இந்த ஆம்லேட் தான் முட்டை ரெசிபியிலேயே மிக சுலபம். இந்த ஆம்லேட் எல்லா டிஷ் க்கும் பொருந்தும்.
பிரெட், பன், ரொட்டி, பரோட்டா, சப்பாத்திக்கு இது ஒன்று போதும், ஆபிஸ்க்கு டிபன் எடுத்து செல்லவும் நொடியில் தயாரித்து விடலாம்.
உப்பு தூள் = கால் தேக்கரன்டி (தேவைக்கு)
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
பச்ச மிளகாய் = இரண்டு
வெங்காயம் = இரண்டு
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
பட்டர் = கால் தேக்கரண்டி(தேவைப்பட்டால்)
இது ரசம் சாதம், பருப்பு சாதம் , உப்புமா,தட்டு ரொட்டி, இன்னும் பலவகை உணவுகளுக்கு பொருந்தும்.
இதில் மசாலா சிம்பிளாக போட்டுள்ளேன்.
மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூளும் சேர்த்து கொள்ளலாம்.
அதிலேயே கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்துமல்லி தழை, மஞ்சள் தூள் சேர்த்தும் அவரவர் ருசிக்கு ஏற்றவாறு சுடலாம்.
Tweet | ||||||
45 கருத்துகள்:
ஆலிவ் தொடர்ந்து சாப்பிட்டால் எதுக்கலிக்குது எனக்கு - அது பித்தமா
நான் இருக்கும் பேச்சிலர் அறையில் அடுப்பும் கிடையாது..:((
அடுப்பில்லாமல் ஆம்லெட் செய்யும் வழிமுறை ஏதும் இருந்தால் கூறவும்...
ஆதங்கத்துடன்
கண்ணா...
கண்ணா வருகைக்கு மிக்க நன்றி
ஹா ஹா இப்ப தான் எலக்ரிக் அடுப்பு இருக்கே, அதில் ஒரு தவ்வா வாங்கி வைத்து கொண்டால் (ஓட்ஸ், பிரெட் டோஸ்ட் இது போல் செய்து கொள்ளலாம்.
//ஆலிவ் தொடர்ந்து சாப்பிட்டால் எதுக்கலிக்குது எனக்கு - அது பித்தமா//
அது கொஞ்சமா பயன் படுத்தனும்,
ரைட்டு, முயற்சி செய்துர வேண்டியதுதான்.
Half Boil இத விட ஈசியா மன்னிடலாம். :)))))
present Jaleela
ஆலில் எண்ணெயை பச்சையாகத்தான் உபயோகிக்கணும். பொரிக்க பயன்படுத்தினால் அதன் தன்மை போய் விடும் என்பதாக படித்தேனே.
சகோதரிக்கு,
உங்கள் சமையல் குறிப்பை பாத்தவுடன் என் மனனைவி எனக்கும் இதுபோல் சமைத்து தருகின்றேன் என்றார், பிரிண்ட் செய்து கொடுத்துளேன். சமைத்து கொடுப்பதற்க்கு ஒரு மனசு வேண்டும், அதை சாப்பிடுவதற்க்கும் அதைவிட் பெரிய மனசு வேணும்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
..//அடுப்பில்லாமல் ஆம்லெட் செய்யும் வழிமுறை ஏதும் இருந்தால் கூறவும்...//
வே கண்ணா...சூப்பரா சொன்னீருவே... ஏ நமக்கு இதே நிலைமைதாம்லா....
அடுப்பே இல்லாம பண்ற சமையல் வழிமுறைகளை உங்ககிட்டேருந்து நிறைய எதிர்பார்க்குறேன்
@@@நாஞ்சில் பிரதாப் -அடுப்பே இல்லாம பண்ற சமையல் வழிமுறைகளை உங்ககிட்டேருந்து நிறைய எதிர்பார்க்குறேன்
ஓவன் ஒன்னு வாங்குங்க. சரியான அளவு தண்ணி வைத்தால் அதில் சோறு கூட ஆக்கலாம்.
// Jaleela said...//ஆலிவ் தொடர்ந்து சாப்பிட்டால் எதுக்கலிக்குது எனக்கு - அது பித்தமா//
அதுக்கு , கொஞ்சமா பயன் படுத்தனும்.
ஹா. ஹா.. பதில் கேட்டா நல்ல ஜோக் சொல்றீங்க..
"Egg"cellent!
"பேச்சுலர்ஸ் ஆனியன் ஆம்லேட்"
ஆஹா...ஆம்லேட் விட நீங்க வைத்த பெயர் எனக்கு ரெம்ப பிடிச்சு இருக்கு அக்கா...
akkaa...ingu vanthu paarkkavum...
http://ganifriends.blogspot.com/2010/03/blog-post_08.html
பாசக்கார தம்பி ஜெய்லானி இந்த நாஞ்சிலாருக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன். (எனக்கு கோபம் வந்தா பிள்ளைகளுக்கு அடுப்பில்லாமல் தோசை, ரொட்டி சுடுவேன் சில சமயம் அத சொல்லலாமான்னு பார்த்தேன்) சட்டுன்னு ஓவன் ஞாபகம் வரல,
மங்குனி அமைச்சர் வேறு ஒரு சங்கத்துடன் கொலவெறி புடித்து இருக்கிறார், அவர் வந்து என்ன கேட்க போகிறாரோ தெரியல
ஐய்யோ சகோ.ஜமால் நான் கிண்டலா சொல்லல, ஆலிவ் ஆயிலை கொஞ்சமா ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் பயன்படுத்தனும் என்று சொல்லவந்தேன்..
ஈசியான செய்முறை , கோபம் வந்தால் பசங்களுக்கு அடுப்பு இல்லாத தோசை ரொட்டி அது எப்படி அக்கா.
ஈஸியாக செய்யும் ஆம்லட்.எங்கள் வீட்டில் இது இல்லாத நாளே இல்லை.
ஒரு டபுள் ஆம்லேட் பார்சல்
சாரி அயம் லேட்...:)
உண்மையிலேயே ஈசியான முறைதான் ஜலீலாக்கா. நான் இப்படிச் செய்து பிரெட்டினுள் வைத்துக் கொடுப்பேன்.
பதிவின் பேரே வித்தியாசமாக உள்ளது, அப்ப உடனே செய்ய வேண்டியது தான்
நான் எப்படி ஆம்லேட் போட்டாலும் கடைசியா பொடிமாஸ் மாதிரி ஆயிடுது..:(
Looks wonderful, very interesting omlette infact...
//நான் எப்படி ஆம்லேட் போட்டாலும் கடைசியா பொடிமாஸ் மாதிரி ஆயிடுது..:(
//
தீயின் தனலை குறைத்து வைக்கனும் அவசரபட்டு திருப்பக்கூடாது,
வினோத் கௌதம் உங்கள் முதல் வருகைக்கு நன்றி + சந்தோஷம்
நமக்கெல்லாம் சாப்பிடத்தான் தெரியும்.
நல்ல அருமையான டிப்ஸ். காலையில் செய்து சாப்பிட்டு போகத்தான் நேரமில்லை.
நல்ல சமையல் அட்டகாசம், பேச்சுலர்ஸ் ஆனியன் ஆம்லேட் கூட கொஞ்சம் மாசி சேர்த்த ... அடடா என்னா ருசி.. சப்பிட்ட ஆளுக்குத்தான் தெரியும் அந்த ருசி.
சமையல் குறிப்புக்கு வாழ்த்துக்கள்..
Nice!
ரெண்டு ஆம்லெட் பார்சல் பிளிஸ். எதுக்குன்னு எல்லாம் கேக்கக் கூடாது, ஆமா, நான் சாப்பிடல்லைன்னாலும் ஓசியில கொடுத்தா வாங்கி வைச்சுக்குவேம். நன்றி ஜெலில்லா.
சைவ கொத்துபரோட்டா கருத்து தெரிவைத்தமைக்கு மிகக் நன்றி.
முயற்சி செய்து பாருங்கள்.
ஷாகுல் அததான் ஈசியாக போடலாம் என்று இருந்தேன், வருகைக்கு மிக்க நன்றி
நன்றி காஞ்சனா
சுல்தான் வருகைக்கும், கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி. நாங்க கிரில் செய்வதற்குக்கூட ஆலிவ் ஆயில் ஊற்றி தான் ஊறவைப்பது பொரிப்பது எல்லாம் .
அரபிகள் எல்லா உணவுவகைகளுக்கும் அதே தானே பயன் படுத்துகிறார்கள்.
சகோதரர் நியாஸ் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி நீங்கள் சொல்வது சரி தான் செய்வதற்கும் நல்ல மனம் வேண்டும்
நன்றி சித்ரா
.சீமான் கனி கருத்து தெரிவித்தமைக்கும் பாரட்டுக்கும் மிக்க நன்றி
நன்றி ஸாதிகா அக்கா
அமைச்சரே உங்களுக்கு 4 ஆம்லேட்டா அனுப்புரேன்.
ஷபி லேட்டா வந்ததால் பெஞ்சு மேலே ஏறி நில்லுங்க
நன்றி மலர்
வாங்க கட்ட பொம்மன் வருகைக்கு மிக்க நன்றி
சாப்பிட தான் தெரியுமா அப்ப நல்ல சாப்பிடுங்கள்.
ஸாடார்ஜன் கருத்து தெரிவித்தமைக்கு நன்றி, என்ன செய்வது சில பேச்சுலர்கள், வெளியில் மலயாளி கடை சாண்ட்விச்சிலேயே காலத்தை கழிக்கிறார்கள்.
வாங்க தாஜ் ரொம்ப நாள் ஆகிவிட்டது பதிவு பக்கம் வந்து,ஆமாம் மாசி சேர்த்தால் சூப்பராக இருக்கும்.
மிக்க நன்றி அருனா
சாரு வாங்க காத கொடுங்க யார் கிட்டேயும் சொல்லாதீங்க கோபம் வந்தால் எப்படி அடுப்பிலாமல் ரொட்டி தோசை சுடுவதென்றால் வர வரேன் முதுகை எண்ணை தடவி சுத்தமா வை வந்து சூடா சுடுவேன் என்பேன்.
சசி குமார் செய்து பார்த்து சொல்லுங்கள்.
நன்றி சரஸ்வதி
அதிரா ஆமாம் இது நம்மெக்கெல்லாம் ரொம்ப ஈசி ஆனால் பேச்சுலர்களுக்கு இதே பிரியாணி ஆக்குவது போல் ஆகும், கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, வருகைக்கு ரொம்ப சந்தோஷம்.
சுதாகர் சார் எடுத்து கொண்டு போய் யாருக்கு கொடுக்க போறீங்க இப்ப எனக்கு தெரிந்தாகனும்.
ஓ! அப்ப இதுவும் எனக்கு இல்லையா!!! ;)
என்ன பண்ணுவது இப்ப எல்லாம் நானும் ஜீனோவும் இதை வச்சுதான் ஓட்டிக்கொண்டு இருக்கோம் :)
வாழ்க வளமுடன்
அடுப்பில்லாமல் ஆம்லெட் செய்யும் வழிமுறை ஏதும் உண்டா என்று கேட்ட கண்ணா வாழ்க.. இப்போ ஜலீலா இருக்கற ஃபார்முக்கு (சச்சின் அடிச்ச 200 எல்லாம் இப்பொ இவங்களுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்ல) முட்டை இல்லாமெலேயே ஆம்லெட் பண்ண சொல்லி கொடுப்பாயங்கப்பு..
சொல்றதுக்கு அவங்க ரெடி...கேக்க நீங்க ரெடியா??
//Jaleela said...
ஐய்யோ சகோ.ஜமால் நான் கிண்டலா சொல்லல, ஆலிவ் ஆயிலை கொஞ்சமா ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் பயன்படுத்தனும் என்று சொல்லவந்தேன்..//
ஜலீலா நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ஜமால் அதை ஏற்பதாக இல்லை... ஜெய்லானியின் இந்த கமெண்ட் பார்த்த பிறகும் ஜமால் பாய் உங்கள நம்புவாரா என்ன ??
//ஜெய்லானி said...
// Jaleela said...//ஆலிவ் தொடர்ந்து சாப்பிட்டால் எதுக்கலிக்குது எனக்கு - அது பித்தமா//
அதுக்கு , கொஞ்சமா பயன் படுத்தனும்.
ஹா. ஹா.. பதில் கேட்டா நல்ல ஜோக் சொல்றீங்க..//
இப்போ ஜலீலா மேடம் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு (வேற ஒண்ணும் இல்ல... அந்த டைம்லி காமெடி சென்ஸ் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி...)
வழக்கம் போல அடிச்சு ஆடுங்க ஜலீலா மேடம்...
இமா வாங்க கண்டிப்பா உங்களுக்கும் உண்டு
ஹைஷ் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கோபி உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி. கோபி ஜமால் கண்டிப்பா நம்புவார்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா