ஹிமோகுளோபின் கம்ம்பியாக இருப்பவர்கள், ரொம்ப அனிமியாவாக இருப்பவர்கள் இதுபோல ஆட்டு நுரை, ஈரல், கிட்னி , மன்பத்தை என செய்து வாரம் முன்று நாள் என ஒரு மாதம் சப்பிட்டால் கண்டிப்பாக அனிமியா சரியாகும் ஹிமோகுளோபினும் சரியான லெவலுக்கு வரும்.
மிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா
பேப்ஷா ( ஆட்டு நுரை ஈரல்) என்பது ஆட்டு நுரைய்யிரல் இதை கத்திரிக்காய் போட்டு சால்னா செய்வோம். இல்ல பொரிச்ச கறி கூட்டு போல செய்வோம். இதை கொஞ்சம் காரசாரமாக செய்வோன்னு செட்டிநாட் டைப்பில் செய்துள்ளேன்.
ஆட்டு நுரை ஈரல் - 200 கிராம்
வெங்காயம் - இரண்டு
தயிர் இரண்டு மேசைகரண்டி
திரிக்க
சோம்பு , சீரகம் மிளகு தலா ஒரு தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை ஏலம் கிராம்பு
அரைக்க
தக்காளி அரை பழம்
பாதம் முந்திரி - தலா3
தாளிக்க
நல்லெண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை
கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னரை தேக்கரண்டி
நுரையீரலை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். திரிக்க கொடுத்துள்ளதை திரித்து வைக்கவும்
அரைக்க கொடுத்துள்ளதைகெட்டியாக அரைத்து வைக்கவும்/
குக்கரில் நல்லெண்ணை+ நெய் ஊற்றி பிரிஞ்சி இலை கருவேப்பிலை இஞ்சி பூண்டுசேர்த்து வதக்கவும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நுரையீரல் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். அடுத்து அரைத்த மற்றும் திரித்து வைத்துள்ள பொடிவகைகளை சேர்த்து நன்கு கிளறி தயிர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவுமசு
சுவையான செட்டிநாடு ஸ்டைல் நுரை ஈரல் ரெடி.
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா