Sunday, November 19, 2017

வெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி) Arabic Veg Kabsa




Preparation Time: 15 minutes
Cooking timne : 20 minutes
Serves : 4 person
Key Iron Ingredients - Beetroot,Broccoli,tomato paste

அரபு நாடுகளில் சாப்பிடும் உணவுகளில் மட்டன் கப்சா, சிக்கன் கப்சா, இறால் கப்சா , மீன் கப்சா என்று பல வகை உண்டு, அதை சைவ விருப்ம்பிகளும் சுவைக்க வேண்டும் என்பதால் பீட்ரூட் , ப்ரோக்கோலில் செய்துள்ளேன்.

வெஜ் கப்ஸா ( அரபிக் வெஜ் பிரியாணி)

தேவையான பொருட்கள்

  1. தரமான பாசுமதி அரிசி -  அரைகிலோ
  2. எண்ணை + பட்டர் – 50 கிராம்
  3. காய்ந்த எலுமிச்சை – 1
  4. வெங்காயம் – 1 பெரியது
  5. கேரட் – 50 கிராம்
  6. பீட்ரூட் – 50 கிராம்
  7. கார்ன் – 50 கிராம்
  8. புரோக்கோலி – 50 கிராம்
  9. தக்காளி பேஸ்ட் – 25 கிராம்
  10. தக்காளி – அரை பழம்
  11. மேகி அல்லது நார் பிராண்ட் வெஜிடேபுள் ஸ்டாக் 1 துண்டு


அரபிக் கப்ஸா மசாலா
  1. கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
  2. சீரகம் – முக்கால் தேக்கரண்டி
  3. பப்பரிக்கா – கால் தேக்கரண்டி
  4. முழுதனியா – ஒரு தேக்கரண்டி
  5. கிராம்பு - 2
  6. ஜாதிக்காய் – கால் தேக்கரண்டி
  7. பட்டை – 1 இன்ச் பீஸ்
  8. ஏலக்காய் - 1



செய்முறை
  1. வெஜிடேபுள் ஸ்டாக்கை 3 ½ டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து வைக்கவும்.
  2. அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்,
  3. குக்கரில் எண்ணை + பட்டரை காயவைத்து காய்ந்த  எலுமிச்சை ,வெங்காயம் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. அடுத்து தக்காளி ,தக்காளி பேஸ்ட் மற்றும் அரபிக் மசாலாவை  சேர்த்து கிளறவும். பிறகு காய்களை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
  5. அரிசியை தண்ணீரை வடித்து சேர்த்து சமப்படுத்தி.காய் வெந்ததும் அதில் வெஜிடேபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, 2, 3 விசில் விட்டு இரக்கவும், சுவையான அரபிக் வெஜ் கப்ஸா (அரபிக் பிரியாணி) ரெடி. காய்கறி சல்சாவுடன்சாப்பிட அருமையாக இருக்கும்.
கவனிக்க: அரேபியர்கள் காரம் அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள். இந்த பிரியாணி லைட்ஆக அதே நேரத்தில் ஹெல்தியாகவும் இருக்கும். நான்வெஜ் பிரியர்கள் மட்டன் சிக்கனில் செய்துகொள்ளலாம்.
Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger. 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா