Showing posts with label Video Samaiyal. Show all posts
Showing posts with label Video Samaiyal. Show all posts

Sunday, August 25, 2024

|Pongal Sambar in Nutricook # சௌசௌ Sambar

Hi Friends In this video i have shared how to use nutri cook
and How to cook sambar and pongal in Nutricook


Please Click  below link and see the full explained video Please support by Subscribe like share and comment.


In this recipe I teachedhow to make pongal sambar in Nutricook. பொங்கல் செய்வது எப்படி, சட்டு புட்டுபொங்கல்,சாம்பார் சௌ சௌ சாம்பார் மைசூர் பர்ப்பு சாம்பார், Mysore dhal sambar,20 min pongka sambar #samaiyal_attakaasambyjaleelakamal






#nutricook
#Instantpot

Thursday, April 6, 2023

Rajma Pulav/ Suhoor Recipe /Rajma Recipes/Aval Kitchen/Ramadan 2023





video samayal




Please click below link and watch

Please support by subscribe view , like , comment and share 

Link  : Rajma Pulav 




















https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, September 3, 2022

காபூலி புலாவ் /Quick Lunch box Idea /Kabuli Pulav

 இதுவரை யாரும் சொல்லாத டிப்ஸ் /

Please click above links


#காபூலிபுலாவ் /Quick Lunch box Idea / இதுவரை யாரும் சொல்லாத டிப்ஸ்Breakfast Party Idea by Jaleelakamal #kabulimuttonpulav#easykidsbreakfast#Hummusplatter Simple and Easy Recipes and Traditional Recipes #Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள்
























Monday, February 1, 2021

இந்த குழம்பை வாரம் ஒரு முறை சாப்பிடுங்க மூட்டு வலி சூப்பர் ரெசிபி/Goat Trotters









இந்த குழம்பை வாரம் ஒரு முறை சாப்பிடுங்க மூட்டு வலி சூப்பர் ரெசிபி Paya is Indian Traditional Recipe, which very good for strengthen our bone Here I have shared Goat Trotters Recipe Goat Trotters are a healthy, boredom-busting occupy treat for dogs who love to chew. Goat meat is rich in Vitamin B for a healthy metabolism #Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள்


ஆட்டு கால் பாயா செய்வது எப்படி?ஆட்டு கால் பயா குழம்பு/autukala paya gravy

முதலில் ஆட்டுக்காலை  வெங்காயம், அன்னாசி பூ பெரிய ஏலக்காய், மிளகு சீரக் தூள், உப்பு இஞ்சி பூண்டு சேர்த்து தண்ணீர் 5 டம்ளர் சேர்த்து குக்கரில் வேக விடவும்.

தேங்காய் , சோம்பு, சீரகம் , முந்திரி , மிளகு சேர்த்து அரைக்கவும்.
ஆட்டு கால் பாயா செய்வது எப்படி?ஆட்டு கால் பயா குழம்பு/autukala paya gravy . Simple and Easy Recipes and Traditional Recipes from samayal attagasam

Saturday, January 30, 2021

Peshawar Kadai Mutton /#பாக்கிஸ்தானி ஸ்பெஷல் பேஷ்வார் மட்டன் கடாய்‌



#PeshawarKadaiMutton /#Pakistani #Roadside Mutton Gravy/Samaiyal_attakaasam Pakistani street food, Mutton Gravy, Mutton masala, Traditional food In this recipe I have shared Pakistani style Peshawar gosht/ Simple and Easy Recipes and Traditional Recipes

பாக்கிஸ்தானி ஸ்பெஷல் பேஷ்வார் மட்டன் கடாய்‌

#Pakistani Road side Mutton Gravy/

பேஷ்வாரி மட்டன் கடாய்




இங்குள்ள பாக்கிஸ்தானி ஹோட்டல்கள் மற்றும்  கராச்சி தர்பார் ஹோட்டலிலும் இந்த மட்டன் கிடாய் மிகவும் பிரபலம்.

 

தேவையான பொருட்கள்



எலும்புடன் உள்ள மட்டன் துண்டுகள் – அரை கிலோ

தக்காளி – 400 கிராம்

தயிர் – 1 மேசை கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – முன்று தேக்க்ரண்டி

பொடித்து கொள்ள

முழு தனியா  - ஒரு மேசைகரண்டி

முழு மிளகு  - ஒரு தேக்கரண்டி

அலங்கரிக்க

நீளமாக சீவிய – இஞ்சி

கொத்துமல்லி தழை

எண்ணை – 2 மேசைகரண்டி






செய்முறை

குக்கரில் எண்ணையை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்.

பிற்கு தயிர்,உப்பு மற்றும் தக்காளி, பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 5 விசில் விட்டு இரக்கவும்.

பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடித்து வைக்கவும்.

குக்கர்ல் ஸ்டீம் போனதும் குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை வற்றவிடவும்.

வாயகன்ற வானலியில் வெந்த மட்டனை சேர்த்து நன்கு பொடித்த பொடியையும் சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.

கடைசியாக கொத்துமல்லி தழை தூவி ,நீளமாக வெட்டிய இஞ்சியை தூவி இரக்கவும்.

சுவையான பேஷாவரி மட்டன் கிடாய் ரெடி.

மட்டனை குக்கரில் வேகவைக்காமல் சட்டியிலும் வேகவைக்கலாம் 20 லிருந்து  30 நிமிடங்கள் ஆகும்.கார சாரமாக வேண்டும் என்றால் பச்சமிளகாய் அல்லது மிளகை அதிகரித்து கொள்ளலாம்.

 

 


#Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள் . 
Chennai plaza Dubai Burka
Samaiyal_attakaasam


Tuesday, October 16, 2018

Betel Leaf Salad for Diet, Paleo Deit by Jaleelakamal




வெற்றிலை சாலட்
கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றிலையை நாம் சாலட் ஆகவும் சாப்பிடலாமே.

வெற்றிலை சாலட் தயாரிக்க தேவையான பொருட்கள்



வெற்றிலை ‍ 5 எண்ணிக்கை அல்லது தேவையான அள்வு



பொடியாக அரிந்த தேங்காய் துண்டுகள் கால் கப்

பொடியாக அரிந்த வெங்காயம் ‍ 1

பொடியாக அரிந்த இஞ்சி ‍ இரண்டு மேசைகரண்டி

முந்திரி அல்லது வேர்கடலை

மிளகு 15 அல்லது பழுத்த மிளகாய் இரண்டு தேக்கரண்டி

தேங்காய் எண்ணை , நெய் தேவைக்கு



செய்முறை



வெற்றிலையை சுத்தம் செய்து வைக்கவும்.

தேங்காயை தேங்காய் எண்ணையில் வறுத்து வைக்கவும்

முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்





வெற்றிலையில் முன்று மிளகு, வறுத்த தேங்காய் அரை தேக்கர்ண்டி, வறுத்த முந்திரி அரை தேக்கரண்டி, பொடியாக அரிந்த இஞ்சி சிறிது, வெங்காயம்,அரை தேக்கரண்டி சேர்த்து வெற்றிலையை மடித்து சாப்பிடவும்.



கவனிக்க ‍ மிளகின் அளவு அவரவர் காரத்துக்கு ஏற்றார்போல அதிகம் சேர்த்து கொள்ளலாம்.



(பேலியோவில் இல்லாதவர்கள் இதில் தேன் மற்றும் ப்ரவின் சுகர், வேர்கடலை இது போல சேர்த்து கொள்ளலாம்.




வெற்றிலை சாலட் குழந்தைகளுக்கு 


குழந்தைகளுக்கும் சளி தொல்லை மற்றும் செரிமானத்துக்கு இதை சிறிது பெரிய குழந்தைகள் ஆனதும் இதை பழக்கலாம்.

வெற்றிலை

தேன்
சோம்பு மிட்டாய் அல்லது ஜெம்ஸ் மிட்டாய்
மிளகு ஒன்று அல்லது முன்று

இதை வைத்து மடித்து கொடுக்கலாம். இல்லை தேனுக்கு பதில்  ஜாம் வைத்து கூட கொடுக்கலாம்

வெற்றிலை கிடைக்கவில்லை என்றால் ஏதாவது சாலட் கீரைகளில் லெட்டியுஸ் போனற இலைகளில் இதை வைத்து சாப்பிடலாம்.










இதுவரை சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலை
சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் 'subscribe' என்ற பட்டனை அழுத்தி பக்கதில் உள்ள பெல் ஐக்கானையும் கிளிக் செய்யுங்கள்.








வெற்றிலை சாலட்
பேலியோடயட்
டயட்
சளி தொல்லைக்கு ஏற்ற அருமருந்து
சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம்.
ஒவ்வாமைக்கு ஏற்றது
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும்.உணவு உண்ணலாம்.

Verrilai (Betel Leaves) வெற்றிலை Salad for Diet, Paleo Deit,cough and Allergy
இதில் இரண்டு வகை கொடுத்துள்ளேன்
பெரியவர்களுக்கும் கடைசியில் சிறியவர்களுக்கு எப்படி கொடுக்கலாம் என்றும் கொடுத்துள்ளேன்.

லைக் செய்து உங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள் இதுவே அடுத்த பயனுள்ள பதிவுக்கு எனக்கு பூஸ்ட்

வெற்றிலை சூப் ( சளியை குணமாக்கும் )கிழே லின்கை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றிலையை நாம் சாலட் ஆகவும் சாப்பிடலாமே.



இதுவரை சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலை

சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் 'subscribe' என்ற பட்டனை அழுத்தி பக்கதில் உள்ள பெல் ஐக்கானையும் கிளிக் செய்யுங்கள்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Monday, February 26, 2018

மஞ்சள் பூசணி சூப்/manjal puusani soup - samaiyal_attakaasam by JK




வெயிட் குறைக்க இதை தினம் செய்து குடிக்கலாம். ஆப்ரேஷன் செய்து இருப்பவர்களுக்கு சூப் கொடுக்க சொல்வார்கள் அப்ப என்ன செய்வது என்று தெரியாது , அந்த நேரத்தில் இது போல சூப் செய்து குடிக்கலாம்.
 கிட்னி பிராப்ளம் இருப்பவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். நல்ல பலன் தெரியும். சுரைக்காயை வடிகட்டிட்ட்டு மீதி உள்ள காயை லேசாக தாளித்து தேங்காய் சேர்த்து பொரியல் போலவும் சாப்பிடலாம்

சூப் செய்வது பெரிய வேலை மலைப்பாக நினைக்கிறீர்களா வாங்க இது போல கூட சிம்பிளாக தினம் ஒரு காயில் செய்து சாப்பிடலாமே.
 இன்னும் பயனுள்ள பல கிச்சன் ரகசியங்களுடன் பதிவுகள்வரும். அதுக்கு முதலில் என் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து பார்க்கவும்.

சமையலே செய்யதெரியாதவர்களும் ஈசியாக இதை பார்த்து செய்துவிடலாம். ஆறு மாத குழந்தைகளுக்கு முதல் முதலில் என்ன சூப் செய்யலாம் என்று ஒரே குழப்பமாக இருக்கும்.

 இது மஞ்சள் பூசனி சேர்த்து  செய்துள்ளேன் இதே போல தினம் ஒரு காயில் கேரட், முல்லங்கி, கீரை பீட்ரூட் , உருளை என இதே போல செய்து கொடுக்கலாம், தேவைப்பட்டால் இதில் சிக்கனை வெந்து சேர்த்து கொள்ளலாம். வியட்நாமில் தினப்படி சமையலில் இந்த சூப் கண்டிப்பாக இடம் பெறும், 

தேவையான பொருட்கள்


மஞ்சள் பூசனி  - 200 கிராம்
சின்ன  வெங்காயம்  5 அ  பெரிய வெங்காயம் - ஒன்று
 உப்பு - தேவைக்கு


 செய்முறை

 ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் 3 டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் அரிந்து போட்டு , பொடியாக நறுக்கிய வெங்காயம் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வெந்தததும் நன்கு மசித்து வெந்த சூப்பை வடிகட்டவும்.
மஞ்சள் பூசனி என்பதால் மசிக்கும் போது கொஞ்சம் கிரீமியாக கெட்டியாக வரும்.


 இது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிது நெய் விட்டு தேவைபட்டால் மிளகு தூள் தூவி சாப்பிடலாம். / செய்து பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். 
ஏற்கனவே சுரைக்காய் சூப் இங்கே கொடுத்துள்ளேன்.
அந்த லின்க் இங்கே



இதை செய்பவர்கள் என் அந்த சமையலை ஒரு போட்டோ எடுத்து என் மெயில் ஐடிக்கு அனுப்பினால் முகநூலில் ஷேர் செய்வேன். மறக்காம என் சேனலை சப்ஸ்கிரைப் பன்ணிடுங்கள் , அப்ப தான் உடனுக்குடன் நான் இங்கு பதியும் குறிப்புகள் உடனே உங்களுக்கு கிடைக்கும். cookbookjaleela@gmail.com

 



Cookery Video 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Sunday, January 14, 2018

கவுனி அரிசி பொங்கல் & கேபேஜ் வடை - Kavuni arisi Pongal








கவுனி அரிசி பொங்கல் & கேபேஜ் வடை

You tube link   -  Cabbage  ulunthu vadai posted on 21.1.18




Seven Veggie Pongal kuzambu

Pongal Recipe Collections 

இந்த லின்கில் எல்லாவகையான பொங்கல் ரெசிபிகளும் இருக்கின்றன கிளிக் செய்து பார்க்கவும்.


அரிசிகளின் அரசி. கவுனி அரிசி
இது கருப்பு ரெட் கலரில் இருக்கும்


கவுனி அரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெல்லம் - அரை கப் ( தேவைப்பட்டால் சிறிது கம்மி பண்ணிக்கலாம்)
நெய் - இரண்டு மேசைகரண்டி
சுக்கு பொடி - அரை தேக்கரண்டி ( நான்  இனிப்பு பொங்களுக்கு சுக்கு சேர்ப்பேன்)
உப்பு - அரை சிட்டிக்கை
முந்திரி - 6 எண்ணிக்கை


செய்முறை

முந்திரியை   ஒரு தேக்கரண்டிநெய்யில்  வறுத்து எடுத்து வைக்கவும்.
கவுனி அரிசியையும் பாசிபருப்பையும் ஊறவைத்து முன்று டம்ளர் தண்ணீர் சிறிது பால்சேர்த்து வேகவைக்கவும்,இடையில் வெல்லத்தை மண் போக சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து இளக்கி வடித்து வெந்து கொண்டிருக்கும் கவுனி அரிசியுடன் சேர்த்து உப்பு சுக்கு தூள்  நெய் ஒரு மேசைகரண்டி சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
வெந்தததும் முந்திரி சேர்த்து மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறி இரக்கவும்.




இது சிறப்பு விருந்தினர் பதிவில் முன்பு  மனோ அக்கா செய்து இங்க நான் போஸ்ட் பண்ணி இருக்கேன்.
இது நான் இப்ப ஊருக்கு சென்றிருந்த சமயம் கவுனி அரிசி வாங்கி வந்தேன்.
உடனே செய்து பார்த்தாச்சு

இது வேக லேட் ஆகுது நான் ஒரு மணி நேரம் தான் ஊறவைத்தேன்.
மனோ அக்கா இரவே ஊற போட சொல்லி இருக்கிறார்கள்.நீங்கள் செய்வதாக இருந்தால் அரிசியை நன்கு ஊறவைத்துகொள்ளுங்கள்.
சரியாக வேக வில்லை என்றால் மீண்டும் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.


சுவையான சத்தான கவுனி அரிசி  ( kavuni arisi) பொங்கல் ரெடி

வீடியோ வாக எடுத்துள்ளேன் பிறகு போஸ்ட் பண்ணுகிறேன்

கிழே உள்ளது ப்ளைன் உளுந்து வடையும் , கேபேஜ் உளுந்து வடையும்.

இங்க பிலாக்கில்நிறைய உளுந்து வடை தயிர் வடை , உளுந்து வடை டிப்ஸ் நிறைய கொடுத்துள்ளேன் அந்த லின்ங் எல்லாம்
கிழே கொடுக்கிறேன்.



வீடியோவை பாருங்கள் கமென்ட் லைக் பண்ணி சப்ஸ்கிரைப் செய்யுங்கள் , உங்கள் நண்பர்களுக்கு ஷேர்செய்யுங்கள்.




.
http://samaiyalattakaasam.blogspot.ae/2014/10/dill-leaves-vadai.html

http://samaiyalattakaasam.blogspot.ae/2013/07/curd-vadai.html
http://samaiyalattakaasam.blogspot.ae/2014/03/kids-colourful-dahi-vada.html

http://samaiyalattakaasam.blogspot.ae/2009/08/blog-post_29.html
உளுந்து வடை டிப்ஸ்





பண்டிகை கால சமையல், பாரம்பரிய சமையல், கவுனிஅரிசி பொங்கல்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, January 11, 2018

Easy Chichen or veg Bread Pizza by Jaleelakamal ஈசி சிக்கன் ப்ரட் பிட்சா


பிள்ளைகளுக்கு தினபப்டி சாப்பாட்டை விட பிட்சா என்றால் முச்சு பேச்சு இல்லாமல் சாப்பாடு உள்ளே போகும்.
Pizza
அதற்கு நாம சுலபமாக வீட்டிலேயே பிரட்டில், தோசையில் தினப்படி செய்யும் சப்பாத்தியிலும் வீட்டில் தயாரிக்கும் கூட்டு , பொரியல் , சிக்கன் , மட்டன், கீமாவை வைத்து செய்து கொடுக்கலாம்.




Onion capsicum Pizza Bread link eduththu paarkkalaam

Chicken pizza dosai
http://samaiyalattakaasam.blogspot.ae/2011/07/chicken-pizza-dosai.html

சிக்கன் தோசை பிட்ஸா நான் முன்பு போஸ்ட் பண்ணியது,

http://samaiyalattakaasam.blogspot.ae/2011/09/onion-capsicum-pizza-bread.html
ஆனியன் கேப்ஸிகம் பிட்சா





 How to Make Chicken Pizza Bread
How to prepare Bindy Pizza
How to Prepare yummy yummy pizza variety







பிள்ளைகளுக்கு தினபப்டி சாப்பாட்டை விட பிட்சா என்றால் முச்சு பேச்சு இல்லாமல் சாப்பாடு உள்ளே போகும்.

அதற்கு நாம சுலபமாக வீட்டிலேயே பிரட்டில், தோசையில் தினப்படி செய்யும் சப்பாத்தியிலும் வீட்டில் தயாரிக்கும் கூட்டு , பொரியல் , சிக்கன் , மட்டன், கீமாவை வைத்து செய்து கொடுக்கலாம்.

இதற்கு தேவையானவை


வீட்டில் செய்து வைத்துள்ள ஏதேனும் பொரியல் அல்லது சிக்கன் கூட்டு மட்டன் கூட்டு வகைகள்
ஆலிவ் காய்கள்
மொசெரல்லா சீஸ்
டொமெட்டோ கெட்சப் அல்லது பிட்சா சாஸ்

பிரட் , பன் அது உங்கள் விருப்பம்


பிரட்டாக இருந்தால் அதை 4 ஆக கட் செய்து அதில் சிறிது கெட்சப் தடவி நாம் செய்து வைத்துள்ள பில்லிங்கை வைத்து  முன்று வகையான குட மிள்காயை வதக்கி சேர்த்து மேலே சீஸ் மற்றும் கெட்சப் தடவி முற்சூடு படுத்திய ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான பிரட் பிட்சா தயார்.

இதே  ஓவன் இல்லாதவர்கள் இதை தோசை தவ்வாவில் மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் ப்ரட்டைபொரித்து எடுத்து மேலே கூற பட்ட அனைத்து பில்லிங்கையை யும் வைத்து மூடி போட்டு சிறிது தனலில் 7 நிமிடம் வைத்து எடுத்தால் போதுமானது. இதே போல தோசை பிட்ஸா, மினி தோசை பிட்சா என செய்து கொடுக்கலாம்.


என் யுடியுப் சேனலில் சில குறிப்புகள் போட்டு கொண்டு இருக்கிறேன். ரொம்ப ப்ர்பஷனால இல்லை என்றாலும் உங்களும் புரியும் அளவிற்கு பதிவுகள் இருக்கும் , என் சேனலை லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்து உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

வீடியோ சமையல், Jaleela's cookery video
How to make Bread Pizza

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Tuesday, January 10, 2017

கொடுவா மீன் கிரில் (sea bass)


https://youtu.be/HTORtMmNuuE




கொடுவா மீன் கிரில் (sea bass)

தேவையான பொருட்கள்

பெப்பர் – ஒரு மேசைகரண்டி
காரிலிக்  பவுடர் – ஒரு மேசைகரண்டி
சால்ட் – ஒரு தேக்கரண்டி


ஆலிவ் ஆயில் 50 மில்லி
ஒரிகானோ ஒரு மேசைகரண்டி
லெமன் – இரண்டு லெமன் ஜுஸ்

கார்லிக் முழு பூண்டு
கொத்துமல்லி கீரை
பிரிஞ்சி இலை
லெமன் ஸ்லைஸ்

செய்முறை

முழு மீனை சுத்தம் செய்து அங்காங்கே கீறிவிடவும்.
பாத்திரத்தின் அடியில் ஆலிவ் ஆயில் ஒரிகானோ லெமன் ஜூஸ் சேர்த்து பிறட்டி மீனை வைத்து மேலே மிளகு தூள் பூண்டு பொடி உப்பு சேர்த்து மீனில் முழுவதும் தடவவும்.









மேலே கீறிய இடைவெளியில் கிளி மூக்கு மாங்காய் துண்டுகள் கட் செய்து இடை இடையே சொருகவும்.( பேலியோ டயட்டில் உள்ளவர்கள் மாங்காய் க்கு பதில் லெமன் ஸ்லைஸ் வைக்கவும்.

மீனின் வயிற்றில் நல்ல ப்லேவருக்காக கொத்துமல்லி தழை, ஸ்லைஸாக அரிந்த எலுமிச்சை துண்டுகள், பிரிஞ்சி இலை , முழு பூண்டு வைக்கவும்.














இதை ஒரு மணி நேரம் ஊறவைத்து கிரில் செய்யவும்.

ஓவனை 20 நிமிடம் முற்சூடு படுத்தி மேலும் கீழும் சூடு உள்ள கிரில் ஆப்ஷனை செலக்ட் செய்து 20 நிமிடம் கிரில் செய்யவும், மேலே லேசாக பட்டர் தேய்த்து
பிறகு திருப்பி விட்டு மேலும் 20 நிமிடம் கிரில் செய்யவும். கடைசியாக மேலே உள்ள கிரில் ஆப்ஷனை செலக்ட் செய்து 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Tag:BBQ/Whole fish Grill, Sea Bass Grill,Sea food, Paleo Deit, Video Samaiyal







 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/