வான வேடிக்கைகளுடன் கொண்டடப்படுகிறது .
நாங்க எங்கும் வெளியில் செல்வதிலை. சரியான டிராபிக்கில் மாட்டி கொள்ளனும், ஆகையால் பொறுமையாக இங்கு டீவியிலேயே கொஞ்சநேரம் பார்த்து கொள்வோம்.
ஓவ்வொரு வருடம் National Day யின் போது என் கணவரில் ஆபிஸில் அழகிய பரிசு பொருட்கள் நல்ல பாக்கிங் உடன் வரும். உயர்ந்த ரக சாக்லேட் வித விதமான பொருட்கள் போன வருடம் தஸ்பி ,UAE வண்ண கொடியி, தஸ்பி, மொபைல் வைக்கும் சின்ன உல்லன் பை மற்றும் பணம் வைக்கும் சுருக்கு பை
2012
இந்த வருடம் UAE வண்ண கொடி கலர்ல் செய்த அழகான பூ கூடை மற்றும் பேனா , சாக்லேட் மற்றும் இந்த குளிருக்கு இதமான ஒரு மஃப்ளர்.
இவ்வள்வு செலவு செய்து அனைவருக்கும் கொடுக்கிறார்களே என்று கேட்ட போது என் கணவர் சொன்னார் இது கைத்தொழில் செய்து பிழைக்கும் ஏழை அரபிகளுக்கு இவர்கள் செய்யும் உபகாரம் என்றார்.
இந்த சமயத்தில் அவர்களிடம் வாங்கினால் அவர்களுக்கு நல்ல வியாபாரம் ஆகும் இல்லையா? அதற்காக தான் என்றார். இது நல்ல விஷியம் தானே
பல மலையாளிகளும் தமிழர்களும் துபாயின் திர்ஹம்ஸை ஊதியமாகப் பெற்று. குடிசை வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி இருக்கின்றனர். தாயின், தந்தையின் கனவுகளை நிறைவேற்றி இருக்கின்றனர். வறுமையிலிருந்த எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்திருக்கின்றனர்.
அமீரகம் ஆன்மீகத்தோடு நெருங்கிய தொடர்புடைய நேர்மறை அதிர்வுகள் கொண்ட பூமி...! இங்கே உழைத்து பெறும் ஒவ்வொரு திர்ஹமும் பரக்கத்தானது. சிறு ஊதியம் பெற்றாலும் அவனால் எல்லாவற்றையும் ஓரளவிற்கு அவன் சொந்த ஊரில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.
உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியமர்ந்திருக்கும் அத்தனை மக்களையும் மரியாதையுடனும், அன்புடனும் பாரபட்சமின்றி நடத்தும் அமீரகத்தின் அன்பு மிகக் கம்பீரமானது! பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமையை, மரியாதையை இந்த உலகத்தின் இன்ன பிற நாடுகள் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்....!
இதோ கடந்த சிலமாதங்களாக ஒட்டு மொத்த அமீரகத்தின் அத்தனை குடிமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எக்ஸ்போ 2020ல் துபாய் வென்றிருக்கிறது. அறிவால் இணைவோம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம் (Connecting minds creating the future) என்ற கருத்தாக்கத்தோடு களத்தில் நின்ற துபாயின் வெற்றி திடமான தொலை நோக்குப் பார்வை கொண்ட தெளிவான தலைமைத்துவத்தின் வெற்றி!
ஏற்கெனவே அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் துபாய் இன்னும் வேகமாக இயங்கப் போகிறது. அந்த பிரம்மாண்ட உழைப்பு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளால் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வளம் பெறப் போகிறது என்பது உறுதி....!
@ தேவா சுப்பையா
| Tweet | ||||||

























