
பிஸ்கேட்டை பொடித்து
அதில் பட்டர் வால்நட் பொடித்து நல்ல மிக்ஸ் செய்து அதை எந்த கேக் டின்னில் செய்ய போகிறீர்களோ
அதில் நன்கு அழுத்தி வைத்து பிரிட்ஜில் வைத்து செட் செய்யவும்.
பில்லிங் தயாரிக்க
அகர் அகர் – 3
கிராம்
கிரீம் சீஸ்
ப்ரஷ் கிரீம்
பிஸ்காஃப் பிஸ்கேட்
– 3 எண்ணிக்கை
ஸ்ட்ராபெர்ரி
– 1 எண்ணிக்கை
மாதுளை – 1 தேக்கரண்டி
சர்க்கரை- 3 மேசைகரண்டி
அகர் அகரை சிறிது
தண்ணீரில் ஊறவைத்து அதை கொதிக்கவிட்டு அதில் மாதுளை, ஸ்ட்ராபெர்ரி அரைத்து ஊற்றி கலக்கி
சிறிது ஆறவிடவும். கெட்டியாக விடவேண்டாம்.
கீரீம் சீஸ் மற்றும்
சீஸ் பிஸ்காஃப் பிஸ்கேட்டை நன்கு கலக்கவும் , கலக்கிய கலவையில் அகர் அகர் கலவையை சேர்க்கவும்.சேர்த்து
அதை ஏற்கனவே பிரிட்சில் செட் செய்த பிஸ்கேட் கலவையின் மேல் ஊற்றி மறுபடி பிரிட்ஜில்
வைத்து 1 மணி நேரம் செட்டாக்கவும்.
செட்டானதும் மேலே
ஊற்ற கிலேஸ் தயாரிக்கவும்.
கிலேஸ்
அகர் அகர்
மாதுளை
ஸ்ராபெர்ரி.
சர்க்கரை
எசன்ஸ் ( விருப்பபட்டால்)
கிலேஸ் தயாரிக்க
மறுபடி அகர் அகரை ஊற வைத்து அதில் மாதுளை மற்றும் ஸ்ராபெர்ரியை அரைத்து ஊற்றி சர்க்கரை
சேர்த்து நன்கு காய்ச்சவும் கெட்டியாகி வரும் போது ஏற்கனவே வைத்து செட்டாக்கிய சீஸ்
கேக் மேலேவைத்து மறுபடி பிரிட்ஜில் அரைமணி நேரம் செட்டாக்கவும்.
மேலே கார்னிஷிங்க்
கு பிஸ்காஃப் பிஸ்கேட்டை பொடித்து தூவிவிடவும் .
மிக அருமையான டெசஸ்ட்
எனக்கு ரொம்ப பிடிச்ச டெசர்டும் ஆகும்..
கவனிக்க
நான் இதில் சுகர்
சிரப் தயாரிக்க வில்லை என்னிடம் குலோப் ஜாமூன் ஜீரா ( சுகர் சிரப்) மீதியானது இருந்தது
அதில் சாப்ரான் எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா