Type of dish - Daily or Dinner/ Party
-- ஒரு கீரை வகையை சா[ப்பிட்டாலே போதுமான அயர்ன்சத்து கிடைத்துவிடுகிறது, அதில்லாமம் எல்லா கீரை வகையையும் சேர்த்து சூப் செய்து வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடால் எல்லா சத்துகளும் ஒருங்கே கிடைத்து விடுகிறது
- பார்சிலி இலை ( சாலட் இலை) – ¼ கப்
- பாலக் கீரை – ½ கப்
- தில் கீரை – ½ கப்
- வெங்காய தாள் – 3 ஸ்டிக்ஸ்
- கொத்துமல்லி கீரை – 1 மேசைகரண்டி
- புதினா – 5 இலை
- கருவேப்பிலை – 5 இலை
- ஒரிகனோ – ½ தேக்கரண்டி
- பேசில் இலை – ½ தேக்கரண்டி
- வெள்ளை மிளகு தூள் - ½ தேக்கரண்டி
- மரவள்ளி கிழங்கு or pumpkin – 1 மீடியம்
- கருப்பு மிளகு தூள் – ½ + ½ தேக்கரண்டி
- சர்க்கரை – ½ தேக்கரண்டி
- நார் சூப் கியுப் (வெஜ் அல்லது சிக்கன் ப்ளேவர்) – 1 (10 கிராம்)
- பூண்டு (பொடியாக அரிந்த்து)
- வெங்காயம் – 1 சிறியது
- ஆலிவ் ஆயில்
- கீரைவகைகள் அனைத்தையும் மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
- குக்கரில் கீரை வகைகளை சேர்த்து அதில் ஒரிகனோ, பேசில் இலைகள் , வெள்ளை மிளகு தூள், கருப்பு மிளகு தூள் , சர்க்கரை, உப்பு, சூப் கியுப், தண்ணீர் முன்பு டம்ளர் சேர்த்து 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.
- வெந்த கீரை வகைகளை ஆறவைத்து மிக்சில் அல்லது ப்ளெண்டரில் முக்கால் பத்த்துக்கு அரைக்கவும்.வெந்த சூப்பை குளிர வைத்து முக்கால் பதமாக அடிக்கவும்.
- ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் வெங்காய தாள் மற்றும் பூண்டை சேர்த்து தாளித்து ப்ளென்ட் செய்த சூப்பில் சேர்த்து 5 நிமிடம் கொதித்த விட்டு இரக்கவும். கட்லெட் உடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.
- காரம் தேவைபடுபவர்கள் மிளகு தூளின் அளவை சிறிது கூட்டி கொள்ளவும்.
linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.http://www.livogen.in/iron-chef/
கவனிக்க :மரவள்ளி கிழங்குக்கு பதில் இதில் சர்க்கரை வள்ளி மற்றும் உருளை கிழங்கும் சேர்த்து செய்யலாம்.
இதில் மரவள்ளி கிழங்கு சேர்த்துள்ளேன் , பேலியோ டயட் செய்பவர்கள் மரவள்ளி கிழங்க்கு கு பதில் பூசனிக்காய் சேர்த்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா