Thursday, November 23, 2017

வதக்கி அரைத்த கருவேப்பிலை கிரேவி /கருவேப்பிலை ​தொக்கு - Curry leaves Chutney




வதக்கி அரைத்த கருவேப்பிலை கிரேவி /கருவேப்பிலை
​தொக்கு 


பொதுவாக முடி வளற மற்ற அயர்ன் சத்து மற்றும் அனிமியா, இரத்த சோகைக்கு கருவேப்பிலையை காலையில் மென்று சாப்பிட்டால் போதுமானது, ஆனால் சிலருக்கு பச்சயாக சாப்பிட பிடிக்காது. அதற்கு நாம் தினப்படி செய்யும் உணவில் அரைத்து சேர்க்கலாம். பருப்படை, கருவேப்பிலை சாதம் , கருவேப்பிலை பொடி, இல்ல இப்படி தொக்கு , துவல் , சட்னி போல செய்து சாப்பிடலாம் சுவையும் பிரமாதமாக இருக்கும்.

Preparation time : 20 minutes
cooking time : 20 mintes

Iron Key Ingredients: Curry leaves and coriander and mint

தேவையான பொருட்கள்



கருவேப்பிலை – இரண்டு கட்டு
கொத்துமல்லி கீரை –  ஒரு கட்டு
புதினா ஒரு கட்டு
பூண்டு – இரண்டு பெரியது


தேங்காய் – அரைமுடி
ginger - 1 inch size
புளி – ஒரு சிறிய எலுமிச்சை சைஸ் (அ) புளி கியுப் 1
பச்சமிளகாய் – 6
நல்லெண்ணை – ஒரு மேசைகரண்டி ( வதக்க)
நல்லெண்ணை – கால் கப்


செய்முறை

கருவேப்பிலை, கொத்தும்மல்லி, புதினா வை நன்கு காம்பு நீக்கி நன்கு அலசி தண்ணீரை வடிக்கவும். புளியை கட்டியாக கரைத்து வைக்கவும்.
நல்லெண்ணை  சூடு படுத்தி பச்சமிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி , புதினா கரைத்து வைத்துள்ள புளி தேங்காய், புளி கரைத்து ஊற்றி.பூண்டு இரண்டு பெரிய பூண்டு , ginger, தேங்காய் பச்சமிளகாய் 6 வதக்கி உப்பு போட்டு ஆறவைத்து தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

ஒரு வாயகன்ற வானலியில் நல்லெண்ணை ஊற்றி அரைத்த கலவையை ஊற்றி நன்கு சுருள கிளறி தள தளன்னு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இரக்கவும்.
சுவையான கருவேப்பிலை கொத்துமல்லி புதினா கிரேவி.
இதை ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். தேங்காய் போடாமல் செய்தால் ஒரு மாதம் வரை கெடாது.

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  
ww.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/


0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா