பேஷ்வாரி மட்டன் கடாய்
இங்குள்ள பாக்கிஸ்தானி ஹோட்டல்கள் மற்றும் கராச்சி தர்பார் ஹோட்டலிலும் இந்த மட்டன் கிடாய் மிகவும் பிரபலம்.
தேவையான பொருட்கள்
எலும்புடன் உள்ள மட்டன் துண்டுகள் – அரை கிலோ
தக்காளி – 400 கிராம்
தயிர் – 1 மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – முன்று தேக்க்ரண்டி
பொடித்து கொள்ள
முழு தனியா - ஒரு மேசைகரண்டி
முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
அலங்கரிக்க
நீளமாக சீவிய – இஞ்சி
கொத்துமல்லி தழை
எண்ணை – 2 மேசைகரண்டி
செய்முறை
குக்கரில் எண்ணையை காயவைத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்.
பிற்கு தயிர்,உப்பு மற்றும் தக்காளி, பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி 5 விசில் விட்டு இரக்கவும்.
பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடித்து வைக்கவும்.
குக்கர்ல் ஸ்டீம் போனதும் குக்கரை திறந்து அதில் இருக்கும் தண்ணீரை வற்றவிடவும்.
வாயகன்ற வானலியில் வெந்த மட்டனை சேர்த்து நன்கு பொடித்த பொடியையும் சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
கடைசியாக கொத்துமல்லி தழை தூவி ,நீளமாக வெட்டிய இஞ்சியை தூவி இரக்கவும்.
சுவையான பேஷாவரி மட்டன் கிடாய் ரெடி.
மட்டனை குக்கரில் வேகவைக்காமல் சட்டியிலும் வேகவைக்கலாம் 20 லிருந்து 30 நிமிடங்கள் ஆகும்.கார சாரமாக வேண்டும் என்றால் பச்சமிளகாய் அல்லது மிளகை அதிகரித்து கொள்ளலாம்.
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா