Showing posts with label நெல்லிக்காய். Show all posts
Showing posts with label நெல்லிக்காய். Show all posts

Monday, March 12, 2018

புதினா நெல்லிக்காய் ஜூஸ் - Mint Gooseberry Juice


வெயில் காலம் ஆரம்பிக்கிறது , டீ காபியை தவிர்த்து மோர் , நெல்லிக்காய், எலுமிச்சை ஜூஸ் என எடுத்து கொண்டால் , கோடை காலத்தில் ஏற்படும் வெயில் தாக்காத்தை சமாளிக்கலாம் நல்ல புத்துணர்வாகவும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கும்.



இந்த புதினா நெல்லிக்காய் ஜூஸ் செய்து தொடர்ந்து குடித்து வந்து கிட்னி கல் சரியாகி இருக்கு , உண்மை தாங்க  நம்ம சேனல் சப்ஸ் கிரைபர் ஒருத்தங்க மெசேஜ் செய்து இருந்தார்கள்
நீங்களும் முயற்சிக்கலாம் மற்றவர்களுக்கும் தெரிய படுத்தலாமே , சேனலை சப்ஸ்கிரைப் செய்து பயனடையுங்கள்

 புதினா நெல்லிக்காய் ஜூஸ்

புதினா - அரை கைப்பிடி
நெல்லிக்காய் - 3
லெமன் - ஒன்று
இஞ்சி - அரை இன்ச் சைஸ்
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு (அ) சர்க்கரை (அ) தேன் - தேவைக்கு


Please visit my YOU tube Channel Like, comment, subscribe and share with your Friends



Mango Coconut Milk Cocktail




செய்முறை 

புதினாவை மண்ணில்லாமல் கழுவி அத்துடன் மிக்சியில் நெல்லிக்காய் இஞ்சி சேர்த்து தண்ணீர் + ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டி அதில் லெமன் பிழிந்து மிளகு தூள் சேர்த்து உப்பு அல்லது சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கவும்.

கவனிக்க டயட் செய்பவர்கள் சர்க்கரை வியாதிகாரர்கள் உப்பு மட்டும் சேர்த்து கொள்ளவும்.

டயட் ஜூஸ்
பேலியோ டயட் ஜூஸ்
மின்ட் ஜூஸ்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, November 9, 2011

கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்




கர்நாடகா ஸ்டைல் நெல்லிக்காய் சாதம்.
தேவையான பொருட்கள்
அரிசி - ஒரு டம்ளர்
லெமன் ஜூஸ்  - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி  -கால் தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
அரைக்க
பெரிய நெல்லிக்காய் - இரண்டு
கொத்துமல்லி கீரை – இரண்டு மேசை கரண்டி பொடியாக அரிந்தது
பச்சமிளகாய் – ஒன்று (அ) காரத்திற்கு ஏற்ப
இஞ்சி – அரை இஞ்ச் அளவு
தாளிக்க
எண்ணை – ஒரு மேசைகரண்டி
கடுகு ¼ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு –ஒரு மேசைகரண்டி
வேர்கடலை – ஒரு மேசைகரண்டி
கருவேப்பிலை – 8 இதழ்
பூண்டு – ஒரு பல் 


செய்முறை
சாதத்தை உதிரியாக வடித்து கொள்ளவும். ஆறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை மையாக அரைக்காமல் மிக்சியில் கர கரப்பாக திரித்து கொள்ளவும்.
தாளிகக் கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்த கலவையை சேர்த்து வதக்கி எலுமிச்சைசாறு பிழியவும். தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
கலவையை சாதத்தில் கொட்டி நன்கு கிளறவும்.
சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் ரெடி.
தொட்டுக்கொள்ள பாப்கார்ன் சிக்கன், மற்றும் 

 உருளை வறுவலுடன் சாப்பிட யம்மியாக இருக்கும்.

இது மகியின் கர்நாடக ஸ்டைல் எலுமிச்சை சாதத்தை செய்து பார்த்து மேலும் அதே ஸ்டைலில் சிறிது மாற்றத்துடன் என் சுவைக்கு ஏற்ப நெல்லிக்காய் சாதமாக செய்துள்ளேன்.



Saturday, December 26, 2009

உப்பு நெல்லிக்காய் மற்றும் இனிப்பு நெல்லிக்காய்



// ஜுரம் வந்து வாய் கசப்பிற்கும் இது நல்ல இருக்கும், சளி அதிமாகி ஆன்டிபயாட்டிக் எடுத்து கொள்ளும் போது அந்த மருந்து நாக்கு மறத்து போய், என்ன சாப்பிட்டாலும் ருசி தெரியாது. அப்படி உள்ளவ்ர்களும் இது சாப்பிட்டால் பலன் உண்டு இது என் அனுபவம்... //



கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதரபிக்கு பிற்கு ஏற்படும் சுவையின்மைக்கும் இந்த நெல்லிக்காய இப்படி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் = ப‌த்து
ச‌ர்க்க‌ரை = கால் கப்
தேன் = ஒரு மேசைக‌ர‌ண்டி
உப்பு = ஒரு சிட்டிக்கை

செய்முறை

நெல்லிக்காயை சைடில் கீறி விட்டு (அ) ஒரு ஃபோர்கை கொண்டு எல்லா பக்கமும் குத்தி விடவேண்டும்.
ஒரு பெரிய‌ வாய‌ன்ற‌ ச‌ட்டியில் த‌ண்ணீரை கொதிக்க‌ விட்டு நெல்லிக்காயை போட்டு உட‌னே அடுப்பை அனைக்க‌வும்.

சர்க்கரையை கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிக்கை உப்பு போட்டு காய்ச்சி அதில் நெல்லிக்காயை சேர்த்து தேனையும் ஊற்றி ஊறவிட்டு சாப்பிடவும்.

கவனிக்க:

நெல்லிக்காய் உட்கொள்வது முடி உதிர்வதை தவிர்க்கும், இதை வேக வைத்து இனிப்பு ஊறுகாய்,கார ஊறுகாய் போட்டும் சாப்பிடலாம்.பொடியாக அரிந்து நெல்லிக்காய் சாதம் செய்தும் சாப்பிடலாம்.





உப்பு நெல்லிக்காய்

முழு நெல்ல்லிக்க்காய் பத்து
பச்சமிளகாய் - நான்கு
உப்பு
சிட்டிக்கை சர்க்கரை
வினிகர் - ஒரு டிராப்

நெல்லிக்காயை நாலாபக்கமும் கீரி விட்டுகொஞ்ச்மா தண்ணீரில் மைக்ரோ வேவில்
இரண்டு நிமிடம் வைத்து எடுத்து அதில் உப்பு சர்க்கரை, பச்ச மிககாயை கிறி சேர்த்து வினிகர் ஊற்றி வைக்கவும்.
ஸ்ஸ்ஸ் ரொமப் யம்மியாக இருக்கும்.




//க‌ர்பிணி பெண்க‌ளுக்கு ம‌ச‌க்கையின் போது வாய்க்கு ருசி ப‌டும், கேன்ச‌ர் நோயாளிக‌ளுக்கு கீமோ த‌ர‌பி செய்த‌தும், வாயிக்கு எந்த‌ ருசியுமே தெரியாது, கொம‌ட்டலாக‌வே இருக்கும் அந்த‌ ச‌மய‌த்தில் இதை போட்டு அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌லாம். இதில் விட்டமின் சி சத்து அதிகம் இருக்கிறது. //