https://youtu.be/3AfAivpZpXc
ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை, அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி பருப்புபொடி, கருவேப்பிலை பொடி எல்லாம் தயார் செய்து கொன்டு வருகீர்களோ அதே போல முருங்ககீரை பொடி செய்து கொண்டு வந்து பயன் படுத்தலாம்.
வாரம் முன்று முறை முருங்க்ககீரை எடுத்து கொண்டால் , பெண்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு நல்ல மருத்துவ குறிப்பாக அமையும்.
My you tube channel please like and subscribe
https://www.youtube.com/watch?v=3AfAivpZpXc&feature=youtu.be
கர்பிணி பெண்களுக்கு , பூப்பெய்திய பெண்களுக்கு, கருத்தரித்துள்ள பெண்களுக்கு , இன்னும் ரத்த சோகையால் வெளிறி போயிருப்பவர்களுக்கு அனைவருக்கும் ஏற்ற அருமருந்து இந்த முருங்கீரை.
https://youtu.be/3AfAivpZpXc
முருங்கக்கீரை பெரட்டல்
முருங்ககீரை - இரண்டு கப்
தேங்காய் - அரை மூடி
தாளிக்க
நெய் - ஒரு மேசைகரண்டி
உளுந்து பருப்பு - அரை தேக்கரண்டி
காஞ்ச (நீட்டு) மிளகாய் - 4 எண்ணிக்கை
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 6 பல்லு
வெங்காயம் - 2 பெரியது
உப்பு தேவைக்கு
வெந்த பருப்பு - சிறுபருப்பு (அ) துவரம்பருப்பு - இரண்டு மேசைகரண்டி
செய்முறை
முருங்கக்கீரையை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி சூடு படுத்தி காஞ்ச மிளகாய், பூண்டுதட்டி போட்டு, சீரகம், உளுந்து பருப்பு சேர்த்து நன்கு வதக்கி , வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து வதக்கி முருங்ககீரை , உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
கடைசியாக தேங்காய் பூ சேர்த்து , வெந்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வதக்கி இரக்கவும்.
கவனிக்க: முருங்கக்கீரை பெரட்டலுக்கு தேங்காய் + வெங்காயம் அதிகமாக போட்டால் தான் நல்ல இருக்கும் ,பெரிய வெங்காயம் பதில் சின்ன வெங்காயம் சேர்த்தால் கூடுதல் சுவைகிடைக்கும்.
வீடியோ சமையல். Jaleela's Cookery Video.Moringka Leaves Poriyal
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா