Showing posts with label தையல் டிப்ஸ்கள். Show all posts
Showing posts with label தையல் டிப்ஸ்கள். Show all posts

Monday, September 17, 2018

How to Stitch Lungi ? லுங்கி ஓரம் தைப்பது எப்படி? By Jaleelakamal

லுங்கி ஓரம் தைப்பது எப்படி?













 ஆண்கள் அணியும் லுங்கி ஓரம் தைப்பது எப்படின்னு சமையல் அட்டகாசங்கள் யுடியுப் சேனலில் விளக்கமாக தைத்து காண்பித்துள்ளேன்.
 கண்டிப்பாக எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொள்ளுங்கள்.

இதை கற்றுகொண்டால் பெண்கள் வீட்டில் இருந்த படி ப்ளவுஸ் , சுடிதார் என்றில்லை சின்னாத ஒரே தையல் போடும் கைலி கூட ஓரம் தைக்கலாம்/

 லுங்கி ,கைலி /வேஸ்டி தைத்து கொடுத்தே தங்கள் கை செலவுக்கு பொருள் ஈட்டி கொள்ளலாம்.





வியாபார ஆலோசனை, தையல், lungi stitching


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Wednesday, September 18, 2013

தொழுகை முட்டாக்கு தைப்பது எப்படி? - Prayer Makkaanna/Prayer Hijab



Prayer Hijab  @ Chennai Plaza


Prayer Makkaannaa தொழுகை முட்டாக்கு படம் இங்கு சென்று பார்க்கலாம்

தொழுகை முட்டாக்கு , மக்கான்னா இதை எல்லோரும் ஓவ்வொரு முறை ஹஜ் செல்லும் போதும்  ஆண்களுக்கு தொப்பியும், பெண்களுக்கு இந்த ப்ரெயர் மக்கான்னா /தொழுகை முட்டாக்கும் வாங்கி வருவார்கள்.அது எல்லாமே எலாஸ்டிக் துணியில் தான் இருக்கும் சிலது இப்ப காட்டனிலும் லேஸ் வைத்து விற்கிறார்கள். வெள்ளை கலரில் அகோபா டிசைன் தொழுகை முட்டாக்குகளும் கிடைக்கின்றன.


யார் எத்தனை கொடுத்தாலும் பஞ்சுபோல் வாயில், காட்டன் துணிஎடுத்து அதை தைத்து போட்டு கொள்வது தான் எனக்கு பிடிக்கும்.
வீட்டில் இருக்கும் போது முன்பு இது போல் நிறைய் தைத்து வைப்பேன். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் ஆளுக்கு ஒன்று கொடுத்து தொழுக கொடுக்க வசதியாக இருக்கும்.இது போல் காட்டன் துணியும் தைத்து கொண்டால் ஊருக்கு போகும் போது ஹாண்ட்பேக்கில் வைத்து கொள்ளலாம். எந்த வீட்டுக்கு போனாலும் தொழுகை முட்டாக்கை தேடிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை, மேலே படத்தில் உள்ளது இப்ப தைத்தது இல்லை. 7 வருடம் முன் தைத்தது.




1 & 2, 3 & 4 உயரம்  - 35இன்ச்
1 & 3, 2 & 4 அகலம் மடிப்புடன் (போல்டிங்) 42 இன்ச்
1&5 (தலை) முகம் - ஒப்பன் - போல்டிங்) மடிப்புடன் - 9இன்ச் (மொத்தம் 9+9 - 18 இன்ச் வரும்)
6 & 7 அடியில் ஷேப் வரை
பைப்பிங் தைக்க ரோப் அல்லது எலாஸ்டிக்




அகலம் சைடில் மடிப்புடன் துணியை எடுத்து கொள்ளவும் , 42 இன்ச் அளவுக்கு அகலம் கிடைக்கவில்லை என்றால் ஒட்டு போட்டு கொள்ளலாம்.
உயரம் மடிப்பில்லாத பக்கம் வைத்துகொள்ளவும்.
தலையில் கொள்ளும் அளவுக்கு  ஒரு பக்க 9, மற்றொரு பக்கம்  இன்ச் மொத்தம் 18 இன்ச் வரும், உயரத்தை புடவைக்கு ஓரம் தைப்பது போல் மடித்து தைத்து கொள்ளவும்.


இரண்டு துணியையும் சேர்த்து உயரத்தில் 9 இன்ச் குறித்து கொண்டு மீதியை நேராக  5 &  2 இணைக்கவும்.



2 , 6, 7 & 3 இந்த ஷேப்பையும் அப்படியே அதே வடிவில் ஓரத்தை மடித்து தைக்கவும் .


தொழுகை முட்டாக்கு ரெடி, தலையில் மாட்டியதும் தொழும் போது வழுக்கி வழுக்கி வராமல் இருக்க 1& 5 க்கு நடுவில் சரியாக காதுக்கு கிட்டே வரும் அங்கிருந்து ஒரு நாடா இருபுறமும் தைத்து கொண்டு அதை அப்படியே தலையில் மாட்டி கொண்டால் பின்னந்தலையில் சரியாக நிற்கும், நாடாவிற்கு பதில் எலாஸ்டிக்கும் வைத்து தைத்து கொள்ளலாம்.

புர்கா பயன் படுத்துபவரக்ளுக்கு காட்டன் சுடிதார் துப்பட்டா அப்படியே புதுசாகவே இருக்கும். அது இந்த தொழுகை முட்டாக்குக்கு சரியாக இருக்கும்.
அதை கூட இப்படி தைத்துகொண்டால் வெயில் காலத்தில் அடிக்கும் வெயில் அடிக்கடி கரண்டும் கட்டாகிடும். பாலிஸ்டரை முட்டாக்கு போட்டு ஹாராரத்தா வருவதற்கு இப்படி இதமான காட்டன் தொழுகைமுட்டாக்கு போட்டு ஆனந்தமாய் தொழலாம்.இன்னும் டிசைன்னாக வேண்டும் என்றால் பார்டர் ஷேப் வரும் இடத்தில் பைப்பிங் , லேஸ் போன்றவை வைத்து தைக்கலாம்.

தொழுதுட்டு அப்படியே பிரேயர் மேட்டில் வேர்வையோடு சுற்றி வைப்பதால் வாடை வரும் வாரம் ஒரு முறை இந்த தொழுகை முட்டாக்கை கண்டிப்பாக துவைத்து வைக்கனும், கொஞ்சம் வாசனை செண்ட் போட்டு வைத்தாலும் நல்லது. 



எங்க சென்னை ப்ளாசா கடையில் இந்த தொழுகை முட்டாக்கு வைத்துள்ளோம்.காட்டன் அக்கோபா துணியில் தேவைப்பட்டாலும் கிடைக்கும்.




 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Tuesday, November 15, 2011

ஆண்களுக்கு தையல் பாகம் - 1

தையல் கற்று கொள்வது மிகவும் பயனுள்ளது.

 நிறைய பேர் இதை கற்று கொள்வதில்லை.

கைத்தொழில்அதிலும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்களுக்கு தீடீரென தையல் விட்டு போய் விட்டாலோ அல்லது பட்டன் அறுந்து விட்டாலோ பேண்ட் உயரத்தை குறைக்கனும் என்றாலே டெயிலரை நோக்கி ஓடனும்.

 அதுவும் விடுமுறை வரும் போது தான் போய் தைக்க கொடுக்கனும். அதை வாங்கி வர அடுத்த விடுமுறையை எதிர்பார்க்கனும்.


 சிலருக்கு வேலை பார்க்கும் இட்த்தில் இருந்து வெளியில் செல்ல வாய்ப்பே கிடைப்பதில்லை.

அப்படி இருப்பவர்களுக்கு எளிதாக இங்கு நான் சில எளிய தையல் முறைகளை சொல்லி தரலாம் என்று இருக்கேன்.






இது தையல் தெரியாத பெண்களுக்கும் உதவும். உங்க ஆசை கணவரின் பட்டனை நீங்களே தைக்கலாம் இல்லையா?


ஆ ஆ எல்லாம் எங்களுக்குதெரியும் இது சின்ன மேட்டர் இத சொல்லி கொடுக்க வந்துட்டாங்களாக்கும் என நினைப்பவர்கள் அப்ப்டியே கொஞ்ச ஓரங்க்கட்டிக்கோங்கோ......





வாங்க முதலில் பட்டன் தைக்கலாம்.

முடிந்த வரை இரண்டு டைப்பா போட்டோ எடுத்து இருக்கேன் புரியுதான்னு பாருங்கள்.இந்த முறையில் தைத்தால் உங்கள் ஷர்ட் கிழிந்தாலும் பட்டனில் தையல் கிழியாது.




ரெடி மேட் ஷர்ட்கள் கூடுமானவரை லாட் லாட்டா தைக்கப்படுவதால் ஒரே ஒரு தையல் தான் போட்டு இருப்பார்கள். இரண்டு முறை போட்டு வாஷிங் மிஷினில் போட்ட்துமே பட்டன் கானாபோய்விடும்.


முதலில் தேவையானவை




ஊசி மற்றும் நூல்கள்






நல்ல விலை உயர்ந்த ஷர்ட்களில் பார்த்தீங்க அந்த கலருக்கு ஏற்றார் போல பட்டன்கள் வைக்க பட்டிருக்கும். அது அறுந்து விட்டால் தேடி அதே போல் அதே டிசைனில் வாஙக் முடியாது.


ஆகையால் ஷர்டில் கடைசி பட்டன் போடும் இட்த்தில் திருப்பி பார்த்தீங்கன்னா இரண்டு பட்டன் எக்ஸ்ரா வைத்து தைத்து இருப்பார்கள்.


அது பட்டன் அறுந்து விட்டால் அந்த பட்டனை எடுத்து வைத்து கொள்ளலாம்.







இப்ப கடைசியில் இருக்கும் ஒரு பட்டனை ஷர்ட் கிழியாமல் கட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.




எந்த இட்த்தில் பட்டன் இல்லையோ அந்த இட்த்தில் கண்டிப்பாக அதில் தைக்கும் மார்க் இருக்கும் அப்ப்டி இல்லை என்றால் எதிரே உள்ள பட்டன் மாட்டும் பொத்தான் ஹோலுக்கு நேராக வைத்து ஒரு புள்ளி போல் பென்சிலில் மார்க பண்ணிக்கோங்கோ


ஊசியில் நூலை இரட்டை பட்டையாக கோர்த்து கொள்ளுஙக்ள் இரண்டு முழம் அளவு நூல் எடுத்து கொண்டால் போதும் கோர்த்த்தும் இரண்டு நூலையும் சேர்த்து கடைசியில் முடியும் இட்த்தில் முடிச்சி போட்டு கொள்ளுங்கள்./







இப்போது மேல் பக்க (நல்ல பக்க)த்தில் இட்து கையால் பட்டனை வைத்து பிடித்துகொள்ளுங்கள்.   சில பட்டனில் 2 ஹோல் கள் , சில பட்டனில் 4 ஹோல் கள் இருக்கும் அதில் கீழிருந்து பட்டனில் மேலாக ஊசியை குத்தி மேலே கொண்டு வரவும். எதிர் எதிரே உள்ள துளைகளில் பெருக்க்ல் குறி போல் மாற்றி மாற்றி மேலிருந்து கீழாக 4 முறை குத்தி கடைசியாக கீழே கொண்டுவரவும்.

கீழே உள்ள துணியில் சுருக்கம் வராத வாறு சின்னதாக ஒரு ஓட்டு தையல் போட்டு முடிச்சி போடவும்.




மறுபடி மேல் நோக்கி பட்டன் துளையில் குத்தாமல் பட்டனுக்கு பின் ஊசி வருமாறு குத்தவும்.





குத்தி விட்டு பூ கட்டுவது போல் பட்டனை சுற்று முன்று முறை முடிச்சி போடவும்,




















திருப்பி கிழ் நோக்கி குத்தி விட்டு கீழே சின்னதாக ஒரு முடிச்சி போட்டு நூலை கட் பண்ணவும்.

அவ்வளவு தான் உங்கள் சட்டை பட்டனை நீங்களே தைத்தாச்சு.


இது என் பையனுக்காக சொல்லி கொடுக்கும் போது எடுத்தது.


டிஸ்கி:பதிவு பிடித்து இருக்கான்னு மறக்காம உங்கள் கருத்துக்களை கீழே பதியுங்கள்/




Tuesday, March 15, 2011

சுடிதாரில் லேஸ் மற்றும் மணி வொர்க்,



பிளைன் துணி சாட்டின், வெல்வெர், இன்னும் ஜரி வொர்க் உள்ள பிளைன் சுடிதார் தைக்கும் போது அதை ரிச்சாக மாற்ற உள்ளே சின்ன சிம்பிள்  வொர்க்குகள் கொண்டு கிராண்டாக பார்டிக்கு போடுவது போல் தைக்கலாம்.  
அதில் சிம்பிள் அண்ட் ஈசியாக இது போல் பிளெயின் சுடிதாரில் டாப்பில் கழுத்து, கைக்கும் , சல்வார் பேண்டில் கால் கிட்டயேயும்,


 துப்பட்டாவின் ஓரங்களிலும் மணி அல்லது வித விதமான கலர்களில் லேஸ்களும் வைத்து தைத்தால் ரிச் லுக்காக இருக்கும்

மணி தைக்கும் முறை கழுத்து கை சைட் ஓப்பனில் கலருக்கு தகுந்த வாறு மணிகளை வைத்து ஒரு செண்டி மீட்டர் இடைவெளியில் மணிகளை வைத்து தைக்கவும்.
பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.
லேஸும் வித விதமாக (அ) கலரில் கை , கழுத்து, சுடிதார் டாப்பின் சைடுகளில்,கால் பாட்டத்தில் வைத்து தைத்தால் மிகவும் நல்ல இருக்கும்.

அதே போல் ஷாட் டாப் தான் இப்போது பேமஸ், சில பேர் லாங்க் டாப்ஸ் தான் விரும்புவார்கள், எடுக்கும் துணி உயரம் பத்தாமல் போனால்  கீழே ஒரு ஜான் அளவில் வெட்டி விட்டு இடையில் தேவையான அளவில் ஒரு  இன்ச் முதல் முன்று இன்ச் வரையிலான லேஸ் களை இனைத்து தைக்கலாம். இப்படி தைப்பதால் உயரத்தை கூட்டலாம். அதே போல் கழுத்து பெரியதாகி விட்டாலும் லேஸ்களை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம் புது பேஷானாகவும் இருக்கும்.

பட்த்தில் உள்ள இரண்டு சுடிதாரும் 12 வருடம் முன் நான் தைத்தது.








Monday, December 6, 2010

தையல் மிஷினில் எண்ணை விட்ட பிறகு



1. தையல் மிஷினில் எண்ணை விட்ட பிறகு ஊறியதும் உடனே துணியை தைக்க கூடாது.

2. அதில் முதலில் ஒரு நியுஸ் பேப்பரை வைத்து தைத்துவிட்டு அடுத்து ஏதாவது பழைய துணியில் தைத்த பிறகு தான் நாம் தைக்க இருக்கும் துணியை தைக்கனும்.

3. புது துணிகளை எண்ணை போட்டதும் உடனே தைக்கக்கூடாது. லைட் கலர் துணி என்றால் முழுவதும் கறையாகிடும்.

4. புதிதாக தையல் பழகுபவர்களும் நியுஸ் பேப்பரின் ஓரங்களை மடித்து வைத்து அதில் தையல் போட்டு பழகலாம். கர்சீஃப் ஓரங்களை மடித்து தைத்தும் பழகலாம். பழைய துணிகளில் முதலில் தைத்து பழக வேண்டும்.

5. பட்டன், கொக்கி, கிழிந்ததை இனைப்பது , ஹெம்மிங், ஓட்டு தையல் இது போல் சின்ன சின்ன தையலை கற்று கொள்வது மிகவும் நல்லது, அவசரத்துக்கு நாமே தைத்து கொள்ளலாம்.

6. வெளிநாடுகளுக்கு போகும் பெண்கள் கண்டிப்பாக தையல் கற்று கொள்வது மிகவும் அவசியம், இல்லை என்றால், சின்ன சின்ன கிழிந்த துணிகளை தைக்க, ஓட்டு தையல் போட, டைட்டனா போன சோளி சல்வார்வை பிரித்து மிண்டும் தைக்க, வேலைகளுக்கெல்லாம் டெயிலரை தேடி கொண்டு போகமல் நாமே தைத்து கொள்ளலாம் .


7. புடவை ஓரம் மடித்து தைப்பது, பால்ஸ் மடித்து தைப்பது எல்லாம் நாமே செய்து கொள்ளலாம்

இல்லை என்றால் அதிக பணம் டாலர், திர்ஹம்ஸில் செலவழிக்க வேண்டிவரும்.


வித விதமான கழுத்து மாடல்கள் இது நான் தயாரித்தது.



Thursday, October 21, 2010

பெண்கள் வீட்டில் தையல் துணிகளை கட்டிங் செய்யும் போது



துணிகளை ( சோளி மற்றும் சல்வார்) வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி அதன் செட்டுகளை ஒரு கவரில் போட்டு பத்திரமாக வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி இதில் ஏதாவது ஒன்று காணாமல் போய் விடும்.


யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.





என‌க்கு என் த‌ங்கைக்கும் ஒன்றாக‌ க‌ல்யாண‌ம் ஆச்சு, எல்லா க‌ல்யாண‌ ச‌ட்டையும் ஆளுக்கு ஒரு ட‌ஜ‌ன் அவ‌ள் தான் தைத்தாள். நான் அத‌ற்கு கொக்கி தைப்ப‌து, ஹெம்மிங் செய்வ‌து அப்போது.நான் தையல் கிளாஸ் போகல, ந‌ல்ல‌ அழ‌கான‌ பொன் ம‌ஞ்ச‌ள் நிற‌ ச‌ட்டை ஹெம்மிங் ப‌ண்ணி முடித்த‌தை யாரோ கத்த்ரியால் க‌ட் ப‌ண்ணி விட்டார்க‌ள்.




ஆகையால் வீட்டில் தைப்ப‌வ‌ர்க‌ள், எல்லாவ‌ற்றிலும் க‌வ‌ன‌மாக‌வும் உஷாராக‌வும் தைக்க‌னும்.

அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.

நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.

( இது போல் நான் தைக்கும் போது சின்ன‌ பைய‌ன் மிஷினில் உள்ள‌ ஊசியில் கையை விட்டு விட்டான். அப்படியே பகீர் என்றாகி விட்டது. அப்ப‌டியே க‌ட்டை விர‌லில் உள்ளே போய் விட்ட‌து. ந‌ல்ல‌ வேலை ச‌ட்டுன்னு அவ‌ன் கைய‌ எடுக்க‌ல‌ அப்ப‌டியே ச‌க்க‌ர‌த்தை பின்புற‌மாக‌ திருப்பி விரலை எடுக்க‌ வைத்தேன்).பகீர் என்று ஆகிவிட்து. அதிலிருந்து தைக்குக்கும் போது ரொம்ப‌ க‌வ‌ன‌மாக‌ யாரும் இல்லாத‌ நேர‌ம் அல்ல‌து எல்லோரும் துங்கிய‌ பிற‌கு தைப்ப‌து.






க‌த்திரி கோலையும் உட‌னே ப‌த்திர‌ ப‌டுத்த‌னும் இல்லை என்றால் அதை எடுத்து விளையாடு கிறேன் என்று முடியை க‌ட் ப‌ண்ணி கொள்வார்க‌ள். உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கிறது





நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ளும்.
அது போல் இரண்டு பேர் தைக்கும் போது பேச்சு ஸ்வாரசியத்தில் பெருவிரலுல் மிஷினி ஊசி போய் மாட்டி கையுக்கு தையல் போட்டார்கள்.

அதே போல் கணவன் மனைவி இருவரும் டைலர். மனைவி வெட்டி கொடுப்பார் கணவன் கடையில் கொண்டுவந்து தைப்பார்.
ஒரு நாள் அப்பளம் பொரித்து விட்டு அந்த எண்ணைய கீழே வைத்து விட்டு , துணி வெட்ட ஆரம்பித்து இருக்கிறார், வீட்டில் இருந்த சின்ன குழந்தை கொதிக்கிற எண்னையில் கையை விட்டு விட்டது. சின்ன குழந்தைகள் உள்ள வீட்டில் தையலை வைத்து தான் பிழைப்பே என்றால் மிக கவனமாக தைக்க வேண்டும்.



Saturday, August 21, 2010

திரெட் ஸ்டாண்ட் - thread stand








இந்த திரெட் ஸ்டாண்ட் என் பையன் ஹனீஃப் எனக்காக செய்து கொடுத்தது.


தினம் தையல் தைக்கும் டெயிலர்கள் ஊசி நூலை மொத்தமாக டப்பாவில் போடுவதுண்டு, அவசரத்துக்கு ஒரு நூலை எடுக்க போனா நூல் கரந்து ஊசியுடன் சேர்ந்து வரும் அல்லது சிக்கி கொள்ளும்.ரொம்ப நாளா சொல்லி கொண்டு இருந்தேன் ஒரு தெர்மாக்கோலில் மெல்லிய ஆணி லைனாக வைத்து நூல் மாட்ட ஒரு ஸ்டாண்ட் செய்யனும் என்று. அவசர தேவைக்கு கத்திரி கோல் எடுக்க போகும் போது அவன் கையில் நூல் சிக்கி அதை கையால் வெட்டும் போது கை வெட்டி கொண்டது.




ஊரில் உள்ள நூலில் தைத்தால் துணிகள் துணி இரண்டு தடவை போட்ட வுடன் தையல் விட்டு நூல் அறுந்து விடும். ஆனால் இங்கு துபாயில் இருக்கும் நூல் துணி வெளுத்து போய் கிழிந்தாலும் தையல் விட்டு போகாதாது அவ்வளவு ஸ்டாரங்


சரி இப்ப அந்த ஸ்டாண்ட் எப்படி செய்தான்னு பார்ப்போம்.
தீடிருன்னு இரண்டு நாள் முன் நோன்பு திறக்கும் ஒரு மணி நேரம் முன் பெயிண்டிங்க்கு கீழே பேப்பர் விரித்து தெர்மாகோலில் பெயிண்ட் செய்ய ஆரம்பித்தான். அத பார்க்கும் போதேல்லாம் ஆளாளாளுக்கு என்ன இப்ப உட்கார்ந்து பெயிண்ட் செய்ற வேர நேரம் காலம் கிடைக்கலையா என்ன செய்ற ஹாலிடே ஹோமர்க்கா என்று கேட்டோம் ஒன்றும் பதில் சொல்லல.



நோன்பு காலத்தில் கிச்சனில் நுழைந்தால் வெளி என்ன நடக்குதுன்னு கூட தெரியாது வேலை அவ்வளவு பிஸி.

கலரிங் செய்து முடிச்சாச்சு.

சீக்கிரம் உன் கடைய தூக்கு டைம் ஆகுது நோன்பு திரக்க நான் கத்த பேசாமல் எல்லாத்தையும் எடுத்துட்டு என் நூல் டப்பாவும், டூத் பிக் டப்பவும் எடுத்து வந்து எல்லாத்தையும் அடுக்கி விட்டு உங்களுக்கு தான் செய்தேன் என்றான்.

எல்லோரும் எதுக்கு இந்த ஐஸ், சிக்கன் பஜ்ஜிக்கா (அ) உங்கள் லேப்டாப்பில் கேம் விளையாடுவதற்கா என்றார்கள்.

கத்தி கொண்டே இருந்த எனக்கு சே இவ்வளவு நேரம் திட்டி கொண்டே இருந்தோமே என்ன செய்யன்னு புரியல உடனே முதலே சொல்லி இருந்தா எல்லாத்தையும் போட்டோ எடுத்து இருப்ப்பேனே.

அவனுக்காக வே அன்று அவன் கேட்டு கொண்டிருந்த சிகக்ன் பஜ்ஜியை பத்தே நிமிஷத்தில் தயார் செய்து கொடுத்தேன்.

மம்மி இத நான் செய்தேன் என்று என் பெயர் போட்டு தான் போடனும்.



தேவையான பொருட்கள்

சதுர வடிவ தெர்மாகோல் - 1
பெயிண்டிங் செய்ய தேவையான் பொருட்கள்
டூத் பிக் - தேவையான அளவு



1. சதுர வடிவ தெர்மாக்கோலில் வேண்டிய டிசைன்வரைந்து பெயிண்ட் செய்யவும்.







2. காய்ந்ததும் டூத் பிக் தேவையான அளவு இடைவெளி விட்டு வரிசையாக சொருகவும்.





3. நூல்களை அடுக்கி வைக்கவும்.




தையல் தைக்க ரெடியாக நூல்களை அடுக்கி வைக்க ஸ்டாண்ட் ரெடி.







Thursday, April 29, 2010

வித விதமான கழுத்து டிசைன்கள்



சோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது.





முன்பு காலத்தில் வி நெக், ரவுண்ட் நெக், ப நெக் மட்டும் தான்.




ஆனால் இப்ப சோளியில் கழுத்த் வித விதமான டிசைன் களிலும், பைப்பிங், போ வைத்து தைக்க ஆரம்பித்து விட்டனர்.










படத்தில் காட்டியுள்ளது போல் உங்களுக்கு விருப்பாமான டிசைன் களை வரைந்து வைத்து கொண்டால் சோளி தைக்கும் போது ஈசியாக இருக்கும்.







இது போல ஸ்டார் நெக் தைப்பது கொஞ்சம் கழ்டம், வளைவுகளை ஓட்டு தையல், ரன்னிங் ஸ்டிச் போட்டு தைத்து கொண்டால் ஈசியாக இருக்கும், வளைவுகளையும் அதே போக்கில் தைக்கனும் அந்த கார்னரில் அதே போல் வி ஷேப்பில் தைத்து விட்டு கார்னரை சிறிது வெட்டி விட்டால் தைத்து விட்டு திருப்பும் போது கழுத்தில் டிசைன் நன்கு படியும். ஓட்டு தையல் தைக்கும் போது சிறிது அரை செண்டி மீட்டர் தள்ளி தைக்க வேண்டும், இல்லையென்றால் தைத்து விட்டு திருப்பி தைக்கும் போது இட்டையில் தையல் விட்டு போகும் பிறகு பிரித்து தைப்பது மிகவும் சிரமம்.
















பின் புறம் வட்டவடிவமான கழுத்து ரொம்ப டீப்ப்பாக போடுவர்கள் , இடுப்பு கிட்ட கொஞ்சம் இரக்கம் வைத்து தைத்து கொண்டால்ஷோல்டர் முன் கழுத்து பக்கம் வடியாமல் இருக்கும்.
// ஜெயா டீவியில் நடிகை குஷ்புவின் மாடல்கள் பார்த்தால் வித விதமாக இருக்கும் ஆனால் உயரம் நல்ல இரக்கம் வைத்து தைத்து இருப்பதால் தான் சோளி வடியாமல் நிற்கிறது.//









தைக்கும் முன் அயர்ன் செய்து தைத்தால் டெயிலர் தைப்பது போலவே இருக்கும்.

கழுத்து ஆழமாக போடுபவர்கள், ஷோட்டரிலிருந்து சோளி
வடியும் அதற்கு படத்தில் உள்ள்படி பின்புறம் நாட் வைத்து தைத்து கொண்டால் நல்ல பிட்டிங் கிடைக்கும்.




அகல கழுத்து போடும் போதும், அல்லது மற்ற சோளிகளிலும் உங்கள் அறியாமல் உள்ளாடைகள் வெளியே தெரியும், அது வெளியில் வராமல் இருக்க ஷோல்டர் ஜாயிண்ட் பண்ணியதும் அங்கு ஒரு சிறிய லூப் வைத்து தைத்து பிரஸ் பட்டன் வைத்து உள்ளாடையை அதில் பின் பண்ணி விட்டால் வெளியே வர வாய்ப்பில்ல்லை, இப்ப சுடி தாரிலும் எல்ல்லோரும் டெயிலரிடம் தைக்க கொடுக்கும் போது ஷோல்டர் லூப் வைத்து பட்டன் தைத்து கொடுக்க சொல்லுங்கள்.
பிறகு முடிந்த போது துணியில் கழுத்தை வெட்டும் விதத்தை சொல்கிறேன்.

இதெல்லாம் தையல் டீச்சர் ஆனால் சொல்லி கொடுக்க முன்பு போட்டு வைத்து இருந்த பேட்டன்கள்.













Sunday, April 25, 2010

சோளியின் கை பேப்பர் பேட்டனில் வெட்டும் முறை


இது சோளியின் கை வெட்டும் முறை போன வாரம் தமிழ் குடும்ப தோழி அங்கு இந்த விளக்கம் கேட்டதால் போட்டது, இங்கு பிளாக் தோழிகள் தைப்பவர்களுக்கும் இது உதவும் என நினைக்கிறேன்.


1. சோளியின் உயரம் + மடிப்புடன் அளவெடுத்து கொள்ளவும்.





2. சோளியின் அகலம் + சைடில் உள்ள தையலுக்கு அளவெடுத்து கொள்ளவும்









3.உயரம் மடிப்புள்ள ஒரு பேப்பரில் உயரம் அகலம் குறிக்கவும். மடிப்புக்கு தனியாக வரைந்து காட்டியுள்ளபடி செய்யவும்








4. பிறகு இரண்டாக பிரித்து முன் பக்க கை வளைவை மட்டும் வெட்டி எடுக்கவும்





















6. கை வளைவு வ்ரைய பொதுவாக ஒல்லியாக உள்ளவர்களுக்கு முனறை இன்சும், பருமனாக உள்ளவர்களுக்கு நாலரை இன்சும் போதுமானது.










5.பிறகு துணியில் வைத்து பின் பண்ணி துணியில் வரையும் மார்க்கரால் வரைந்து வெட்டி எடுக்கவும்