Showing posts with label Step by Step. Show all posts
Showing posts with label Step by Step. Show all posts

Wednesday, August 15, 2012

மூவர்ண ஃப்ரூட்ஸ் & நட்ஸ் கடல் பாசி - Tri ColourFruits and Nuts Agar Agar


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

அகர் அகர் , இந்த கடல் பாசிய விதவிதமா செய்வதில் எனக்கு ரொம்ப விருப்பம்.

அதுவும் இப்ப நோன்புகாலம் என்பதால் தினம் வித விதமான கடல் பாசி தான்..

அதிலும் இந்த விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது. குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.



Tri ColourFruits and Nuts Agar Agar



கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு.உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
























தேவையான பொருட்கள்

கடல்பாசி -  (அகர் அகர்) - 15 கிராம்
தண்ணீர் —  900 மில்லி (4 ½ டம்ளர்)
சர்க்கரை—125 கிராம்
ரோஸ்வாட்டர் – ஒருதேக்கரண்டி
எசன்ஸ் – (பச்சை மற்றும் சிவப்பு)
நட்ஸ் வகைகள் – பாதம் பிஸ்தா பிளேக்ஸ் தேவைக்கு
பொடியாக அரிந்த பழங்கள்- ஸ்ட்ராபெர்ரி, தேஙகாய் மற்றும் கிவிதேவைக்கு
பால் – 1மேசைகரண்டி
அலங்கரிக்க
யம் யம் மிட்டாய் (அ) ஜெம்ஸ் மிட்டாய்
பிரட் ஸ்டிக் (அ) சாக்லேட் ஸ்டிக்


 செய்முறை

1 தண்ணீரில் கடல் பாசியைஉதிர்த்து போட்டு  15 நிமிடம் ஊறவைத்து சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கடல்பாசி கரையும் வரை  காய்ச்சவும்.




 2 காய்ச்சி சிறிது கட்டியாகி  வரும் போது .காய்ச்சியதை முன்றாக முன்று கிண்ணங்களில் ஊற்றவும்




3 இரண்டு கிண்ணத்தில் சிவப்பு மற்றும் பச்சை வண்ண எசன்ஸ் ஊற்றி கலக்கவும்.







4 சிவப்பு வண்ணத்தில்ஸ்ட்ராபெர்ரிபழம்மற்றும்பாதம், பிஸ்தாபிளேக்ஸ்சேர்க்கவும்.



5.வெள்ளை வண்ணத்தில்பால், தேங்காய், பிஸ்தா ,பாதம்பிளேக்ஸ் சேர்க்கவும்





6 முன்று கிண்ணத்தில் உள்ள கலவைகளையும்  ஐஸ் கியுப் ட்ரேவில் ஊற்றி குளிரூட்டியில் குளிரவைக்கவும்.குளிர்ந்த்தும் அலங்கரித்து பரிமாறவும்





7 . சுவையான மூவர்ண ஃப்ரூட் அண்ட் நட்ஸ் அகர் அகர் ரெடி.

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 15  நிமிடம்
சமைக்கும் நேரம்: 20 நிமிடம் + குளிர வைக்கும் நேரம்

How to Make Agar Agar - Step by Step
Fruit Jelly
Indian Flag Agar Agar

சுதந்திர தின ஊத்தாப்பம்


சுதந்திர தின கடல்பாசி (பிளெயின்)