Showing posts with label முருங்கக்கீரை. Show all posts
Showing posts with label முருங்கக்கீரை. Show all posts

Saturday, December 8, 2018

முருங்ககீரை முந்திரி பகோடா






இது போட்டோ சரியாக வரவில்லை , பிறகு மறுபடி செய்தால் மாற்றுகிறேன்/



பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் பகோடா, வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.

மொரு மொரு முருங்கக்கீரை பகோடா.
Crispy Moringa pakoda
நோன்புகலத்தில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான ஈசி சிற்றுண்டி

முருங்ககீரை முந்திரி பகோடா

தேவையான பொருட்கள்

 கடலை மாவு - ஒரு டம்ளர்
அரிசி மாவு - கால் டம்ளர்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
 டால்டா - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
 வெங்காயம் - ஒன்று
 பச்சை மிளகாய் - மூன்று
முந்திரி - ஐம்பது கிராம்
முருங்கக்கீரை – ஒரு டம்ளர்
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 செய்முறை

முந்திரிப் பருப்பை லேசாக இரண்டாக பிளந்துவறுத்து கொள்ள வேண்டும்.
உப்புசோடா உப்புகடலை மாவைமிளகாய் தூள்ஒன்றாக கலக்கி அதில் டால்டாவை சூடுப்படுத்திஊற்றிபச்சைமிளகாய்முருங்க்ககீரை,   கறிவேப்பிலையை பொடியாக அரிந்து போட்டு,வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வறுத்தமுந்திரி பருப்பையும் சேர்த்து கெட்டியா பிசறிகொள்ளவும்.
ஐந்து நிமிடம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிபோட்டு பொரித்தெடுக்க வேண்டும்.



மாலை நேர சிற்றுண்டி,Street Food with healthy cooking,Drumstickleavespakoda,Moringa pakoda
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, October 10, 2018

முருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll


முருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll

ஆயத்த நேரம் - 5 நிமிடம்
தயாரிக்கும் நேரம் - 3 நிமிடம்
பரிமாறும் அளவு - ஒரு நபருக்கு
ஆக்கம் : ஜலீலாகமால்
லன்ச் பாக்ஸ் அல்லது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு இந்த முட்டை ரோல் செய்யலாம். முட்டை ஆம்லேட் ரோல்
இதன் தனித்தன்மையே முட்டையில் முருங்கக்கீரை சேர்ப்பது தான். தினமும் கீரை உணவிற்கு இது ஒரு ஐடியா. பேலியோ டயட் செய்பவர்கள் இதில் சப்பாத்தியை தவிர்த்து முட்டையை மட்டும் சாப்பிட்டு கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

முட்டை – 2
மிளகு தூள் அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் ப்ளேக்ஸ் – ¼ தேக்கரண்டி
முருங்ககீரை பொடி – ½ தேக்கரண்டி
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் – 3
 கொத்துமல்லிதழை - சிறிது




முட்டை ரோல் செய்ய ஒரு பெரிய சப்பாத்தி.
செய்முறை
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் முட்டையில் கலக்கவும்.
தோசை தவ்வாவை சூடு படுத்தி ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் + பட்டர் சேர்த்து கலக்கிய முட்டையை ஊற்றி இரண்டும் பக்கமும் கருகாமல் வேக வைத்து இரக்கவும்.


ரெடியாகிய முருங்ககீரை முட்டையை சப்பாத்தியின் மேலே வைத்து ரோல் செய்து சாப்பிட தகுந்த துண்டுகளாக போடவும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, November 19, 2017

Moringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொரியல்

https://youtu.be/3AfAivpZpXc




ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை,  அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி பருப்புபொடி, கருவேப்பிலை பொடி எல்லாம் தயார் செய்து கொன்டு வருகீர்களோ அதே போல முருங்ககீரை பொடி செய்து கொண்டு வந்து பயன் படுத்தலாம்.
வாரம் முன்று முறை முருங்க்ககீரை எடுத்து கொண்டால் , பெண்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு நல்ல மருத்துவ குறிப்பாக அமையும்.

My you tube channel please like and subscribe

https://www.youtube.com/watch?v=3AfAivpZpXc&feature=youtu.be

கர்பிணி பெண்களுக்கு , பூப்பெய்திய பெண்களுக்கு, கருத்தரித்துள்ள பெண்களுக்கு , இன்னும் ரத்த சோகையால் வெளிறி போயிருப்பவர்களுக்கு அனைவருக்கும் ஏற்ற அருமருந்து இந்த முருங்கீரை.
https://youtu.be/3AfAivpZpXc
முருங்கக்கீரை பெரட்டல் 

முருங்ககீரை - இரண்டு கப்
தேங்காய் -  அரை மூடி 

தாளிக்க
நெய் - ஒரு மேசைகரண்டி
உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
காஞ்ச (நீட்டு) மிளகாய் - 4 எண்ணிக்கை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்லு
வெங்காயம் - 2 பெரியது
உப்பு தேவைக்கு
வெந்த பருப்பு - சிறுபருப்பு (அ) துவரம்பருப்பு - இரண்டு மேசைகரண்டி


​செய்முறை

முருங்கக்கீரையை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி சூடு படுத்தி காஞ்ச மிளகாய், பூண்டுதட்டி போட்டு, சீரகம், உளுந்து பருப்பு சேர்த்து நன்கு வதக்கி , வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி முருங்ககீரை , உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
கடைசியாக தேங்காய் பூ சேர்த்து , வெந்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி  5 நிமிடம் வதக்கி இரக்கவும்.

கவனிக்க: முருங்கக்கீரை பெரட்டலுக்கு தேங்காய் + வெங்காயம் அதிகமாக போட்டால் தான் நல்ல இருக்கும் ,பெரிய வெங்காயம் பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவைகிடைக்கும்.

வீடியோ சமையல். Jaleela's Cookery Video.Moringka Leaves Poriyal

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Tuesday, August 1, 2017

30 நாள் கீரை வகை சமையல் - அவள் விகடன்


அவள் விகடன் 25.07.2017
30 நாள் கீரை ரெசிபி 
கேள்வி : இன்னைக்கு என்ன சாப்பாடு ?
பதில் : கீரை
கீரையா என்று முகம் சுழிக்கிறார்களா உங்கள் வீட்டு குட்டீஸ் சோ அல்லது கீரையே பிடிக்காதவர்கள் வாங்க அன்றாட செய்யும் மெனுவிலேயே எப்படி கீரையை சேர்த்து செய்யலான்னு நான் சொல்லி தரேன்
ஆமாம் தமிழில் நம்பர் ஒன் பெண்கள் இதழ் அவள் விகடனில் என் குறிப்புகள்
சமைக்க தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு போனால் பச்சை பசேலுன்னு எங்க காய்கறிய பார்த்தாலும் அதுவும் கீரையை பார்த்தான் என் கால்கள் அங்கு விட்டு நகராது. முதலில் கீரைவகைகளை வாங்கிட்டு தான் மற்ற சாமான்கள்
இதில் கொடுத்துள்ளது 30 வகைதான் ஆனால் இதுவரை நான் செய்ததோ 100 க்கும் மேல் My 30 type of spinach recipes has been published in Aval Vikatan Monthly Magazine (Tamil) on 25th July 2017.
Thank you very much Vaidehi Ranganathan for giving me the opportunity.


http://www.vikatan.com/avalvikatan/2017-aug-08/recipes/132967-thirty-type-of-spinach-recipes.html



உடல் ஆரோக்கியம் என்று பார்க்கும் போது குட்டீஸ்  முதல் பாட்டீஸ் வரை   சாப்பிட வேண்டிய முக்கியமான உணவு வகைகளில்  முதலிடம்  கீரை தான்.. ஆனால் இந்த கீரையை சாப்பிட பல குழந்தைகளுக்கோ அல்லது பெரிய குழந்தைகளுக்கு இது சாப்பிடுவது ரொம்பவே சிரமம்.
உடல் ஹிமோ குளோபின் , விட்டமின் டி , கால்சியம் ,அயர்ன் எல்லாமே சரியான விதத்தில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் சீராக அமையும்.

ஆனால் நம்மில் பலர் அதை சாப்பிட ரொம்பவே முகம் சுழிப்பனர், 

நாம் கீழே நான் கொடுத்துள்ள படி பல வகைகளாக மாற்றி சாப்பாட்டில் தினப்படி சமையலிலேயே கீரையை சேர்த்து செய்யலாம்....

விகடன் தீபாவளி மலர் 2011 கு பிறகு என் ரெசிபிகள் அவள் விகடனில் ரொம்ப சந்தோஷம்.
30 வகையான கீரை ரெசிபிகள்.

பச்சைப்பசேல் என அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கீரை வகைள், பார்க்கும்போதே கண்களைக் கவர்ந்து வாங்கத் தூண்டும். பர்ஸையும் பதம் பார்க்காமல், சத்துகளையும் கொண்டுவந்து குவித்து `டூ இன் ஒன்’னாக சமையலில் கைகொடுத்து உதவும் கீரையில் கிரேவி, பொரியல் என்று மட்டுமல்லாமல்... புட்டு, நூடுல்ஸ், சூப், ஸ்பிரிங் ரோல் என்று 30 வகை

aval vikatan



  1. முருங்ககீரை முந்திரி பகோடா - Drumstick Leaves Cashew Pakoda
  2. மினி கீரின் தானிய அடை - Mini Green Multi Grain adai / Pan cake
  3. கம்பு – பாலக் கொழுக்கட்டை - Pearl Millet Palak Dumpling - kozukkattai
  4. ஸ்பினாச் பகோடா - Spinach Pakoda - Palak pakoda - 
  5. தேங்காய் – பாலக் புட்டு - Coconut Palak (Spinach) Puttu
  6. மூங்தால் – கீரை கூட்டு 
  7. பருப்பு கீரை வெஜ்ஜி நூடுல்ஸ்
  8. சிவப்பு பாலக் கீரை ஸ்பிரிங் ரோல் -  Red Spinach Spring Roll - Chinese Recipe
  9. பாலக் டோக்ளா - Palak Dhokla
  10. பாலக் பணியாரம் - Palak Paniyaram
  11. பொன்னாங்கண்ணிக்கீரை பகோடா
  12. தண்டு கீரை புளி கடைசல்
  13. தேங்காய் பால் கீரை
  14. பாலக் பாஸ்தா
  15. மூங்தால் பாலக் கபாப்
  16. சிவப்பு பாலக் கீரை சோம்பு பொரியல்
  17. பாலக் கீரை புளி கடைசல்
  18. பாலக் பட்டாணி சூப் - Palak Peas Soup
  19. சிறுகீரை வெஜ்ஜி கிரேவி
  20. பாலக் வெண்டைக்காய் மோர் குழம்பு Palak with Okra Moor kuzambu
  21. பாலக் – ரைஸ் டிக்கி - Palak Rice Tikki
  22. பாலக் – பருப்பு பொரியல்
  23. முடக்கத்தான் கீரை சப்பாத்தி - Mudakkaththaan kiirai Chappathi ( Cardiospermum halicacabum)
  24. கார்லிக் – பார்சிலி சூப் - Garlic Parsley Soup 
  25. ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக் - Spicy Panjabi Malay Palak
  26. பாலக் ஹமூஸ் -  Palak Hamuus
  27. பாலக் மினி ரொட்டி - Palak Mini Rotti 
  28. அரைகீரை மசூர் தால்
  29. பாலக் கீரை சிறுபருப்பு கடைசல்
  30. மேத்தி பாலக் குஸ்கா - Methi Palak KuSka
30 ரெசிப்பி லிஸ்ட் கொடுத்து இருக்கீறேன் ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன் . முதலில் எந்த ரெசிபி வேணும், என்று சொன்னாலும் அதன் படி பதிவிடுகிறேன்.

 பச்சை கலர் ரெசிபிகள், கீரை ரெசிபிகள்,Green Leaves Recipes, Spinach Recipes




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 10, 2016

மொரு மொருன்னு முருங்கக்கீரை அடை




moringa leaves adai/ Moringa pancake
தேவையானவை
கடலை பருப்பு – 50 கிராம்
உளுந்து – 25 கிராம்
நவதாணியம் - 100 கிராம்
உப்பு
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பச்ச மிளகாய்  – 3
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
முருங்கக்கீரை - ஒரு கப்
எண்ணை - ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணை
செய்முறை
நவதானியவகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு வகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் மிளகாய், இஞ்சி கருவேப்பிலை சேர்த்து அரைத்து அரிசி சேர்த்து அரைக்கவும்.   பருப்பு வகைகளையும் சேர்த்து கொர கொரப்பாக முக்கால்பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.அரைத்த மாவில் தேவைக்கு உப்பு சேர்த்து முருகக்கீரையை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்
.தோசை தவ்வாவில் தடிமனான தோசைகளாக சுற்றிலும் எண்ணை விட்டு இருபுறமும் மொருகலாக  சுட்டு எடுக்கவும்.
,இதற்கு புதினா சட்னியும் வெல்லமும் சூப்பர் காம்புனேஷன்.
.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/